Monday, 8 September 2014

திராவிட மார்வாடிகள்

திராவிட மார்வாடிகள்.

திராவிடம்,
அதாவது திரமிளம்,
அதாவது தமிழ்,
அதாவது தென்னிந்தியா
அதாவது ?????

சரி. திராவிடம் என்றே சொல்(லித்தொலை)வோம்.

பிறமொழி பிராமணரும் திராவிடமும்.

*1928ல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் யார் தெரியுமா?
தெலுங்கு பிராமணரான 'மணத்தட்டை சேதுரத்தின ஐயர்'.
1930ல் ஈரோட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டிலும் இவர் முன்னிலை வகித்தார்.
(பின்னே! தமிழகத்தில் சுயமரியாதையுள்ள ஒரு பிராமணர் கிடைக்கவேண்டுமல்லவா!)

*ஈ.வே.ரா தமிழகத்தின் அத்தனைப் பார்ப்பனர்களையும் பாகுபாடில்லாமல் கைக்கு வந்தபடியெல்லாம் எழுதி (கிழித்து)வந்தார்; ஆனால், அவர் காலத்தில் காஞ்சி பெரிய சங்கராச்சாரியாராக இருந்த (சொல்லப்போனால் பிராமணர்களின் தலைமையாக இருந்த) கன்னட பிராமணரான சந்திரசேகரை ஒரு வார்த்தைகூட அவர் பழித்தது கிடையாது.(பெரியார் என்ற சொல் 'மகா பெரியவாள்' என்பதைவிட வலிமை குன்றியதோ?)

*ஈ.வே.ரா வின் ஆதரவுடன் தெலுங்கு பிராமணரான தங்கதூரி பிரகாசம் பந்துலு சென்னை மாகாண தலைமை அமைச்சரானார்; (திராவிட சதிவேலையின் காரணமாக காங்கிரசு ராஜாஜி மற்றும் காமராசர் குழுவாக பிளவுபட்டிருந்தது).
என்னயிருந்தாலும் ஒரு பெயருக்கேனும் அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் ஆனால் மூச்சுகூட விடவில்லை திராவிடக் கட்சியினர்.
(பின்னே தன்னின பிராமணனை வேறு இனம் என்று கூறினால் அதை நம்ப தெலுங்கன் என்ன தமிழனைப்போல முட்டாளா?)

*அ.தி.மு.க கன்னட பிராமணர் எச்.வி.அண்டே என்பவரை மக்கள் நல்வாழ்வுத்துறைக்குத் தலைவராக்கியது (மக்கள் நல்வாழ்வு என்பதை கன்னடர்கள் போல் இன்னொருவரால் செய்யமுடியுமோ?! அண்டைமாநிலத்துக்குத் தண்ணீரைத் தராமல் தன் மக்களை நல்வாழ்வு வாழவைக்கிறார்களே?!)

*மலையாள பிராமணரான வி.என்.ஜானகி ராமச்சந்திரன் 24நாட்கள் முதல்வரானார்

*கன்னட பிராமணரான ஜெயலலிதா ஜானகியை ஓரம்கட்டிவிட்டு கட்சிக்குத் தலைவராகி ஆட்சியைப் பிடித்து, ஆண்டு அனுபவித்து, சொத்துகுவித்து, தமிழக ஆயுதக்குழுக்களை வெற்றிகரமாக ஒழித்துக்கட்டி, இன்று தமிழன் தலைமேல் அமர்ந்து தொண்டுசெய்கிறார்.

*அதிமுக சார்பில் டெல்லி மேலவை உறுப்பினரானார்  கன்னடப் பிராமணர் மைத்ரேயன். (டெல்லிவரை கன்னட பிராமண அனைத்திந்திய திராவிடமானது முன்னேற்றம் அடைந்தது)
இன்றும் அவர் சளைக்காமல் மாநில அமைப்பாளராகக் களம்காண்கிறார்!

பாவம், திராவிடப் போர்வாள் பதம் பார்த்தது எல்லாம் தமிழ்ப் பார்ப்பனரை மட்டுமே.
--------
வாழவைப்பதே வைக்கிறோம் வடஹிந்திய வந்தேறிகளை ஏன் விலக்கிவைக்கவேண்டும்; (நம் அப்பன் வீட்டு சொத்தா போகிறது) என்ற பரந்துவிரிந்த மனதுடன் திராவிடம் வாழவைத்த  வடவர்கள்.

*1967ல் உடுமலைப் பேட்டையிலிருந்து தி.மு.க சார்பில் சட்டமன்றத்திற்கு நிற்கவைக்கப்பட்டு வெற்றிபெற்றவர் நாராயண்சிங்.
(உடுமலை நாராயணன் என்று மக்களுக்கு அறிமுகம் செய்விக்கப்பட்டார்).
அண்ணாதுரையால் கோவை மாவட்ட தி.மு.க செயலாளராக நியமிக்கப்பட்டார்.(உடுமலைப் பகுதியில் தெலுங்கர் யாரும் கிடைக்கவில்லை போலும்)

*எம்.ஜி.ஆர் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு சென்று தேடிக் கண்டுபிடித்து உக்கம்சந்த் என்ற மார்வாடியை சட்டமன்ற உறுப்பினருக்கு நிற்கவைத்து வெற்றிபெறச்செய்தார்.
பின்னாளில் இவர் குடிநீர் வாரியத் தலைவராகவும் காஞ்சிபுர மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.
(எம்.ஜி.ஆர் செய்தால் சரியாத்தான் இருக்கும் என்ன நான் சொல்வது?)

*வீட்டுக்கு ஒருவர் போதாதென்று உக்கம் சந்தின் தம்பி பிரேம்சந்த்  மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராக ஆனார் (அடடா! என்னே ஒரு திராவிட சேவை)

*அடுத்த மதுராந்தகம் சட்டமன்ற தேர்தலில் இதே உக்கம்சந்துக்கு வாய்ப்பளித்தார் கருணாநிதி; இன்றும் அந்த மார்வாடி தி.மு.க வில் இருந்துகொண்டு தன்னால் முடிந்தவரை திராவிடரை முன்னேற்றி வருகிறார்.

*1980ல் அதிமுக மூலம் ஹீராசந்த் என்பவர் திண்டிவனம் நகராட்சித் தலைவர் ஆனார் (அந்த ஆளுக்கு திண்டிவனம் என்று எழுதியிருக்கும் பெயர்ப் பலகையை படிக்கவாவது தெரியுமா?)
இவரே பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும், தென்னாற்காடு மாவட்ட செயலாளராகவும், விழுப்புரம் மாவட்ட செயலாளாராகவும் இருந்தார்.

*காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாலாஜி என்ற வடவர் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.
இவரே பின்னாட்களில் சென்னை-செங்கல்பட்டு (தமிழனுக்குப் பாலூற்ற வசதியாக) பால்உற்பத்தியாளர் ஒன்றியத்தின் தலைவரானார்.

*பவன்குமார் என்ற மார்வாடி அதிமுக சார்பில் திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவரானார்; இன்றும் திருவண்ணாமலை அதிமுக நகரச் செயலாளராக (திராவிடப்பணியில்) ஆதிக்கம் செலுத்திவருகிறார்.

*மேடையேறி செந்தமிழில்(?) பேசும் வடநாட்டு  கூத்தாடி நடிகை குஷ்புவை பிளந்த வாயோடு ரசித்து ரசித்து வடவர் எதிர்ப்பைக் காட்டினாரல்லவா கருணாநிதி?!

*உண்மையான திராவிடர்கள் என்றால் அது வை.கோபால்சாமி நாயக்கரும்(வைகோ) விஜயராஜு நாயுடுவும் (விஜயகாந்த்)தான்.
அவ்விருவர்தான் தெலுங்கர்களால்  தெலுங்கர்களுக்காகத் தெலுங்கரே நடத்தும் கட்சியை வைத்துள்ளனர்.
கூட்டணி என்ற பெயரில் கன்னட பிராமணத்தியோடும் வடவரோடும் கைகோர்ப்பது தவறாகுமோ?!

தமிழர்கள் கணிசமாக வாழும் அண்டைமாநிலங்களில் மன்ற உறுப்பினராகக் கூட (கவுன்சிலர்) ஒரு தமிழன் வரமுடிவதில்லை;
தமிழக திராவிடக் கட்சிகளைப் போல வருங்காலத்தில் மற்ற மாநிலங்களும் அங்கே வாழும் தமிழருக்கு வாய்ப்புகள் வாரிவழங்குவார்கள் என்று அறவழிநின்று இனவேறுபாடு காட்டாமல் மனதார நம்புவோமாக.

நன்றி: திராவிடக் கட்சிகளும் போலி எதிர்ப்பும்
-பா.குப்பன்.
https://m.facebook.com/photo.php?fbid=491034881000170&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=52&__tn__=E

No comments:

Post a Comment