2 1/2 வருடம் பதுங்கி
5 நாட்களில் பாய்ந்த புலிகள்
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
புலிகளின் பல்வேறு சாதனைகளில் மிகமுக்கியமானது
.'ஓயாத அலைகள்-3' ஆகும்; இதை சுருக்கமாக
அறிந்துகொள்வோம்; மேலேயுள்ள படத்தில்
குத்துமதிப்பாக வரைந்துள்ளேன்; எளிமையாக
புரிந்துகொள்ள படங்கள் உதவும்; புலிகள்
யாழ்ப்பாணத்திலிருந்து 1996ல் ஐநூறு ஆயிரம்
(5லட்சம்) மக்களுடன் யாழ்ப்பாணத்தில்
இருந்து தெற்கே வன்னிப்
பகுதிக்கு (கிளிநொச்சி மற்றும்
முல்லைத்தீவு மாவட்டங்கள் சேர்ந்தது) இடம்பெயர்கிறார்
கள்; 1996 ல் 'ஓயாத அலைகள்' என்ற பெயரில்
பெண்புலிகளை அனுப்பி முல்லைத்தீவு படைமுகாமைத்
தாக்கி கைப்பற்றுகின்றனர்; இந்த அவமானத்தைத்
தாங்கமுடியாது சிறிலங்கா 'ஜெயசிக்குறு' (வெற்றி உறுதி)
என்ற பெயரில் வன்னிக்குப் போர்தொடுக்கிறது;
வடக்கே யாழ்ப்பாணம் அரசகட்டுப்பாட்டில்,
நடுவே வன்னி புலிகள் கட்டுப்பாட்டில்
தெற்கே அரசு நடக்கும்பகுதி; இப்படி இருப்பதால்
யாழில் இருக்கும் 30,000 சிங்கள படையினருடன்
கொடுக்கல் வாங்கல் பெரும் சிரமமாக இருப்பதால்
வன்னியின் நட்டநடுவில் யாழில்
இருந்து வவுனியா வரை இருக்கும் கண்டிவீதியை(ஏ9
சாலை) கைப்பற்ற ஜெயசிக்குறு நடவடிக்கை 1997ல்
தொடங்குகிறது; புலிகளின் பலத்த எதிர்ப்புடன்
இது புளியங்குளம்
வரை சென்று பிறகு ஏ9க்கு போகமுடியாமல்
விலகி ஒட்டுசுட்டான் வரை முன்னேறுகிறது;
அதற்குமேல் முடியாமல்
ஜயசிக்குறு கைவிடப்படுகிறது; இந்நிலையில்
கீழே மறுபக்கம் மன்னாரிலிருந்து ரணகோச
நடவடிக்கை தொடங்கப்பட்டு பள்ளமடு வரை முன்னேறுகிறது;
இந்நிலையில் புலிகளின் பகுதி மிகவும்
சுருங்கி நாலாபக்கமும் முற்றுகையிடப்பட
்டுவிட்டது; முல்லைத்தீவோ புதுக்குடியிருப
்போ விரைவில் அரசால் கைப்பற்றப்படும் என்றும்
அதன்பிறகு புலிகள் எழமுடியாது என்றும் பலர்
எதிர்பார்த்தனர்; ஈழமக்களும் நம்பிக்கை இழந்துவந்தனர்;
புலிகள் அப்போது 2,000 பேர்;
சுற்றி நிற்பதோ 45,000 சிங்கள வீரர்கள் படை; சிங்கள
அரசு ஒரு சாலையைக் கைப்பற்றப்போய் இத்தனை பெரிய
வெற்றி கிடைக்கப்போகிறதே என்று கூத்தாடியது;
ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உள்ளேயிருந்த
மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை; அவர்கள் தமக்கேயுரிய
வீரத்துடன் புலிகள் அளித்த
பயிற்சிகளை பெற்று படையில் இணைந்தனர்; இந்த
நிலையில் 1998ல் 'ஓயாத அலைகள்2' நடவடிக்கை மூலம்
புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றுகின்றனர்;
சிங்களப் படை பள்ளமடுவிலிருந்து 'வாட்டர் ஷாட்' என்ற
பெயரில் எடுத்த நடவடிக்கைகளும் மேலே பூநகரியில்
படையை இறக்கும் நடவடிக்கையும் புலிகளால்
தடுக்கப்படுகிறது; 1999ல் புலிகளின்
வரலாற்று சிறப்பு மிக்க "ஓயாத அலைகள் -3"
நடவடிக்கை ஒட்டுசுட்டானை நோக்கி தொடங்குகிறது;
புலிகள் அப்போது என்ன மாயம்
செய்தார்களோ தெரியாது இரண்டரை வருடமாக
முக்கி முக்கி முன்னேறிய சிங்களப்படை வெறும்
ஐந்தே நாட்களில் தொடங்கிய இடத்தைவிடவும்
பின்னுக்குத் தள்ளப்பட்டது; புலிகள் மிகக்குறைந்த
இழப்புடன்
அதிகளவு சேதமளித்து கற்பனை செய்யமுடியாத
வேகத்துடன் முன்னேறிவிட்டனர்; பலரால்
இதை நம்பமுடியவில்லை; இந்த அதிர்ச்சி தெளியுமுன்
புலிகள் வடக்கே 30,000 படையினரைக் கொண்ட
இலங்கையிலேயே பெரிய படைமுகாமான
ஆனையிறவை அடித்து நொறுக்கினர்; அதை அடுத்த
பதிவில் பார்ப்போம்.
http://thesakkaatu.com/doc3509.html
Tuesday, 30 September 2014
புலிகளின் ஐந்து நாள்ப் பாய்ச்சல்
Labels:
ltte,
ஆதி பேரொளி,
ஓயாத அலைகள்,
புலி,
போர்,
விடுதலைப் புலிகள்,
வேட்டொலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment