Saturday, 13 September 2014

வேற்றினத்தாரைக் குடியமர்த்துதல் (1/2)

வேற்றினத்தாரைக் குடியமர்த்துதல்

தமிழியம் எதிர்கொண்டுள்ள தலையாய சவால்களில் ஒன்று தமிழகத்திற்கு உள்ளேயே வாழும் வேற்றினத்தாரை என்னசெய்வது என்ற குழப்பம்.

தற்போதைய தமிழகத்தில் குடிபுகுந்துள்ள வேற்றினத்தாரில் 60%பேர் தற்போது குடிவந்தவர்களே; மீதி 40%பேர் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே வாழ்ந்துவருவோர் ஆவர்; இந்த மக்களை கேடயமாக்கிக்கொண்டுதான் மற்ற 60% பேர் வாழ்கிறார்கள்.

நாய்க்கெர் ஆட்சியின்போது தமிழகத்தில் குடிபுகுந்த வேற்றினத்தார் வீட்டிற்குள் வேறுமொழியும் வெளியே தமிழும் பேசிவோராவர்;
இவர்கள் தம்மைத் தாமே தமிழர் என்று அடையாளப்படுத்துகின்றனர்;
இவர்களைப் பற்றி நான் அறிந்தவரையில் கூறுகிறேன்.
*ஆந்திராவின் அசல் தெலுங்கர்களும் கர்நாடக அசல் கன்னடர்களும் இவர்களைத் தம் இனமாக எண்ணுவதில்லை
*இவர்கள் பேசும் மொழி அசல் மொழியுடன் 70%மட்டுமே ஒத்துப்போகிறது
*இவர்கள் தாய்மொழியை எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக தமிழ்வழிக் கல்வி கற்போராக உள்ளனர்
*இவர்கள் தமிழ் மொழி மீது பற்றுகொண்டவர்களாக உள்ளனர்
*இவர்களது வாழ்க்கைத் தரமானது தமிழர்களின் வாழ்க்கைத்தரத்தை ஒத்தே உள்ளது; தமிழ் மக்கள் சந்திக்கும் அத்தனை இடர்களும் இவர்களுக்கும் உள்ளது
*இவர்கள் தம் சாதி தாண்டி இனமாக ஒன்றிணைய இயலாதவாறு பல்வேறு பிரிவுகளாக சிதறி வாழ்கின்றனர்
*தமிழக அரசியல்வாதிகள் தம்மை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துவதை இவர்கள் அறிந்திருக்கவில்லை.
நிற்க; மேற்கண்டவை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் உட்பகுதியில் வாழும் வேற்றினத்தார் பற்றிக் கூறியவை என்பதை நினைவில் கொள்க.
இப்போது மேலும் கூறுகிறேன்.
*இவர்கள் தமிழர்களாகத் தம்மை அடையாளப் படுத்துவதால் இவர்கள் மூலம் மற்ற இனத்தவர் தமிழருக்குள் ஊடுருவ வாய்ப்பளிக்கின்றனர்
*இவர்கள் தமிழின எழுச்சிக்கு என்றும் தடையாகவே இருப்பார்கள்; அதில் தவறில்லை; இது ஒரு பாதுகாப்பு உணர்வாலேயே ஆகும்.
*வேற்றினத்தார் இவர்களைத் தமிழருக்கு எதிராகத் திருப்ப அதிகநேரம் ஆகாது
*இவர்கள் இன்றும் திராவிடக் கட்சிகள் மூலம் வலுவான நிலையில் தமது ஆதிக்கத்தை மறைமுகமாகத் தக்கவைத்துள்ளனர்.
சரி. மீதி 60% வேற்றினத்தார் 1900களுக்கும் பிறகு குடிபுகுந்தவர்கள்; இவர்கள் ஒரு பெரிய பிரச்சனை இல்லை; இவர்கள் தம் தாய்நிலத்துடன் தொடர்பில் உள்ளனர்; திராவிடக் கட்சி மூலம் தமிழகத்தை முடிந்த அளவு சுரண்டிவிட்டு ஏதாவது எதிர்ப்பு எழுந்தால் தமிழகத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்; அதேபோல 60ஆண்டுகளாக கேரள, கன்னட, ஆந்திர மாநிலங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதியில் வாழும் தமிழர்கள் முற்றாக இனவொதுக்கலுக்கு ஆளாகி வருகின்றனர்; சிலர் இன அடையாளத்தை மறந்துவருகின்றனர்; ஆனால், அடுத்த 50ஆண்டுகளுக்குள் தமிழினம் எழுச்சிபெறுமேயானால் தாமும் உணர்வுபெற்றுவிடுவார்கள்;
எவ்வளவு விரைவாக நாம் எழுச்சி பெறுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு நல்லது;
ஈழத்தில் இந்தப் பிரச்சனை இல்லை; அங்கே தமிழர் எழுச்சியானது தமிழின உணர்வை மீட்டெடுத்து இன்று உலகத் தமிழினமே விழிப்பு பெற வழியேற்படுத்தியுள்ளது; அங்கே யார் தமிழன் என்று முட்டாள்த்தனமாக யாரும் கேட்பதில்லை;
எந்தத் தமிழனுக்கும் தான் ஒரு தமிழனா என்று ஐயம் வருவதில்லை; தமிழினத்தைக் குழப்புவோரே இம்மாதிரியான வேடிக்கையானக் கேள்விகளைக் கேட்கின்றனர்.

தமிழகத்தில் இருநூறாண்டுகளாக வாழ்ந்துவரும் தெலுங்கு, உருது, மராட்டி, மர்வாரி, சௌராஷ்ட்டிர, கன்னட, மலையாள மக்களே!
உங்களால் தமிழருக்கு வரும் சிக்கல் எல்லாமே நீங்களும் தமிழராக அடையாளப்படுத்திக் கொள்வதால்தான் வருகிறது;
நீங்கள் என்னதான் எங்கள் உற்ற நண்பராக இருந்தாலும் உடன்பிறப்புகள் ஆக முடியாது;
நீங்கள் தமிழர்களுக்கு நன்மைசெய்ய விரும்பினால் நீங்களும் உங்களைத் தமிழர் என்று இனியும் கூறாதீர்கள்;
பிற இனங்களால் தமிழினம் எத்தனையோ அவலங்களைச் சந்தித்தபோதும் தமிழர்கள் தம் மத்தியில் சிறுபான்மையாக வாழும் வேற்றினத்தாரைத் துன்புறுத்தியதில்லை;
தமிழர்கள் இன்றுபோல் என்றும் இருப்பார்களா என்று தெரியாது; ஆனால், தமிழின எழுச்சிக்கு நீங்கள் தொடக்கத்திலிருந்தே உதவுவீர்களேயானால் வருங்காலத்தில் உங்கள் சந்ததிகள் அச்சமின்றி வாழலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
தமிழின மக்களே!
நம் மத்தியில் வாழும் சிறுபான்மையினரை சரியாக நடத்தினால்தான் மற்ற நாடுகளில் குடியேறியுள்ள நம் மக்கள் சரியாக நடத்தப்படுவார்கள்; நாம் என்னதான் சலுகை வழங்கினாலும் நேர்மையாக நடத்தினாலும் வேற்றினத்தார் நமது இனவெழுச்சியை எதிர்க்கவே செய்வார்கள்; இன்றைய இனவெழுச்சி நாளைய பேரினவாதமாக மாறாது என்று எந்த உறுதியும் கிடையாது அல்லவா; இருக்கும் எல்லாப் பிரச்சனைக்கும் வேற்றினத்தாரே காரணம் என்று நினைக்காதீர்கள்;
ஒரு தெலுங்கன் வந்து சொல்லித்தான் நீங்கள் கையூட்டு(லஞ்சம்) வாங்குகிறீர்களா?
ஒரு கன்னடவன் வந்து சொல்லித்தான் நீங்கள் ஆங்கில வழியில் கற்கிறீர்களா?
ஒரு மலையாளி வந்து சொல்லித்தான் நீங்கள் சாதிக்கலவரங்களில் ஈடுபடிகிறீர்களா?
ஒரு சிங்களவன் வந்து சொல்லித்தான் நீங்கள் காசுவாங்கி வாக்கு போடுகிறீர்களா?
ஒரு ஹிந்தியன் வந்து சொல்லித்தான் நீங்கள் குடிகாரர்களாக ஆனீர்களா?
இனப்பற்றுள்ள மற்ற இனமக்களிலும் ஏழைகளும் தாழ்த்தப்பட்டவர்களும் போதைக்கு அடிமையானவர்களும் விபச்சாரம் செய்பவர்களும் சமூக எதிரிகளும் கடத்தல்காரர்களும் இருக்கவே செய்கின்றனர்; கண்ணை மூடிக்கொண்டு வேற்றினத்தவரை எதிர்ப்பது இப்போது சரியாகப் படலாம்; நாளை நம் இனத்தவனே அதிகாரத்துக்கு வந்து இன்று வேற்றினத்தான் செய்வதை நமக்குச் செய்யலாம்; அதற்காக இனவெழுச்சி பெறக்கூடாது என்று கூறவில்லை; கொள்ளைபோவது என்றாகிவிட்டால் ஏன் ஒரு வேற்றினத்தானிடம் கொள்ளைபோகவேண்டும்? நம்மினத்தானிடமே கொள்ளைபோவோமே;அதுவே மேல்;
ஆனால், இனப்பற்று இருந்தாலே போதும் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நான் கூறமாட்டேன்; இன்று நம்மிடம் இருக்கும் பெரும்பான்மையான குறைகள் இனப்பற்று கொண்டால் காணாமல் போகும்; ஆனால், எல்லாப் பிரச்சனைகளுக்கும் இனப்பற்றே தீர்வு என்றாகாது; பசியோடு நீர் அருந்த வந்தவன் தண்ணீரில் விழுந்துவிட்டால் முதலில் அவனுக்குத் தேவை மூச்சு; அதன்பிறகுதான் அவனுக்கு உணவு கொடுக்கலாமா? உடை கொடுக்கலாமா? நீச்சல் கற்றுத்தரலாமா? என்று விவாதம் செய்யவேண்டும்.
இன்று தமிழினத்துக்கு முதல்தேவை விடுதலை; அதாவது படைவலிமையோடு நம்மைக் காக்கும் ஒரு அமைப்பு (ஐநா அங்கீகாரம் என்பது முழுவிடுதலையாகாது); முதலில் மூழ்கிக்கொண்டிருக்கும் இனத்திற்கு மூச்சைக் கொடுப்போம் அதன்பிறகு மற்றவைகளைப் பார்க்கலாம்.
மதம்,சாதி, சுரண்டல், அரசியல், பொருளாதாரம். சமூக வேறுபாடு என இருக்கும் பிரச்சனைகள் அப்படியே இருக்கட்டும்; சாதி, வட்டாரம், மதம், பால், நாடு, கொள்கை என இருக்கும் பிரிவுகள் அப்படியே இருக்கட்டும்;
நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவரோ, எந்த சாதியைச் சேர்ந்தவரோ, எந்த பாலினமோ, எந்த நாட்டில் வாழ்பவரோ, எந்த கொள்கையைப் பின்பற்றுபவரோ அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை; நீங்கள் தமிழர் என்றால் தமிழின விடுதலைக்காக உழைக்கவேண்டும்; அதைச் செய்யாமல் நீங்கள் எந்த தீர்வை முன்வைத்தாலும் அது வீணாகவே ஆகும்.
சரி இப்போது வேற்றினத்தாரைக் குடியமர்த்துவது பற்றி எனது கருத்துகளை முன்வைக்கிறேன்;
தமிழ்த் தாய்நிலம் படையரண்களால் காவல்போடப்பட்டதும் தமிழ்க் குடியரசிலேயே நீடிக்க விரும்பும் வேற்றினத்தாரை படத்திலுள்ளவாறு ஒரு வளைய அமைப்பில் குடியமர்த்தவேண்டும்;
அதாவது நடுவில் தமிழர் அவர்களைச் சுற்றி தடிமனான வளையம் போன்ற பகுதியில் ஒருவரோடு ஒருவர் கலக்காமல் வேற்றினங்கள் குடிவைக்கப்படவேண்டும்;
நடுப்பகுதியில் தலைநகரம், தலைமைச் செயலகம், கலை வளர்ப்பு, ஓய்வு தளங்கள், கட்டளைப் பீடம், தகவல் மையம், தமிழ்த்தாய்க் கோவில்கள், மாவீரர் இல்லம் என முக்கியமான இடங்கள் இருக்கவேண்டும்; இந்த நடுப்பகுதியில் 80%க்கு குறையாமல் தமிழர்கள் இருக்கவேண்டும்;
இந்த நடுப்பகுதியைச் சுற்றி பெட்டி பெட்டியாக வளையத்தில் வேற்றினத்தாரைக் கலவாமல் குடிவைக்கவேண்டும்; அப்பகுதிகளில் அவ்வினத்தாருக்கு மாநில உரிமைகள் வழங்கவேண்டும்; மொழி,மதம்,காவல், கருத்து,பேச்சு ,கல்வி, அரசியல்,இடவொதுக்கீடு, அரசுவேலை என அப்பகுதி அவ்வின மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும்;
இந்த வளையத்தில் 30%க்கு குறைவாகவே தமிழர்கள் குடியேறலாம்;
வெளிப்பகுதி சற்று பெரிய பகுதி இதில் 60% தமிழர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment