Showing posts with label மராத்தி. Show all posts
Showing posts with label மராத்தி. Show all posts

Monday, 13 March 2017

மராத்திய மண்ணின் மகள்

மராத்திய மண்ணின் மகள்

ரஜினிகாந்த் எனும் சிவாஜிராவ் கெய்க்வாட் தான் ஒரு மராத்தியன் என்பதை மறைத்து நாடகமாடினாலும்

முதல் மகளும் அவளது தெலுங்கு கணவன் தனுஸ் என்பவரும் தனது அடையாளத்தை மறைத்தாலும் தமிழ்வேடம் போட்டாலும்

இரண்டாவது மகள் சௌந்தர்யா தனது மராத்திய அடையாளத்தை மறைக்கவில்லை

அவரது பெயரான ஷக்குபாய் ராவ் கெய்க்வாட் என்பதை இப்போதும் பயன்படுத்துகிறார்.

சக்குபாய் என்ற பெயரில் படம் ஒன்று எடுக்கப்பட்டபோது வழக்கும் போட்டார்.

மராத்திய மண்ணின் மகள் Shaku Bai Rao Gaikwad வாழ்க!

Friday, 4 November 2016

தன் இனத்தின் தலைநகரை மீட்ட அம்பேத்கர்

தன் இனத்தின் தலைநகரை மீட்ட அம்பேத்கர்

மனசாட்சியே இல்லாமல் அம்பேத்கரை ஈ.வே.ரா உடன் ஒப்பிடும் முண்டங்களே!

1948ல் பாம்பே நகரை குஜராத்திகள் சொந்தம் கொண்டாடியபோது

கொதித்தெழுந்து
பாம்பே மராத்தியர்களுக்கே சொந்தம் என்று ஆணித்தரமாக நிறுவி
தன் மராத்திய இனத்தின் தலைநகரை மீட்டுக்கொடுத்தவர் அம்பேத்கர்.

ஆனால் சென்னையை தெலுங்கர்கள் உரிமை கொண்டாடியபோது ஈ.வே.ரா அதை எதிர்க்காமல்
பிள்ளையார் சிலையை உடைத்துகொண்டிருந்தார்.
இதை நாங்கள் மறக்கவில்லை.

தனித்தமிழ்நாடு கேட்டார் என்று திருமாவேலன்கள் காதில் பூ சுற்றவேண்டாம்.

"ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா?" என்ற தலைப்பில் ஏற்கனவே தோலுரித்து தொங்கவிட்டாயிற்று.

சான்று: அம்பேத்கர் சமர்ப்பித்த "மொழிவழி மாநிலமாக மகாராஷ்ட்ரா" (Maharashtra as a linguistic province) என்ற ஆவணம்

Saturday, 23 July 2016

ரத்த சரித்திரம் - தாமிரபரணி படுகொலை

ரத்த சரித்திரம் - தாமிரபரணி படுகொலை

கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது,
கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 போராளிகளை
காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற ஜுலை 23 தாமிரபரணி நினைவு தினம்.

சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.

1930ல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பட்டியலின தேவேந்திர குல மக்களையே சாரும். 1948ம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன.

ஆனால் பிபிடிசி நிறுவனமோ, அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தனது குத்தகை காலத்தைத் 2029 வரை தொடர்ந்தது.

மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக சுமார் 5000க்கும் அதிகமான தோட்டத்தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர். தேயிலை, காஃபி, ஏலம், மிளகு போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.
1968ம் ஆண்டில் தேயிலை பறிக்க டிராலி வண்டி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், 1978ம் ஆண்டில் தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு தினமும் காலையில் கூடுதலாக இரண்டு இட்லி கொடுக்க வேண்டும் என்றும், 1988ம் ஆண்டில், அன்றாடம் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல காலை வேளையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தரவேண்டும் என்றும் மாஞ்சோலையில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

1998ம் ஆண்டில் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர்.
இந்நிலையில் தென்காசி பாரளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமியிடம் மாஞ்சோலைப் பகுதி மக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்தனர்.
ஆண்டாண்டு காலமாக கொத்தடிமை போல நடத்தப்படும், தொழிலாளர்களின் பரிதாப நிலையயை கேட்டறிந்த டாக்டர். கிருஷ்ணசாமி தேர்தல் முடிந்தவுடன் இதற்கொரு முடிவு கட்டுவோம் என்று உறுதியளித்தார்.
தேர்தல் முடிவுற்ற பின்பு மாஞ்சோலை பகுதி தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் புதிய தமிழகம் கட்சியினால் முன்வைக்கப்பட்டது.
அதனை பிபிடிசி நிர்வாகம் 20.08.98க்கு முன்பாக நிறைவேற்றித்தர வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
பிபிடிசி நிர்வாகம், புதிய தமிழகம் கட்சியின், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளியதன் விளைவாக தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 20.08.1998 முதல் வேலைப்புறக்கணிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள்.
தங்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தோள் கொடுக்க மாஞ்சோலை பகுதி மக்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., சி.பி.அய்., சி.பி.அய்(எம்)., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கத்தையும் கலைத்து புதிய தமிழகம் தொழிற்சங்கம் என்ற ஒரே குடையின் கீழ் அணி திரண்டனர்.

03.09.1998ல் எஸ்டேட் நுழைவாயிலை இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஊத்து எஸ்டேட்டில் இருந்து தேயிலைத் தூள் ஏற்றிச் சென்ற தனியார் லாரி மறிக்கப்பட்டது.
மறுநாள் 04.09.1998 எஸ்டேட் நிர்வாகத்தினரோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.
ஆனால் அதன்பிறகு மாஞ்சோலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து தாக்கினர்.
கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து இழுத்துச் சென்றனர். 127தொழிலாளர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சுமார் 6 மாத கால போராட்டத்திற்கு பின்பு ஜனவரி 1999 முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினார்கள்.
ஆனால், எஸ்டேட் நிர்வாகமோ தற்காலிகத் தொழிலாளர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக வேலைநிறுத்ததில் ஈடுபட்ட உங்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது?
என கேள்வியெழுப்பியது.
பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பல்வேறு சங்கடங்களை உண்டாக்கியது.
தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டது.

இதனால் கொதித்தெழுந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 07.06.1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரின் வீட்டை முற்றுகை இட்டனர்.
சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர். 451 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தளராமல் மறுநாளும் 08.06.1999 முற்றுகையிட்ட 198 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 198 பெண்கள் உட்பட 653 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஆளும் தி.மு.க. அரசோ தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 47 நாட்களாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 653 தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி 23.07.1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.
பல்வேறு பகுதி மக்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டதை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கம், லட்சோப லட்சம் மக்கள் தன்னெழுச்சியாக புதிய தமிழகம் என்ற கட்சியின் பின்னால் அணி திரள்வதை சகித்துக் கொள்ள முடியாத அதிகார வர்க்கம் காவல்துறையின் மூலமாக கலவரத்தை கட்டவிழ்த்து விட திட்டமிட்டது.
பேரணியை வழிநடத்திவந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் சென்று மனு கொடுப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது.
ஆளும் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர்.
தலைவர்களின் உயிருக்கும் குறைவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள்.
உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல் துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர்.
(இதற்காகவே தாமிரபரணியின் நீர்மட்டம் அன்று மட்டும் உயர்த்தப்பட்டிருந்தது)
தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை.

இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர்.
நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது.
இப்படுகொலை நடந்த சில் நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா, அப்போதைய டி.ஜி.பி.குமாரசாமி, ஐ.ஜி. விபாகர் ஷர்மா ஆகியோர் இந்தப் படுகொலையை மூடி மறைக்கத் துணை போனார்கள்.

அரச பயங்கரவாதத்தை, படுகொலையை கட்டவிழ்த்து விட்ட கலெக்டர் தனவேல், கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர்.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் என்ற ஒன்றை ஒப்புக்கு அமைத்தது திமுக அரசு.

பதினோரு மாத விசாரணைக்குப் பின்பு 27.06.2000 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நீதிபதி மோகன், ”பேரணிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர். நீரில் மூழ்கியதால் ஏற்ப்பட்ட இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்து தான்” என்று மனசாட்சியின்றி, மனிதாபிமானமின்றி அறிவித்தார்.

அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மோகன் கமிசன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்த போது அந்த அறிக்கையை சட்டசபையிலேயே கிழித்தெறிந்து போர்குரல் எழுப்பினார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி.
தனது கணவர் மாரியப்பன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக கைக்குழந்தையுடன் போராடிய ரத்தினமேரி அவரது பச்சிளம் குழந்தை விக்னேஷ் உடன் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டது இன்னமும் நம் கண்களில் நிழலாடுகின்றது.

நன்றி: வருண் ரங்கநாயகி கணேசன்

Monday, 2 May 2016

கபாலி முன்னோட்டம்

கபாலி முன்னோட்டம் (டீஸர்)

மலேசியாவில் மக்களுக்காகப் போராடிய எத்தனையோ தமிழர்கள் இருக்க

மலேசியாவைக் கலக்கிய நிழலுகப் பெருந்தலையான பென்டாங் 'காளி' என்ற தமிழரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.

ஒரே ஒரு நன்மை என்னன்னா "மகிழ்ச்சி" என்ற தமிழ்வார்த்தய இனிமே பலரும் பயன்படுத்துவாங்க.

அவ்ளதான்.

Saturday, 13 September 2014

வேற்றினத்தாரைக் குடியமர்த்துதல் (1/2)

வேற்றினத்தாரைக் குடியமர்த்துதல்

தமிழியம் எதிர்கொண்டுள்ள தலையாய சவால்களில் ஒன்று தமிழகத்திற்கு உள்ளேயே வாழும் வேற்றினத்தாரை என்னசெய்வது என்ற குழப்பம்.

தற்போதைய தமிழகத்தில் குடிபுகுந்துள்ள வேற்றினத்தாரில் 60%பேர் தற்போது குடிவந்தவர்களே; மீதி 40%பேர் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே வாழ்ந்துவருவோர் ஆவர்; இந்த மக்களை கேடயமாக்கிக்கொண்டுதான் மற்ற 60% பேர் வாழ்கிறார்கள்.

நாய்க்கெர் ஆட்சியின்போது தமிழகத்தில் குடிபுகுந்த வேற்றினத்தார் வீட்டிற்குள் வேறுமொழியும் வெளியே தமிழும் பேசிவோராவர்;
இவர்கள் தம்மைத் தாமே தமிழர் என்று அடையாளப்படுத்துகின்றனர்;
இவர்களைப் பற்றி நான் அறிந்தவரையில் கூறுகிறேன்.
*ஆந்திராவின் அசல் தெலுங்கர்களும் கர்நாடக அசல் கன்னடர்களும் இவர்களைத் தம் இனமாக எண்ணுவதில்லை
*இவர்கள் பேசும் மொழி அசல் மொழியுடன் 70%மட்டுமே ஒத்துப்போகிறது
*இவர்கள் தாய்மொழியை எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக தமிழ்வழிக் கல்வி கற்போராக உள்ளனர்
*இவர்கள் தமிழ் மொழி மீது பற்றுகொண்டவர்களாக உள்ளனர்
*இவர்களது வாழ்க்கைத் தரமானது தமிழர்களின் வாழ்க்கைத்தரத்தை ஒத்தே உள்ளது; தமிழ் மக்கள் சந்திக்கும் அத்தனை இடர்களும் இவர்களுக்கும் உள்ளது
*இவர்கள் தம் சாதி தாண்டி இனமாக ஒன்றிணைய இயலாதவாறு பல்வேறு பிரிவுகளாக சிதறி வாழ்கின்றனர்
*தமிழக அரசியல்வாதிகள் தம்மை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துவதை இவர்கள் அறிந்திருக்கவில்லை.
நிற்க; மேற்கண்டவை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் உட்பகுதியில் வாழும் வேற்றினத்தார் பற்றிக் கூறியவை என்பதை நினைவில் கொள்க.
இப்போது மேலும் கூறுகிறேன்.
*இவர்கள் தமிழர்களாகத் தம்மை அடையாளப் படுத்துவதால் இவர்கள் மூலம் மற்ற இனத்தவர் தமிழருக்குள் ஊடுருவ வாய்ப்பளிக்கின்றனர்
*இவர்கள் தமிழின எழுச்சிக்கு என்றும் தடையாகவே இருப்பார்கள்; அதில் தவறில்லை; இது ஒரு பாதுகாப்பு உணர்வாலேயே ஆகும்.
*வேற்றினத்தார் இவர்களைத் தமிழருக்கு எதிராகத் திருப்ப அதிகநேரம் ஆகாது
*இவர்கள் இன்றும் திராவிடக் கட்சிகள் மூலம் வலுவான நிலையில் தமது ஆதிக்கத்தை மறைமுகமாகத் தக்கவைத்துள்ளனர்.
சரி. மீதி 60% வேற்றினத்தார் 1900களுக்கும் பிறகு குடிபுகுந்தவர்கள்; இவர்கள் ஒரு பெரிய பிரச்சனை இல்லை; இவர்கள் தம் தாய்நிலத்துடன் தொடர்பில் உள்ளனர்; திராவிடக் கட்சி மூலம் தமிழகத்தை முடிந்த அளவு சுரண்டிவிட்டு ஏதாவது எதிர்ப்பு எழுந்தால் தமிழகத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்; அதேபோல 60ஆண்டுகளாக கேரள, கன்னட, ஆந்திர மாநிலங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதியில் வாழும் தமிழர்கள் முற்றாக இனவொதுக்கலுக்கு ஆளாகி வருகின்றனர்; சிலர் இன அடையாளத்தை மறந்துவருகின்றனர்; ஆனால், அடுத்த 50ஆண்டுகளுக்குள் தமிழினம் எழுச்சிபெறுமேயானால் தாமும் உணர்வுபெற்றுவிடுவார்கள்;
எவ்வளவு விரைவாக நாம் எழுச்சி பெறுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு நல்லது;
ஈழத்தில் இந்தப் பிரச்சனை இல்லை; அங்கே தமிழர் எழுச்சியானது தமிழின உணர்வை மீட்டெடுத்து இன்று உலகத் தமிழினமே விழிப்பு பெற வழியேற்படுத்தியுள்ளது; அங்கே யார் தமிழன் என்று முட்டாள்த்தனமாக யாரும் கேட்பதில்லை;
எந்தத் தமிழனுக்கும் தான் ஒரு தமிழனா என்று ஐயம் வருவதில்லை; தமிழினத்தைக் குழப்புவோரே இம்மாதிரியான வேடிக்கையானக் கேள்விகளைக் கேட்கின்றனர்.

தமிழகத்தில் இருநூறாண்டுகளாக வாழ்ந்துவரும் தெலுங்கு, உருது, மராட்டி, மர்வாரி, சௌராஷ்ட்டிர, கன்னட, மலையாள மக்களே!
உங்களால் தமிழருக்கு வரும் சிக்கல் எல்லாமே நீங்களும் தமிழராக அடையாளப்படுத்திக் கொள்வதால்தான் வருகிறது;
நீங்கள் என்னதான் எங்கள் உற்ற நண்பராக இருந்தாலும் உடன்பிறப்புகள் ஆக முடியாது;
நீங்கள் தமிழர்களுக்கு நன்மைசெய்ய விரும்பினால் நீங்களும் உங்களைத் தமிழர் என்று இனியும் கூறாதீர்கள்;
பிற இனங்களால் தமிழினம் எத்தனையோ அவலங்களைச் சந்தித்தபோதும் தமிழர்கள் தம் மத்தியில் சிறுபான்மையாக வாழும் வேற்றினத்தாரைத் துன்புறுத்தியதில்லை;
தமிழர்கள் இன்றுபோல் என்றும் இருப்பார்களா என்று தெரியாது; ஆனால், தமிழின எழுச்சிக்கு நீங்கள் தொடக்கத்திலிருந்தே உதவுவீர்களேயானால் வருங்காலத்தில் உங்கள் சந்ததிகள் அச்சமின்றி வாழலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
தமிழின மக்களே!
நம் மத்தியில் வாழும் சிறுபான்மையினரை சரியாக நடத்தினால்தான் மற்ற நாடுகளில் குடியேறியுள்ள நம் மக்கள் சரியாக நடத்தப்படுவார்கள்; நாம் என்னதான் சலுகை வழங்கினாலும் நேர்மையாக நடத்தினாலும் வேற்றினத்தார் நமது இனவெழுச்சியை எதிர்க்கவே செய்வார்கள்; இன்றைய இனவெழுச்சி நாளைய பேரினவாதமாக மாறாது என்று எந்த உறுதியும் கிடையாது அல்லவா; இருக்கும் எல்லாப் பிரச்சனைக்கும் வேற்றினத்தாரே காரணம் என்று நினைக்காதீர்கள்;
ஒரு தெலுங்கன் வந்து சொல்லித்தான் நீங்கள் கையூட்டு(லஞ்சம்) வாங்குகிறீர்களா?
ஒரு கன்னடவன் வந்து சொல்லித்தான் நீங்கள் ஆங்கில வழியில் கற்கிறீர்களா?
ஒரு மலையாளி வந்து சொல்லித்தான் நீங்கள் சாதிக்கலவரங்களில் ஈடுபடிகிறீர்களா?
ஒரு சிங்களவன் வந்து சொல்லித்தான் நீங்கள் காசுவாங்கி வாக்கு போடுகிறீர்களா?
ஒரு ஹிந்தியன் வந்து சொல்லித்தான் நீங்கள் குடிகாரர்களாக ஆனீர்களா?
இனப்பற்றுள்ள மற்ற இனமக்களிலும் ஏழைகளும் தாழ்த்தப்பட்டவர்களும் போதைக்கு அடிமையானவர்களும் விபச்சாரம் செய்பவர்களும் சமூக எதிரிகளும் கடத்தல்காரர்களும் இருக்கவே செய்கின்றனர்; கண்ணை மூடிக்கொண்டு வேற்றினத்தவரை எதிர்ப்பது இப்போது சரியாகப் படலாம்; நாளை நம் இனத்தவனே அதிகாரத்துக்கு வந்து இன்று வேற்றினத்தான் செய்வதை நமக்குச் செய்யலாம்; அதற்காக இனவெழுச்சி பெறக்கூடாது என்று கூறவில்லை; கொள்ளைபோவது என்றாகிவிட்டால் ஏன் ஒரு வேற்றினத்தானிடம் கொள்ளைபோகவேண்டும்? நம்மினத்தானிடமே கொள்ளைபோவோமே;அதுவே மேல்;
ஆனால், இனப்பற்று இருந்தாலே போதும் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நான் கூறமாட்டேன்; இன்று நம்மிடம் இருக்கும் பெரும்பான்மையான குறைகள் இனப்பற்று கொண்டால் காணாமல் போகும்; ஆனால், எல்லாப் பிரச்சனைகளுக்கும் இனப்பற்றே தீர்வு என்றாகாது; பசியோடு நீர் அருந்த வந்தவன் தண்ணீரில் விழுந்துவிட்டால் முதலில் அவனுக்குத் தேவை மூச்சு; அதன்பிறகுதான் அவனுக்கு உணவு கொடுக்கலாமா? உடை கொடுக்கலாமா? நீச்சல் கற்றுத்தரலாமா? என்று விவாதம் செய்யவேண்டும்.
இன்று தமிழினத்துக்கு முதல்தேவை விடுதலை; அதாவது படைவலிமையோடு நம்மைக் காக்கும் ஒரு அமைப்பு (ஐநா அங்கீகாரம் என்பது முழுவிடுதலையாகாது); முதலில் மூழ்கிக்கொண்டிருக்கும் இனத்திற்கு மூச்சைக் கொடுப்போம் அதன்பிறகு மற்றவைகளைப் பார்க்கலாம்.
மதம்,சாதி, சுரண்டல், அரசியல், பொருளாதாரம். சமூக வேறுபாடு என இருக்கும் பிரச்சனைகள் அப்படியே இருக்கட்டும்; சாதி, வட்டாரம், மதம், பால், நாடு, கொள்கை என இருக்கும் பிரிவுகள் அப்படியே இருக்கட்டும்;
நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவரோ, எந்த சாதியைச் சேர்ந்தவரோ, எந்த பாலினமோ, எந்த நாட்டில் வாழ்பவரோ, எந்த கொள்கையைப் பின்பற்றுபவரோ அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை; நீங்கள் தமிழர் என்றால் தமிழின விடுதலைக்காக உழைக்கவேண்டும்; அதைச் செய்யாமல் நீங்கள் எந்த தீர்வை முன்வைத்தாலும் அது வீணாகவே ஆகும்.
சரி இப்போது வேற்றினத்தாரைக் குடியமர்த்துவது பற்றி எனது கருத்துகளை முன்வைக்கிறேன்;
தமிழ்த் தாய்நிலம் படையரண்களால் காவல்போடப்பட்டதும் தமிழ்க் குடியரசிலேயே நீடிக்க விரும்பும் வேற்றினத்தாரை படத்திலுள்ளவாறு ஒரு வளைய அமைப்பில் குடியமர்த்தவேண்டும்;
அதாவது நடுவில் தமிழர் அவர்களைச் சுற்றி தடிமனான வளையம் போன்ற பகுதியில் ஒருவரோடு ஒருவர் கலக்காமல் வேற்றினங்கள் குடிவைக்கப்படவேண்டும்;
நடுப்பகுதியில் தலைநகரம், தலைமைச் செயலகம், கலை வளர்ப்பு, ஓய்வு தளங்கள், கட்டளைப் பீடம், தகவல் மையம், தமிழ்த்தாய்க் கோவில்கள், மாவீரர் இல்லம் என முக்கியமான இடங்கள் இருக்கவேண்டும்; இந்த நடுப்பகுதியில் 80%க்கு குறையாமல் தமிழர்கள் இருக்கவேண்டும்;
இந்த நடுப்பகுதியைச் சுற்றி பெட்டி பெட்டியாக வளையத்தில் வேற்றினத்தாரைக் கலவாமல் குடிவைக்கவேண்டும்; அப்பகுதிகளில் அவ்வினத்தாருக்கு மாநில உரிமைகள் வழங்கவேண்டும்; மொழி,மதம்,காவல், கருத்து,பேச்சு ,கல்வி, அரசியல்,இடவொதுக்கீடு, அரசுவேலை என அப்பகுதி அவ்வின மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும்;
இந்த வளையத்தில் 30%க்கு குறைவாகவே தமிழர்கள் குடியேறலாம்;
வெளிப்பகுதி சற்று பெரிய பகுதி இதில் 60% தமிழர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.