Tuesday, 30 September 2014

புலித்தொற்று

புலித்தொற்று
-+-+-+-+-+-+-+
தற்போது தமிழர்களிடம் முக்கியமாக இளைஞர்களிடம்
பரவி வரும் ஒரு மோசமான தொற்றுநோய்தான்
'புலித்தொற்று'; இந்த நோய் ஏற்படுவதால்
வருங்காலத்தில் பெரிய அளவு போரும்,
அடிதடி மோதலும் உயிர்ச்சேதமும் ஏற்பட
வாய்ப்பு உள்ளது; இதிலிருந்து தங்களைக்
காத்துக்கொள்ள ஏற்கனவே இந்த
நோய்த்தொற்று உள்ளவர்களிடமிரு
ந்து விலகி இருக்கவும்; தப்பித் தவறிகூட
விடுதலைப் புலிகளைப் பற்றியோ அல்லது ஒழுங்காக
வேலைக்குப் போய் சம்பாதித்து குடும்பத்தைக்
காப்பாற்றாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் ஆயுதம்
தூக்கி முழுவாழ்க்கையையும் குடும்பத்தையும்
தொலைத்த பிரபாகரன் என்ற உலகநாடுகளால்
தடைசெய்யப்பட்டத் தீவிரவாதியைப்
பற்றியோ அறிந்துகொள்ள முனையக் கூடாது;
ஏற்கனவே தங்களுக்கு கொஞ்சம் தெரியும் என்றால்
அங்கேயே நின்றுவிடுங்கள்; மேற்கொண்டு அறிய
முற்படவேண்டாம்; தொடக்கத்தில் வியப்பாகவும்,
மகிழ்ச்சியாகவும் இருக்கும் இருக்கும், ஆனால்
காலப்போக்கில் அதற்கு அடிமையாக நேரிடலாம்;
அதன்பிறகு ஒரு சராசரி மனிதனாக அல்லாமல்
காட்டு விலங்கான ஒரு புலியைப் போலச்
செயல்படுவீர்கள்;அதாவது சின்ன சின்ன
விசயங்களுக்கு சிரிப்பு வராது, பெரிய
அதிர்ச்சிக்கும் அழுகை வராது,
நினைத்தது உடனே நடக்கவேண்டும் எனத் தோன்றும்
அது நடக்காதபோது ஆத்திரம் வரும்;
மனஅமைதி போய்விடும்; எதையும் சகித்துக்கொண்டு
போகமுடியாது; எல்லாமே தவறாக இருப்பதாகவும்
சரிசெய்யவேண்டுமென்றும் தோன்றும்; அதைவிடக்
கொடுமை என்னவென்றால் அடுத்தவர்
பிரச்சனைகளை நமக்கென்ன என்று விடமுடியாது;
உங்கள் நடை பழையநடையாக இருக்காது; உங்கள்
பேச்சு பழையபேச்சாக இருக்காது; நீங்களே வாள்
சுழற்றுவதுபோலவும், உரைநிகழ்த்துவது போலவும்,
கொலைசெய்வதுபோலவும் கற்பனைகள் தோன்றும்;
சுற்றியிருப்பவர்களுடன் ஒட்டமுடியாது; நீங்கள்
பேசும்மொழி உங்களுக்கே அதிக இனிமையாகத்
தோன்றும்; தன்மீதான நம்பிக்கை அதிகமாகிவிடும்
அதனால் யாரையும் முழுமையாக நம்பமுடியாது;
எல்லோரும் முட்டாள்களாகத் தோன்றுவர், யாரையும்
சரியாக மதிக்கமுடியாது; உலகத்தில் தன்வேலையைப்
போட்டுவிட்டு சம்பந்தமே இல்லாத மக்களுக்காக
உயிர்விட்டவர்களைத் தேடித் தேடி அறியும் விருப்பம்
வரும்; ஆயிரம்வருடங்களு
க்கு முன்பு நடந்துமுடிந்ததை அறியவேண்டும்
என்று தேவையற்ற விருப்பம் உண்டாகும்; மாற்றான்
என்று நினைத்தவர் நம்மவர் என்றும் நம்மவர்
என்று நினைத்தவர் மாற்றானாகவும் தோன்றும்; குழப்பம்
அதிகமாகும் அது தெளிய மேலும் அறியமுற்படுவீர்
கள்; பிறகு வேறொரு குழப்பம் வரும்; அவர்கள்
பாட்டுக்கு வாழும் மக்களை ஒன்று திரட்டி உங்கள்
பின்னால் வரச்செய்யவேண்டும் என்று தோன்றும்; பலர்
மத்தியில் உங்களைப் புதிதாய்ப் பார்ப்பவர்கள்
கூர்ந்து பார்ப்பார்கள், உங்களுடைய சிந்தனையும்
மற்றவரைவிட மாறுபட்டுவிடும்; முன்பின் பார்க்காத
சில அரசியல்வாதிகள் எதிரி என்று எண்ணத்தோன்றும்;
எதை எடுத்தாலும் கேள்வி கேட்பீர்கள்; அதுவரை நீங்கள்
ரசித்த நடிகர்களும், நாயகர்களும்
திடீரென்று சலித்துவிடுவார்கள்; உங்கள் பேசியில்
துப்பாக்கி சத்தம் அழைப்பு ஒலியாக்கப்படும்;
நடுஇரவில் திடீரென்று விழிப்பு வரும்
பிறகு தூக்கம் வராது; படிப்பிலோ வேலையிலோ உங்கள்
மனம் செல்லாது; ஊர்,பெயர் மட்டும் தெரிந்த
யாரோ ஒருவன் உங்கள் தலைவனாவான்; எதிர்ப்பாலினரைக்
கண்டால் ஆசை வராது மதிப்புதான் வரும்;
வாழ்க்கைக்கு அவசியமான பணத்தின் முக்கியத்துவம்
தெரியாது; எப்போதும் சிறிய ஆயுதம்
வைத்துக்கொள்ளத் தூண்டும்;
என்னவெல்லாமோ எழுதத்தோன்றும்; முன்புபோல
உங்களுக்காக நீங்கள் அழமுடியாது ஆனால்,
தொடர்பேயில்லாத தொலைதூர மக்களுக்காக
அழத்தோன்றும்; 24மணிநேரமும்
மற்றவர்களுக்கு வருங்காலத்தில் என்ன நடக்கும் என்ற
தேவையற்ற சிந்தனையே இருக்கும்; ஆகவேதான்
கூறுகிறேன்; நன்றாகப் படிப்போம்;
அம்மா அப்பா மீது பாசமாக இருப்போம்; வேலைக்குப்
போய் சம்பாதித்து நம்
பிள்ளைகளுக்கு சேர்த்துவைத்துவ
ிட்டு செத்துவிடுவோம்;
அதுதானே சாதனை?!?!?!????????

https://m.facebook.com/photo.php?fbid=415463378557321&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment