Saturday 20 September 2014

திருப்பதி முருகா

திருப்பதி ""முருகா""

திருப்பதிக்குப் போய் மொட்டைபோட்டுவிட்டு வருகிறாராம்,
அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும் வழக்கம் உண்டா?

*எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக்கிறார்?
*எந்த பெருமாளுக்கு ஈஸ்வரன் என்ற சைவ(சிவன்) பெயர் உள்ளது?
*எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக்குளமும் இல்லாமல் இருக்கிறது?
*எந்த ஆழ்வாராவது திருப்பதி பெருமாளைப் பாடியது உண்டா?
*எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா?
(படத்தில் பார்க்க)
*கோவிலைச் சுற்றி கிடைத்துள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ்க் கல்வெட்டுகள் என்பதை அறிவீரோ?
*கோவில் சுவர் முழுக்க தமிழ் எழுத்துகள் சுண்ணாம்படித்து மறைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளீரா?
*சங்கும் சக்கரமும் தோளில் ஒட்டவைத்திருப்பதையும் அதன் பின்னால் போலியான பின்கைகள் ஒட்டவைக்கப்பட்டிருப்பதையும் கூர்ந்து நோக்கியிருக்கிறீரா?
*பெருமாள் கோவில்கள் பெரும்பாலும் மலைமீது  இருக்காதே?
*தங்கத்தாலும் வைரத்தாலும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சிலை முருகர் சிலை என்றால் நம்புவீரா?

சங்கநூல்கள் வேங்கடத்தைப் பாடுகின்றன; (ஆனால் முருகன் என்று பாடவில்லை); இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் 'வேங்கடத்து நெடியோனைப்' பாடுகிறார்.
அருணகிரிநாதர் முருகன் என்று அடையாளம் கண்டு 'வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலையில் உறைவோனே!' என்று பாடுகிறார்.

சைவர்களும் வைணவர்களும் திருப்பதியைச் சொந்தம்கொண்டாட 12ம் நூற்றாண்டில் ராமானுஜர் கருவறையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரசமுத்திரையோடு பூட்டு போட்டாராம்; மறுநாள் காலை திறந்துபார்த்தால் சங்கும் சக்கரமும் சிலைமேல் இருந்ததாம்; சைவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனராம்; உடனே சங்கு சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவத்தலமாக்கிவிட்டார்களாம்.

ஆம்ஸ்டர்டாமில் இருந்து ரோஜா மலர்கள், ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு,
பாரீஸில்  இருந்து வாசனைத் திரவியங்கள் என வளம்கொழிக்கும் திருப்பதி 2013ம் ஆண்டில் மட்டும் 860கோடி வருமானம் ஈட்டியுள்ளது; இந்த ஆண்டு 1000கோடி எதிர்பார்க்கப்படுகிறது;
எல்லாம் தெலுங்கருக்குத்தான்.

திருப்பதி மட்டுமா திருக்காளத்தியும் (காளஹஸ்தி) போனது;
(நல்லவேலை ம.பொ.சி படைவீடான திருத்தணியை மீட்டுக்கொடுத்தார்;
திருப்பதியைச் சுற்றியிருக்கும் தமிழ் ஊர்களாவன,
சந்திரகிரி (தமிழர் - 60 %), சித்தூர் (தமிழர்- 65%), குப்பம்(தமிழர்-60 %), நகரி(தமிழர்-55%), புங்கனூர்(தமிழர்-50%), சத்தியவேடு(தமிழர்-70 %),
திருக்காளத்தி(தமிழர்-65 %),
புத்தளப்பட்டு(தமிழர் -55%),
திருப்பதி(தமிழர்-55 %),
பல்லவனேறி(தமிழர்-50 %), நெல்லூர்(தமிழர்-55 %), கோவூர்(தமிழர்-60%),
உதயகிரி(தமிழர்-55%) ...
1300களில் நாய்க்கெராட்சி வரும்வரை வேங்கடமலை என்ன அதற்கும் வடக்கே துங்கபத்திரை ஆற்றுக்கு தெற்கே என்றும் வேற்றினத்தார் நுழையவில்லை; காலம் காலமாக தமிழர் பகுதியாக இருந்த வேங்கடம் இன்று தெலுங்கர் ஆட்சிக்குப் போய்விட்டது;
கோவிலைக் கட்டியவன்உன் பாட்டன் ஆனால் அங்கே தெலுங்கன் உன்னை 'ஜருகண்டி' என்று பிடித்துத் தள்ளுவான்; பாலாஜி என்ற பெயரே 200ஆண்டுகள் முன்பு கிடையாது வடயிந்தியன் பாலாஜி என்ற பெயரை வைப்பான்; தமிழன் அந்தப் பெயரை வைத்துக்கொண்டு திரிகிறான்;
இருநூறாயிரம்(2லக்சம்) தமிழனைக் கொன்றுதள்ளிய ராஜபக்ச மாமியார் வீட்டுக்கு வருவதுபோல திருப்பதி வந்துபோவான்;
அவன் தமிழகத்திற்கு வந்துபோனால்கூட எவனும் கேட்கமுடியாது.
உலகிலேயே பெரிய முருகன் சிலை மலேசியாவில் பத்துமலையில் உள்ளது; இப்போது அதற்கு அருகிலேயே ராமர்கோவிலும் ஹனுமான் சிலையும் வந்தாயிற்று.
சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் சிலையைச் செய்து அனுப்பியவன் தமிழன்; ஆனால் அங்கே வெந்நீர் ஊற்றிக் கொலைசெய்யப்பட்டான் ஒரு தமிழன்; தமிழன் என்றதும் மலையாளி கொலையாளி ஆகிவிடுகிறான்; கேரளாவில் மலைமலையாக தங்கம் கிடைத்த பத்மநாபசுவாமி கோவில் கடைசி அறை திறக்கப்படவில்லை; அந்த அறையில்தான் தங்கம் தமிழருக்குச் சொந்தம் என்று நிறுவும் சான்றுகள் உள்ளதாக தமிழுணர்வாளர்கள் கூறுகின்றனர்;  தங்கத்தை மலையாள அரசு வைத்துக்கொண்டது; கண்ணகிக் கோவில் தமிழக எல்லைக்குள் உள்ளது ஆனால் மலையாள காவல்துறை அங்கே பண்ணுகிற அட்டூழியம் தமிழன் எவ்வளவு கையாலாகாதவன் என்று நிறுவுகிறது; கண்டியை 'நுவர' என்றாக்கி சிங்களவன் வைத்துக்கொண்டான்; 'சமணவெள்ளைக்குளத்தை' 'ஸ்ரவணபெலகோலா' என்றாக்கி கன்னடவன் வைத்துக்கொண்டான்; தஞ்சை பெரியகோயில் சோழர்காலத்து ஓவியங்களுக்கு மேலேயே நாய்க்கெர்கள் ஓவியம் வரைந்து சோழர் கல்வெட்டுகளைத் திருத்தி பெயர்த்து தமிழ் வரலாற்றை அழிக்க முயன்றுள்ளனர்; குமரி அன்னை கோயிலை விட விவேகானந்தர் பாறையும் காந்தி மண்டபமும் பரவலாகிவிட்டது; ராமேசுவரத்தில் எங்கே திரும்பினாலும் வடயிந்தியன் நிற்கிறான்; கேட்டால் எல்லாரும் ஹிந்துவாம்;
ஹிந்து என்ற வார்த்தையே 1829ல் ஆங்கிலேயன் உருவாக்கியது என்று தெரியுமா?
ஆசியாவிலேயே பெரிய கோபுரம் திருவரங்கத்தில்(சிறிரங்கம்) அமைத்து, சீனாவில் கேண்ட்டான்(cantan) அருகே குப்ளாய்கான்(1300கள்) காலத்தில் சிவன்கோவில் கட்டி, உலகிலேயே பெரிய வழிபாட்டுத் தளமான அங்கோர்வாட்டை (கம்போடியாவில்) எழுப்பி, தஞ்சை பெரியகோவிலும் மதுரை மீனாட்சி கோவிலும் இன்றும் வானாளவ நிற்குமாறு பேரரசு செலுத்திய தமிழினமா இன்று இப்படிக் கேடடைந்துவிட்டது?
உன்னைக் கடவுளும் காப்பாற்றவில்லை.
கடவுளை நீயும் காப்பாற்றவில்லை.

https://m.facebook.com/photo.php?fbid=494337764003215&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr

No comments:

Post a Comment