உதவாத ஸ்டெர்லைட்டின் உற்பத்தி
* ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உற்பத்தியில் ஏறத்தாழ 80% சீனாவிற்கு செல்கிறது.
* மீதி 20% சதவீதத்தில் எந்த நாடுகளிலிருந்து தாமிரத் தாது எடுக்கப்பட்டதோ (பெரும்பாலும் ஆஸ்திரேலியா மற்றும் ஜாம்பியா) அதே நாட்டிற்கு அனுப்பபட்டு அங்கே வரிவிலக்கு பெறப்படுகிறது.
* மிச்சமீதி தாமிரம் தூத்துக்குடியின் தாமிரத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடிவதில்லை.
தேறாத கழிவு தாமிரமே உள்ளூர் சந்தைக்கு வருகிறது.
இந்த உள்ளூர் வணிகமும் ஸ்டெர்லைட் பெயரால் நடக்காமல் கள்ளச்சந்தை மூலம் நடக்கிறது.
* இதுபோக ஆனோடு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது.
இந்த ஆனோடு வெறும் ஆனோடு கிடையாது; தங்கம், பிளாட்டினம், பல்லேடியம் போன்றவை திருட்டுத்தனமாக கலக்கப்பட்டது.
அதாவது ஆனோடில் மறைத்து கள்ளக்கடத்தல் செய்கிறார்கள்.
ஸ்டெர்லைட் உற்பத்தி நாட்டுக்கு தேவை என்போர் முதலில் அவர்கள் கட்டாமல் பாக்கிவைத்துள்ள 750கோடி சுங்கவரியை நாட்டுக்கு வாங்கி கொடுத்துவிட்டு பேசலாம்.
ஸ்டெர்லைட் காப்பர் கம்பி இல்லாமல் மின்சாரம் வராது என்போர் அவர்கள் இதுவரை பாக்கி வைத்திருக்கும் மின்சாரக் கட்டணமான 10கோடி ரூபாயை வாங்கித் தந்துவிட்டு பேசலாம்.
ஸ்டெர்லைட் காப்பர் கம்பி இல்லாமல் மோட்டார் இயங்காது அதனால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாது என்போர்,
ஆயிரம் லிட்டர் தண்ணீரை வெறும் 15ரூபாய்க்கு பெறும் ஸ்டெர்லைட் இதுவரை தண்ணீர் கட்டணமே கட்டியதில்லை என்பதையும் அந்த பாக்கித் தொகை 2011லேயே 82கோடி ரூபாய் என்பதையும் அறிந்து பேசவும்.
சான்று நூல்: ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை
வெளியீடு: பூவுலகின் நண்பர்கள்
Friday, 8 June 2018
உதவாத ஸ்டெர்லைட்டின் உற்பத்தி
Monday, 30 May 2016
வீரப்பனார் எத்தனை யானைகளைக் கொன்றார்?
வீரப்பனார் எத்தனை யானைகளைக் கொன்றார்?
1972-85 ஆண்டுகளுக்கிடையில் இந்திய யானைகளின் மொத்தத் தொகையே சுமார் 10,000 தான்.
அவற்றில் தமிழ்நாட்டில் சுமார் 1500 மட்டுமே இருந்திருக்கலாம்.
வீரப்பனின் இருப்பிடம், மொத்த தமிழ்நாடோ, இந்தியாவோ அல்ல.
குறிப்பிட்ட சுமார் 600 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட அடர்த்தியற்ற ஒரு குறுமரக் காட்டுப்பகுதிதான்.
ஏனெனில் ஒரு யானைக் கூட்டத்திற்கு சராசரியாக 100 ச.கி.மீ. காடுகள் தேவை.
(நன்றி: ச.முகமது)
ஆக ஆறு யானைக்கூட்டங்கள்தான் வாழ்ந்திருக்கவேண்டும்.
ஒரு யானைக் கூட்டத்தில் ஐம்பதில் இருந்து அறுபது யானைகள் வரை இருக்கும்.
ஆக அதிகப்படியாக 350 யானைகள்தான் மொத்தமே இருந்திருக்கும்.
வீரப்பனார் வேட்டைக்காரர்தான்.
ஆனால் அவர் வேட்டையாடிய காலம் மிகவும் குறைவு.
அவர் என்னமோ ஆயிரக்கணக்கான யானைகளைக் கொன்றதாகக் கூறுகின்றனர்.
படம்: தமிழகத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பல வழிபாட்டுச் சிலைகளில் ஒன்று.
Friday, 18 July 2014
பொல்லாதத் தமிழர்கள்
பொல்லாத தமிழர்கள்
LLLLLLLLLLLLLLLLLLL
உலகை உலுக்கிய மனிதர்களை என்றுமே மக்கள்
மறப்பதில்லை
அப்படி ஆட்டிப்படைத்த தமிழர்களும்
இருக்கவே செய்தனர்;
அவர்கள் பற்றி ஒரு பதிவு.
மஸ்தான் மிர்ஸா
--------------------------
1970களிலும் 1980களிலும் மும்பையைக் கலக்கிய
நிலழுலக பெருந்தலை (underworld don); 1926ல்
இராமநாதபுரத்தில் பனைக்குளம் என்ற சிற்றூரில்
பிறந்தவர்; மள்ளராக இருந்து இசுலாமியராக மாறிய
குடும்பம்; 1955ல் தமது 17வயதில் சுமைதூக்கும்
கூலியாக பம்பாயில் தமது வாழ்க்கைத் தொடங்கினார்;
பத்தே வருடங்களில் கடத்தல் தொழிலில்
ஈடுபட்டு இந்தி திரைப்படங்களைத் தயாரிக்கும்
அளவு உயர்ந்தார்; 1975
நெருக்கடி காலத்தின்போது சிறையிலடைக்கப்பட்டார்;
சிறையில்தான் இவர் இந்தி (பம்பாய் வந்து 20ஆண்டுகள்
கழித்து) பேசக் கற்றார்; இவருக்கு தமிழ்
மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும்; விமானம் மூலம்
சென்னையிலிருந்து நாளிதழ்கள் வரவைத்துப்
படித்துக்கொள்வார்; இவர் 1980களில்
மும்பையிலேயே முதல் பெரியமனிதராக இருந்தார்;
அப்போது இவரது மாதவருமானம் நூறுகோடிக்கும் மேல்
என்கிறார்கள்; கடத்தலிலும் இவர் மின்னணு சாதனங்கள்,
தங்கம், வெள்ளி போன்றவற்றையே கடத்தியுள்ளார்;
நிழலுக வாழ்க்கையில் இவர் எவ்வளவு நன்மை செய்தார்
எவ்வளவு தீமை செய்தார் என்பது தெளிவாகத்
தெரியவில்லை; இந்தியில் இவரது வாழ்க்கையைத்
தழுவி பல படங்கள் வந்துள்ளன; தமிழில் 'தீ' என்ற படம்
இவர் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது.
வரதராசமுதலியார்
---------------------------
1926ல் வேலூரில் பிறந்தார்; கூலிவேலை செய்ய
பம்பாய் சென்று 1980களின் பிற்பகுதியில்
பம்பாயை ஆட்டிப்படைத்தவர்; இவரும் மஸ்தான் மிர்ஸாவும்
நண்பர்கள்; கடத்தலில் ஈடுபட்ட இவரும் நிலழுலகப்
பெருந்தலை; எனக்குத் தெரிந்து ஒரே துறையில்
இருதமிழர்கள் கொடிகட்டிப் பறந்தும் தங்களுக்குள்
மோதிக்கொள்ளாதது இவர்கள் காலத்தில்
மட்டுமே நடந்துள்ளது; 1982ல் இவரது மாதவருமானம்
80கோடிக்கு மேல் என்கின்றனர்; இவர் 1990ல்
சென்னையில்
மரணமடைந்தபோது இவரது பூதவுடலை மஸ்தான்
தனி 'இந்தியன் ஏர்லைன்ஸ்' விமானம் மூலம் பம்பாய்
கொண்டுவந்து தமிழர் பகுதிகளில் அஞ்சலிக்காக
எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்;
இவரது வாழ்க்கையைத் தழுவியும் பல படங்கள்
வந்துள்ளன; தமிழில் 'நாயகன்' படம் வந்துள்ளது.
பேங்டாங் காளி
---------------------
1961ல் மலேசியாவில் 'பேங்டாங்'ல் பிறந்தார்;
1990களில் நிழலுகப் பெருந்தலையாக
உருவெடுத்தார்; இவரைப்பற்றி தகவல்
தருவோருக்கு ரூபாய் மதிப்பில் 10,40,000
அறிவிக்கப்பட்டிருந்தது; 200பேர் கொண்ட
தனிப்படை அமைக்கம்பட்டிருந்தது; 1993ல்
காவல்படையினருடன் துப்பாக்கி மோதலில்
கொல்லப்பட்டார்; இவரைப் பற்றி வேறு தகவல்கள் இல்லை;
தற்போதும் மலேசியாவில் அறிவிக்கப்பட்ட
பெருந்தலைகள் பலரும் தமிழர்கள்; (பில்லா படம்)
மலேசிய எல்லைக்கருகே தாய்லாந்து நாட்டுக்குள்
'பென்டாங்' 'டன்னோக்' போன்ற பகுதிகளில் பெருந்தலைகள்
(பெரும்பாலும் தமிழர்கள்) ஆதிக்கம் கொடிகட்டிப்
பறப்பதாகக் கூறுகின்றனர்.
மலையூர் மம்பட்டியான்
----------------------------------
1959லிருந்து ஐந்து ஆண்டுகள்
காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்;
நெடுஞ்சாலைத் துறையில் கூலிவேலை செய்துவந்தவர்;
பிற்காலத்தில் காட்டுக் கொள்ளைக் காரனாகவும்
வேட்டைக்காரனாவும் மாறினார்; தமது காலத்தில் பல
வீரசாகசங்களைச் செய்தவர்; கொள்ளைக்காரனாக
இருந்து பிற்காலத்தில் தமிழினப் போராளியாக
மாறிய வீரப்பனாருக்கு இவர்தான் முன்மாதிரி; கென்னத்
ஆன்டர்சன் என்ற ஆங்கிலேயர் காடுகளில்
மம்பட்டியானுடன் தங்கியிருந்த
தமது அனுபவங்களை தமது நூல்களில் குறிப்பிடட்டுள்
ளார்; 1964உடன் பழகிய ஒருவராலேயே சுட்டுக்
கொல்லப்பட்டார்.
இவரது வாழ்க்கையைத் தழுவி 'மலையூர் மம்பட்டியான்'
படம் வெளிவந்தது.
இவர்களை முன்மாதிரியாகக் கொள்ளமுடியாதுதான்;
இவர்கள் வாழ்க்கையும் பெரும்பாலும்
வெளிப்படையானதாக இல்லாததால்
இவர்களை எடைபோடுவதும் கடினம்; இருந்தாலும்
வெளியிடங்களுக்குச் சென்று அங்கே வல்லவர்களாகத்
திகழ்ந்தவர்கள் என்பதால் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்
https://m.facebook.com/photo.php?fbid=425989110838081&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
Thursday, 10 July 2014
வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி

வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி
$$$$$$$$$$$$$$$$$$
வீரப்பனார் கடத்தல்காரனாக இருந்தபோதே தமிழ் மக்கள் மீது பற்றுள்ளவராக இருந்தார்; 1993ல் வீரப்பனாரைத் தேடுகின்ற பெயரில் அதிரடிப்படை மக்களைக் கொடுமைப்படுத்துவது உச்சநிலையை அடைந்திருந்தது; வீரப்பனார் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் தமது குடும்பத்திற்கும் எதுவும் செய்யாமல் இருந்ததால் அவரது மனைவி இருபெண்பிள்ளைகளுடன் புடவை விற்று பிழைத்துவந்தனர்; இத்தனைக்கும் அவர் கோடிகோடியாக சம்பாதித்து வந்தார்; 1993க்குப் பிறகு அல்லல் படும் மக்களுக்காக எதாவது செய்யவேண்டும் என்று நினைத்தார்; 1994களுக்குப் பின் கடத்தல்தொழிலை விட்டுவிட்டார்; அதிலிருந்து அவர் வனத்துறை அல்லது காவல்துறையினரை கடத்திச்சென்று பணம்பெற்று விடுதலை செய்து அந்த பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளித்தார்; அவரால் கடத்தப்பட்டவர்கள்,
1994 சிதம்பரம் (டிஎஸ்பி), தமிழகக் காவல்துறை.
1995 மூன்று தமிழக வனத்துறையினர்
1997 பத்து கர்நாடக வனத்துறையினர்
1997 ஆறு பந்திப்பூர் புலிகள் சரணாலய ஊழியர்கள்
ஆயுதங்கள் குறைந்தபோது 1998ல் வெள்ளித்திருப்பூர் காவல்நிலையத்தில் ஆயுதக்கொள்ளை நடத்தினார்.
சிறிதுகால அமைதிக்குப்பின் ஜூலை மாதம் 2000ம் ஆண்டு.
தமிழர் நாடு விடுதலைப் படை(TNLA) தலைவர் மாறன் வீரப்பனார் கட்டுப்பாட்டுப் பகுதியில் தமது படையைக் கட்டமைக்கும் பணியில் இருந்தார்; வீரப்பனாரும் மாறனாரும் கலந்து பேசி திட்டம் ஒன்றை வகுத்தனர்; கன்னடவரால் 'பெரியண்ணன்' என்று அழைக்கப்படுபவரும், தாதா சாகேப் பால்கே விருதுபெற்றவரும், கன்னடத்தை கட்டாயப்பாடமாக்க முழு கர்நாடகாவையும் திரட்டிப் போராடியவரும், கன்னட இனவெழுச்சிப் பாடல்களைத் தன்குரலால் பாடியவருமான திரு.இராஜ்குமாரை கடத்துவதாக திட்டம்; அப்போது அவருக்கு 72 அகவை; அவர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்; அவர் பங்காற்றிவந்த கன்னட இயக்கங்கள் தமிழரையே குறிவைத்து தாக்குபவை ஆனால் அவர் நேரடியாக எந்த அரசியல் விளையாட்டும் செய்ததில்லை; ஆனால், கன்னட இனத்தின் பெருமையான வடிவமாக அவர் அறியப்பட்டார்;
அவரைக் கடத்துவதுதான் கன்னட இனத்தின் தலையில் கைவைத்ததுபோல் இருக்கும்;
கடத்தி பரபரபாக்கி தீங்கில்லாமல் விடுதலை செய்வது என்று முடிவானது.
தோட்டகாஜனூரில் இருந்த தனது தோட்டத்துமாளிகையில் ஓய்வாக இருந்தார் ராஜ்குமார்.
30ஜூலை2000 அன்று இரவு 10மணியளவில் கதவு தட்டப்பட்டது; வெளியில் இரும்புக்கதவைத் தாண்டி வீடுவரை யார்வந்தது என்று எண்ணியபடி கதவை ராஜ்குமாரின் மனைவி திறந்தார்; வெளியே கொட்டும் மழையில் 10,12 துப்பாக்கியேந்திய ஆட்களுடன் வீரப்பனார் நின்றிருந்தார்; அப்பெண்மனி அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்; வீரப்பனார் கன்னடத்தில் "ஐயாவைப் பார்க்கவேண்டும்" என்றபடி உள்ளே நுழைந்தார்; ராஜ்குமார், அவரது மருமகன்,அவரது உறவினர், துணை இயக்குனர் ஒருவர் என நான்குபேரைத் தன்னோடு அழைத்துக்கொண்டு போகும்போது ராஜ்குமார் துணைவியாரிடம் அவரது கணவருக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் ஒரு ஒலிநாடாவைக் கொடுத்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் அதைக் கொடுத்துவிடும்படியும் கூறிவிட்டு சென்றார்; அன்றிரவே பரபரப்பு கிளம்பிவிட்டது;
விடிந்ததும் விடியாததுமாக எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக முதல்வரைச் சந்திக்க சென்னைக்கு பதறியடித்து ஓடினார்; மறுநாள் கர்நாடகாவே கதிகலங்கிப்போனது; கன்னடத் திரைப்படத்துறை வேலைநிறுத்தம் செய்தது;
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன; தமிழக பதிவு வாகனங்கள் எண்களைப் பார்த்ததும் அடித்துநொறுக்கப்பட்டன;
பெங்களூரில் தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன; மாண்டியா அருகில் இரண்டு தொடர்வண்டிகள் நிறுத்தப்பட்டன; பேருந்துகள் கொளுத்தப்பட்டன; ஆனால், உயிர்ப்பலி எதுவும் இல்லை, ராஜ்குமாரை விடுவித்தபிறகும் கூட;
காரணம் வீரப்பனார் கையில் அவர்கள் குடுமி இருந்தது;
சோர்ட் சாலையில் (chord road) ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார் அது ராஜ்குமார் கடத்தப்பட்டதன் எதிரொலியா என்பது உறுதியாகவில்லை;
வீரப்பனார் அனுப்பிய ஒலிநாடாவில் "கர்நாடக மற்றும் தமிழக முதலமைச்சர்களுக்கு வணக்கம், நான் வீரப்பன் பேசுவது என்னவென்றால், என் தோழர் என் கோரிக்கைகளை வாசிப்பார்" என்கிறார். அதன்பிறகு தநாவிப தலைவர் மாறன் கோரிக்கைகளை வாசிக்கிறார்.
அவைகளில் முக்கியமானவை,
1. காவிரிப் பிரச்சினையை அனைத்துலக நீதிமன்றம் விசாரித்து முடிவு கூறவேண்டும்.
2.தமிழக சிறைகளில் உள்ள தமிழர் நாட்டு விடுதலைப் படை, தமிழர்நாடு மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த ஐந்துபேரை தமிழகஅரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3.வாச்சாத்தி,சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட
பெண்களுக்கு ஆகியோருக்கு நஷ்டஈடு தரவேண்டும்.
4. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழ்
வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும்.
அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்.
5. தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ள அப்பாவித்தமிழர்களை
விடுவிக்க வேண்டும்.
அவர்களுக்கு உறுதியளித்தபடி
நிவாரணம் வழங்க வேண்டும்.
(தொடரும்)
https://www.facebook.com/photo.php?fbid=448921765211482&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739