Showing posts with label மாவீரர். Show all posts
Showing posts with label மாவீரர். Show all posts

Monday, 26 November 2018

தமிழகத்தில் ஈழ மாவீரர் நினைவிடங்கள்

27.11.1982 தமிழகத்தில் இராமேசுவரத்தில்தான் புலிகள் இயக்கத்தின் முதல் வீரமரணம் பதிவாகிறது.

செ. சத்தியநாதன் (அ) சங்கர் என்கிற புலி வீரர்  யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து தமிழகத்தில் பண்டுவம்(சிகிச்சை) பெறும்போது வீரச்சாவு அடைந்தார்.
அவரது நினைவாகவே மாவீரர் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

புலிகளுக்கு தமிழகத்தில் மாவீர நினைவிடங்கள் பல உண்டு.
கிடைத்தவற்றை இதில் சேர்த்துள்ளேன்.

(தலைவர் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் அவர் மாவீரர் ஆனதாக உறுதியாகக் கூறமுடியாது)

மேலும் தகவலறிந்தோர் கருத்திடவும்.
அதை பதிவில் சேர்க்கிறேன்.

1. கொளத்தூர் அருகே புலியூர்,
பொன்னம்மான் நினைவிடம்

2. விழுப்புரம் அருகே சடையாண்டிக்குப்பம்,
ஐயனார் சிலையுடன் பிரபாகரன் சிலை.

3. புலியூர் அருகே மேட்டூர் வனப்பகுதி,
கேணல் றோய் (ரோய்) சமாதி.

4. அரியலூர் அருகே குமிழியம்,
திலீபன் நிழற்குடை.

5. மதுரை நகரம்,
திலீபன் தெரு.

6. புதுக்கோட்டை அருகே சுந்தம்பட்டி (அ) மாவீரர் கிராமம்.

7. தஞ்சாவூர், போசன் கல்லறை மற்றும் கல்வெட்டு

8. வேளாங்கண்ணி அருகே பொய்கைநல்லூர்,

பிரபாகரன் முழு உருவ சிலை காவல்தெய்வமாக வழிபாடு

Monday, 30 May 2016

வீரப்பனார் எத்தனை யானைகளைக் கொன்றார்?

வீரப்பனார் எத்தனை யானைகளைக் கொன்றார்?

1972-85 ஆண்டுகளுக்கிடையில் இந்திய யானைகளின் மொத்தத் தொகையே சுமார் 10,000 தான்.

அவற்றில் தமிழ்நாட்டில் சுமார் 1500 மட்டுமே இருந்திருக்கலாம்.

வீரப்பனின் இருப்பிடம், மொத்த தமிழ்நாடோ, இந்தியாவோ அல்ல.

குறிப்பிட்ட சுமார் 600 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட அடர்த்தியற்ற ஒரு குறுமரக் காட்டுப்பகுதிதான்.

ஏனெனில் ஒரு யானைக் கூட்டத்திற்கு சராசரியாக 100 ச.கி.மீ. காடுகள் தேவை.

(நன்றி: ச.முகமது)

ஆக ஆறு யானைக்கூட்டங்கள்தான் வாழ்ந்திருக்கவேண்டும்.

ஒரு யானைக் கூட்டத்தில் ஐம்பதில் இருந்து அறுபது யானைகள் வரை இருக்கும்.

ஆக அதிகப்படியாக 350 யானைகள்தான் மொத்தமே இருந்திருக்கும்.

வீரப்பனார் வேட்டைக்காரர்தான்.
ஆனால் அவர் வேட்டையாடிய காலம் மிகவும் குறைவு.

அவர் என்னமோ ஆயிரக்கணக்கான யானைகளைக் கொன்றதாகக் கூறுகின்றனர்.

படம்: தமிழகத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பல வழிபாட்டுச் சிலைகளில் ஒன்று.

Tuesday, 9 December 2014

இண்டியா கேட்

இண்டியா கேட்

/-/-/-/-/-/-/-/-/-/-/-/

இது ஆங்கிலேயர்கள் ஆண்டபோது தம் அரசுக்காக
உலகப்போர்களிலும் மற்றும் பல்வேறு நாட்டு விடுதலைப்படைகளை எதிர்த்தும்
போர்புரிந்து வீர(?)மரணம் அடைந்த அன்றைய இண்டியர்களுக்காக கட்டியது.
இதில் அவர்கள் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன.

சரி. 1947ல் இண்டியா ஹிந்தியா ஆனபிறகு தம் அரசுக்காக போர்புரிந்து மரணமடைந்த படைவீரர்களுக்கான நினைவிடம் எங்கேயுள்ளது?
அதுவும் இதுவேதானாம்.

ஆங்கிலேயனுக்கு இருந்த நன்றிகூட இல்லையேடா?!
இந்த நாட்டுக்காக(?) நீ ஏன் முட்டியளவு பனியில் காவல்புரியணும்.

ஏன்டா உனக்கு அவ்வளவு கடினம்.
இங்கே வா. நாம் நம் தமிழர்நாட்டைக் கட்டியமைப்போம்.

நீ எல்லையிலிருந்து வீட்டுக்கு வர மூன்றுநாட்கள் ஆகாது.

நீ வீரமரணமடைந்த பிறகும் ஒரு 'மாவீரர் துயிலும் இல்லத்தில்' இதமாக உறங்கலாம்.

(ஜன கன மன என்று ஆங்கிலேயனை வாழ்த்து
https://m.facebook.com/photo.php?fbid=374583592645300&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )

Wednesday, 26 November 2014

தமிழகத்தில் மாவீரர் சுவடுகள்

தமிழகத்தில் மாவீரர் சுவடுகள்.

ஒஐஒஐஒஐஒஐஒஐஒஐஒஐஒஐ

கொளத்தூர் அருகே புலியூர் என்ற ஊர் உள்ளது. கும்பாரப்பட்டி என்ற ஊர் 3 ஆண்டுகளில் 2000புலிகள் பயிற்சி எடுத்த இடம். பிறகு அந்த ஊர்மக்கள் புலிகள் மேல்கொண்ட அன்பால் ஊரின் பெயரையே புலியூர் என்று பெயர்மாற்றிவிட்டனர். இப்பகுதியில் பொறுப்பாக இருந்த புலித்தளபதி பொன்னம்மான் அவர்களின் நினைவு நிழற்கூடம் அமைப்பு சாராத பொதுமக்களால் கட்டப்பட்டு உள்ளது.
1987ல் பொன்னம்மான் மாவீரர் ஆனபோது இந்த ஊரிலிருந்து 5000பேர் கொண்ட ஊர்வலம் இங்கிருந்து புறப்பட்டது.

மேட்டூர் வனப்பகுதியில் கேப்டன் ராய் அவர்களின் நினைவிடம் உள்ளது.
(படங்கள் கிடைக்கவில்லை).
1990ல் யாழ் பலாலி சமரின்போது காயமடைந்த ராய் அவர்கள் சிகிச்சைக்காகத் தமிழகம் அழைத்துவரப்பட்டு பலன் கிடைக்காமல் மாவீரர் ஆனவர்.
இந்த நினைவிடம் இங்கே பயிற்சி எடுத்த புலிகளால் நிறுவப்பட்டு பிறகு அப்பகுதி மக்களால் பேணப்பட்டு வந்தது. தற்போது இது வனத்துறையின் கீழ் யாரும் செல்லமுடியாத பகுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

அரியலூர் மாவட்டம், குமிழியம் சிற்றூரில் பொதுமக்கள் நிழற்குடை ஒன்றை அமைத்து அதற்கு லெப்.கேணல்.திலீபனின் நினைவு நிழற்குடை என்று பெயரிட்டுள்ளனர்.
(மாநில அளவில் பெயரெடுத்த தியாகி திலீபன் கபடிக் குழுகூட வைத்துள்ளனர்)

தனு அக்காவுக்கு நினைவுக்கொட்டகை கூட தமிழகத்தில் உள்ளது. ஆனால், அது எங்கே இருக்கிறது என்ற விபரம் தெரியவில்லை.

தலைவர் பிரபாகரன் பெயரிலும் தனிப்பட்ட மக்கள் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு சொந்தமான கட்டிடங்களும்,கூடங்களும், வாகனங்களும், விற்பனையகங்களும் பற்பல உள்ளன.

மற்றபடி தமிழ்ச்செல்வன், பால்ராஜ், ஆன்டன் பாலசிங்கம், ஈழத்திற்காக தீக்குளித்த தமிழகத்தார் பெயர்களிலும் பல்வேறு நினைவுச்சின்னங்கள் உள்ளன.

மேலும் தகவலறிந்தோர் கருத்திடவும்.
அதை பதிவில் சேர்க்கிறேன்.

( ஈழப்போரில் தமிழகம்
https://m.facebook.com/photo.php?fbid=392315390872120&id=100002809860739&set=a.108935022543493.9865.10000280986073&refid=13

புலிகள்-இயக்கத்தில் தமிழக-
இளைஞர்கள்.
http://vaettoli.blogspot.com.es/2014/07/blog-post_16.html?m=1 )