Showing posts with label மம்பட்டியான். Show all posts
Showing posts with label மம்பட்டியான். Show all posts

Friday, 18 July 2014

பொல்லாதத் தமிழர்கள்

பொல்லாத தமிழர்கள்
LLLLLLLLLLLLLLLLLLL
உலகை உலுக்கிய மனிதர்களை என்றுமே மக்கள்
மறப்பதில்லை
அப்படி ஆட்டிப்படைத்த தமிழர்களும்
இருக்கவே செய்தனர்;
அவர்கள் பற்றி ஒரு பதிவு.
மஸ்தான் மிர்ஸா
--------------------------
1970களிலும் 1980களிலும் மும்பையைக் கலக்கிய
நிலழுலக பெருந்தலை (underworld don); 1926ல்
இராமநாதபுரத்தில் பனைக்குளம் என்ற சிற்றூரில்
பிறந்தவர்; மள்ளராக இருந்து இசுலாமியராக மாறிய
குடும்பம்; 1955ல் தமது 17வயதில் சுமைதூக்கும்
கூலியாக பம்பாயில் தமது வாழ்க்கைத் தொடங்கினார்;
பத்தே வருடங்களில் கடத்தல் தொழிலில்
ஈடுபட்டு இந்தி திரைப்படங்களைத் தயாரிக்கும்
அளவு உயர்ந்தார்; 1975
நெருக்கடி காலத்தின்போது சிறையிலடைக்கப்பட்டார்;
சிறையில்தான் இவர் இந்தி (பம்பாய் வந்து 20ஆண்டுகள்
கழித்து) பேசக் கற்றார்; இவருக்கு தமிழ்
மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும்; விமானம் மூலம்
சென்னையிலிருந்து நாளிதழ்கள் வரவைத்துப்
படித்துக்கொள்வார்; இவர் 1980களில்
மும்பையிலேயே முதல் பெரியமனிதராக இருந்தார்;
அப்போது இவரது மாதவருமானம் நூறுகோடிக்கும் மேல்
என்கிறார்கள்; கடத்தலிலும் இவர் மின்னணு சாதனங்கள்,
தங்கம், வெள்ளி போன்றவற்றையே கடத்தியுள்ளார்;
நிழலுக வாழ்க்கையில் இவர் எவ்வளவு நன்மை செய்தார்
எவ்வளவு தீமை செய்தார் என்பது தெளிவாகத்
தெரியவில்லை; இந்தியில் இவரது வாழ்க்கையைத்
தழுவி பல படங்கள் வந்துள்ளன; தமிழில் 'தீ' என்ற படம்
இவர் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது.
வரதராசமுதலியார்
---------------------------
1926ல் வேலூரில் பிறந்தார்; கூலிவேலை செய்ய
பம்பாய் சென்று 1980களின் பிற்பகுதியில்
பம்பாயை ஆட்டிப்படைத்தவர்; இவரும் மஸ்தான் மிர்ஸாவும்
நண்பர்கள்; கடத்தலில் ஈடுபட்ட இவரும் நிலழுலகப்
பெருந்தலை; எனக்குத் தெரிந்து ஒரே துறையில்
இருதமிழர்கள் கொடிகட்டிப் பறந்தும் தங்களுக்குள்
மோதிக்கொள்ளாதது இவர்கள் காலத்தில்
மட்டுமே நடந்துள்ளது; 1982ல் இவரது மாதவருமானம்
80கோடிக்கு மேல் என்கின்றனர்; இவர் 1990ல்
சென்னையில்
மரணமடைந்தபோது இவரது பூதவுடலை மஸ்தான்
தனி 'இந்தியன் ஏர்லைன்ஸ்' விமானம் மூலம் பம்பாய்
கொண்டுவந்து தமிழர் பகுதிகளில் அஞ்சலிக்காக
எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்;
இவரது வாழ்க்கையைத் தழுவியும் பல படங்கள்
வந்துள்ளன; தமிழில் 'நாயகன்' படம் வந்துள்ளது.
பேங்டாங் காளி
---------------------
1961ல் மலேசியாவில் 'பேங்டாங்'ல் பிறந்தார்;
1990களில் நிழலுகப் பெருந்தலையாக
உருவெடுத்தார்; இவரைப்பற்றி தகவல்
தருவோருக்கு ரூபாய் மதிப்பில் 10,40,000
அறிவிக்கப்பட்டிருந்தது; 200பேர் கொண்ட
தனிப்படை அமைக்கம்பட்டிருந்தது; 1993ல்
காவல்படையினருடன் துப்பாக்கி மோதலில்
கொல்லப்பட்டார்; இவரைப் பற்றி வேறு தகவல்கள் இல்லை;
தற்போதும் மலேசியாவில் அறிவிக்கப்பட்ட
பெருந்தலைகள் பலரும் தமிழர்கள்; (பில்லா படம்)
மலேசிய எல்லைக்கருகே தாய்லாந்து நாட்டுக்குள்
'பென்டாங்' 'டன்னோக்' போன்ற பகுதிகளில் பெருந்தலைகள்
(பெரும்பாலும் தமிழர்கள்) ஆதிக்கம் கொடிகட்டிப்
பறப்பதாகக் கூறுகின்றனர்.
மலையூர் மம்பட்டியான்
----------------------------------
1959லிருந்து ஐந்து ஆண்டுகள்
காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்;
நெடுஞ்சாலைத் துறையில் கூலிவேலை செய்துவந்தவர்;
பிற்காலத்தில் காட்டுக் கொள்ளைக் காரனாகவும்
வேட்டைக்காரனாவும் மாறினார்; தமது காலத்தில் பல
வீரசாகசங்களைச் செய்தவர்; கொள்ளைக்காரனாக
இருந்து பிற்காலத்தில் தமிழினப் போராளியாக
மாறிய வீரப்பனாருக்கு இவர்தான் முன்மாதிரி; கென்னத்
ஆன்டர்சன் என்ற ஆங்கிலேயர் காடுகளில்
மம்பட்டியானுடன் தங்கியிருந்த
தமது அனுபவங்களை தமது நூல்களில் குறிப்பிடட்டுள்
ளார்; 1964உடன் பழகிய ஒருவராலேயே சுட்டுக்
கொல்லப்பட்டார்.
இவரது வாழ்க்கையைத் தழுவி 'மலையூர் மம்பட்டியான்'
படம் வெளிவந்தது.
இவர்களை முன்மாதிரியாகக் கொள்ளமுடியாதுதான்;
இவர்கள் வாழ்க்கையும் பெரும்பாலும்
வெளிப்படையானதாக இல்லாததால்
இவர்களை எடைபோடுவதும் கடினம்; இருந்தாலும்
வெளியிடங்களுக்குச் சென்று அங்கே வல்லவர்களாகத்
திகழ்ந்தவர்கள் என்பதால் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்
https://m.facebook.com/photo.php?fbid=425989110838081&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739