Showing posts with label ஆச்சாரி. Show all posts
Showing posts with label ஆச்சாரி. Show all posts

Saturday, 6 August 2016

விழுப்புரம் ஆசாரிகள்

விழுப்புரம் ஆசாரிகள்
●○●○●○●○●○●○●○●○●○

தங்க நகை வேலைப்பாடுகளில் அதுவும் சிறிய அளவிலான நகைகளில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் செய்துதருவதில் தமிழகத்திலேயே முதலிடம் விழுப்புரம்.
(பெரிய அளவிலான நகைகளுக்கு கோவை)

நகைகளைச் செய்து தந்து கூலி பெறுபவர்கள் ஆசாரிகள்.

ஆனால் தங்கம் முழுவதும் மார்வாடிகள் கையில்,
அதை விற்பதும் லாபம் பார்ப்பதும் பெரும்பாலும் மார்வாடிகள்
(தமிழகம் முழுக்க நிலை இதுதான்)

தமிழ் ஆசாரிகள் சிறுசிறு கடைகளும் பட்டறைகளும் வைத்திருந்தனர்.

இன்று நிலை முன்பை விட மோசம்.

வங்காளிகள் கூட்டம் கூட்டமாகக் குடிவந்து தங்க நகை செய்வது தவிர அதன் உதவி தொழில்களைச் செய்யும் பட்டறைகளைக் கைப்பற்றிவிட்டனர்.
சலங்கை உருக்குதல், பட்டை வெட்டுதல், கம்பி நீட்டுதல் போன்ற துணைத் தொழில்கள் இன்று வங்காள வந்தேறிகள் கையில்.

மார்வாடிகள் வங்காளிகளுக்கு பெரும் ஆதரவளித்து இத்தனைநாள் உழைத்துக் கொட்டிய தமிழர்களை ஒரம்கட்டிவிட்டனர்.

நகை செய்யும் திறமை தமிழ் ஆசாரிகள் கையில்தான் இன்றும் உள்ளது.
அவர்கள் வேறு எந்த சமூகத்துக்கும் அதைச் சொல்லிக்கொடுப்பதில்லை.

ஆனால் காலம் காலமாக கூலிகளாகவே உள்ளனர்.
கிலோ தங்கத்தை உருக்கி நகை செய்து கொடுக்கும் ஆசாரியின் வீட்டுக்குப் போனால் மனைவி மக்கள் கழுத்திலும் காதிலும் குண்டுமணித் தங்கம் இருக்காது.

தங்கத்தொழில் தொடர்பான பட்டறை வைத்திருந்த பல விழுப்புரம் ஆசாரிகள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளும் பல நடந்தேறி வருகின்றன.

எத்தனை ஆண்டுகாலம் தமிழ் மண்ணின் உப்பைத் தின்றாலும் வடவன் வடவனைத்தான் ஆதரிப்பான்.

இந்த பதிவைப் படித்துவிட்டு 'ஆசாரிகள் தொழிலை கைக்குள் வைத்திருப்பது சாதிவெறி' என திராவிட இயக்கங்கள் பிரச்சாரம் செய்யலாம்.

(தகவலுக்கு நன்றி: கா.தமிழ்வேங்கை
தென்செய்தி)

Saturday, 17 October 2015

பிராமணரை வென்ற சித்தூர் ஆசாரிகள்

பிராமணரை வென்ற சித்தூர் ஆசாரிகள்

ஆசாரிகள் பிராமணர் இல்லாமல் தங்கள் பெரியவர்களை வைத்தே திருமணம் செய்துகொள்வதில் வழக்காடி வெற்றிபெற்ற கதை தெரியுமா?

பழைய சித்தூர் ஜில்லாவில் சதுப்பேரி என்ற ஊரில் 1814 ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்று வரலாற்றில் மிகமுக்கியமானது.

அங்கே பண்டிதர் மார்க்கசகாயம் ஆசாரி என்பவர்தான் திருமணங்களை நடத்திவந்தார்.
ஒருமுறை திருமணக்கால் நடுதல் விழா நடக்கும்போது (விவாதஸ்தம்ப பிரதிஷ்டை)
அங்கே பஞ்சாங்க குண்டையன் என்பவர் ஒரு கூட்டத்துடன் வந்து பிராமணர்கள்தான் திருமணம் நடத்திவைக்கவேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார்.

வேத இதிகாசங்களை நன்கு கற்றவரான மார்க்க சகாயனார் அவரை விவாதத்தில் வென்றார்.
அதாவது புராணங்களில் முன்னுக்குப்பின் முரணாக பல தகவல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அவற்றில் எதுவுமே சரியில்லை என்று நிறுவியுள்ளார்.
( mannaivishwakarma.blogspot.in/2015/06/blog-post_13.html )
இந்த விவாதம் ஒரு பஞ்சாயத்து முன்னிலையில் நடந்தது.
தீர்ப்பு ஆசாரிகள் பக்கம் வழங்கப்பட்டது.
ஆனாலும் குண்டையன் ஒத்துக்கொள்ளாமல் தகராறு செய்யவே மார்க்கசகாயனார் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்தார்.

மாஜிஸ்திரேட் வழங்கிய தீர்ப்பில் குண்டையன் கூட்டத்தாருக்கு தண்டப்பணம் விதித்து திருமண நிகழ்வுக்கான இழப்பீடைப் பெற சிவில் கோர்ட்டில் வழக்குபோட ஆசாரிகளுக்கு உத்தரவிட்டார்.

1814ல் மார்க்கசகாயனார் முதலியோர் 'சித்தூர் ஜில்லா அதாலத்' கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

வாதிகள்:
வெள்ளை ஆசாரியார்
மார்க்கசகாயம் ஆசாரியார்
ருத்திர ஆசாரியார்
வெங்கிடாசல ஆசாரியார்
நல்லா ஆசாரியார்
குழந்தை ஆசாரியார்
சின்னக்கண்ணு ஆசாரி
அருணாசல ஆசாரியார்
மகாதேவ ஸ்தபதியார்
தக்ஷிணாமூர்த்தி ஸ்தபதியார்
வரத ஆச்சாரியார்

வக்கீல்- அப்துல் சாயபு

இவர்கள் முன்வைத்த ஆவணங்கள் a) எசுர் வேதம்
b) புருஷசூக்தம்
c) மூலஸ்தம்பம்
d) வச்சிரசூசி
e) வேமநபத்யம்
f) கபிலரகவல்
g) ஜில்லா மாஜிஸ்டிரேட் டைரி தாக்கல்.

பிரதிவாதிகள்:
பஞ்சாங்கக் குண்டையன்
அருணாசல ஐயன்
வெங்கடசப்பு சாஸ்திரி
விஸ்வதி சாஸ்தரி
தொட்டாசாரி
எக்கிய தீட்சிதர்
வியாச பட்டர்
சூரிய நாராயண சாஸ்திரி
ஜோசி சாஸ்திரி
வந்தவாசி சிரஸ்தாரய்யர்

வக்கீல் – அருணாசல முதலி

விசாரணை சாட்சிகள்:
ஆண்டியப்ப முதலி
சங்கரநாராயண செட்டி
கோபி செட்டி
அப்பாசாமி பிள்ளை
வெங்கடசுப்பு நாயக்கன்

(பெயர்களை வைத்து பார்த்தால் குண்டையன் தரப்பும் அவர்களுக்கு எதிரான ஆசாரிகளின் சாட்சிகளும் தமிழ் மொழி பேசுவோர் இல்லை என்பது என் யூகம்)

1818 டிசம்பர் 15 அன்று தீர்ப்பு வந்தது.
தீர்ப்பு ஆவணத்தில் நடந்த விவாதமும் உள்ளது.
(அவ்வாவணம் vishwakarmaviswass.com/?page_id=360
200 ஆண்டுகள் முந்தைய தமிழ் அதிகப்படியான சமக்கிருதம் கலந்துள்ளது.
என்னால் முடிந்த அளவு எளிமைப்படுத்தியுள்ளேன்.

வாதிகள்=ஆசாரிகள்
பிரதிவாதிகள்=பிராமணர்கள்
இதை நன்கு நினைவில் கொள்ளுங்கள்)

பஞ்சமுக பிரம்மா ஐந்து முகங்களிலிருந்து தோன்றிய முனிகளின்(ரிஷிகள்)வழி வந்தவரே விஸ்வகர்மாக்களே பிராமணர்கள் என்றும் வாதிகள் கூறினர்.

வாதிகள் பஞ்சமர் வழிவந்தோர் என்றும், ரிஷிகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்றும், அவர்கள் தொழிலும் பூஜைசெய்வது அல்ல என்றும், தாங்களே அந்த தொழிலைக்குரிய சுத்த பிராமணர் என்றும் பிரதிவாதிகள் கூறினர்.

வெவ்வேறு ரிஷிகளின் பிரம்மரூபங்கள், அவர்களுக்கான உலோகத் தொழில்கள் பற்றியும், தாங்கள் யாகம் செய்து தொழில் தொடங்குவதையும், பஞ்சாங்கத்தில் பிரம்மாக்கள் அருளியவற்றையும், அதனால் பஞ்சாங்கம் சொல்லிக்கொண்டு தாங்கள் சடங்குகளைச் செய்யலாமென்றும்
தங்கள் பிறப்பிலேயே பிராமணத்துவம் இருப்பதாகவும்

மேலும் பிரதிவாதிகள் பறையர், சக்கிலி முதலான நீசசாதியுடன் பிறந்தவர்கள் என்று மனுதர்மம் கூறுவதாகவும்,
கீழ்சாதி வயிற்றிலும் விலங்குகள் வயிற்றிலும் உயிரற்ற பொருட்களின் வயிற்றும் பிறந்த(??!) பல்வேறு ரிசிகள் பெயரைச் சொல்லி அவர்கள் வழிவந்தோரே குண்டையன் தரப்பினர் என்றும் ஆசாரிகள் வாதடினார்கள்.

நீதிமன்றத்தின் முடிவு:
வாதிகள் தாங்களே விஸ்வகர்ம பிராமணர்கள் பிரதிவாதிகளை சங்கர ஜாதி என்றும் கூறி புராண ஆவணங்களைக் காட்டுகின்றனர்.
பிரதிவாதிகளால் வாதிகள் பஞ்சமர்கள் என்று நிறுவமுடியவில்லை.
வாதிகள் கூறும் ரிஷிகள் தங்கள் மூதாதையர் அல்லர் என்றும் பிரதிவாதிகள் மறுக்கவும் இல்லை.
ரிஷிமூலத்தை சொல்லக்கூடாதென்று புராணக்கட்டுப்பாடு உள்ளது.
இந்த ரிசிகள் நால்வர்ணம் உருவான பிறகு தோன்றியவர்கள் அதனால்தான் அவர்களுக்கென்று தொழில்கள் இல்லை.
அதனால்தான் யாசகம் செய்து பிழைக்க விதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகள் பலகாலமாக சடங்குகளைச் செய்வித்துவந்தவர்கள் ஆனாலும் சாஸ்திரங்களில் அத்தொழில் அவர்களுக்கு உரியது என்று இல்லை.
ஆக இவர்கள் துரைகளையும் மூடத்தனமான மக்களையும் ஏமாற்றி ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

வாதிகள் கூறும் பஞ்சமுக பிரம்மாக்களில் ஐந்தொழிலும் வாதிகளின் ஐந்தொழிலும் ஒத்துப்போகின்றன.
இந்த தொழில்கள் கடவுள் போல உலகம் முழுவதும் பரவியுள்ளன பலருக்கும் நன்மை பயப்பதாக உள்ளன.
விதிக்கப்பட்ட தொழில்களை இவர்கள் செய்தும் வருகின்றனர்.
அதனால் இவர்களை பிராமணர் என்று நம்பலாம்.(?!)
மகாபாரதம் போன்ற கற்பனை புராணங்கள் விஸ்வபிரம்மாவை சிறிது தாழ்த்திக்கூறினாலும் புராணங்களுக்கு மூலமான ஆதிவேதங்கள் அவ்வாறு கூறவில்லை.

பிரதிவாதிகள் கல்யாண சடங்கில் தடங்கல் விளைவித்தது வாதிகள் அழைத்துவந்த சாட்சிகளான நாகோஜிராவ், சுப்பராய முதலி, வெங்கட்ராம நாயக்கன் ஆகியோர் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
பிரதிவாதிகள் ரூ.550 இழப்பீடு வாதிகளுக்கு வழங்குவதோடு அவர்கள் சடங்குகளைச் செய்துகொள்வதில் தலையிடக்கூடாது.

அதாவது ஆசாரிகள் புராண இதிகாசங்களில் வரும் உலோகத் தொழிலுக்கான கடவுளரை தங்களின் முன்னோர் என்று கூறியுள்ளனர்.
பிராமணர்கள் புராணங்களில் வரும் ரிஷிமுனிகளின் வழிவந்தவர்கள் என்று கூறியுள்ளனர்.
ரிக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்களில் விஸ்வகர்ம கடவுளரை இழிவுபடுத்தி எந்த குறிப்பும் இல்லை.
ஆனால் ரிஷிமுனிகளைப் பற்றி பல புளுகுப் புராணங்கள் உள்ளன.
தவிர ரிஷிமுனிகளின் தொழில் பிச்சையெடுப்பதுதான் யாகம் செய்விப்பது கிடையாது.
மனுதர்மம் கூறுவது இதற்கு முரணானது.

செய்துவரும் தொழில் அடிப்படையில் உருவான சாதியை புளுகுப் புராணங்களுடன் தொடர்புபடுத்தி மாந்தருக்குள் ஏற்றத்தாழ்வை செய்யும் அரசியல் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது.

'சாதி அரசியல் அதிகாரம்' என்ற நூல் கௌதம சித்தார்த்தனால் எழுதப்பட்ட நூலும் இந்த தீர்ப்பு இடம்பெற்றுள்ளது.

பிராமணர்கள் உயர்ந்தவர்கள் அதற்கு வேதமே சான்று என பரப்புரை செய்துவந்தோருக்கு ஆசாரிகள் அப்புராணத்தைக் கொண்டே கொடுத்த பதிலடி இது.

மற்றபடி அப்போது ஆசாரிகள் தமது உரிமைக்காகப் போராடினரேயன்றி சமத்துவத்திற்காகப் போராடவில்லை என்பதையும் அறியமுடிகிறது.

இதன் மூலம் மேலும் அறியமுடிவது,

தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூர் நீதிமன்றம் தமிழில் இயங்கியுள்ளது. சித்தூர் தமிழர் மண்ணே.

200 ஆண்டுகளில் தமிழ் எழுத்துமுறை நன்கு மேம்பட்டுள்ளது.

பிராமணர்களை அழைத்து வேதமந்திரங்கள் ஓதி திருமணம் நடத்தும் முறை பரவலாக இருந்திருக்கவில்லை.
பெரியவர்கள்தான் அதற்கான சில சடங்குகளைச் செய்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.

ஆசாரிகள் உட்பட பல சாதியினரும் சமஸ்கிருத வேதங்களைக் கற்றிருந்தனர்.

மேலும் பல.

Thursday, 10 July 2014

ஆசாரித்தமிழன் வாயில் மண்


ஆசாரித்தமிழன் வாயில் மண்
=#=#=#=#=#=#=#=#=#=

என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட சில விடயங்களைப் பகிர்கிறேன்; எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை; 
ஆசாரிகள்தான் அந்தக்காலத்துப் பொறியாளர்கள் (எஞ்சினியர்ஸ்); தமிழர் தலையெழுத்துக்கு அவர்கள் மட்டும் விதிவிலக்கா?
இன்று கேரளாவுக்குப் போய் சம்பாதிக்கும் அளவுக்கு தரம்தாழ்ந்துபோனார்கள்; தமிழகத்தில் இருக்கும் கொத்தனார்கள், நாவிதர்கள், சிற்பிகள், கூலிகள், ஓட்டுநர்கள் எல்லாரும் இப்போது கேரளாவுக்குப் போய் சம்பாதிக்கிறார்கள்;
அதாவது தமிழகத்திலிருந்து ஆள்கூட்டிவந்து வேலைவாங்குமளவு மலையாளிகள் உயர்ந்துவிட்டனர், தமிழர் தாழ்ந்துவிட்டனர்;
சபரிமலை ஐயப்பன் சிலையை செய்து தந்ததே தமிழக சிற்பிகள்தான் (ஸ்தபதி என்று அழைக்கப்படும் பெருந்தச்சர்);
இன்று அதே சபரிமலையில் ஒரு தேநீர்கடை மலையாளி தமிழனை வெந்நீர் ஊற்றிக்கொல்லும் அளவு தரம்தாழ்ந்துவிட்டனர்;
சரி, ஆசாரிகள் கதைக்கு வருவோம்; மற்ற தமிழரைப்போலவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கல்வியறிவு இல்லாமல் (ஆங்கிலம் தெரியாமல் படிப்பைவிட்டோரே அதிகம்) சொந்தமண்ணில் எதிர்காலமும் இல்லாமல் அவர்கள் குடிமூழ்கிவருகிறது;
தமிழர்களின் கலைகள் எவ்வாறு கொள்ளையடிக்கப்படுகின்றன என்பதை அறியப்போகிறீர்கள்; ஊரறிந்த பெருந்தச்சன் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் 'கணபதி ஸ்தபதி';
குமரிக்கடலில் வானுயரம் நிற்கும் வள்ளுவர் சிலையை கட்டியவர்; இவர் பல்வேறு புகழ்பெற்ற சிலைகளையும் கோவில்களையும் தமிழர் வாழும் பல நாடுகளில் செய்துதந்துள்ளார்;
(பலருக்குத் தெரியாத செய்தி- இலங்கை அரசு 1998ல் பாம்புப்படுக்கையில் இருக்கும் திருமால் சிலை செய்ய முன்பணம் கொடுத்தது; பல இடங்கள் தேடி நீலநிறப் பாறைகளைக் கண்டறிந்து தன் கைக்காசைப்போட்டு அந்த சிலையைச் செய்தார்; சிங்கள அரசுகளைப் பற்றிக் கூறவும் வேண்டுமா, ஆட்சிமாறியதும் அம்போவென விட்டுவிட்டார்கள்;
அச்சிலையை அவர் தானியங்கள் நிரப்பிய தொட்டியில் வைத்து புதைத்துவைத்திருந்தாராம், அது இன்றும் அப்படியே இருக்கிறதாம்)
சென்னையில் சிற்பக்கல்லூரி நிறுவப்பட்டபோது (அதை நிறுவியதும் தமிழ்ப் பார்ப்பனரான ராஜாஜிதான், திராவிடக்கட்சிகள் ஆட்சிக்கு ஆபத்து வரும்போது வள்ளுவர் கோட்டம், கண்ணகி சிலை போல எதையாவது கட்டி விளம்பரம் தேடுவதோடு சரி) அக்கல்லூரியின் முதல்வராக கணபதியார் நியமிக்கப்பட்டார்; வெறும் உளிப்பட்டறையாக இருந்த சிற்பக்கல்லூரியை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு குறைவில்லாமல் கட்டியெழுப்பினார் கணபதி ஸ்தபதி; தமது 84ம் வயதில் 2011 ல் மறைந்தார்;
கணபதி ஸ்தபதிதான் அதுவரையிலும் தலைமுறை தலைமுறையாக வாய்வார்த்தையாக ஆசாரிகள் கற்றுவந்த தொழில்நுட்பங்களை (கட்டுமானம் மற்றும் சிற்பம்) சரியாக தொகுத்து சீராக்கி வார்த்தைகளை உருவாக்கி கோட்பாடுகளை வகுத்து நூலாக வெளியிட்டார்;
அவர் இருந்தவரை ஆங்கில எழுத்துகள் கூட தெரியாத ஆசாரிகள் பட்டறிவை(அனுபவத்தை) நிறுவி 'ஸ்தபதி' பட்டம் வாங்கமுடிந்தது; அதாவது
மூன்றாம் வகுப்பு தாண்டாத ஒரு கோவில்கட்டும் ஆசாரி தமது பட்டறிவால் கற்றுத்தேர்ந்ததும் அக்கல்லூரியில் விண்ணப்பித்தால் பட்டறிவை சோதித்து 'ஸ்தபதி' பட்டம் வழங்கினார்கள்; கணபதியார் மறைந்தபிறகு சிற்பக்கலையில் கல்லூரிப் பட்டம் பெற்றவருக்கு மட்டுமே அப்பட்டம் கிடைக்கிறது;
இதனால் தனியாக தாமே முழுக்கோவிலையும் கட்டிமுடிக்கும் திறமையுள்ள பட்டறிவு வாய்ந்த ஆசாரிகள், பட்டம் வாங்கிய ஒரு மாணவன் இருந்தால்தான் கோயில்கட்ட இசைவே(அனுமதியே) பெறமுடியும்;
வெறுமனே புத்தகத்தைப் படித்த ஒரு இளைஞன் உட்கார்ந்த இடத்தில் கையெழுத்துப்போட்டுவிட்டு காசுபார்ப்பான்;
இதைவிடவும் கேடு வேறொன்று உள்ளது;
அதாவது வெளிநாட்டு ஆட்களும் அக்கல்லூரியில் சேர்ந்து புத்தகத்தைப் படித்து தேர்வெழுதிவிட்டு தமிழகத்தின் தலைசிறந்த ஆசாரிகளுக்கு தன் பட்டத்தின் மூலம் தொழில்பெற்றுக்கொடுத்து அதற்கு கைமாறாக அவர்களின் தொழில்முறையைப் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டு அவன் நாட்டுக்குப்போய் அதற்கான காப்புரிமையை வாங்கிவிடுவான்;
அதன்பிறகு ஆசாரிகள் காலம்காலமாக பயன்படுத்திவரும் தொழில்நுட்பங்கள் அவனிடம் இசைவு பெற்றபிறகுதான் ஆசாரிகளே பயன்படுத்தமுடியும்;
எடுத்துக்காட்டாக, இன்று தங்க வளையல்களில் போடப்படும் வேலைப்பாடுகள் (டிசைன்ஸ்) ஆசாரிகள் பயன்படுத்திவந்த அதே முறையை பயன்படுத்தி சிறிய இயந்திரத்தின் மூலம் செய்யப்படுகின்றன;
அதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமைகள் வைத்துள்ளன; அந்த வேலைப்பாடு மற்றும் அதன் அளவீடுகள் வடிவங்கள் என அனைத்தும் ஆங்கிலப்பெயர்களில் மாற்றப்பட்டுவிட்டன;
அதாவது வளையல் செய்யும்கலையே வெளிநாட்டிலிருந்து வந்ததாக மக்கள் நம்புவார்கள்;
எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் நடைமுறைக்கு கொண்டுவரும் முன் பழைய தொழில்நுட்பம் பயன்படுத்துவோர் அடையும் பாதிப்பை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்;
பழைய தொழில்நுட்பத்தில் பிழைப்போருக்கு புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்கவேண்டும் அல்லது அவர்களுக்கு உரிய மாற்றுவழி அமைத்துத் தரவேண்டும்;
நமக்குத்தான் அரசே கிடையாதே;
எப்படி பனினி என்பவரால் தமிழின் புணர்ச்சி விதிகள் திருடப்பட்டு சமசுக்கிருத இலக்கணத்தில் சேர்க்கப்பட்டு இன்று அது தமிழுடன் போட்டிபோடுகிறதோ.
எப்படி தெலுங்கர் ஆட்சியில் தமிழிசையைக் கற்று அதில் தெலுங்கு பாடல்களை அமைத்து மெட்டு, தாளம், இசை ஆகியவற்றின் பெயரை சமசுக்கிருதத்தில் மாற்றி தமிழரின் இசையை திருடி இன்று கர்நாடக சங்கீதம் ஆக்கினார்களோ. அதே கலைத்திருட்டுதான் இதுவும்;
கலையைப் பாதுகாக்க அக்கறையுள்ள ஆற்றலுள்ள அரசு நமக்கு இல்லை;
தமிழரின் பழமையான நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகத்தை இந்தியா தனதாக்கிக்கொண்டது;
தோப்புக்கரணத்திற்கு ஆங்கிலத்தில் பெயர்வைத்து அமெரிக்கா காப்புரிமை வைத்துள்ளது;
இன்று பரதநாட்டியம் என்று அறியப்படுவது தமிழர் கலையான சதிராட்டத்தின் ஒரு வடிவமே;வாடிப்பட்டி மேளம் என்பது போல பந்தநல்லூர் சதிராட்டம்தான் இன்றைய பரதநாட்டியம் (பந்தநல்லூர் தஞ்சாவூர் அருகில் உள்ளது);
இந்த திருட்டுவேலையைச் செய்த சென்னை கலாச்சேத்ராவுக்குப் போய்ப் பாருங்கள் ஒரு தமிழன் கூட அங்கு கிடையாது;
கலையை வளர்க்காமல் அதை வெளிநாட்டாருக்கும் வேற்றினத்தாருக்கும் விற்று பின் அவன் திருத்திய வடிவத்தை நமக்கே கொண்டுவந்து கொடுத்து இரட்டையாக காசுபார்த்து நம்மை சீரழிக்கின்றன இந்த வேற்றின அரசுகள்.
கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் இழந்துவருகிறான் தமிழன்