Friday, 12 July 2019

சீதையும் சோழனும்

சீதையும் சோழனும்

ஈழத்தின் மீது படையெடுத்த ஹிந்திய (அமைதி) படையை அழிவின் விளிம்பிற்குச் சென்று இறுதியாகத் தோற்கடித்தனர் புலிகள்.

என்னதான் பேரழிவைச் சந்தித்தாலும் மாபெரும் வெற்றியல்லவா இது?!

இந்த நேரத்தில் மேதகு பிரபாகரன் அவர்களை ஒரு தமிழகக் கவிஞர் சந்திக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அவர் பிரபாகரனாரை இமயம் வரை வென்ற சேரன் செங்குட்டுவனோடு ஒப்பிடாமல் டெல்லி சுல்தானுடனா ஒப்பிடுவார்?!

இதே போல கரிகாலனின் அப்பா காலத்தில் தமிழகம் தவிர்த்த முழு இந்திய துணைக்கண்டத்தையும் கைப்பற்றிவிட்ட மௌரிய பேரரசு இறுதியாக தமிழகத்தையும் கைப்பற்ற பிந்துசாரன் தலைமையில் பாழி வழியாக படையை அனுப்புகிறது.
(பாழி என்பது தற்போதைய கர்நாடகத்தில் கேரள எல்லைக்கு அருகே இருக்கும் bhatkal என்று சிலர் ஊகிக்கின்றனர்)

இந்த படையெடுப்புக்கு வழிகாட்டி, உடனிருந்து உதவி, வடுகர் அனைவரும் ஒத்துழைக்கின்றனர்.

இந்த பெரும்படையை மூவேந்தரின் கூட்டணிப்படை இளஞ்சேட்சென்னி தலைமையில் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு முறியடித்து வெற்றிவாகை சூடுகிறது.

அப்போது இளஞ்சேட்சென்னிக்கு "செருப்பாழி எறிந்த" என்ற பட்டத்தை அளித்து ஊன்பொதி பசுங்குடையார் எனும் புலவர் ஒரு பாடல்பாடுகிறார்.

இளஞ்சேட்சென்னி அகமகிழ்ந்து நல்லதொரு பரிசில் வழங்குகிறான்.

புலவரின் குடும்பம் அந்த அணிகலன்களை முன்பின் பார்த்ததில்லை.
எனவே அவர்கள் விரலில் அணியவேண்டியதைக் காதிலும்,
காதில் அணியவேண்டியதை விரலிலும்,
இடுப்பில் அணியவேண்டியதைக் கழுத்திலும்,
கழுத்தில் அணியவேண்டியதை இடுப்பிலும் அணிந்துகொண்டனராம்.

இதை புலவர் எதனுடன் ஒப்பிடுகிறார் என்றால்,
இராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற போது அவள் கழற்றி எறிந்துகொண்டே வந்த அணிகலன்களைப் பொறுக்கிய குரங்குகள் அணியத்தெரியாமல் அணிந்துகொண்டு அலைந்ததுடன் ஒப்பிடுகிறார்.
(...இராமன் உடன்புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்...
- புறநானூறு 378).

என்றால் இராமனும் சீதையும் தமிழர்தானே?!

மேலும் அறிய,

தேடுக: இராமனும் தமிழனே வேட்டொலி

தேடுக: சிவனடியாரும் போற்றும் இராமன்

No comments:

Post a Comment