Showing posts with label மௌரியர். Show all posts
Showing posts with label மௌரியர். Show all posts

Friday, 12 July 2019

சீதையும் சோழனும்

சீதையும் சோழனும்

ஈழத்தின் மீது படையெடுத்த ஹிந்திய (அமைதி) படையை அழிவின் விளிம்பிற்குச் சென்று இறுதியாகத் தோற்கடித்தனர் புலிகள்.

என்னதான் பேரழிவைச் சந்தித்தாலும் மாபெரும் வெற்றியல்லவா இது?!

இந்த நேரத்தில் மேதகு பிரபாகரன் அவர்களை ஒரு தமிழகக் கவிஞர் சந்திக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அவர் பிரபாகரனாரை இமயம் வரை வென்ற சேரன் செங்குட்டுவனோடு ஒப்பிடாமல் டெல்லி சுல்தானுடனா ஒப்பிடுவார்?!

இதே போல கரிகாலனின் அப்பா காலத்தில் தமிழகம் தவிர்த்த முழு இந்திய துணைக்கண்டத்தையும் கைப்பற்றிவிட்ட மௌரிய பேரரசு இறுதியாக தமிழகத்தையும் கைப்பற்ற பிந்துசாரன் தலைமையில் பாழி வழியாக படையை அனுப்புகிறது.
(பாழி என்பது தற்போதைய கர்நாடகத்தில் கேரள எல்லைக்கு அருகே இருக்கும் bhatkal என்று சிலர் ஊகிக்கின்றனர்)

இந்த படையெடுப்புக்கு வழிகாட்டி, உடனிருந்து உதவி, வடுகர் அனைவரும் ஒத்துழைக்கின்றனர்.

இந்த பெரும்படையை மூவேந்தரின் கூட்டணிப்படை இளஞ்சேட்சென்னி தலைமையில் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு முறியடித்து வெற்றிவாகை சூடுகிறது.

அப்போது இளஞ்சேட்சென்னிக்கு "செருப்பாழி எறிந்த" என்ற பட்டத்தை அளித்து ஊன்பொதி பசுங்குடையார் எனும் புலவர் ஒரு பாடல்பாடுகிறார்.

இளஞ்சேட்சென்னி அகமகிழ்ந்து நல்லதொரு பரிசில் வழங்குகிறான்.

புலவரின் குடும்பம் அந்த அணிகலன்களை முன்பின் பார்த்ததில்லை.
எனவே அவர்கள் விரலில் அணியவேண்டியதைக் காதிலும்,
காதில் அணியவேண்டியதை விரலிலும்,
இடுப்பில் அணியவேண்டியதைக் கழுத்திலும்,
கழுத்தில் அணியவேண்டியதை இடுப்பிலும் அணிந்துகொண்டனராம்.

இதை புலவர் எதனுடன் ஒப்பிடுகிறார் என்றால்,
இராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற போது அவள் கழற்றி எறிந்துகொண்டே வந்த அணிகலன்களைப் பொறுக்கிய குரங்குகள் அணியத்தெரியாமல் அணிந்துகொண்டு அலைந்ததுடன் ஒப்பிடுகிறார்.
(...இராமன் உடன்புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்...
- புறநானூறு 378).

என்றால் இராமனும் சீதையும் தமிழர்தானே?!

மேலும் அறிய,

தேடுக: இராமனும் தமிழனே வேட்டொலி

தேடுக: சிவனடியாரும் போற்றும் இராமன்

Wednesday, 23 May 2018

காரவேலன் கல்வெட்டு குறிப்பது தமிழ் கூட்டணியே தவிர திராவிட கூட்டணி இல்லை

கூர்ங்கோட்டவர் (முகநூல் பக்கம்)

தமிழ் என்பதை திராவிட என்று திரிக்கும் புரட்டுகள்:

அத்திக்கும்பா கல்வெட்டில் பல நூறு ஆண்டுகளாக நிலவி வந்த தமிர தே³ஹ ஸங்கா⁴தம் என்ற கூட்டமைப்பை உடைத்ததாக குறிப்புண்டு.
இதை 'திராவிட தேச சங்காத்தம்' என ஆண்டுக்கொருமுறை வடுகர்களும் திராவிடர்களும் எங்காவது பரப்பிவிட அங்கெல்லாம் நான் போய் மூலக் கல்வெட்டு அறிக்கையில் அது 'தமிர' என்று இருக்கென்றும் 'திராவிட' இல்லை என்றும் சொல்வதுண்டு.
இது கூர்ங்கோட்டவர் பக்கம் ஆரம்பிக்கும் முன்னரே எனக்கு தெரியும்.
இது பற்றிய கதையின் முன்னோட்டத்தில் கூட இக்கூட்டணியில் இருந்த உளவாளிகள் சிலர் மகதநாட்டை உளவறிந்து வருவது போல ஒரு காட்சி இருக்கும்.

சங்க இலக்கியங்களில் இக்கூட்டணி பற்றிய பாடலும் உண்டு.
  கல்வெட்டு படம் பதிவிலும் கதையின் இணைப்பு கீழும் உள்ளது.
https://www.facebook.com/Koorngotavar/
photos/a.208938925951114.1073741833.18
3454535166220/249921725186167

'ழ'கரம் பாகத மொழியில் கிடையாது என்பதால் அதற்கு பதிலாக 'ர', 'ல', 'ட' போன்றவற்றில் ஒன்றைச்சேர்த்து எழுதுவது வழக்கம்.
கல்வெட்டுகளில் 'தமிர' 'தமில' 'தமிட' என்பது போல் இருக்கும்.
படத்தில் 'த'கரமும் 'ம'கரமும் 'ர'கரமும் உள்ளது.
நான் முன்னர் இதே பக்கத்தில் போட்ட அப்பதிவை காணவில்லை.
எப்டி அழிக்கப்பட்டது என நினைவில்லை.
(திராவிடநாடு வேங்கடத்துக்கு வடபகுதியில் இருந்தது என்று நான் போட்ட பதிவின் நிலைமையும் இதே போல் ஆனது.
பின்னர் மீள்பதிவிட்டேன் என்பதை நினைவில் கொள்ளவும்)

- தென்காசி சுப்பிரமணியன்
( Rajasubramanian Sundaram Muthiah )

Tuesday, 11 July 2017

வடுகரின் அறிவிக்கப்படாத போர்

வடுகரின் அறிவிக்கப்படாத போர்
~•°~•°~•°~•°~•°~•°~•°~•°~•°~•°~•°~•°

வடுகர்களின் பூர்வீகம் தெரியாவிட்டாலும் வேங்கட மலைக்கு அப்பால் ஆண்ட தமிழ் மன்னர்கள் காட்டுமிராண்டிகளான வடுகர்களை கூலிப்படையாக வைத்திருந்தனர் என்பது மட்டும் தெரிகிறது.

(தமிழர்களான) நன்னர்களுக்கு அடங்கி விசுவாசமாக நடந்துவந்த (வடுகர்களான) கோசர்களுக்கு நன்னன் செய்த ஒரு வன்கொடுமையே
வடுகர்கள் தமிழர் மீது பகைகொண்ட தொடக்கப்புள்ளி.

ஆனால் வடுகர்கள் நேரடியாக அல்லாது மறைமுகமாக குறுக்கு வழியில் உறவாடிக் கெடுத்து தலைமுறை தலைமுறையாக தமிழினத்தின் மீது அறிவிக்கப்படாத போர் புரிந்து அதில் முக்கால்வாசி வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

அந்த தொடக்கப்புள்ளி ஒரு பெண்கொலை.

நன்னனின் காவல்மரத்தின் (மாமரம்) ஒரு பழம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது.
அதை விபரம் தெரியாத ஒரு வடுகர் பெண் எடுத்து தின்றுவிடுகிறாள்.

இதற்கு மரணதண்டனை அளிக்கிறான் கொடுங்கோலனான நன்னன்.
வடுகர்கள் அவளது எடைக்கு எடை தங்கமும் அதோடு 81 யானைகளும் தருவதாகக் கூறி அவளை விடுதலை செய்யுமாறு கெஞ்சுகின்றனர்.

ஆனாலும் மனமிரங்காத அந்த கொடிய மன்னன் அந்த அப்பாவி பெண்ணைக் கொலை செய்கிறான்.

(புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் _பரணர், குறுந்தொகை 292)

அதன்பிறகு வடுகர்கள் ஒற்றுமையாகி சூழ்ச்சி மூலம் நன்னனை வீழ்த்தி அவனது காவல்மரத்தை வெட்டியெறிந்தனர்.
(நன்னன் நறுமா கொன்று
நாட்டிற் போக்கிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சி
_ குறுந்தொகை 73)

ஆனாலும் வடுகர் நெஞ்சில் இந்த கொலை ஆறாத வடுவாக பல தலைமுறைகள் படிந்திருந்தது.

நன்னர்களை வீழ்த்திய வடுகர்களைத்தான்
நந்தர்களை வீழ்த்திய மோரியர் என்று வரலாறு பதிவுசெய்கிறது

பெரும் வல்லரசாக எழுந்த வடக்கு வடுகரான மோரியர் தென்வடுகர் உதவியுடன்
தமிழர் மீது போர் தொடுத்தனர்.
ஆனால் மூவேந்தரின் கூட்டணிப்படையிடம் படுதோல்வி அடைந்தனர்.

அதன்பிறகு தமிழர்களை சுற்றிவளைத்து தோற்கடிக்க தென்னிலங்கைக்கு படையனுப்பி
புத்தமதத்தைப் பரப்பி அங்கே சிங்களவரோடு கலந்து தமிழர்களுக்கு எதிராக சிங்களவரைத் தூண்டியபடி இருந்தனர்.

வடவடுகர் ஏற்படுத்திய மோரிய பேரரசு வீழ்ந்ததும் தென்வடுகரான களப்பிர காட்டுமிராண்டிகள் தமிழர் மீது படையெடுத்து வென்றனர்.
(இதுவே இருண்டகாலம் என்று கூறப்படுகிறது)
களப்பிரர்க்கு அடங்கி சிற்றரசாக இருந்த பாண்டியர் கடுங்கோன் காலத்தில் கிளர்ச்சி செய்து வடுகர்களை தோற்கடித்து ஒழித்தனர்.

  அதே நேரத்தில் வட இலங்கையில் இருந்து ஆண்ட பாண்டியர் மீது ஆண்டுகளாக பலமுறை போர்தொடுத்து போர்தொடுத்து இறுதியில் தாதுசேனன் என்ற மோரிய குடிவழி மன்னன் குறுக்கு வழியில் பாண்டிய மன்னர் இருவரைக் கொன்றதன் மூலம் தமிழர்களை 700 ஆண்டுகள் கழித்து ஈழத்தில் வீழ்த்தினான்.

ஆனாலும் சோழ அரசின் பேரெழுச்சி அனைவரையும் அடக்கி தமிழர் பேரரசாக எழுந்தது.
வடக்கே வடுகர்களை துவம்சம் செய்தது.
இலங்கையிலும் வடுகர்களை ஒழித்தது.

இராசராசனை எதிர்த்து தோல்வியடைந்த வடுகன் அம்மன்னனின் பிறந்தநாளில் விடுதலை அடைந்து அரசவையில் பாட்டுப்பாடி சோழ இளவரசியை பரிசாகப்பெற்று அவள் மூலம் பெற்ற மகனை (அநாபய சாளுக்கியன் அல்லது குலோத்துங்க சோழனை) சூழ்ச்சி மூலம் சோழ அரியணையில் அமர்த்தினான்.
கலப்பினமாயினர் சோழர்.
இலங்கையை சிங்களவர் மீண்டும் பிடித்தனர்.
பாண்டியநாடு தவிர தமிழ்மண் முழுதும் வடுகரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

அப்போது பாண்டிய பேரரசு மீண்டும் எழுந்தது.
வடுக படைத்தளபதியுடன் வந்த சேரனை முறியடித்து
அரைவடுகரான சோழரை அடக்கி
வடமேற்கு தமிழகத்தில் நுழைந்திருந்த வடுக ஒய்சளரை விரட்டியடித்து
பல்லவ வம்சாவழி காடவரையும் தெலுங்கு சோழரையும் ஒழித்து
ஈழத்தையும் மீட்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
முழுமையாக தமிழ்மண் ஒற்றையாட்சியில் மீண்டும் வந்தது.

ஆனால் வாரிசுரிமைப் போர்களால் பாண்டிய அரசு வலுகுன்றியது.
இதைப் பயன்படுத்தி வடக்கே ஆண்ட துருக்கிய மங்கோலிய சுல்தான்கள் தமிழகத்தில் பாதியை வென்றனர்.
அவர்களுக்குள்ளேயே உட்கலகம் நடந்தபோது வடுகர்கள் மீண்டும் தமிழகத்தில் விஜயநகரப் பேரரசாக நுழைந்தனர்.
துருக்கியரை வென்று பாண்டியரை அடக்கி தமிழகத்தை மீண்டும் கைப்பற்றினர்.
கண்டி சிங்களவருக்கு பெண்கொடுத்து அவர்களை மேலும் கலப்பினமாக்கி மீண்டும் தமிழருக்கு எதிராகத் தூண்டினர்.
(அதாவது மோரியர் காலத்தில் செய்ததை அப்படியே மீண்டும் செய்தனர்)

ஆங்கிலேயர் இங்கே நுழைந்ததும் அவர்களுக்கு அடிபணிந்து சிற்றரசாகத் தொடர்ந்த வடுக நாயக்கர்கள் அவர்கள் அகன்றதும் அவர்கள் உருவாக்கித்தந்த திராவிடம் எனும் பெயரால் மீண்டும் தமிழகத்தை ஆளத்தொடங்கினர்.
ஈழத்தில் சிங்கள பௌத்தம் எனும் பெயரால் தமிழர்களை ஒழிக்கத் தொடங்கினர்.

1958 ல் ஈழத்தில் வன்முறை தொடங்கியது.
1956 ல் தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் விழுங்கப்பட்டன.

2009 ல் இனப்படுகொலை நடந்து இலங்கை முழுதும் விழுங்கப்பட்டுவிட்டது.
2015 ல் இங்கே மண்ணோடு சேர்த்து தமிழினத்தை அழிக்க அணுவுலை மீத்தேன் ஹைட்ரோகார்பன் என நாசகாரத் திட்டங்கள் வடுகரால் தலைமேல் சுமந்து அழைத்து வரப்பட்டு தமிழ்மண் மீது  சுமத்தப்பட்டுள்ளன.

முதலில் சோழன் இளஞ்சேட்சென்னி தமிழர் கூட்டணி அமைத்து மோரியரை விரட்டினான்

அடுத்து கடுங்கோன் பாண்டியன் களப்பிரரை விரட்டியடித்தான்
(அதன்பிறகு சோழர் எழுந்தனர்)

அடுத்து சடையவர்மன் சுந்தரபாண்டியன் தமிழ் நிலத்தை மீட்டான்

தற்போது மீண்டும் வடுகம் ஹிந்தியரின் உதவியோடு தமிழர் மண்ணை சுற்றிவளைத்துள்ளது. விரைவில் வீழ்த்தவுள்ளது

இப்போது அதை முறியடிக்கப்போகும் தமிழர் தலைவன் யார்?

Sunday, 11 June 2017

ஆரியர்தான் சாதியை உருவாக்கினரா?

ஆரியர்தான் சாதியை உருவாக்கினரா?

ஆரியர் நுழைந்த காலத்தை உறுதியாக எவராலும் கூறமுடியாது போனாலும்
பக்கத்தில் இருந்து பார்த்தது போல ஒரு கதை மட்டும் அனைவராலும் கூறமுடியும்.

ஆரியர் கைபர் போலன் கணவாய் வழியாக நுழைந்தனராம்.
பிறகு மனுதர்மம் எழுதி அதில் வர்ணாசிரம சிந்தனையை படைத்து அதன் மூலம் மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்து சாதியை உருவாக்கினார்களாம்.

இந்த கற்பனையை தமிழகத்தில் தனது பார்ப்பன எதிர்ப்புக்கு (பிராமண எதிர்ப்பு அல்ல) பயன்படுத்திக்கொண்டனர் வந்தேறிகள்.

இந்த கதை எப்படி இருக்கிறது என்றால் அகராதியை எழுதியவன்தான் மொழியைப் படைத்தான் என்பது போல இருக்கிறது.

ஒருவேளை நால்வர்ணம் தானாக உருவாகியிருக்கலாம்.
ஆரியர் அது பற்றி எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது இல்லையா?!

ஆனால் நால்வர்ணமும் கற்பனைதான்.

அதாவது 2300 ஆண்டுகள் முன்பு இந்திய துணைக்கண்டம் முழுதும் பயணம் செய்த மெகஸ்தனிஸ் (Megasthenes) எனும் கிரேக்க பயணி மக்கள் ஏழு சாதிகளாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

1) தத்துவஞானிகள்
2) விவசாயிகள்
3) மேய்ப்பர்கள்
4) வணிகர்கள்
5) போர்வீரர்கள்
6) ஒற்றர்கள்
7) அரசு அலுவலர்கள்

சான்று நூல்: Anciant india as described by Megasthenes and Arrian

அதாவது 2300 ஆண்டுகள் முன்புவரை வடயிந்தியாவில் நால்வர்ணம் இல்லை.

ஆரியர் அதன்பிறகு நுழைந்ததாக சான்றும் கிடையாது.
ஏனென்றால் கடந்த 2500 ஆண்டுகளாக வரலாறு ஓரளவு  தெளிவாக உள்ளது.
அதனாலேயே ஆரியர் 3000 ஆண்டுகளுக்கு முன் நுழைந்ததாக கதைகட்டி வந்தனர்.

மேற்படி சாதிகளும் கூட முதல் மற்றும் கடைசி இரு படிநிலைகள் பிறப்பின் வழி வருவதாகத் தோன்றவில்லை.
அறிவு முதலிடத்திலும் உணவு இரண்டாம் இடத்திலும் பணம் மூன்றாம் இடத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

ஆக ஆரியர் நுழைவும் கற்பனையே
நால்வர்ணமும் கற்பனையே

இன்றைய சாதி அமைப்பு தொழில்வழி வந்ததே ஒழிய நால்வர்ணத்தில் இருந்து வந்ததில்லை என்பதே உண்மை.
_____________________________

மெகஸ்தனிஸ் குறிப்பு மேலும் அறிய,
ஒரு கிரேக்கப் பயணியின் பயணக் குறிப்புகள் - வழிப்போக்கனது உலகம்

ஆரியநுழைவு கட்டுக்கதை  பற்றி அறிய,
யார்தான் ஆரியர்? - வேட்டொலி