ஈழம்-தமிழகம் தொடர்பு:-
கட்டிக்காக்க நம்முன்னோரால் ஏற்படுத்தப்பட்ட திருவாதிரைக் கடன்.
காலாதிகாலமாக ஈழத் தமிழர்கள்,
சிதம்பரத்திற்கு வருவதற்காகப் பருத்தித்துறை,
காங்கேயன்துறை, மாதகல் ஆகிய ஈழத்தின் வடக்குத்
துறைகளில் படகேறுவார்கள்.
தமிழகத்தின் கிழக்குத்
துறைகளான திருமறைக்காடு, வேதாரணியம்,
நாகப்பட்டினம், கடலூர் ஆகிய துறைகளில்
வந்திறங்குவார்கள்.
சிதம்பரம் செல்வார்கள்.
வழிபாட்டுக் கடமைகளை முடிப்பார்கள்.
எந்தத் துறைகளில் இறங்கினார்களோ, அந்தத்
துறைகளில் படகில் ஏறி, எந்தத் துறைகளில்
ஏறினார்களோ, அந்தத் துறைகளில் படகில்
இருந்து இறங்கி எளிதாகத் தம் இடங்களுக்குச்
செல்வார்கள்.
1948க்கு முன்பு இருந்த நிலை இதுதான்.
1948க்குப் பின்னர் தலைமன்னார் வழியாகத்
தனுஷ்கோடி வந்து,
போட்மெயில் தொடர் வண்டி ஏறி,
நேரே சிதம்பரம் வந்து,
வழிபட்டு, மீண்டும்
அதே வழியாகத் திரும்புவார்கள்.
1948க்குப்
பின்னர் ஈழத்தின் வட பகுதியில்
இருந்து தமிழகத்தின் கிழக்குக் கரைகளுக்குச்
சட்டத்துக்கு அமைய வரமுடியாது.
1992க்குப்
பின்னர் தலைமன்னார், தனுஷ்கோடி, இராமேஸ்வரம் கப்பல்
சேவை நிறுத்தப்பட்டது.
முசுலிம் மக்களுக்கு மெக்கா.
கிறித்தவர்களுக்கு ஜெருசலம்.
கத்தோலிக்கருக்கு வத்திக்கான்.
புத்தர்களுக்கு புத்தகயா. இந்துக்களுக்குத்
திருக்கயிலாயம்.
இவை போன்று ஈழத்துச்
சைவர்களுக்குச் சிதம்பரமே ஆண்டுதோறும்
வந்து வழிபட்டுச் செல்லக் கூடிய
நம்பிக்கைக்கு உரிய கோயில்.
http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=a6a09b2c-92fa-46c6-882c-eaa2e6418f16&CATEGORYNAME=Sachi
No comments:
Post a Comment