Sunday 4 June 2017

தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டது _  அம்பேத்கர்

தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டது
_  அம்பேத்கர்

  "நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம்,
திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச் சொல் அல்ல என்ப தாகும்.
தமிழ் என்னும் சொல்லின் சமற்கிருத வடிவமே இந்தச் சொல்.

தமிழ் என்னும் மூலச் சொல் முதன் முதலில் சமற்கிருதத்தில் இடம் பெற்றிருந்தபோது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது.
பின்னர் தமில்லா வாகி முடிவில் திராவிடா என உருத்திரிந்தது.

திராவிடா என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை.
நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய விடயம் தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை.
மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதேயாம்."

( நூல்: தீண்டப்படாதவர்கள் யார்? _ டாக்டர். அம்பேத்கர்.
தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் - 94.)

No comments:

Post a Comment