Friday, 30 June 2017

140 தமிழக மீனவர்கள் தெலுங்கரால் சிறைபிடிப்பு! பணயத்தொகை கேட்டு மிரட்டல்!

விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 140 பேர் ஆந்திராவில் மீண்டும் சிறைபிடிப்பு

2017-06-30@ 00:21:44

காசிமேடு: ஆந்திர எல்லையில் மீன்பிடிக்க சென்ற சென்னை மீனவர்கள் 140 பேர், மீண்டும் ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், கடலுக்குள் விசை படகுகளில் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
கடந்த 25ம் தேதி 140 மீனவர்கள் 13 விசைபடகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
தமிழக, ஆந்திர கடல் எல்லையான கிருஷ்ணாம்பட்டினம், மண்ணூர், கிருஷ்ணாபுரம் ஆகிய கடல் பகுதியில்தான் மீன்பிடிப்பது வழக்கம்.
இவ்வாறு மீன்பிடிக்க சென்றவர்கள், கரை திரும்பவில்லை.
இதனால், அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், காசிமேட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விசைபடகு மீனவர் சங்கத்துக்கு, தொலைபேசியில் ஆந்திர மீனவர்கள் தொடர்பு கொண்டனர்.

அவர்கள், கடந்த 25ம் தேதி, விசைபடகுகளில் கடலில் வலையை விரித்து மீன்களுக்காக காத்திருந்தபோது, அவர்களை ஆந்திர மீனவர்கள் சுற்றி வளைத்தனர்.
‘எங்கள் கடல் பகுதியில் நீங்கள் மீன் பிடிக்க கூடாது’ என கூறி, காசிமேடு மீனவர்ளை சிறைபிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழக மீனவர்கள் சென்ற 13 படகுகளையும் பிடித்து வைத்துக்கொண்ட அவர்கள், தலா படகுக்கு ₹2 லட்சம் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விடுத்துள்ளனர்.
இதனால், காசிமேட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர் சங்கங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: தினகரன்

No comments:

Post a Comment