Showing posts with label சிறை. Show all posts
Showing posts with label சிறை. Show all posts

Sunday, 29 June 2025

நீளும் காவல்கொலை பட்டியல்

நீளும் காவல்கொலை பட்டியல்  

  RTI மூலம் பெறப்பட்ட தகவல் படி 2022 லிருந்து 2025 ஜூன் வரை  24 பேர் காவலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
 அதில் குறிபிடத் தகுந்தவை

ஜனவரி 2021 
 21 வயது சூர்யா எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் கொலை

ஆகஸ்ட் 2021 
 சத்யவாணன் தஞ்சாவூர் காவல்நிலையத்தில் கொலை

ஆகஸ்ட் 2021  
தடிவீரன் திருநெல்வேலி கொலை 

மேற்கண்ட மூவரும் பட்டியல் சாதியினர் 

 2021 டிசம்பர் மணிகண்டன் என்ற இளைஞர் ராமநாதபுரம் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்ட சில மணிநேரங்களில் கொலை

 ஐனவரி 2022
டெய்லர் பிரபாகரன் துன்புறுத்தி கொலை 

 ஏப்ரல் 2022
சென்னை 25 வயது விக்னேஷ் கொலை

 பெரும் அதிர்வலைக்குப் பிறகு விக்னேஷ் குடும்பத்திற்கு 10 லட்சம் அறிவித்து 'இனி ஒரு காவல் கொலை கூட நடக்காது' என்று முதல்வர் அறிவித்த ஒரு மாதத்திற்குள்  3 காவல் கொலைகள்

மே 2022
திருவண்ணாமலை குறவர் தங்கமணி படுகொலை 

ஜூன் 2022 
 கொடுங்கையூர் 30 வயது ராஜசேகர் கொலை 

ஜூன் 2022 
 நாகப்பட்டினம் சைக்கிள் கடை சிவசுப்பிரமணியம் கொலை

 இதைவிட மோசமானது 

ஜனவரி 2023 
செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளி 17 வயது சிறுவன் கோகுல்ஸ்ரீ கொடூரமான சித்திரவதை செய்து கொலை 

 ஏப்ரல் 2023
 ஜெய்பீம் படப்பாணியில் ஏழை சமையல்காரர் ராஜா மனைவி கண் முன்னே துன்புறுத்தி கொலை 

மார்ச் 2024 
2014 ல் நடந்த அண்ணா நகர் இளைஞர் கொலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் உட்பட 8 கொலைகார போலீசுக்கு பதவி உயர்வு 
மதுரை நீதிமன்றம் கண்டனம்

 ஜூலை 2024
 12 நாட்களில் அடுத்தடுத்து 4 காவல்கொலைகள்  மதுரை கார்த்திக், விழுப்புரம் ராஜா, சென்னை சாந்த குமார்,  விருதுநகர் ஜெயக்குமார்


ஜூன் 2025 
 காவல் நிலையத்தில் இளைஞர் அஜித் குமார் கொலை

 இதை விமர்சிக்க அதிமுக வுக்கு தகுதி இல்லை.
 எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் கிட்டத்தட்ட 100 காவல் மரணங்கள் நடந்துள்ளன.
 2018 இல் மட்டுமே 78 காவல்கொலைகள் நடந்துள்ளன.
 ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை அதில் குறிப்பிடத் தக்கது
 
 ஒரே ஒரு ஆறுதல் 1993 இல் நடந்த ஒரு காவல்கொலை வழக்கு (மேல அலங்காரத்தட்டு வின்சென்ட்) நிறைவு பெற்று 25 ஆண்டுகள் கழித்து 8 போலீசாருக்கு தண்டனை கிடைத்தது.
 இதுவே தமிழக வரலாற்றில்  இறுதித் தீர்ப்பு வரை சென்ற ஒரே காவல்கொலை வழக்கு ஆகும்.
 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றன அல்லது கைவிடப்பட்டன.

 பாஜக வுக்கும் இதைக் கண்டிக்கத் தகுதி இல்லை.
 உத்தர பிரதேசம் இல் 2020-2022 இல் ஏறத்தாழ 4,400 காவல்கொலை நடந்துள்ளது. தமிழகத்தைப் போல 3.5 மடங்கு மக்கட்தொகை கொண்ட உ.பி யில் சதவீத அடிப்படையில் இது மிக அதிகம்!

Saturday, 2 March 2024

சாந்தன் இன்னொரு திலீபன்

சாந்தன் இன்னொரு திலீபன்

 அன்று திலீபன் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தபோது ஈவு இரக்கமே இல்லாமல் சாகவிட்டது ஹிந்தியம்!
 ஆனால் சாந்தனை 30 ஆண்டுகள் அனுஅனுவாக வதைத்து சாகும் தருவாயில் கொஞ்சம் கருணை காட்டியது ஹிந்தியம்!
 ஆனால் அதையும் விடாத திராவிடம் அவரை பிடித்து மேலும் வதைத்து அவர் குற்றுயிராக தன் ஊருக்குத் திரும்ப இருந்த கடைசி நாளில் கொன்று முடித்தது!

 பிரபாகரன் பிறந்த வயிற்றை வைத்திருந்தார் என்பதாலேயே பார்வதியம்மாள் மரணத் தருவாயில் சிகிச்சைக்கு வந்தபோது அவரைத் திருப்பி அனுப்பி கொன்ற திராவிடம் ஹிந்தியத்தை விட கொடூரமானது! 

 போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று வெளிப்படையாகவே கூறிய திராவிடம் சட்டத்திற்கு புறம்பாக ஈழத் தமிழரை வதைக்கவே கட்டியுள்ளது சிறப்பு முகாம் எனும் கொட்டடி சிறை!

  நீதிமன்றம் விடுதலை செய்த 5 பேரை சட்டவிரோதமான  கோட்டடியில் இறுக பூட்டி 2 பேரை சாகடித்துவிட்டது!
இன்னும் 3 பேர் சாவுக்கு காத்திருக்கின்றனர்!

 இதேபோல கர்நாடகா விலும் தூக்குமேடை வரை போன 4 தமிழர்கள் கதை இருக்கிறது!
 செய்யாத தவறுக்கு கைதாகி ஹிந்தியாவிலேயே அதிக நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டவர் வீரப்பன் அண்ணன் மாதையன்!

  கொட்டடியில் அடைக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரில் 2 பேர் இறந்துவிட்டனர். மீதி 2 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் சிறையில் சாவின் விளிம்பில் நிற்கின்றனர்.

 தமிழர்களை 'வைத்திருந்து கொல்வது' ஹிந்தியமும் திராவிடமும் இன்பமடைய சிறந்த வழியா?!

 33 ஆண்டுகளாக பார்க்க முடியாத தன் மகன் வரப்போகிறான் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் அந்த முதிய தாயின் கண்முன் உருக்குலைந்து இறந்த மகனது பிணத்தை போட்டு எக்காளமிட்டு சிரிக்கிறது திராவிடம்! 

கூடவே கைகொட்டி கூத்தாடும் இந்தியமும் சிங்களமும்!

 இதற்கு தீர்வு இல்லையா?!

இதற்குத்தானா தங்கை செங்கொடி தன்னை தீயில் போட்டு அலறி நம்மை அறியாமையில் இருந்து எழுப்பினாள்?!

 சங்கரலிங்கனார் தொடங்கி சாந்தன் வரை ஒரு தமிழன் அவன் இந்திய குடிமகனோ இலங்கை குடிமகனோ அறவழியோ ஆயுதவழியோ ஆணோ பெண்ணோ அப்பாவியோ எவனாக இருந்தாலும் வதைபட்டு சாவதுதான் விதியா?!

 
 

 

Thursday, 22 February 2018

ஆந்திர சிறைகளில் 3000 தமிழர்கள்?!

ஆந்திர சிறைகளில் 3000 தமிழர்கள்?!

90% பேர் ஆந்திர போலீசாரால் தமிழகத்திற்குள் கைது செய்யப்பட்ட அப்பாவிகள்.

ஒவ்வொருவர் மீதும் சராசரியாக 25 வழக்குகள்.

(நன்றி: மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அறிக்கை)

Friday, 28 July 2017

தப்ப தட்டிகேட்க போலீசிருக்கு? கோர்ட்டிருக்கு?

தப்ப தட்டிகேட்க போலீசிருக்கு? கோர்ட்டிருக்கு?

1988 ல் கொடைக்கானல் குண்டுவெடிப்பு மத்திய அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் மீது ஆயுதக்குழு ஒன்றால் நடத்தப்பட்டது.
இது அமைதிப்படை ஈழத்தில் செய்த அட்டூழியத்தை மறைத்து புலிகள் பற்றி பொய்யான தகவல்கள் பரப்பியதற்காக  தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) நடத்திய தாக்குதலாகும்.

இதைச் செய்தவர் பெருஞ்சித்தரனார் மகனான பொழிலன் என்பதைக் கண்டுபிடித்து 2003 ல் சிறையில் அடைத்தனர்.
பத்தாண்டு தண்டனை முடிந்து 2013ல் அவர் வெளியேயும் வந்துவிட்டார்.

ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்ட அப்பாவிகள் 1991 முதல் இன்றுவரை சிறையில் உள்ளனர்.
26 ஆண்டுகளாகியும் தாமதமாக வழங்கப்படும் (அ)நீதி கூட வழங்கப்படவில்லை.

இதே போல ஆயுதம் தாங்கி போராடிய சுப.இளவரசனும் வீரப்பனாருடன் சேர்ந்து ராஜ்குமாரைக் கடத்திய மாறனும் ஆயுதவழியைக் கைவிட்டு பொதுவாழ்வுக்குத் திரும்பிவிட்டனர்.
புலிகளோடும் வீரப்பனாரோடும் சேர்ந்து களமாடிய தமிழ்நாடு மீட்புப் படை சுப.முத்துக்குமாரும் ஆயுதவழியை விட்டு பொதுவாழ்க்கைக்கு திரும்பினார்.
நாம்தமிழர் கட்சியை தொடங்கினார்.
(பிறகு சில சமூகவிரோதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார்)

அதாவது ஆயுதப் போராளிகள் சட்டத்தால் கூட மதிப்பு மரியாதையுடன் நடத்தப்பட்டு வழங்கப்படவேண்டிய நீதியும் சலுகைகளும் கிடைக்கப்பெற்றுள்ளனர்.

நடுத்தெருவில் வெயிலில் பட்டினி கிடந்து
அடிவாங்கி மிதிவாங்கி
சிறையில் அடைக்கப்பட்டு மானபங்கப்பட்டு
வழக்குகளால் அலைக்கலைந்து
சொத்திழந்து வேலையிழந்து
மக்களால் மறக்கப்பட்டு நாசமாய் போய்
நடுத்தெருவில் நிற்போர் அறவழிப் போராளி(?)களும் ஏதுமறியா அப்பாவிகளும்தான்.

ஹிந்தியாவில் 25% கைதிகள்தான் தண்டனை பெற்ற கைதிகள்.

மற்ற 75% கைதிகள் விசாரணைக் கைதிகள்.
இதில் பாதிபேர் அவர்கள் தண்டனை பெற்றால் எத்தனை காலம் சிறையில் இருக்கவேண்டுமோ அதைவிட அதிக காலம் சிறையில் இருப்பவர்கள்.

உண்மையான குற்றவாளிகள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதே கிடையாது.

இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் லட்சணம்.

ஆக அறவழியில் போராடிக் கிழிக்கிறேன் என்று பிழைப்பைக் கெடுத்து கிளம்பி
போராட்டம் என்ற பெயரில் உங்கள் உடலைக் கெடுத்து பொதுமக்களுக்கும் இடைஞ்சலைக் கொடுத்து
கடைசியில் வழக்கில் சிக்கி குடும்பத்தோடு நாசமாய்ப் போகவேண்டாம்.

கார்ப்பரேட்களால் பாதிக்கப்படும் கிராமங்களே!
உங்களைக் காக்க ஒரு 'நாயகன்' கமல் பிறந்துவரப் போவதில்லை.
நீங்களே உங்கள் ஊரில் நல்ல உறுதியான இளைஞர்கள் நான்குபேரை தேர்ந்தெடுத்து ஆயுதவழியில் போராட அனுப்புங்கள்.
அவர்கள் குடும்பத்தை உங்கள் கிராமம் பொறுப்பில் எடுத்துக்கொள்ளட்டும்.
நீங்களும் கையாலாகமால் இருக்காது அடித்தால் திருப்பியடியுங்கள்.

திருப்பியடிக்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

1992 ல் 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் எந்த பாவமும் அறியாத வாச்சாத்தி கிராமத்தில் புகுந்து சந்தனக்கடத்தல் சோதனை போட்டபோது அவர்கள் ரொம்ப அப்பாவி பழங்குடிகள் என்று தெரிந்ததும் அவர்களை அடித்து 18 பெண்களைக் கெடுத்து 34 பேரைக் கொன்று  பலரை ஊனமாக்கிய கதிதான் உங்களுக்கும் நடக்கும்.

அதன்பிறகும் அறவழியில் போராடினால் 20 ஆண்டுகள் கழித்து அதிகபட்சமாக பத்தாண்டு சிறைத்தண்டனை 12 பேருக்கு விதித்து வந்ததே ஒரு அதிசய தீர்ப்பு! அதுபோல ஒரு தீர்ப்பு வரும்.

இதுவரை கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போட்ட எந்த வழக்கிலும் பெருமுதலாளிகளுக்கு எதிராகத் தீர்ப்பு வந்ததே இல்லை.

போலீசும் கோர்ட்டும் மக்களை ஒடுக்கி பெரிய மனிதர்களைத்தான் காப்பாற்றும்.

அடிக்கு அடி!
உதைக்கு உதை!
கொலைக்கு கொலை!
இதுதான் தீர்வைத் தரும்.

முழுமாடு மாதிரி வளர்ந்து நிற்கும்
வேட்டிகட்டிய முறுக்குமீசை ஆண்களும்
சேலைகட்டிய பெண்களும்
வெறும் லத்தி வைத்திருக்கும் 10, 15 தொப்பை போலீசிடம் அடிவாங்கி ஓடுவது
பிறருக்கு எரிச்சலை கிளப்புமே ஒழிய ஆதரவு தேடித் தராது.

நீங்கள் திருப்பி கை நீட்டாதவரை அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான்.
வேடிக்கை பார்ப்பவன் பார்க்கத்தான் செய்வான்.

மானத்துடன் வாழுங்கள் தமிழ்மக்களே!
நம் தலைவர் பிரபாகரன் சொன்னது படி நடவுங்கள்
"அடிமையாக வாழ்வதை விட எதிரியாக சாவது எவ்வளவோ மேல்" .

Thursday, 27 July 2017

ஆயுதவழியை ஏன் நம்பவேண்டும்?

ஆயுதவழியை ஏன் நம்பவேண்டும்?

தோற்றுப்போன புலிகள்,
பாதி தோற்றுவிட்ட நக்சலைட் இயக்கம்,
இதையெல்லாம் பார்த்தபிறகும் ஆயுதவழி வெற்றி தரும் என்று உறுதியாகக் கூறமுடியுமா?

ஆம், ஆயுதவழி வெற்றி தரும்.
இதை உறுதியாகக் கூறமுடியும்.

இன்று நாம் தனிநாடாக இருந்திருந்தால்கூட
கார்ப்பரேட் அரக்கர்கள் நம்மீது போர்தொடுத்திருப்பார்கள்.

ஈராக் தனிநாடுதான், ஆப்கானிஸ்தான் தனிநாடுதான்,
சோமாலியா, எத்தியோப்பியா, சியரா லியோன் சுதந்திர நாடுகளாக இருந்தவைதான்.

ஆனாலும் வல்லாதிக்கம் போர்தொடுத்து தனக்குத் தேவையானதை மண்ணிலிருந்து உறிஞ்சிக்கொள்ளவில்லையா?

நான் சொல்லுவேன் 2009 வரை புலிகள் ஆண்ட நிலப்பரபப்பு தனிநாடு என்று.

நாடு என்பது ஐ.நா அளிக்கும் அங்கீகாரம் அல்ல.
நாடு என்பது எல்லையைக் கொண்டது.
எல்லை என்பது ராணுவம் வகுப்பது.
ஆக ராணுவம் பாதுகாக்கும் எல்லைதான் நாடு.

தன் தாய்மண்ணை,
அந்த மண்ணின் மைந்தன்,
அந்த மண்ணின் மக்களால் ஆன படையின் மூலம் எல்லையை பாதுகாத்து,
அந்நியர் தலையீடு இன்றி ஆளும் நிலமே உண்மையில் நாடு.

எம் தலைவர் பிரபாகரன் அப்படித்தான் எவருக்கும் அடிபணியாமல் ஆண்டார்.
எவர் ஆதரவையும் நாடாமல் தன் சொந்த பலத்தினால் ஆண்டார்.
அவர் செய்ததற்குப் பெயர்தான் ஆட்சி.

நாடுநாடாகப்போய் கண்டவனுக்கும் கூழைக்கும்பிடு போட்டு நரேந்திர மோடி செய்வதற்குப் பெயர் ஆட்சி இல்லை.

தன் நிலத்தில் தனது படையைக் கொண்ட ஒரு இனத்தின் வளங்களைச் சுரண்டுவதே பெருமுதலாளிகளுக்கு கடினம்.

நாடில்லாத,
அதாவது ராணுவம் இல்லாத,
வேற்றினத்தால் ஆளப்படும் இனத்தின் தாய்நிலத்தைச் ஆக்கிரமித்து சுரண்டுவது பெருமுதலாளிகளுக்கு  ஒரு பொருட்டே இல்லை.

அந்த மக்கள் ஆயுதம் தூக்காதவரை வெறும் லத்திகளை வைத்தே குறைந்த செலவில் அதிக சுரண்டல் நடத்த அவர்களால் முடியும்.

கோசம் போடுபவர்களையும் வாயாலே வடைசுடுபவர்களையும் அவர்களே வளர்த்துவிடுவார்கள்.

போர் புரிவது போல ஆடி
அதாவது போர் ஆட்டம் நடத்தி,
அடிவாங்குவதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்பவைத்து,
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாழாக்கி,
வென்றாலும் தோற்றாலும் மக்களுக்கே நட்டம் என்றாக்கி,
நீண்டகாலம் இழுத்து,
கடைசியில் கைவிரிப்பார்கள் சனநாயக அரசியல்வாதிகள்.

வழக்குபோட்டாலும் இதேதான் 30, 40 ஆண்டுகள் வழக்கு நடத்தி கடைசியில் கார்ப்பரேட்டுக்கு சாதகமான தீர்ப்புதான் வரும்.
அப்படியே தாமதமாக நீதி (அதாவது அநீதி) வழங்கப்பட்டாலும் அதற்குள் அரசியல்வாதிகள் அவனை பத்திரமாக வெளியே அனுப்பியிருப்பார்கள்.

கார்ப்பரேட் பெருமுதலாளிகளை சனநாயக வழியில் எதிர்க்கவே முடியாது.
இழப்பும் அதிகம். நேரமும் அதிகம். தீர்வு கிடைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது.
இதுதான் உண்மை.

ஆயுதவழியில் இழப்பு கிட்டத்தட்ட அதே அளவுதான்.
ஆனால் குறுகிய நேரத்தில் முடிவு தெரிந்துவிடும்.
தீர்வு கிடைக்க 50% வாய்ப்பு உள்ளது.

நீங்கள் ஒரு கையை முட்டிமுறுக்கி தூக்கி தூக்கி
தொண்டை வலிக்க கத்தி கத்தி எதுவும் ஆகப்போவதில்லை.
உங்களுக்குத்தான் வலிக்கும்.
உங்கள் போராட்டங்களால் வரும் பாதிப்புகள் அனைத்தும் உங்களுக்கே!

நீங்கள் திருப்பி அடியுங்கள்!

அப்போதுதான் ஆதரவு குவியும்!

எதிரிக்கு இழப்பு வரும்!

இப்போது உங்களை எந்த ஊடகமும் பதிவு செய்யாத நிலை மாறும்.
பத்திரிக்கைக்காரன் உயிரைப் பணயம் வைத்து தேடிவந்து காத்திருந்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வான்.
அதை உலகமே ஆவலுடன் கேட்கும்.

மனிதன் என்றால் மானம் வேண்டும்
வீரம் வேண்டும்
மக்கள் என்றால் மண்பற்று வேண்டும்.

நீங்கள் அமைதியாக போராடினாலும் நக்சலைட் முத்திரை குத்தி அரசுக்கெதிராக போர்தொடுத்த தேசதுரோக வழக்குதான் போடுவார்கள்.

எதற்கு உங்களுக்கு குற்ற உணர்ச்சி?

எதிரி ஆயுதப்படையோடு வந்து நிற்கிறான்.
நீங்கள் தற்காப்புக்காக திருப்பி அடிப்பதில் என்ன தவறு?!

காட்டில் வாழும் நாடோடி இனங்களெல்லாம் ஆயுதமேந்தி
கார்ப்பரேட்களை கதறவிடும் இந்தக்காலத்தில்
முன்னேறிய இனமான தமிழர்களால் அது ஏன் முடியாது?
___________________
படம் : திருச்சி சிறையில் தினமும் நிர்வாண சோதனை: ஜாமீனில் வந்த மாணவி குற்றச்சாட்டு
(தினகரன் 21-05-2017)