Showing posts with label சின்னமேளம். Show all posts
Showing posts with label சின்னமேளம். Show all posts

Tuesday, 2 August 2022

சாதிவெறியில் முதலிடம் திமுக

ஜாதிவெறியில் முதலிடம் திமுக!

 இடவொதுக்கீட்டால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பலனடைந்தது (திமுக முதல்வரின் சமூகமான) மேளக்கார சமூகமாகும். 

 1981 கணக்கெடுப்பில் (தமது மக்கட்தொகைப்படி) OBC இல் மேளக்காரருக்கு 100 இருக்கைகள் கிடைக்க வேண்டுமெனில் 525 இருக்கைகளை பெற்றுள்ளனர்!

 அதாவது மற்ற எவரையும் விட அதிக பயன்களை அனுபவித்தது மேளக்காரர் தான். 

 ஆனால் (வன்னியர் போராட்டத்தின் விளைவாக MBC கொண்டு வரப்பட்டபோது) மேளக்காரரையும்  MBC க்கு வஞ்சமாக கொண்டு சென்றது திமுக அரசு.

 இதேபோல மேளக்காரருக்கு பிறகு சௌராட்டிரர் அதிகளவில் 100 க்கு 380 பேர் இருக்கைகள் பெற்றிருந்தனர்.
நல்லவேளை அவர்கள் MBC க்கு கொண்டு செல்லப்படவில்லை.

 (தமிழ்க்குடிகளான) CSI கிறுத்துவர் (பெரும்பாலும் கிறுத்துவ நாடார், சில கிறுத்துவ வேளாளர், சில கிறுத்துவ உடையார், கொங்கு வேளாளர், நாங்குடி வேளாளர் ஆகியோர்) நூறுக்கு முறையே 88, 87, 75 இருக்கைகளையே பெற்றுள்ளனர். 
 முறைப்படி பார்த்தால் இந்த 3 குடிகளையும்  MBC பட்டியலுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். 
 ஆனால் இவர்கள் தமிழ்க்குடிகள் என்பதால் மேளக்கார ஜாதிவெறி பிடித்த திமுக அரசால் வஞ்சிக்கப்பட்டனர்.

இதை ஊடகங்களை பேசச்சொல்லி 2014 தொட்டு கேட்டிருக்கிறேன்.

- Sundaram Muthiah Rajasubramanian
(தென்காசி சுப்பிரமணியன்)

சான்று ஆவணம்:  Reort of Tamil nadu second backward classes commission  (volume 1-3)

 காணொளி விளக்கம்: https://youtu.be/XQqpT2Inu2M

Thursday, 10 October 2019

திராவிடக் கட்சிகளில் சாதியம் -2



திராவிடக் கட்சிகளில் சாதியம் -2

 சென்னை பல தரப்பட்ட மக்கள் வாழும் பகுதி ஆகும்.

 இதில் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட வேட்பாளர்கள் அவர்கள் சாதி அடிப்படையில் ஒப்பிடப் பட்டுள்ளனர்.

 இதில் பல்வேறு தமிழ்ச்சாதி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ள தி.மு.க
 ஒரு நாயுடு, இரண்டு இசை வேளாளர் இருக்குமாறே வாய்ப்பளித்துள்ளனர்.

 இதில் கருணாநிதி குடும்பம் அதிக பயன் அடைந்து வந்துள்ளது.
 இவர்களுக்கு அடுத்து நாயுடு (நாயக்கர்) பயனடைந்துள்ளனர்.

 தமிழரில் முதலியார்களுக்கு அடுத்தபடியாக
 நாடார், வன்னியர்கள் பயனடைந்துள்ளனர்.

திராவிடக் கட்சிகளில் சாதியம் -1



திராவிடக் கட்சிகளில் சாதியம் -1

 2011 இல் தி.மு.க போட்டியிட்ட இடங்களில் நிறுத்திய வேட்பாளர்களின் சாதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடம்

 இதில் பட்டியல் சாதியாருக்கான 46 தனித் தொகுதிகள் போக இடம்பெற்றுள்ளோர்

படுகர் 1
செட்டியார் 3
இசை வேளாளர் 3
கொங்கு வெள்ளாளர் 11
குறும்ப கவுண்டர் 1
மீனவர் 1
முதலியார் 3
முக்குலம் 20
முஸ்லீம் 7
முத்தரையர் 4
நாடார் 7
நாயுடு 8
பார்கவ குலம் 4
பிள்ளைமார் 4
ரெட்டி 3
வன்னியர் 12
யாதவர் 2

 இதில் படுகர், இசை வேளாளர் (சின்ன மேளம்), நாயுடு, ரெட்டி ஆகியோர் தமிழரல்லாதார் என்பதை உறுதியாகக் கூறலாம்.

 சதவீத அடிப்படையில் பார்க்கும் போது

மக்கட்தொகையில் 0.12% உள்ள இசை வேளாளர்,
3.2% அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது ஏறத்தாழ 30 மடங்கு ஆகும்.

மக்கட் தொகையில் 4.4% உள்ள நாயுடு (நாயக்கர்),
 8.5% என்ற அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது இரண்டு மடங்கு ஆகும்.

மக்கட்தொகையில் 1.43% உள்ள ரெட்டியார்,
 3.2% அளவு இடம்பிடித்துள்ளனர்.
 இது இரண்டரை மடங்கு ஆகும்.

மக்கட்தொகையில் 12% இருக்கும் வன்னியர் சரியாக 12% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 6.8% இருக்கும் கொங்கு வெள்ளாளர் 11% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 6.6% இருக்கும் நாடார் 7.4% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 8.8% இருக்கும் முக்குலத்தோர் 21.25% பெற்றுள்ளனர்.
இது இரண்டேகால் மடங்கு ஆகும்.

ஆனால் 5.7% சதவீதம் உள்ள பிள்ளைமார் வெறும் 4.25% தான் பெற்றுள்ளனர்.

 தி.மு.க ஆட்சியில் அதிகாரப் பகிர்வு என்பது வந்தேறி சாதிகளுக்கு நல்ல லாபமாகவும்
 பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பெரும்பான்மை சாதிகளுக்கு ஓரளவு லாபமாகவும்
 முன்னேறிய சாதியார் மற்றும் பிற்படுத்தப்பட்டோரில் சிறுபான்மையினர் ஆகியோர்க்கு நஷ்டமாகவும் உள்ளது.

 இது வேட்பாளர் தேர்வு அடிப்படையில் மட்டுமே!

தொடரும்....

[CASTE IN POLITICAL RECRUITMENT: THE STUDY OF TWO
MAJOR DRAVIDIAN PARTIES IN TAMIL NADU]

Thursday, 28 March 2019

அண்ணாதுரையும் கருணாநிதியும் தெலுங்கரே - பாரதிதாசன் எழுதிய உண்மை

அண்ணாதுரையும் கருணாநிதியும் தெலுங்கரே!
- பாரதிதாசன் எழுதிய உண்மை

குயில் இதழில் (28.10.1958) பாரதிதாசன் எழுதுகிறார்....

"தங்களது இயக்க கூட்டங்களில் எனது பாடலை வாசித்து விட்டு, மக்களின் உணர்ச்சியை தூண்டி,
பின்னர் எனை முன்னாள் (மாசி) கவிஞன் என்கிறார்கள்.
குடும்பத்தில் தந்தை பணம் கொடுக்க இயலாத வறியவன் ஆகி போனால்,
வேறொருவன் புதிதாக பணம் தந்தால் அவன் இந்நாள் தந்தையும், முன்னவன் முன்னாள் தந்தையும் ஆக மாட்டன்!
ஒருவேளை அண்ணாத்துரையும், கருணாநிதியும் அப்படி குடும்பத்தில் இருந்து வந்தவர்களோ?
அண்ணாத்துரையும், கருணாநிதியும், டி.என்.ராமனும் தங்களின் 'தெலுங்கு குல மேளத்தை' நன்றாகத்தான் வாசித்து அரசியல் செய்கிறார்கள்".

நன்றி: Ranga Rasu Ra

முழுப்பதிவு கீழே....

அண்ணாத் தொரையின், திராவிடத்தின் லட்சணம் இதுதான்.
இப்போதெல்லாம் பல தமிழ்த் தேசிய தோழர்களே அண்ணாத்துரைக்கு அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு உள்ளிட்ட உரிமங்களை அச்சடித்து கொடுத்து அண்ணாத்துரையை தமிழன் என்கிறார்கள்.
ஆனால் இந்த அண்ணாத்துரை யார் என்பதை பாரதிதாசன் விளக்கி இருக்கிறார்.
முதலில், அண்ணாதுரை ஈவெராவின் மாணவன், கருணாவின் ஆசான் என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்!

இந்த அண்ணாத்துரை பற்றி திராவிட கவிஞன், பாவலன், பாவேந்தன், புரட்சி கவிஞன் என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகத்தால் போற்றப்பட்ட பாரதிதாசன் தன்னுடைய 'குயில்' எனும் பத்திரிக்கையில் எழுதி இருக்கும் குறிப்பு இங்கே...

''அண்ணாத்துரை, தன் சகோதரி மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும், இன்ப விளையாட்டு முடியும் வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும், அண்ணாத்துரையின் காஞ்சி வாழ்வு தொண்டுகளில் ஒன்று'.'

''துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் வளர்ப்பு சிற்றண்ணை ராஜாமணி என்று அண்ணாத்துரை அப்போது புலம்புவார்!
அன்னையோ சென்னையில் ஐயரோடு;
காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.
பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் செல்வந்தர் பொன்னப்பா தரும் சிறுதானம்''.

"இந்த நிலையில் அண்ணாத்துரை பெரியாரின் செல்வ நிலை கண்டு மலைத்தார்.
அவரின் தொண்டராகி நிலைத்தார்.
குடும்பம் குலைத்தார்.
பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.
இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும்.
திரு. குத்தூசி குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்!"
-குயில் இதழ் (30-9-1958)

"விழாக்களில் எனக்கு வழங்கப்படும் பொற்கிழிகளையும், பொன்னாடைகளையும் தனது என்பார்.
தன் ஏற்பாடு என்பார்.
என்னோடு பங்கு பெரும் நிகழ்வுகளை மறக்காது நிழற்படம் எடுத்து விளம்பரம் செய்துகொள்வார் அண்ணாத்துரை.
என்னிடம் மன்றாடி என்னோடு ராஜபாளையம் வந்தார்.
ராஜபாளையத்தில் நடந்த விழாவில் பொருள் காப்பாளராக தானாக ஆகி கொண்டார்.
ஆனால் அண்ணாத்துரை தன்னுடைய பொன்னாடை என்று சொன்னதை ஒரு விருந்தினர் தனது தறியில் எனக்காக பிரத்யேகமாக நெய்தது என்றார்.

ஒரு சிங்கப்பூர்க்காரர் பலமுறை பல பத்தாயிரங்கள் எனக்கு அனுப்பியதை அண்ணாத்துரை பெற்றுக் கொண்டார் என்றார்.

குயில் இதழ் துவங்குவதற்கு பல ஆயிரம் ரூபாய்களை வாங்கி கொண்டு சென்னை சென்றார் அண்ணாத்துரை.
இந்த வேலையை நான் பார்த்துகொள்கிறேன் நீங்கள் கவலையை விடுங்கள் என்று சொல்லி போனவர் போனவர்தான்.
ஐகோர்ட்டில் குயில் இதழ் முதலீட்டாளர்களால் வழக்கானது.
பணத்தை திருடுவது மட்டுமன்றி என்னுடைய குயில் இதழை முடக்க வேண்டும் என்பதும் அண்ணாதுரையின் நோக்கமாக இருந்திருப்பது வழக்கின் போது விளங்கியது".
- குயில் இதழ் (14-10-58).

"தங்களது இயக்க கூட்டங்களில் எனது பாடலை வாசித்து விட்டு, மக்களின் உணர்ச்சியை தூண்டி, பின்னர் எனை முன்னாள் (மாசி) கவிஞன் என்கிறார்கள்.
குடும்பத்தில் தந்தை பணம் கொடுக்க இயலாத வறியவன் ஆகி போனால், வேறொருவன் புதிதாக பணம் தந்தால் அவன் இந்நாள் தந்தையும், முன்னவன் முன்னாள் தந்தையும் ஆக மாட்டன்!
ஒருவேளை அண்ணாத்துரையும், கருணாநிதியும் அப்படி குடும்பத்தில் இருந்து வந்தவர்களோ?
அண்ணாத்துரையும், கருணாநிதியும், டி.என்.ராமனும் தங்களின் 'தெலுங்கு குல மேளத்தை' நன்றாகத்தான் வாசித்து அரசியல் செய்கிறார்கள்
-குயில் இதழ் (28-10-58).
மேலே பதிவாகி இருக்கும் கருத்துக்கள் யாவும், இன்னும் மேலும், திராவிடர்களால் திராவிட கவிஞன் என்று கொண்டாடப்படும் பாரதிதாசனால் தனது 'குயில்' இதழில் வெளியிடப்பட்டவை.
ஈவேராவின் மாணவனும், கருணாவின் ஆசானும் வேறு என்ன சும்மாவா இருந்திருப்பார்?

அண்ணாதுரை பற்றிய உண்மைகளை அறிய,
தேடுக: நொண்ணாதுரை வேட்டொலி

Friday, 10 August 2018

கருணாநிதி பூர்வீகம் ஆந்திராவில் ஓங்கோல்

கருணாநிதி பூர்வீகம் ஆந்திராவில் ஓங்கோல்

பட்டதிலுள்ள தெலுங்கு பத்திரிக்கை செய்தியின் சுருக்கம் கீழே,

கருணாநிதி முன்னோர்கள் ஓங்கோலைச் சேர்ந்தோர் !

கலைஞர் கருணாநிதியின் மூதாதையர்களின் சொந்த ஊர், ஆந்திராவில் , ஒங்கோலுக்கு அருகே உள்ள செருக்கொம்முபாளையம் என்ற ஊர்.

கருணாநிதியின் மூதாதையர்கள், ஒங்கோலுக்கு அருகே உள்ள பெள்ளூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான பாடகர்கள் ஆக இருந்தார்களாம்.

இதை கருணாநிதியே 1960 ல் ஒங்கோல் சென்றிருந்த போது கூறியுள்ளார்.

கருணாநிதி 1960ல் எலூர் நகரத்தில் நடந்த நாவல் வெளியீடு விழாவில் பங்கேற்று அங்கு வந்த ஓங்கோல் நகரை சேர்ந்த கொம்பள்ளி பாலகிருஷ்ணாவை சந்தித்துள்ளார்.
அவரிடம் கருணாநிதி தன் பூர்விகம் பற்றி கூறியுள்ளார்.

இதை பாலகிருஷ்ணா தாம் பணிபுரிந்த கல்லூரி விழாவில் கூறியுள்ளார்.
தற்போது அவரும் மறைந்துவிட்டார்.
ஆனால் அன்று தெரிவித்தவற்றை அவர் மாணவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்.

சமஸ்தான பணி சரியாக இல்லை என்பதால் அவர் முன்னோர்கள் மதராஸ் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார் கருணாநிதி.
---------------

இதிலிருந்து இவர்கள் விஜயநகர ஆட்சி காலத்தில் வந்தவர்கள் அல்லர் என்பதும் கிபி 1800 க்கு பின்பு வந்தவர்கள் என்பது தெளிவாகிறது.

கருணாநிதிக்கு இரு தலைமுறை முன்பு அவர் முன்னோர்கள் ஓங்கோல் பகுதியில் வசித்து வந்தனர்...

புகைப்படத்திற்கு நன்றி : Jose Kissinger
மொழிபெயர்ப்புக்கு நன்றி : Karthikeyan Rathinavelu

Wednesday, 8 August 2018

இதுவும் தெலுங்கர் தீர்ப்புதானா?

இதுவும் தெலுங்கர் தீர்ப்புதானா?

மெரினாவில் இடம் கொடுத்து தீர்ப்பளித்த நீதிபதி குலுவாடி ரமேஷ் ஆந்திராவைச் சேர்ந்த அசல் தெலுங்கர்!

முடியலல்ல...?!

(தகவலுக்கு நன்றி: வழக்கறிஞர் பா.குப்பன்)

படம்: Karunanidhi came from a telugu ancestry and was born into family of musicians
(News9 tv screenshot)

Monday, 23 July 2018

OBC ஒதுக்கீட்டில் வந்தேறிகள் ஆதிக்கம்

OBC ஒதுக்கீட்டில் வந்தேறிகள் ஆதிக்கம்

கீழ்க்கண்ட பதிவில் 1985 இல் அப்போதைய OBC சாதிகளில் தமிழரல்லாதார் செலுத்திய ஆதிக்கம் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

(படிக்க சோம்பல்படுவோர் கீழ்க்கண்ட பத்தியை மட்டும் படிக்கவும்)

1985 ல் தமிழரல்லாதார் (ஓபிசி மக்கட்தொகையில்) தமது சமூக சதவீதத்தை விட அதிகமான இடங்களை ஆக்கிரமித்து இருந்தனர்....

[1] (தெலுங்கு) மேளக்காரர் 5.25 மடங்கு
[2] (குஜராத்தி) சவுராஸ்டிரர் 3.80 மடங்கு
[3] (கன்னட) கவுடா 3.0 மடங்கு
[4] (தெலுங்கு) கவரா 2.67 மடங்கு
[5] (தெலுங்கு) தேவாங்கர் 2.41 மடங்கு
[6] (கன்னட) ஜங்கம் 1.87 மடங்கு
[7] (தெலுங்கு) கஞ்ச ரெட்டி 1.75 மடங்கு
[8] (ஹிந்திய) சேட்டு 1.75 மடங்கு
[9] (தெலுங்கு) ஈடிகா 1.50 மடங்கு
[10] (உருது) தெக்கணி முஸ்லீம் 1.42 மடங்கு
[11] (கன்னட) கன்னடிகா ஜைன் 1.37 மடங்கு
[12] (கன்னட) வொக்கலிகர் 1.18 மடங்கு
[13] (தெலுங்கு) சாத்துச்செட்டி 1.77 மடங்கு
என அதிகமான பயனடைந்துள்ளனர்.
அதாவது அத்தனை மடங்கு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
------------------------
(இது பற்றி சற்று விரிவாக அறிய விரும்புவோர் தொடர்ந்து படிக்கவும்)

இதனால் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மற்ற ஓபிசி சாதியினருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய இடங்கள் கூட கிடைக்காமல் செய்தனர்.

மிக அதிக பலனடைந்தோர் தெலுங்கரான சின்னமேளம் (மேளக்காரர்) என்றால்,
மிகவும் பாதிக்கப்பட்டோர் வன்னியர்கள்.

இதனால் வன்னியர் தனி இடவோதுக்கீடு பெற 1989 இல் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் வடமாவட்டங்கள் முழுமையாக ஸ்தம்பிக்க போலிசால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
எம்.ஜி.ஆர் மத்திய அரசிடம் மன்றாட துணைராணுவம் வந்து 21 பேரை சுட்டுக்கொன்றது.
பிறகு OBC இல் மிகவும் பின்னடைந்த சாதிகளை தனியாக எடுத்து MBC மற்றும் DNC உருவாக்கப்பட்டது.

இதற்கான காரணத்தை ஆராய்வோம்.

1985ல் இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் (OBC commission) அறிக்கையின் படி கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஆதிக்க விழுக்காடு கணக்கிடப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு
1,00,000 பேர்களை 'இதர பிற்படுத்தப்படோர் ஒதுக்கீட்டில்' வேலைக்கு எடுப்பதாகக் கொள்வோம்
அதில் 0.2 உள்விழுக்காட்டை கொண்ட மேளக்காரர்கள் நியாயப்படி 200 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் 1050 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதேபோல் நியாயப்படி கொங்கு வெள்ளாளக்கவுண்டரில் 6800 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் 5916 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது.

இதர பிற்படுத்தப்பட்டோரில் 18% உள் விழுக்காட்டை கொண்டிருந்தாலும் வன்னியர் மிகவும் பின்னடைவில் உள்ளனர்.
இதற்கு காரணம் வேற்றின ஆதிக்கம்.
குறிப்பாக OBC ஒதுக்கீட்டில் 5.25 மடங்கு அதிக சலுகையை அனுபவித்து வந்த மேளக்கார சமூகம்.
 
ஆனால் வன்னியர் போராடி வாங்கிய MBC யில் சின்னமேளங்களும் சேர்க்கப்பட்டனர்.
(கருணாநிதியின் தனது சாதி மீதான பாசம் இதற்கு காரணம்.
இதனால் இன்றுவரை வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பின்னடைவைச் சந்திக்கின்றன)

இதனால்தான் தமிழ்ச்சாதிகளுக்கு மட்டுமே இனவொதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்.
அதுவும் பிசி, ஓபிசி, ஓசி என்று பொத்தம்பொதுவாக இல்லாமல் மக்கட்தொகையில் ஒரு சாதியின் சதவீதத்தைப் பொறுத்து சாதியின் பெயரிலேயே வழங்கப்பட கேட்கிறோம்.

இதுதான் பதிவின் சாராம்சம்.
----------------------

(இந்த விபரம் எப்படி கணக்கிடப்பட்டது என விரிவாக அறிய விரும்புவோர் தொடர்ந்து படிக்கவும்)

1985ல் இருந்த பழைய OBC யில் தற்போதுள்ள நான்கு குழுக்கள் வரும்.

அவை பிற்படுத்தப்பட்டோர் (BC),
பிற்படுத்தப்பட்ட இசுலாமியர் (BC -M),
மிகவும் பிற்படுத்தப்பட்
டோர் (MBC)
மற்றும் சீர்மரபினர் (DNC).

இது தகவலுக்காக மட்டும்.
பதிவில் 1985ல் என்ன நிலை என்று மட்டுமே விவாதிக்கவுள்ளோம்.

இதர பிற்படுத்தப்பட்டோரில் (OBC) குறிப்பிட்ட சதவீதம் உள்ள ஒரு சமூகம் (Caste) எவ்வளவு பயனடைந்துள்ளது என்று கணிக்க
OBC மூலம் பலனடைந்தோர் எண்ணிக்கையில் அச்சமூக சதவீதத்தை கணக்கிடவேண்டும்.
இந்த பலனடைந்தோர் சதவீதம் (ஓபிசியில்) அந்த சமூகத்தின் சதவீதத்துடன் சமமாக இருக்கவேண்டும்.

அதாவது ஒரு சமூகம் ஓபிசி சாதியினரில் 10% இருக்கிறார்கள் என்றால்,
பலனடைந்தோர் எண்ணிக்கையிலும் 10% இருக்கவேண்டும்.

இடவொதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் பலன்கள் நான்கு வகைப்படும்.
அவை
1) கல்வி வாய்ப்பு,
2) கட்டண விலக்குடன் ஸ்காலர்சிப்,
3) கட்டணத்துடன் ஸ்காலர்சிப்,
4) வேலைவாய்ப்பு

இந்த நான்கு பலன்களையும் பெற்றோர் எண்ணிக்கையை சமூக வாரியாக பிரித்து கணக்கிட்டால் அச்சமூகம் அடைந்த பலன் தெரிந்துவிடும்.

ஒரு நபருக்கே நான்கும் கிடைத்திருக்கலாம்.
அல்லது ஒரு சமூகத்திற்கு நான்கில் ஒன்று மட்டும் அதிகம் கிடைத்திருக்கலாம்.
எனவே சமூக வாரியாக நான்கையும் கூட்டி நான்கால் வகுத்தால் அச்சமூகம் அடைந்த மொத்த பயன் தெரிந்துவிடும் இல்லையா?

இதைக் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

அதாவது,
ஒரு சமூகத்தற்கு கிடைத்த
கல்விவாய்ப்பு + கட்டண விலக்கு & ஸ்காலர்சிப் + ஸ்காலர்சிப்பு மட்டுர் + வேலைவாய்ப்பு இவற்றின் சராசரி விழுக்காடு அச்சமூகம் பெற்ற மொத்த பயன்.

எடுத்துக்காட்டுக்கு,
மேளக்கார சாதியை எடுத்துக்கொள்வோம்.

1985ஆம் ஆண்டறிக்கை படி,

* அச்சமூகத்தின் இடவொதுக்கீட்டில் கல்விவாய்ப்பு கிடைத்தோர் விழுக்காடு 0.4 ஆக உள்ளது.

* மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் கட்டண விலக்கு ஸ்காலர்சிப்பு பெற்றோர் விழுக்காடு 2.7 ஆக உள்ளது.

* மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் கட்டண ஸ்காலர்சிப்பு பெற்றோர் விழுக்காடு 0.4 ஆக உள்ளது.

* மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற்றோர் விழுக்காடு 0.7 ஆக உள்ளது.

மேலுள்ள நான்கையும் கூட்டி நான்கால் வகுத்தால் 1.05 சதவீதப் புள்ளிகள் வரும்.

இப்புள்ளிகள் மொத்த ஓபிசி இடவொதுக்கீட்டில் மேளக்கார சமூகம் பெற்ற பலன்.

ஆனால் மேளக்கார சாதியினர் ஓபிசி மக்கட்தொகையில் 0.2% மட்டுமே.

1.05/0.2 = 5.1 என்பது மேளக்கார சாதியினரின் ஆக்கிரமிப்பு/ ஆதிக்கத்தைக் குறிக்கும்.

அதாவது மேளக்காரர் தாங்கள் இருக்கும் மக்கட்தொகையை விட ஐந்து மடங்குக்கும் மேல் 'இதரபிற்படுத்தப்
பட்டோருக்கான ஒதுக்கீட்டை' ஆக்கிரமித்துள்ளனர்.

உதாரணத்துக்கு 1,00,000 பேர்களை OBC ஒதுக்கீட்டில் வேலைக்கு எடுக்குறாங்கன்னு வச்சுக்குவோம்.
அதில் 0.2 உள்விழுக்காட்டை கொண்ட மேளக்காரர்கள் நியாயப்படி 200 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் 1050 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுளனர்.

இதே போல் மற்ற தமிழரல்லாத பிறமொழியாளர்களின் ஆதிக்க விழுக்காட்டை கணக்கில் கொண்டு கூறினால்,

மேளக்காரர் தான் இருப்பதை விட 5.1 மடங்கு
சவுராஸ்டிரர் தான் இருப்பதை விட 3.80 மடங்கும்
கவுடா தான் இருப்பதை விட 3.0 மடங்கும்
கவரா தான் இருப்பதை விட 2.67 மடங்கும்
தேவாங்கர் தான் இருப்பதை விட 2.41மடங்கும்
ஜங்கம் தான் இருப்பதை விட 1.87 மடங்கும்
கஞ்ச ரெட்டி தான் இருப்பதை விட 1.75 மடங்கும்
சேட்டு தான் இருப்பதை விட 1.75 மடங்கும்
ஈடிகா தான் இருப்பதை விட 1.50 மடங்கும்
தெக்கணி இசுலாமியர் தான் இருப்பதை விட 1.42 மடங்கும்
கன்னட ஜைனர் தான் இருப்பதை விட 1.37 மடங்கும்
வொக்கலிகர் தான் இருப்பதை விட 1.18 மடங்கும்
சாத்துச்செட்டி தான் இருப்பதை விட 1.77 மடங்கும் பயனடைந்துள்ளனர் அதாவது அத்தனை மடங்கு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் தான் இதரபிற்படுத்தப் பட்டோரில் (OBC) இருந்து மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தனியாக ஒதுக்கீடு வேண்டுமென வன்னியர் சங்கம் போராட்டம் (1989ல்) நடத்தியது.

  இதன் விளைவாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடவொதுக்கீடு உருவானது.

ஆனால் OBC இடவொதுக்கீட்டில் பிற எந்த சமூகத்தையும் விட அதிகமான மடங்கு இடத்தை ஆக்கிரமித்து வன்னியர் போராடத்திற்கே முதல் காரணமாக இருந்துவந்த மேளக்கார சமூகமும் MBC பட்டியலுக்கு சத்தமில்லாமல் நகர்ந்து விட்டனர்.

1989 க்கு முன்பு இதர பிற்படுத்தப்பட்டோரில் 18% உள்விழுக்காடு கொண்ட வன்னியர்,
போராட்டத்தில் பலரை பறிகொடுத்து பெறப்பெற்ற MBC இடவொதுக்கீட்டால் பெரிய பலன்பெறாமல் இருந்துவருகின்றனர்.

இந்த லட்சணத்தில் இடவொதுக்கீட்டால் தான் இருக்கும் தொகையை விட 13 விழுக்காடு குறைவாக பெற்ற கொங்கு வெள்ளாள கவுண்டரோடு வன்னியர்களை மோதவிடுகின்றன ஹிந்திய, திராவிட, தலித்திய கும்பல்கள்.

ஆம்.
1985ன் அறிக்கையின் படி 1,00,000 பேரை வேலைக்கு இதர பிற்படுத்தப்பட்டோரில் எடுக்கின்றனர் என்றால்
அதில் நியாயப்படி கொங்கு வெள்ளாளக்கவுண்டரில் 6800 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் 5916 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

தமிழரல்லாதாருக்கு இங்கே சலுகை கொடுப்பதே கூடாது.
இதில் அவர்கள் பல மடங்கு ஆக்கிரமித்தும் வருவதை எப்படி ஏற்கமுடியும்?!

  திராவிடவாதிகள் இடவொதுக்கீட்டில் பலனடைந்த சதவீதத்தை கணக்கிடாமல் எண்ணிக்கையை மட்டும் எண்ணி,
பயனடைந்த கொங்கு வெள்ளாளரின் எண்ணிக்கையை வன்னியர்களிடம் காட்டி மோதலைத் தூண்டுகிறார்கள்.

ஆனால் வேற்றின ஆதிக்கத்தால் கொ.வெ.கவுண்டரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள்தொகையின் அடிப்படையில் கொ.வெ.கவுண்டருக்கு 100பேருக்கு வேலைகிடைக்க வேண்டும் என்றால் 87 கொ.வே.கவுண்டருக்கே வேலை கிடைத்துள்ளது.

தகவல்களுக்கு நன்றி:
தென்காசி சுப்பிரமணியன்
(Rajasubramanian Sundaram Muthiah)
படத்திற்கு நன்றி: அசுஆ சுந்தர்
----------------

அண்டைமாநிலங்களில் பெரும்பான்மைச் சமூகம்கூட தமிழகத்தினுள் குடியேறி சிறுபான்மை ஆகலாம்.

அதிகாரத்தில் இங்கிருக்கும் வந்தேறிகள் துணையுடன் இடவொதுக்கீடும் பெற்று அதையும் தாண்டி பல மடங்கு ஆக்கிரமித்து வாழ்வாங்கு வாழலாம் என்ற நிலையே உள்ளது.

வந்தாரை வாழவைத்து நாம் சீரழிந்துகொண்டு போகிறோம்.

Monday, 9 July 2018

கலைஞரின் மூதாதையர் தெலுங்கர் - எம்.ஜி.ஆர்


கலைஞரின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து வந்தனர் - எம்.ஜி.ஆர்

//ஆந்திராவிலிருந்து வந்த அவரது மூதாதையர்கள் குச்சிப்புடி நடனம் பயின்றவர்கள்.
தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது.
அதனைக் கற்றார்கள்.
ஒரு வகுப்பு தோன்றியது.
இவ்வாறு வரலாறு கூறுகிறது.
இதற்குப் புத்தகம் இருக்கிறது.
கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா?//

படம்: 04.02.1978 மாலைமுரசு
தலைப்பு: நீங்கள் தமிழரா? நிரூபிக்க தயாரா? கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர் கேள்வி

மேலும் அறிய,
(தேடுக: எம்.ஜி.ஆர் ஒரு மலையாளியே வேட்டொலி)