கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் பரம்பரையின் வரலாறு
பகுதி -1
தெலுங்கர் நுழைவு
------------
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற தலைப்பில் தமிழ்வாணன் அவர்கள் எழுதிய நூல் ஆளும் தெலுங்கு வந்தேறிகளால் மறுபதிப்பு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது.
அந்நூல் காட்டிய ஆங்கிலேயர் காலச் சான்றுகள் வைக்கப்பட்டிருந்த எழும்பூர் ஆவணக் காப்பகம் கருணாநிதி அரசால் கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டுவிட்டது.
தற்போது கம்பளத்தார் சமூகத்தால் தமிழ்வாணனின் மகனுடன் சமரசம் பேசப்பட்டு அந்நூல் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வந்துள்ளது.
கட்டபொம்மன் என்கிற கெட்டிபொம்மு பற்றிய உண்மைகளை மீள ஆவணப்படுத்துவது அவசியமாகும்.
------------------
பதிவர்: அன்பெழில் (anpezhil)
தமிழர் வரலாற்றில் தெலுங்கர்கள் செய்த தகிடுதத்தங்கள் சொல்லி மாளாது.
வரலாற்றை மாற்றி, தங்கள் சுய அடையாளம் மறைத்து தமிழராக உருமாறி அவர்கள் காட்டிய, காட்டும் குரளிவித்தைகளை சமீபகாலம் வரை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அவர்களில் முக்கியமானவன் நமக்கெல்லாம் வீரபாண்டியக் கட்டப்பொம்மனாக பி.ஆர்.பந்துலு நாயக்கனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கெட்டிப்பொம்மு நாயக்கன்.
பால்வாடி பொடிசுகளின் மேடைநாடகங்களிலும், பல்லுப்போன பெரிசுகள் டீக்கடைகளில் சிலாகித்து ஆத்தும் சிறப்புறைகளிலும் “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது” புகழ் வீரபாண்டியக் கட்டப் பொம்மனாக சித்தரிக்கப்பட்ட கட்டப்பொம்முவின் கதை உண்மையென்றே நம்பியவர்களுள் அடியேனும் ஒருவன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முறை திராவிட ஆதிக்கம் தொடர்பான கட்டுரைகளை இணையத்தில் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன்.
தேடலின் முடிவில் அது தெலுங்கர்களின் வரலாற்றில் போய் நின்றது.
தெலுங்கர்களின் வரலாற்றை அவர்களின் பக்கங்களில் தேடியபோது கட்டப்பொம்மனைப் பற்றிய அவர்களின் பெருமை பீத்தக்கலய உரைகளை வாசிக்க நேரிட்டே விட்டது.
அன்று துவங்கிய பொம்முநாயக்கன் பற்றிய தேடல் இன்றும் முடிவுறவில்லை.
ஒன்று மட்டும் உறுதி.
அவன் பாண்டிய மன்னன் இல்லை.
பாண்டிய மன்னன் எவனும் அவனுக்கு அப்பனாக இருந்ததும் இல்லை.
எனினும் அவன் ஒரு சுத்தத் தெலுங்கன் என்பதையும், வெள்ளையருக்கு அஞ்சி பணிந்தவன் என்பதையும், ஊர்புகுந்து திருடிய கொள்ளைக்காரன் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் வரையுமாவது கிடைத்து விட்டது.
அனைத்தையும் புத்தகமாக்கும் முன்பு அவற்றை சுருக்கி மக்கள் மன்றத்தில் வைக்கின்றேன்.
தெலுங்கு நாயக்கர்கள் புளகாங்கிதப்பட்டு போற்றிப் புகழும் கட்டப்பொம்மன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரனா அல்லது டவுசரை ஈரமாக்கிக் கொள்ளும் தொடைநடுங்கி ஓடுகாலியா என்பதை வரும் அத்தியாயங்களைப் படித்தபின்பு முடிவெடுங்கள்.
தமிழகத்திற்கு வந்து சேர்ந்த தெலுங்கர்களை குறைந்தது மூன்று வகைப்படுத்தலாம்.
முகமதியர்களின் காட்டுத்தனமான ஆக்கிரமிப்பிற்கு அஞ்சி பெண்டு பிள்ளைகளோடு கூட்டம் கூட்டமாய் வந்தேறியவர்கள்.
வேட்டையாடும் சாக்கில் காட்டுநாய்களோடு மருதநிலத்தை ஆக்கிரமித்து வந்தேறியவர்கள்.
விஜயநகர பேரரசின் பெயரால் வெளிப்படையான ஆக்கிரமிப்பில் வந்தேறியவர்கள்.
பாண்டிய அரசில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி வந்தேறிய தெலுங்கு நாயக்கர்களின் முதல் பிதாமகன் விசுவநாத நாயக்கன்.
பாண்டியநாட்டை முதலில் ராமநாதபுரம் துவங்கி மணியாச்சி வரை பதினாறு பாளையங்களாகப் பிரித்தான்.
இந்தப் பாளையங்கள் பெரும்பாலும் மறவர் பாளையங்களாக இருந்தது அவனுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.
பிறகு அதற்கும் வடுகர்கள் பாணியில் ஒரு திட்டம் தீட்டினான்.
படைவீரர்களாகவும், அரசப் பிரதிநிதிகளாகவும், வேட்டையாடவும், ஆடுமாடு மேய்க்கவும், பஞ்சத்தாலும், குறிசொல்லி பிழைக்கவும், முகமதியர்களின் அச்சுருத்தலுக்குப் பயந்தும் லக்கண்ணா, மாடண்ணா காலந்தொட்டே ஏராளமான தெலுங்கர்கள் தமிழகத்தில் குடியேறி இருந்தனர்.
அவர்களைத் தேடியெடுத்து நிலபுலன்களை வழங்கி மறவர் பாளையங்களைச் சுற்றி குடியேற்றினான்.
பின்பு பதினாறு பாளையங்களை பிரித்து 72 பாளையங்களாக்கினான்.
ஒவ்வொரு மறவர் பாளையங்களைச் சுற்றியும் குடியேறிய தெலுங்கர்களுக்கு பாளையங்கள் பிரித்து அமைக்கப்பட்டது.
இந்த தெலுங்கு பாளையங்கள் கம்பளத்தார் பாளையம் எனப்பட்டது.
இந்த 72பாளையங்களில் தேடிப்பார்த்தாலும் ‘பாஞ்சாலங்குறிச்சி’ எனும் பெயர் லேது!
பாண்டிய மன்னர்களின் காலத்தில் பாண்டியநாடு ஐம்பத்தியிரண்டு கூற்றங்களாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்டது.
இந்த ஐம்பத்தியிரண்டு கூற்றங்களிலும் லென்ஸ் வைத்துத் தேடிப் பார்த்தாலும் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரையே கானவில்லை!
அப்போ, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் 47வது பரம்பரை, 600ஆண்டுகால ஆட்சி என பொம்முநாயக்கனின் ரசிக குஞ்சுகள் பீலா விடுவது?!
முதலில் இந்த பாளையப்பட்டு முறை என்றால் என்ன?
கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள். வரி வசூல், நீதி வழங்குதல், படை வைத்துக் கொள்வது, பாதுகாவல் புரிவது இவையெல்லாம் பாளையக்காரர் பொறுப்பு.
வரும் வருவாயில் ஒரு பங்கு பாளையத்தின் நிர்வாகத்திற்கு.
மற்றொரு பங்கு நாயக்கப் பேரரசுக்கு.
இன்னொரு பங்கு பாளையக்காரருக்கு.
பாளையத்து மக்களின் உழைப்பை வரியாக வசூலித்து மூன்றில் ஒருபங்கை நெய்போட்டுச் சாப்பிட்டுத்தான் சைடுக்கொண்டை வந்தேறிகளுக்கு வயிறு ஜோதிகா போல் ஆனது போலும்!
ஆந்திரர்கள் தமிழ் மண்ணில் உல்லாசமாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட பாளையப்பட்டு முறை சீரும் சிறப்புமாக செயல்பட்டு, மேலும் பல புதிய கம்பளத்துப் பாளையங்கள் தோன்றி தமிழகம் மொட்டையடிக்கப்பட்டது.
அவை பற்றிய விபரங்கள் இணையத்திலேயே ஏராளமாக கிடைக்கிறது.
கட்டப்பொம்மன் பரம்பரையினர் 12ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே பாஞ்சாலங்குறிச்சிக்கு அதிபதிகளாய் இருந்தனர் என கட்டப்பொம்மனின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் எழுதிய நூல்களில் பெருமை பீற்றியிருக்கின்றனர்.
எனினும் வரலாற்றில் தேடிப்பார்த்தால் 18ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரே கிடையாது.
கட்டப்பொம்மன் வம்சம் எனும் பேச்சே கிடையாது.
அப்படியானால் தெலுங்கர்களால் போற்றிப் புகழப்படும் மாமன்னன் கட்டப்பொம்மனின் வீரம் மிகுந்த வம்சம் வரலாற்றில் எங்கு ஒளிந்திருந்தது?
- தொடரும்
--------------
அடுத்த பகுதி
'காட்ர கட்டபிரமையா'
Tuesday, 11 September 2018
கயவாளி கட்டபொம்மன் - 1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment