தன்பாலின சேர்க்கை
ஜேம்ஸ் பேர்ரி (James Barry) என்ற ஒரு மருத்துவர் இருந்தார்.
1795 இல் பிறந்த இவர் ராணுவ மருத்துவராக பல இடங்களில் பணிபுரிந்து 1865 இல் இறந்தார்.
இவர் இறந்தபிறகுதான் அவர் உடலால் ஒரு பெண் என்பது வெளியே தெரிந்தது.
இவர் குழந்தைப் பருவத்திற்குப் பிறகு முழுக்க ஒரு ஆணாகவே வாழ்ந்துள்ளார்.
இத்தகையோரை திருநம்பி என்று அழைப்பர்.
இதேபோல ஆணுடலில் சிக்கிக்கொண்ட பெண் திருநங்கை ஆவார்.
இவ்விரு மூன்றாம் பாலினத்தவரை தன்பாலின விரும்பிகளோடு குழப்பிக்கொள்ளக் கூடாது.
ஒரு ஆண் ஆணை விரும்புவதும் ஒரு பெண் பெண்ணை விரும்புவதும் இயற்கையானதா என்றால்,
ஆம்.
இயற்கையில் விநோதங்களில் இதுவும் ஒன்று.
விருப்பமில்லாத ஒருவருக்கு தொந்தரவு கொடுக்காதவரை தன்பாலின விரும்பிகளை நாம் வெறுக்கவேண்டிய அவசியம் இல்லை.
தமிழர்களாகிய நாம் பழமையுடன் கூடிய ஒரு முன்னேறிய சமூகமாக இருக்கவேண்டும்.
நாம் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள தடைபோடக்கூடாது.
பெண் தம்பதிகள் ஒரு ஆணிடம் விந்தணு வாங்கி செயற்கையாக கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளவும்
ஆண் தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவும் நாம் அனுமதிக்கவேண்டும்.
(இதேபோல இருபாலின விரும்பிகளும் உள்ளனர்.
இவர்கள் ஏதேனும் ஒரு பாலினத்துடன் வாழ்க்கையை நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை)
உடலால் ஆணாகப் பிறந்து மனதளவில் தன்னைப் பெண்ணாக உணரும் திருநங்கைகள் அறுவைசிகிச்சை மூலம் ஆணுறுப்பை அகற்றி பெண்ணாக மாறிக்கொள்ளவும் நாம் அனுமதி தரவேண்டும்.
உடலால் பெண்ணாகப் பிறந்து மனதளவில் ஆணாக இருப்போருக்கும் இத்தகைய உதவிகளைச் செய்யவேண்டும்.
பாலின குணாதியங்களை வைத்து வெறுப்பதோ ஒதுக்குவதோ கூடாது.
ஒருவர் தான் என்ன பாலினம் என்பதை அவரே முடிவு செய்வதுதான் இயற்கை.
அதேபோல அவர் எந்த பாலினத்தவருடன் வாழ்வது என்பதும் அவரது தனிப்பட்ட முடிவு.
அதற்காக சமூகத்திறகு எதிரான அல்லது பிறரை பாதிக்கும் பாலியல் ஆசைகள் நியாயம் என்று அர்த்தமில்லை.
படம்: ஜேம்ஸ் பேர்ரி
No comments:
Post a Comment