Tuesday 11 September 2018

கயவாளி கட்டபொம்மன் - 3

கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு

பதிவர்: அன்பெழில் (anpezhil)

பகுதி-3
கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்
---------------------
காட்ர கட்டப் பிரமையாவின் மகன் (வெறும்) கட்டப் பிரமையா.
இவனே முதலில் கட்டபொம்மன் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டவன்.

தந்தையை விட சூழ்ச்சிக்காரன். நேரடியாகப் போரிடாமல் மறைந்திருந்து தாக்குவதில் பெத்த கெட்டிக்காரன்.
(வழிப்பறி  கொள்ளையடிக்கிறப்போ நேரடியா மோதினா மொகரைய பேத்துருவாய்ங்கெல்ல..)

இந்த கெட்டிக்காரன் என்பதைத்தான் அவன்சார்ந்த கம்பளத்தார் தெலுங்கு வழக்கில் கெட்டிப்பொம்மு என அழைத்தனர்.
அது மருவி கட்டப்பொம்மன் ஆனது.
இவன் படத்தில் நாம் பார்த்த கட்டப் பொம்மனின் கொள்ளுப்பாட்டன்.

கட்டப்பொம்மன் சரி. அதென்ன வீரபாண்டிய கட்டப்பொம்மன்?

இளம் பஞ்சபாண்டியர்கள் தந்தை காலத்திலிருந்து பகைவர்களாக இல்லாவிடினும் அவர்கள் தமிழினம் என்பது ஒருபக்கம் உறுத்திக் கொண்டிருந்தது.
இன்றைக்கில்லை என்றாலும் என்றாவது ‘எம்மண்ணில் உனக்கென்ன வேலை? போடா கொல்டி’ என உதைத்து விரட்டினால் என்ன செய்வது?

தயங்கவே இல்லை. நாயக்கப் பேரரசிடம் போட்டுக் கொடுத்தான்.
வஞ்சனையால் காட்டிக்கொடுக்கப்பட்டு அம்மாவீரர்கள் அம்மண்ணில் வீழ்த்தப்பட்டார்கள்.
வீழ்த்தப்பட்ட இடம் கட்டப்பொம்மனுக்கே கிடைத்தது.
அந்த இடத்தைச் சுற்றிலும் தன் கம்பளத்து இனத்தவரை குடியேற்றினான்.
பாளையம் உருவாயிற்று.
தன் முன்னோரில் ஒருவனான பாஞ்சாலன் என்பவனின் நினைவாக அந்தப் பாளையத்திற்கு பாஞ்சாலங்குறிச்சி எனப் பெயரிட்டான்.

பாளையத்திற்கு தலைநகர் ஒன்று வேண்டுமல்லவா?
இளம்பஞ்ச பாண்டியர்கள் வீழ்த்தப்பட்ட அந்த இடம் ஜெகவீரபாண்டியபுரம் என அழைக்கப்பட்டது.
அதையே தன் தலைநகராக்கினான்.
தன் பெயரையும் ஜெகவீரபாண்டிய கட்டப் பொம்மன் என வைத்துக் கொண்டான் கட்டபிரமையா.

அக்காலத்தில் போரில் வெற்றி கொண்ட வீரனொருவன் வெல்லப்பட்ட வீரனின் பெயரை சூட்டிக் கொள்வது மரபு.
இங்கே காட்டிக்கொடுத்த முதலாம் கட்டப்பொம்மனுக்கு தமிழின வரலாற்றின் மேன்மை மிகுந்த பாண்டியர்களின் பட்டம் போய்ச்சேர்ந்தது.
இது தமிழின வரலாற்றின் மிகப்பெரும் சாபக்கேடு!

ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் என பெயரை மாற்றி வைத்துக்கொண்ட கட்ட பிரமையா 1709முதல் 1736வரை பாஞ்சாலங்குறிச்சிக்கு பாளையக்காரனாக இருந்தான்.
(அதாவது படத்தில் நாம் பார்த்த கட்டபொம்மனின் கொள்ளுப் பாட்டன்!)

இவன்காலத்தில் நாயக்கப் பேரரசு வலுவிழக்கத் துவங்கியது.
தட்டிக்கேட்க யாருமில்லா தைரியத்தில் தன் கம்பளத்தார்களைக் கொண்டு பெரும்படை நிறுவிக் கொண்டான்.
பெரும்படையுடன் பக்கத்துப் பாளையங்களில் புகுந்து கொள்ளையடிக்கத் துவங்கினான்.
மற்ற பாளையங்கள் திருப்பித் தாக்குவதில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே கோட்டை கொத்தளங்களை நிறுவிக் கொண்டான்.

அந்த நாளில் தென்பாண்டி நாட்டில் இருந்த தெலுங்குப் பாளையங்களுக்கு எல்லாம் எட்டையபுர பாளையமே தலைமை தாங்கி நின்றது.
பரம்பரை எதிரியான கட்டப் பொம்மனுக்கு அது பெருத்த அவமானமாகவே இருந்து வந்தது.
அதற்கும் ஒரு வேலை செய்தான்.

அனைத்து தெலுங்குப் பாளையத்தில் இருக்கும் கம்பளத்தாரின் குலதெய்வம் ஜக்கம்மா.
ஜக்கம்மாவுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு மிகப் பெரிய கோவில் எடுத்தான்.
அந்தக் கோவிலுக்கு தலைமைப் பூசாரியாகவும் தானே ஆகினான்.
ஜக்கம்மாவை வணங்க வருபவர்கள் பூசாரியின் காலிலும் விழுந்து வணங்கலாகினர்.
தெலுங்குப் பாளையங்களின் தலைமையும் தானாக கட்டப்பொம்மனுக்கு வந்து சேர்ந்தது.

அடித்த கொள்ளை, செய்த ஃப்ராடுத்தனம் அத்தனையையும் அந்த ஜக்கம்மா கோவிலால் மறைந்து நின்றது.

திருமலை நாயக்கன் பரம்பரை நாங்கள்..
வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை நாங்கள்..
தெலுங்கு வெண்ணைவெட்டிகள் பக்கங்களில் பார்த்தீர்களானால் இதே ரீதியில்தான் ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரை வசனங்களால் நிரப்பப் பட்டிருக்கும்.
சரி. அப்பேர்ப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் பரம்பரை பெருமை எத்தகையது?

நாயக்க மன்னர்கள் வலுவற்று இருந்ததை அறிந்த பல பாளையங்கள் வரி செலுத்தாமல் தவணை சொல்லி தட்டிக்கழித்து வந்தன.
தென்பாண்டி நாட்டு மறவர் பாளையங்கள் ஒரு படி மேலே  போய் "போடா வெண்ணை" என நாயக்க மேலாண்மையை உதறித் தள்ளிவிட்டு சுதந்திரமாக ஆட்சி நடத்தினர்.

இந்த நிலையில் ஆற்காடு நவாபின் ஆதிக்கம் துவங்கியது. ஆற்காடு நவாபின் பிரதிநிதியாக வரி வசூலிக்க வந்த சாதிக் கானுக்கு கப்பம் தர தென்பகுதி பாளையக்காரர்கள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் ஆற்காடு நவாபின் பிரதிநிதி சாதிக்கானுக்கு அபயகரம் நீட்டிய ‘தன்மானச்சிங்கம்’ யார் தெரியுமா?
பேண்ட பரம்பரையின் முன்னோடி ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்தான்!

பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனான முதலாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் தன் படைகளைக் கொண்டே மற்ற பாளையக்காரர்களிடம் வரி வசூலித்து சாதிக்கானுக்கு அளித்தான்.

இந்த மாமா வேலைக்கு பரிசாக கட்டபொம்மனுக்கு சாதிக்கான் அளித்த வெகுமதி என்ன தெரியுமா?

“இனிமேல் வசூலாகும் கப்பத்தொகையில் ஆறில் ஒரு பங்கை நீயே வைத்துக்கொண்டு மீதி ஐந்து பங்கை இரண்டு தவணைகளில் அனுப்பி வா!”
என்று கூறி ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் கழுத்தில் சாதிக் கான் ஒரு விலை உயர்ந்த மணிமாலையை அணிவித்தானாம்.
அத்துடன் அவனுக்கு 'தென்னாட்டின் சின்ன நவாபு' என்ற பட்டத்தையும் அளித்தானாம்!

இவைகள் எல்லாம் தெலுங்கர்களின் எதிர்ப்பாளர்கள் எழுதிய கட்டுக்கதைகள் அல்ல.
கட்டபொம்மனைப் புகழ்ந்து காவியமாக படைக்கப்பட்ட ‘வீரபாண்டியம்‘ எனும் நூலில் உள்ளவை!
---------------
அடுத்த பகுதி
'பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன்'

No comments:

Post a Comment