Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Saturday, 15 February 2025

நீ எவனுக்கு அப்பா

நீ எவனுக்கு அப்பா?!

 பெற்றவனைத் தவிர தமிழர்கள் யாரையும் "அப்பா" என்று அழைப்பதில்லை!
 அதனால்தான் பெரியப்பா, சித்தப்பா போன்ற சொற்கள் தோன்றின! 
 பெரியமாமா சின்னமாமா என்று முறைகள் கிடையாது!
 ஏனென்றால் ஒரு குழந்தைக்கு எத்தனை மாமாக்கள் வேண்டுமானும் இருக்கலாம்!
ஆனால் அப்பா ஒருவன்தான்!
இதுவே ஆண்பாலுக்கும் பொருந்தும்! 
அதாவது சித்தி, பெரியம்மா உண்டு!
சின்னத்தை, பெரியத்தை கிடையாது!
ஆனால் சிலரை பின்னொட்டாக "ம்மா" என்று மரியாதையாக அழைக்கும் வழக்கம் உள்ளது! 
 வாங்கம்மா போங்கம்மா என்றோ டீச்சரம்மா, கலெக்டரம்மா என்றோ கூட அழைக்கலாம்.
அதேபோலத்தான் "ப்பா" என்பதும்.
 (இந்த "அம்மா" வேறு என்று தொல்காப்பியம் கூறுகிறது). 
 நேரடியாக "அம்மா" என்றோ "அப்பா" என்றோ பெற்றோரைத் தவிர எவரையும் அழைப்பது தமிழர் வழக்கம் இல்லை! 
 
 

Thursday, 30 August 2018

பெறாத பெற்றோர்

பெறாத பெற்றோர்

நேற்று உறவினர்கள் கூடி  எங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று எங்கள் மகளுக்கு மொட்டை போட்டு தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தினோம்.
சர்க்கரைப் பொங்கலிட்டு அனைவருக்கும் அளித்து உண்டோம்.
தமிழர் பண்பாட்டில் காதுகுத்து சடங்கானது மிக முக்கியமான ஒன்றாகும்.

இது கிறித்துவர்களின் ஞானஸ்நானம் (baptism),
யூதர்களின் பிரிட் மிலா (brit milah) மற்றும்
சீனர்களின் காண் டீ (gan die) அல்லது கை மா (kai ma) ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.

அதாவது ஒரு குழுந்தைக்கு பெற்றோருக்கு அடுத்த நிலையில் ஒரு உறவை நியமிப்பது.
அவர் அந்த குழந்தையின் "பெறாத  பெற்றோர்" ஆவார்.

தமிழர் பண்பாட்டில் இந்த உறவு "தாய்மாமன்" ஆவார்.

பெற்றோருக்கு அடுத்து ஒரு குழந்தையைக் காக்கும் பொறுப்பு தாய்மாமனுடைது ஆகும்.

தாய்மாமனிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து சுற்றத்திற்கு அதனை அறிவிக்கும் சடங்குதான் தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தும் விழா.

கிறித்துவ நாடுகளில் குழந்தைக்கு ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு அளித்து குழந்தையின் god father ஆக ஒருவர் நியமிக்கப்படுவார். (பெண் என்றால் god mother).
இந்த ஞானத் தந்தை குடும்ப உறுப்பினராகவோ அல்லது குடும்ப நண்பராகவோ இருக்கலாம்.

யூத மத வழக்கத்தில் சன்டெக் (santek) என்று அழைக்கப்படும் "பெறாத பெற்றோர்" மடியில் வைத்து குழந்தையின் ஆணுறுப்பின் முன்தோல் அகற்றும் சடங்கு நடக்கிறது.

சீனரில் அனைத்து மதத்தினரும் பெறாத பெற்றோர் நியமிக்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.
ஆனால் பெரும்பாலும் தாத்தா பாட்டி அல்லது வயது முதிர்ந்தோரை நியமிக்கின்றனர்.

நமது வளைகாப்பு சடங்கு ஐரோப்பிய நாடுகளில் Baby shower எனும் சடங்குடன் ஒத்துப் போகிறது என்பது கூடுதல் தகவல்.

நகர்ப்புறங்களின் மறைந்துவரும் இத்தகைய சடங்குகளை அதன் முக்கியத்துவம் உணர்ந்து அழியாமல் காப்பது நமது கடமையாகும்.

Wednesday, 1 August 2018

அம்பானிக்கு சவால்விடும் கருணாநிதி குடும்பம்

அம்பானிக்கு சவால்விடும் கருணாநிதி குடும்பம்

2011 இல் நேர்மையான அரசியல்வாதியாக அறியப்படும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் 'த அதர் சைடு’ (The Other Side) எனும் பத்திரிக்கை "கருணாநிதி குடும்பத்தின்" சொத்து பட்டியலை வெளியிட்டது.

அதை தமிழில் விகடன் வெளியிட்டது.

அது வருமாறு,

(1) 6,124 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட "கருணாநிதியின்" கோ பாலபுரத்து வீடு - மதிப்பு
5 கோடி.

(2) "முரசொலி மாறனின்" கோபாலபுரத்து வீடு - மதிப்பு
5 கோடி.

(3) 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட "முரசொலி செல்வத்தின்" கோபாலபுரத்து வீடு - மதிப்பு
2 கோடி.

(4) கோபாலபுரத்தில் "சொர்ணத்தின்" வீடு - மதிப்பு
4 கோடி.

(5) கோபாலபுரத்தில் "மு.க.முத்துவின்" வீடு - மதிப்பு
2 கோடி.

(6) கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு
5 கோடி.

(7) மகள் "செல்வி, எழிலரசியின்" கோபாலபுரம் வீடு - மதிப்பு
2 கோடி.

(8) சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் "ராஜாத்தி அம்மாளின்" வீட்டு மதிப்பு -
12 கோடி.

(9) மண்ணிவாக்கம் கிராமத்தில் "ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும்" இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு
4.5 கோடி.

(10) ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் "ராஜாத்தி அம்மாளின்" ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு -
10 கோடி.

(11) 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் "மு.க.ஸ்டாலின்" வேளச்சேரி வீட்டு மதிப்பு -
2 கோடி.

(12) நுங்கம்பாக்கத்தில் இருக்கும் "உதயநிதி ஸ்டாலினின்" ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு -
2 கோடி.

(13) சென்னை போட் கிளப்பில் இருக்கும் "கலாநிதி மாறனின்" 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் -
100 கோடி.

(14) கொட்டிவாக்கத்தில் இருக்கும் "மாறன் சகோதரர்களின்" பண்ணை வீட்டின் மதிப்பு -
10 கோடி.

(15) போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு -
2 கோடி.

(16) 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு -
20 கோடி.

(17) மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு -
5 கோடி.

(18) சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு -
100 கோடி.

(19) கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு -
50 கோடி.

(20) பெங்களூருவில் இருக்கும் "செல்வத்தின்" அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -
4 கோடி.

(21) பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் "செல்வியின்" ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -
80 கோடி

(22) "மாறன் சகோதரர்களின்" 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -
120 கோடி.

(23) பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு -
108 கோடி.

(24) பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் "மு.க.தமிழரசுவின்" 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு -
48 கோடி.

(25) அந்தியூரில் இருக்கும் "மு.க.தமிழரசுவின்" 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு
30 லட்சம்.

(26) புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு
50 கோடி.

(27) எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு
தெரியவில்லை.

(28) தினகரன் பப்ளிகேஷன்ஸ்  மதிப்பு
தெரியவில்லை.

(29) சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் மதிப்பு
தெரியவில்லை

(30) முரசொலி அறக்கட்டளை மதிப்பு
தெரியவில்லை

(31) ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது.
இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக "கலாநிதி மாறனே" பிரகடனம் செய்திருந்தார்.

(32) மதுரை, மாடக்குளம் கிராமத்தில் "தயாளு அம்மாள்" அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு
தெரியவில்லை.

(33) தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் "கருணாநிதிக்கு" இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு -
தெரியவில்லை.

(34) திருவள்ளூர் மாவட்டத்தில் "தயாளு அம்மாளுக்கு" இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு -
1 கோடி.

(35) "துர்கா ஸ்டாலினுக்கு" திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
60 லட்சம்

(36) மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் "அழகிரியின்" 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு
2 கோடி.

(37) மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு -
2 கோடி.

(38) மதுரை தல்லாகுளத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு -
5 கோடி.

(39) மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு -
40 லட்சம்.

(40) மதுரை திருப்பரங்குன்றத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(41) மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு -
1 கோடி.

(42) மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு
2 கோடி.

(43) மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள "அழகிரி" வீட்டின் மதிப்பு -
2 கோடி.

(44) மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு -
60 லட்சம்.

(45) மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
20 லட்சம்.

(46) மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(47) மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(48) கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் "காந்தி அழகிரியின்" பண்ணை வீட்டு மதிப்பு -
5 கோடி.

(49) மாடக்குளம் கிராமத்தில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(50) சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு -
2.5 கோடி.

(51) சென்னை திருவான்மியூரில் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
3 கோடி.

(52) மதுரை சத்ய சாய்நகரில் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு -
3 கோடி.

(53) சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் "தயாநிதி அழகிரியின்" அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -
1 கோடி.

(54) சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு -
2 கோடி.

(55) மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் "அழகிரிக்கு" சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு -
தெரியவில்லை.

(56) மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் "தயாநிதி அழகிரியின்" 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு -
தெரியவில்லை.

(57) மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு -
1 கோடி.

(58) சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271- ஏ) மதிப்பு -
5 கோடி.
இது "கனிமொழிக்குச்" சொந்தமானது.

(59) 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் "கனிமொழிக்கு" இருக்கும் பங்கின் மதிப்பு -
20 கோடி.

(60) கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -
30 கோடி.

(61) ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு -
50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

(62) கலைஞர் டி.வி-யில் "தயாளு அம்மாளுக்கு" இருக்கும் பங்குகளின் மதிப்பு -
90 கோடி.

(63) அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது -மதிப்பு
தெரியவில்லை

(64) கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது -மதிப்பு
தெரியவில்லை.

(65) தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

(66) எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் "மாறன் சகோதரர்​கள்" உடையதே.

(67) தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - "மாறனின் மகள் அன்புக்கரசிக்கு" சொந்தமானது.

(68) சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை "மாறன் சகோதரர்கள்" கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

(69) கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து "கனிமொழிக்கு" சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்

- இவ்வாறு அந்தப் பட்டியல் உள்ளது.

நன்றி: விகடன் (10.08.2011)

இது 2011 ல் உள்ள நிலைதான்.
அதுவும் கணக்கில் வரும் சொத்துக்கள்.
மதிப்பு 'தெரியவில்லை' என்று உள்ள சொத்துக்களுக்கு 1 கோடி மதிப்பிட்டாலும் 14,300 கோடி வரை வருகிறது.

கணக்கில் வராத கறுப்புப் பணம் எப்படியும் பத்துமடங்கு வரை இருக்கலாம்.
அதாவது 1.4 லட்சம் கோடி.

(2008 ல் நடந்த 2ஜி ஊழல் இதில் சேர்க்கப்படவில்லை.
2010 ல் நீரா ராடியா ஒலிநாடா வெளியான பிறகே அது கவனம் பெற்றது.
அதையும் சேர்த்தால் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி சேர்த்து 1.6 லட்சம் கோடி வரும்)

இதே ஆண்டு 'உலகின் பணக்கார இந்தியன்' என்று முகேஷ் அம்பானி அறியப்பட்டார்.
அப்போது அவரது சொத்துமதிப்பு 1.2 லட்சம் கோடி கூட இல்லை.



Saturday, 14 July 2018

தாய்மாமன் கணவனாகலாமா?

தாய்மாமன் கணவனாகலாமா?

'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தில் அக்கா மகளை மணம் செய்ய மறுக்கும் கதாநாயகனின் குடும்பத்தில் நடக்கும் பாசப் போராட்டத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால், அக்காவின் மகளைத் திருமணம் செய்வது தமிழரின் பண்பாடே இல்லை.

அவ்வாறு செய்தால் உறவுமுறை குழம்பிப் போகும்.

உறவுமுறையில் அத்தை அல்லது மாமன் முறையில் திருமணம் செய்வதுதான் தமிழரது பண்பாடு.

ஏனப்படி?!

நாம் பழமையான இனம்.
அப்போது மக்கட்தொகை மிகவும் குறைவு.
அதனால் உறவுமுறைக்குள் திருமணம் செய்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

ஒரு ஆண்குழந்தையும் ஒரு பெண்குழந்தையும் ஒன்றாக ஒரே வீட்டில் வளர்ந்தால் அவர்களுக்குள் அண்ணன்-தங்கை உணர்வுதான் ஏற்படும்.
இதுதான் இயற்கை விதி.
(மேற்கண்ட திரைப்படத்திலும் இதைக் கூறியுள்ளனர்).

ஒரு எடுத்துக்காட்டு கூற முடியும்.
மேலை நாட்டிலே தகப்பன் பெயரே தெரியாத ஒருத்தி தன் தந்தையையே காதலித்து பிறகு அந்த உண்மை தெரியப்பெற்று மனநல மருத்துவர்களிடம் செல்கிறாள்.
அவர்கள் அவ்விருவரையும் ஒரே வீட்டில் தந்தையும் மகளுமாக சில காலம் வாழச் சொல்கிறார்கள்.
இதன் மூலம் பிரச்சனை சரிசெய்யப்பட்டதை டிஸ்கவரியில் காட்டினர்.

தமிழரின் முறைப்படி அத்தையும் மாமியாரும் ஒரே முறை.
அங்கே சித்தியின் கணவருக்கும் தந்தையின் தம்பிக்குமே வெவ்வேறு உறவுமுறைப் பெயர்கள்.

வடக்கே அவ்வாறு கிடையாது.
மலையாளிகளிலும் அவ்வாறு கிடையாது.
(ஆனால் சிங்களவர் நமது முறையை பின்பற்றுகின்றனர்)

வடயிந்தியாவில் உறவுமுறைக்குள் திருமணம் செய்வது இல்லை.
அங்கே கோத்திரம் என்றொரு முறை உள்ளது.
அது தந்தை வழி வருவது.
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வதில்லை.
வெவ்வேறு கோத்திரம் என்றாலும் மணமக்கள் இருவரின் தாத்தா வரை ரத்தசொந்தம் இருக்கக்கூடாது என்பது விதி.
அதாவது அவர்கள் பழமையான இனம் இல்லை.
மக்கட்தொகை ஓரளவு பெருகிய நிலையில் உருவான இனம் ஆதலால் இப்படி செய்யமுடிகிறது.
(பிராமணர்கள் கோத்திர முறை அவர்களது பெண்ணெடுத்துப் பெண்கொடுக்கும் 'மாட்டுப்பெண்' அதாவது 'மாற்றுப்பெண்' முறையால் ஏற்பட்டிருக்கலாம்.
மேலும் சிறுபான்மை சாதி என்பதால் நெருங்கிய உறவினைத் தவிர்க்க கோத்திர முறையை ஏற்றிருக்கலாம்)

அரேபியர் போன்ற பாலைவன இனங்களில் மக்கட்தொகை மிகவும் குறைவு.
எனவே அங்கே சித்தப்பா பெரியப்பா மாமா என எந்த குடும்பத்திலும் மணம் செய்கிறார்கள்.

ஐரோப்பாவில் உறவுமுறைக்குள் திருமணம் செய்வது ஆங்காங்கே நடந்துள்ளது.
சிறந்த எடுத்துக்காட்டு ஹிட்லர் குடும்பம்.
அவரது தந்தை அவரது தாயின் தாய்மாமன் ஆவார்.

தமிழ்ப் பண்பாட்டில் தாய்மாமன் தந்தைக்கு அடுத்த நிலையை வகிக்கிறார்.

தமிழகத்தில் 50 ஆண்டுகள் முன்புவரை கூட பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களே இருந்தன.
அண்ணனும் தம்பியும் ஒரே வீட்டிலேயே இருந்தார்கள்.
அவர்களுடைய பிள்ளைகள் ஒன்றாகவே வளர்ந்தன.
அவர்களுக்குள் உடன்பிறப்பு என்கிற எண்ணமே மேலிடும்.

பெண்கள் பெரும்பாலும் வேறொரு வீட்டிற்கு வாழ்க்கைப் பட்டிருப்பர்.
அவளது குழந்தைகள் அவள் பிறந்த வீட்டிலிருந்து பிரிந்தே வளர்வதால் பிற்பாடு பிறந்த வீட்டுடன் சம்பந்தம் செய்துகொள்ளத் தடை இல்லை.

சரி சித்தி மற்றும் பெரியம்மா கூட வேறு ஊரில்தான் வாழ்க்கைப் பட்டிருப்பர்.
அவர்கள் பிள்ளைகளும் எப்படி உடன்பிறப்பு ஆயினர்?

அப்போது அக்கா-தங்கை இருவரும் ஒரே வீட்டில் அல்லது ஒரே ஆணுக்கு வாழ்க்கைப்பட்டது  பரவலாக நடந்தது.

அப்போதெல்லாம் ஆண்கள் மக்கட்தொகை குறைவு.
பெண்கள் அதிகம்.
(காரணம் அன்றைய ஆபத்து நிறைந்த வாழ்க்கை மற்றும் போர் போன்ற காரணங்களால் ஆண்கள் அடிக்கடி இறந்தனர்.
இன்றும்கூட ஆண்களுக்கே அதிகம் இதயவலி வருகிறது.
இன்றும் பெண்களின் சராசரி ஆயுளே ஆண்களை விட அதிகம்)
எனவே இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்வது சர்வசாதாரணம்.

எனவே அக்கா-தங்கை பெற்ற பிள்ளைகளும் ஒரே வீட்டில் வளர்ந்தனர்.

அதனால் பெரியவர்கள் திருமண விதிகளை வகுக்கும்போது உடன்பிறந்தோர் ஒரே பாலினம் என்றால் அவர்கள் சம்பந்தம் செய்துகொள்ள தடை விதித்தனர்.
அதுவே இன்றும் தொடர்கிறது.

தெலுங்கரில் பிராமணரும் தேவதாசிகளும் (தேவரடியார் அல்ல) கலந்து ஒரு சாதி தோன்றியது.

இவர்களின் தொழில் விபச்சாரம்.
இவர்கள் தமது குடும்ப்ப் பெண்கள் மூலம் பகலில் ஆடலும் இரவில் விபச்சாரமும் செய்துவந்தனர்.
இச்சாதியில் உறவுமுறை என்றெல்லாம் எதுவுமே கிடையாது.
முதலில் சகோதரியை வைத்து விபச்சாரத் தொழிலைத் தொடங்கும் ஆண்கள்  பிறகு அவளது மகளை வைத்து விபச்சாரம் செய்தனர்.
அதற்கு வசதியாக அவளைத் திருமணம் செய்துகொண்டனர்.
இப்படி ஏற்பட்டதே அக்கா மகளை மணமுடித்தல் முறை.
பிற்பாடு இவர்கள் பதவி, அதிகாரம், சொத்து என செல்வாக்கு பெற்றனர் (இன்றும் அவ்வாறே).

இவர்களைப் பார்த்து தமிழரும் முறை தவறி அக்கா மகளை மணமுடிக்கத் தொடங்கினர்.
(எல்லா சாதிகளும் செய்வதில்லை.
சில சாதிகளில் இது சமீப காலமாகத்தான் நடக்கிறது)

விஞ்ஞானம் வளரத் தொடங்கியபோது உறவுமுறையில் திருமணம் செய்வது சரியா தவறா என்ற விவாதம் உலகம் முழுவதும் எழுந்தது.
இன்றும் அமெரிக்க மாகாணங்களில் பாதி உறவுமுறைத் திருமணங்களை அங்கீகரித்தும் பாதி தடைசெய்தும் சட்டமியற்றியுள்ளன.

நெருங்கிய உறவில் திருமணம் செய்வது பலவீனமான சந்ததியைத் தோற்றுவிக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.

தமிழர்கள் தொடக்கத்திலிருந்தே உறவுமுறையில் திருமணம் செய்துவந்துள்ளனர்.
உறவுமுறையில் மணமுடிக்க இயலாத சூழலில்தான் வெளியே பெண் எடுக்கின்றனர்.
  தமிழர்களின் இந்த பண்பாடு ஒற்றுமையான, நிலைத்த, "குடும்பங்களின் கூட்டு அமைப்பிற்கு" ஆதாரமாக உள்ளது.
சொந்தம் விட்டுப் போகாமல் இருக்கவும் சொத்து கைமாறாமல் இருக்கவும் அடிப்படையாக உள்ளது.

ஏதேனும் ஒரு குறையுடன் இருந்தாலும் வாழ்க்கைத் துணை கிடைக்க நமது பண்பாடு இவ்வாறு வழிசெய்துள்ளது.

நமது பண்பாட்டில் முறைப்பெண் மீதான முதல் உரிமை ஒரு ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முறையுள்ள பெண்ணை (சில சமயம் ஆணை) தூக்கிச்சென்று மணம் செய்துகொள்வதும் தவறாகப் பார்க்கப்பட்டதில்லை.

ரத்த சொந்தத்தில் திருமணம் செய்வது குறைகளைத் தோற்றுவிக்கும் என்ற கருத்து உண்மை என்றால் மற்ற இனங்களை விட தமிழர்கள் பலவீனமாகவும் குறையுடனும் இருக்கவேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லை.

சொந்தத்தில் திருமணம் செய்வதால் பரம்பரை நோய்கள் ஏற்படும் வாய்ப்பு 5% (மட்டுமே) அதிகம் என்று தெரியவருகிறது.
(ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன்).

எகிப்து மற்றும் ஐரோப்பாவில் தனது ரத்தம் தூய்மையாக இருக்கவேண்டும் என்று ஒரே குடும்பத்தில் உடன்பிறப்புகளையே திருமணம் செய்து செய்து ஊனமாகி மனநலம் குன்றி அழிந்துபோன அரச பரம்பரைகளும் உண்டு.

நமக்கான நாடு அமையும்போது நமது முறைப்படி உறவுமுறையில் திருமணம் செய்வது பற்றியும் விரிவாக ஆராயவேண்டும்.

பாதிப்பு ஏற்படும் என்றால் இப்பழங்கால முறையைக் கைவிடுவதோடு 'ஒன்றுவிட்ட முறைமக்களுக்கு' முதல் உரிமை வழங்கவேண்டும்.
திருமணம் செய்யும் உறவுமுறைகளைச் சட்டமாக்க வேண்டும்.

அதுவரை அனைவரும் சொந்த சகோதரியின் மகளை மணமுடிக்கும் முறைதவறிய செயலைத் தவிர்க்கவேண்டும்.

இசுலாமியத் தமிழரும் சித்தி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தில் சம்பந்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

Saturday, 23 July 2016

இல்லற வாழ்க்கை பாதுகாப்பானதா?

பலரும் மக்கள் பிரச்சனையில் தலையிடாமல் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று இருப்பதை பாதுகாப்பாக நினைக்கிறார்கள்.

நீங்கள் இல்லறத்தில் ஈடுபட்டு பிள்ளைபெற்று அதை சீராட்டி பாராட்டி வளர்த்தாலும்

நாளை அது உங்களை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விடாது என்று எந்த உறுதியும் இல்லை
சொந்த குருதி உறவுகள் கூட உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள் என்று உறுதியாக நம்பமுடியாதபோது மக்களும் அவ்வாறுதானே