தமிழை ஒழிக்கும் மும்மொழி கொள்கை
மத்திய அரசு என்ன மாதிரியான கல்விக் கொள்கையைக் கொண்டுவர நினைக்கிறது என்பதை ஏற்கனவே மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைக் கவனித்தால் விளங்கும்.
தமிழகத்தில் 49 கேந்திரிய பள்ளிகள் இயங்குகின்றன.
இதில் 109 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்களும், 0 தமிழ் ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.
ஆம்! இந்த கேந்திரிய பள்ளிகளில் தமிழ் பாடமோ, தமிழ் ஆசிரியர்களோ கிடையாது!
சமஸ்கிருதம் கட்டாயம்!
28.01.2021 தேதியின்படி பெறப்பட்ட தகவலில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை இந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாய மொழி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழி பாடம் கட்டாயம் இல்லை என்றும், தமிழ்நாட்டில் 49 பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாய மொழியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் மொழியை கொண்டு கற்பிக்கும் ஒரு பள்ளி கூட இல்லை எனவும், சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழை தேர்வு செய்ய முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழியே இல்லாத பள்ளிக்கு எதற்கு தமிழ் ஆசிரியர்கள் என்பது போன்று, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே கிடையாது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 109 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என தகவல் இடம்பெற்றுள்ளது.
(இதுபற்றி திமுக எம்.எல்.ஏ எழிலன் நாகநாதன் ஆதரத்துடன் பேசியுள்ளார்.
திமுக-வின் ஐடிவிங்க் இதற்கான தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது)
மும்மொழி என்பது மூன்றாவதாக ஏதாவது ஒரு இந்திய மொழி என்கிற போர்வையில் இந்தியைத் திணிக்கும் நோக்கம் கொண்டது!
2020 இல் இதைக் கட்டாயமாக்கிய போது திமுக போதுமான எதிர்ப்பையும் காட்டவில்லை!
அதன் பிறகும் சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை!
இப்போது கல்வி நிதியை தரமுடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய பிறகு தூங்கிக் கொண்டிருந்த திமுக விழித்துக்கொண்டு அறிக்கை போர் நடத்துகிறது!
No comments:
Post a Comment