Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Saturday, 29 June 2024

ஸ்டாம்ப் சைஸ் கோவணம் இந்த கப்

 


ஸ்டாம்ப் சைஸ் கோவணம்

 

 இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஹிந்தியா சாதித்ததை இங்கே பாருங்கள்.

கீ....ழே 58 வது இடம்!

 தென்னாப்பிரிக்கா எவ்வளவோ மேல்!

விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாத ஹிந்தியா இந்த கிரிக்கெட் என்கிற கேலிக்கூத்தில் வென்றது ஒரு ஸ்டாம்ப் ஐ வைத்து நிர்வாணத்தை மறைக்கும் முயற்சி!

 இந்த எழவிலும் 18 ஆண்டு தோல்விக்கு பிறகு வெற்றி!

இனியாவது சோம்பேறிகளின் பொழுதுபோக்கான கிரிக்கெட் பார்ட்டியில் கொட்டும் பணத்தை உண்மையான ஆரோக்கியமான விளையாட்டுக்கு கொடுத்தால் உலக அரங்கில் மானம் மிஞ்சும்! 

 ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் அரங்கில் பாரத மாதா பல நாடுகளால் மானபங்கம் அடைவதை ஹிந்தியர்கள் இனியாவது தடுப்பார்களா?! 

 இல்லை நடிகர் கோலியை நினைத்துக் கொண்டு கண்மூடி கவுந்து படுத்து விடுவார்களா?! 

 

Sunday, 19 November 2023

கிரிக்கெட் கார்ப்பரேட்

கிரிக்கெட் கார்ப்பரேட்

 இந்த உலகக் கோப்பை போன்ற பிரபல கிரிக்கெட் போட்டித் தொடர்களை நடத்துவது international cricket council அதாவது ICC.
 அன்று உலக மக்களைச் சுரண்டி பணம் கொழுத்துப் போன ஆங்கிலேயர்கள் அதை எங்கே செலவு செய்வது என்று தெரியாமல் திரிந்தபோது ஒரு வரப் பிரசாதமாக வந்தது கிரிக்கெட்.
 கிரிக்கெட் என்பது வெள்ளைக்காரர்கள் அரை அம்மணமாக கடற்கரையில் சூரியக் குளியல் போடும்போது பொழுதுபோக்குக்காக விளையாடுவது.
 அப்படி கி.பி. 1900 களில் இல் ஆஸ்திரேலிய கடற்கரையில் அம்மணமாக ஆடிக்கொண்டிருந்தான் ஒரு ஆங்கிலேய வெள்ளைக்காரன். 
 இவனது பொழுதுபோக்கு அவ்வப்போது டூர் போய் இங்கிலாந்திலும் தென்னாப்பிரிக்காவிலும் இருந்த இவனது அங்காளி பங்காளி ஆங்கிலேய வெள்ளைக் காரர்களுடன்  கடற்கரையில் குத்தாட்டம் போடுவது.
 அப்போது இவர்களுக்கு ஒரு யோசனை வந்தது. கி.பி.1900 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் இல் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இதில் பிரெஞ்சுப் பேரரசும் ஆங்கிலப் பேரரசும் மோதின. ஒரே ஒரு மேட்ச் தான் நடந்தது. இதெல்லாம் ஒரு விளையாட்டா என்று காறித் துப்பி வெளியே அனுப்பிவிட்டது ஒலிம்பிக் நிர்வாகம். எனவே இவர்கள் ஒலிம்பிக் போல நடத்த ஆசைப் பட்டனர்.
 இந்த யோசனையில் இம்மூன்று நண்பர் குழுவும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று இடங்களில் கிளப்களை ஆரம்பித்தனர்.
  இந்த மூன்று கிரிக்கெட் கிளப்களும் 1907 இல் ஜாலியாக டூர் அடித்து இணைந்து ஆட்டம் போட்டு அப்படி உருவானது தான் இந்த ICC.
 இப்படி ஆங்கிலேயர் ஆண்ட 6 நாடுகளில் பணம் கொழுத்த வெள்ளைக்கார கூட்டம் ஒவ்வொரு கிளப்களைத் தொடங்கி இதில் இணைந்தனர்.
 இரவில் கடற்கரையில் ஆண்களும் பெண்களுமாக கூடி விடியவிடிய உல்லாசலாக இருந்துவிட்டு பகலில் சூரியக் குளியல் எடுக்கும்போது சும்மா பந்தைத் தட்டி விளையாடுவதுதான் கிரிக்கெட்.
வெயில் நன்றாக உடலில் படும் மேல்வலியாமல் இருக்கும். பெரிதாக ரூல்ஸ் கூட கிடையாது.
கி.பி.1721 இல் இந்தியாவில் முதல் கிரிக்கெட் போட்டி குஜராத் கடற்கரை (கம்பாத்) இல் ஆங்கிலேயருக்கு இடையே நடந்தது.
 காலப் போக்கில் ஆங்கிலேய அடிவருடிகளான ஜமீன்தார்களும் வியாபாரிகளும் இதில் இணைந்தனர். பந்து பொறுக்கிப் போட்டு கடைசி பேட்ஸ்மேனாக ஒப்புக்கு சப்பானியாக ஆகி முதல் இந்தியர் (சி.கே.நாயுடு) கேப்டன் பதவிக்கு வரவே 1932 ஆம் ஆண்டு ஆகிவிட்டது. 
 ஆங்கிலப் பேரரசு வீழ்ந்த பிறகும் அது ஆண்ட நாடுகளில் இந்த கிரிக்கெட் கும்மாள கூட்டணி தொடர்ந்தது. ஆனால் இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு உருவாகி ஆரோக்கியமான விளையாட்டான ஹாக்கி வளர்ச்சி பெற்றது.
 இதை முறியடிக்க 1975 இல் இவர்கள் உலகக் கோப்பை எனும் தொடரை ஆரம்பித்தனர்.
 இதுவும் இங்கிலாந்தில் தான் நடந்தது.
 இதில் ஆங்கிலேயர் மற்றும் அவர்கள் அடக்கியாண்ட 8 நாடுகள் (Australia, England, India, New Zealand, Pakistan , the West Indies, Sri Lanka and East Africa ) கலந்துகொண்டன.
 (ஆனால் பாருங்கள் 2019 இல் தான் இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்கிறது! அதுவும் மிகவும் கடினப்பட்டு மயிரிழையில்! இது செட்டிங் இல்லை என்று நம்ப வேண்டுமாம்!)
 இன்றும் கிரிக்கெட் என்பது 3 கிளப் களின் பண விளையாட்டு.
 இங்கிலாந்தின் ECB, ஆஸ்திரேலியாவின் CA, இந்தியாவின் BCCI.
12 நிரந்தர உறுப்பினர்கள் 90 க்கும் மேற்பட்ட தற்காலிக உறுப்பினர்கள் இருந்தாலும் எல்லாரும் ஒப்புக்கு சப்பானிதான். இந்த 3 லும் ஏறத்தாழ முக்கால்வாசி வருமானம் bcci மூலம் வருகிறது. ஆனால் bcci க்கு கால்வாசி நிதிதான் ஒதுக்கப்படுகிறது.
 இது தமிழகத்தை மத்திய அரசு சுரண்டும் அதே மாடல்! 

 2014 இல்  ICC இன் மொத்த வருமானம் 250 கோடி டாலர். இதில் bcci இன் பங்கு 57 கோடி டாலர் அதாவது 22.8%. 
 சில ஆண்டுகளுக்கு முன் பிறருக்கும் அதிக பங்கிட்டு bcci க்கு கிடைப்பதை 11% ஆக குறைத்தனர். ஆனால் bcci விடவில்லை. அது மட்டுமின்றி இந்திய அரசின் முழு ஆதரவுடன் புது பாலிசி கொண்டு வரப்பட்டு இந்த ஆண்டு 40% கிரிக்கெட் வருமானம் bcci வசம் வந்துவிடும்.
  இதன் மூலம் 2024-2027 இல் bcci ஆண்டுக்கு 60 கோடி டாலர் சம்பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது ஆண்டுக்கு ஏறத்தாழ 5000 கோடி ரூபாய்.

முன்பு 23% தற்போது 40% என்பது icc தனது பணத்தில் bcci க்கு கொடுப்பது.
உண்மையில் icc க்கு bcci சம்பாதித்து கொடுப்பது ஏறத்தாழ 70%.
 ஆம்! கிரிக்கெட்டில் இந்தியர்கள் கொட்டும் பணம் இங்கிலாந்துக்கு சென்று அதில் 3 இல் 1 பங்குதான் 2023 வரை திரும்பி வந்துள்ளது.
 இனிதான் அது 2 ல் 1 பங்கு ஆகவுள்ளது.
(மீதி பணம் பிற நாடுகளில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பயன்படுத்தப் படுகிறதாம்).
 அதாவது இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் எந்த பெரிய பங்களிப்பும் செய்யாமல் நல்ல லாபம் பார்க்கின்றனர்.
 கிரிக்கெட் பிரபலமாகாத நாடுகளில் இந்தியர் பணத்தில் அது விளையாடப்படும்.
 ஆக இந்த சூதாட்டத்தில் முழுக்க நஷ்டம் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமே!

 2007 இல் 16, 2011 இல் 14, தற்போது 10 நாடுகளைச் சேர்ந்த அணிகள் மட்டுமே ODI உலக கோப்பை விளையாடி உள்ளன. 
 உலக வல்லரசுகள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக அல்ல பொழுதுபோக்காக கூட மதிப்பதில்லை.
 இதை ஊக்குவிப்பதும் ஒலிம்பிக் அளவு எண்ணுவதும் முட்டாள்த்தனம்.
 
 2028 ஒலிம்பிக் இல் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று கூறுகிறார்கள்.  இது ஒவ்வொரு முறையும் கூறப்படுவதுதான்.
  
தகவல்களுக்கு நன்றி: wikipedia & Dhruv Rathee

 

 

 

Monday, 8 March 2021

இலங்கை கிரிக்கெட்டில் கண்துடைப்பு

கண்துடைப்பு

இலங்கை கிரிக்கெட் அணி தொடங்கியதில் தொடங்கியதில் இன்று இன்றுவரை அதன் தேசிய அணியில் ஏறத்தாழ 200 பேர் விளையாடியிருக்கிறார்கள்

இலங்கையில் 75% சிங்களவர் என்று வைத்துக்கொண்டாலும் இந்த 200 இல் 50 பேராவது தமிழர்கள் இருக்கவேண்டும்.

ஆனால் இலங்கை அணியில் விளையாடிய தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சரி எண்ணத் தொடங்குவோம்....

1) ரசல் அர்னால்ட்
2) ரோய் தியாஸ்
3) பிரதீப் ஜெயபிரகாஷ்தரன்
4) சிறிதரன் ஜெகநாதன்
5) வினோதன் ஜான்
6) ஏஞ்சலோ மேத்யூஸ்
7) முத்தையா முரளிதரன்
8)......?

சரி தமிழ் - சிங்கள கலப்பினத்தவரையும் சேர்த்துக் கொள்வோம்

9) ரவீந்திர புஷ்பகுமார
10) ரவி ரத்னயகே

அவ்வளவுதான்!
அவ்வளவேதான்!

எப்படி இலங்கை ராணுவம் 99% சிங்களவர், இலங்கை காவல்துறை 95% சிங்களவர் என்று ஒரே இனத்தால் நிரம்பி வழிகிறதோ?!

அப்படித்தான் இலங்கை கிரிக்கெட் அணியும்!

முத்தையா முரளிதரன் ஒரு கண்துடைப்பு அவ்வளவுதான்.

நாம் எதிர்க்கப்பட வேண்டிய ஒருவரைத்தான் எதிர்க்கிறோம்!
17.10.2021

Friday, 1 March 2019

பாகிஸ்தானின் நட்பு

பாகிஸ்தானின் நட்பு 

1999 இல் சென்னை சேப்பாக்கத்தில் பாகிஸ்தான் அணி கடைசிநேரத்தில் இந்திய அணியை தோற்கடித்தது.

யாரும் எதிர்பாராத விதமாக தமிழக பார்வையாளர் அனைவரும் எழுந்துநின்று கைதட்டி பாகிஸ்தான் அணியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

(Chennai Crowd standing Ovation on Pakistani win 1999 !!
என்கிற பெயரில் youtube இல் இருந்த காணொளி தற்பொது நீக்கப்பட்டு விட்டது)

'எதிரிக்கு எதிரி நண்பன்' என்கிற வகையில்
தமிழர்களின் தனிநாடு போராட்டத்திற்கு பாகிஸ்தான் ஆயுதம் தருமானால் நாம் கட்டாயம் வாங்கிக் கொள்ளவேண்டும்.

ஆனால் பாகிஸ்தான் நிபந்தனைகள் எதுவுமின்றி இந்த உதவியைச் செய்யவேண்டும்.

பதிலுக்கு நாம் செய்வது அவர்களுக்கு நட்புநாடாக இருப்பது மட்டுமே!

ஏனென்றால்,
பாகிஸ்தானின் இன்னொரு இந்தியா என்பதை நாம் நன்கு அறிவோம்.

ஈழப் படுகொலையில் பாகிஸ்தான் ஆற்றிய பங்கையும் நன்கு அறிவோம்!

Tuesday, 24 April 2018

நொச்சின்

நொச்சின்

ஹிந்தியாவில் நடப்பது ஜனநாயகமே கிடையாது என்பதற்கு சான்று சச்சின் எம்.பி ஆனது.

தேர்தலிலேயே போட்டியிடாமல் அரசியலுக்கு எந்த தகுதியுமே இல்லாமல் மக்களைச் சந்திக்காமல் ஒரு வாக்கு கூட பெறாமல் ஒருவர் உயர் பதவிக்கு போகலாம்.
அந்த பதவியினுடைய பொறுப்புகளைக் கூட செய்யாமல் ஊர்சுற்றலாம் என்ற நிலைதான் இங்கே.

சச்சின் எம்.பி ஆன 2012 லிருந்து அவர் அவைக்கு போனது வெறும் 6 நாட்கள்.
ஒரு மாணவன் 70% வருகைப் பதிவு இல்லாவிட்டால் அவன் தேர்வு எழுதமுடியாது.
ஆனால் ஒரு நாட்டின் மக்களுடைய குரலாக ஒலிக்கவேண்டிய எம்.பி-ஆக சச்சினின் வருகைப் பதிவேடு 5.5% ஆகும். 

வந்த ஆறு நாட்களிலும் அவர் கேள்வி கேட்கவோ பதில் சொல்லவோ ஏன் கொட்டாவிவிடவோ கூட வாய்திறக்கவில்லை.

ஆனால் 40 லட்சம் வரை சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டார்.

மக்களுக்காக பாடுபட்டவனெல்லாம் தெருவில் கிடக்க,
பந்தை மட்டையால் "லொட்" என்று தட்டியவர்களுக்கு மட்டும் கடவுளுக்கு சமமான இடமும் கொடுத்து,
கூடவே விருது, பரிசு, சன்மானம், பதவி, புகழ், பணம் எல்லாமும் கொடுக்கும் முட்டாள்கள் வாழும் நாடுதான் இது.

2003ல் பெராரி காருக்கு வரி கட்ட வலித்துப்போய் அரசிடம் அதை தள்ளுபடி செய்யக்கோரினார் சச்சின்.
அரசாங்கமும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விட்டுக்கொடுத்தது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்துகொண்டு ஒரு கோடியை ஒரு 'நடிகனின்' காருக்கு தூக்கிக்கொடுக்கும் ஒரு இளிச்சவாய் அரசாங்கம் உலகில் உண்டா?!

நடிகன் என்று நான் தவறாகச் சொல்லவில்லை.

2011ல் வெறும் 2 கோடி ரூபாய் வருமானவரியை மிச்சப்படுத்த "நான் ஒரு நடிகன், அதன் மூலம் சம்பாதித்ததே எனது சொத்து. கிரிக்கெட் பொழுதுபோக்கு மட்டும்தான்" என்று கூறி வரிவிலக்கு வாங்கினார் சச்சின்.
(India Today 27.05.2011)

இந்த லட்சணத்தில் 2014 ல் மிக உச்ச விருதான பாரத ரத்னா வேறு.

அறிவாளிகள் வாழும் நாடாக இருந்திருந்தால் "சச்சினாவது நொச்சினாவது" என்று எப்போதோ தூக்கி எறிந்திருப்பார்கள்.


Sunday, 18 June 2017

உருதிஸ்தான்

உருதிஸ்தான்

உற்றுப்பார்த்தால் பாகிஸ்தான் இன்னொரு ஹிந்தியா
அதாவது உருதிஸ்தான்.

ஒலிம்பிக்கில் உலகநாடுகள் நூற்றுக்கணக்கான பதக்கங்களை அள்ளியபோது ஒன்றிரண்டு பதக்கங்களை தடவிக்கொண்டு இருந்தது அவமானமில்லையாம்.

இப்போதுதான் அவமானமாம்.

அதாவது ஊரெல்லாம் சவால்விட்டு தோத்துப்போன தோத்தாக்கொள்ளி
பக்கத்துவீட்டு நோஞ்சான்களுடன் போட்டியிட்டு அதிலும் தோற்ற அவமானம்.

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள இருநாடுகள் நான்தான் பெரியவன் என்று அடித்துக்கொள்ள கிரிக்கெட் ஒரு களமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயன் சூரியக்குளியல் எடுக்கும்போது பொழுதுபோக்காக விளையாடிய ஒரு சப்பையான ஆட்டத்தை
அவன் ஆண்ட அடிமை நாடுகள் அப்படியே ராஜவிசுவாசத்துடன் கடைபிடிக்கின்றன.

பிற வளர்ந்த நாடுகள் கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி என ஆரோக்கியமான விளையாட்டில் இரண்டு மணிநேரத்தில் எனர்ஜியை கரைத்துவிட்டு வேலையைப் பார்க்க போய்விடுவான்.

அவன் விளையாடுவது விளையாட்டு (sports).
கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்கு ஆட்டம் (game).
அது விளையாட்டு கிடையாது.
அதனால் உடலுக்கு பெரிய ஆரோக்கியமும் கிடையாது.

பிசிசிஐ ஓன்ற தனியார் நிறுவனம் ஆயிரக்கணக்கான விளம்பர நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தும் இந்த கார்ப்பரேட் கேளிக்கூத்தில்,
தன் மகாபெரிய தோல்விகளை அதனால் அடைந்த அவமானத்தை சிறுவெற்றி பெற்று துடைத்துக்கொள்ள வழிதேடும் மூடர் கூட்டம்.

எதையும் சாதிக்க இயலாக்கூட்டம்.

ஆண்டான் பழக்கத்தை அப்படியே கடைபிடிக்கும் அடிமை ரத்தம்.

இந்த அடிமைக்கு அடிமையாக தேசிய இனங்கள் இருக்கவேண்டுமா?

அதிலும் குறிப்பாக தமிழினம்?!

Friday, 17 June 2016

இலங்கை - இந்தியா விளையாடும்போது மைதானத்தில் புலிக்கொடியுடன் நுழைந்த தமிழ் இளைஞர்கள்

லண்டன் மைதானத்தில் புலிக் கொடியுடன் இளைஞர்கள்!
கிரிக்கெட் வீரர்கள் தினறல்

இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.

இதற்கிடையே ஆட்டம் நடந்த மைதானத்திலும் இரு இளைஞர்கள் புலிக்கொடியை ஏந்தியவாறு கோசங்களை இட்டுக்கொண்டு மைதானத்துக்குள் ஓடினார்கள்.
அவர்களில் ஒருவர் விக்கெட்டுக்களுக்கு அருகே வரை ஓடிவிட்டார்.
இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது இது நடந்தது.

அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, அங்கிருந்து அகற்றினார்கள்.

இதேவேளை, இந்திய அணி துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருந்த வேளையிலும் புலிக்கொடியுடன் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிவிட்டார்.
அவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து அங்கிருந்து அகற்றினர்.

நன்றி BBC

படங்கள் www.jvpnews.com/srilanka/33581.html

21 ஜூன் 2013

Wednesday, 15 July 2015

20 நிமிடங்கள் cricket பார்த்தேன்

20 நிமிடங்கள் cricket பார்த்தேன்

அதில் 10 நிமிடம் முழு விளம்பரங்கள்,
அது போக
LG
PEPSI
MRF
RELIANCE
GATORADE
CASTROL
HYNDAI
lays
இவை groundஐ ஆக்கிரமித்திருந்தன.

i ball
இது replay போடும்போது வந்தது.
paytm
AMARON
sayska
KARBONN
இவை இடையிடையே திரையில் கீழே தோன்றிய
விளம்பரங்கள்.

star
fly emirates
icc
இவை ஆட்டக்காரர்கள் உடைகளில் இருந்தவை.

QUICKR
NEROLAC
VIMAL
5STAR
cricbuzz
asian paint
MAX life ins
SNICKERS
TATA zenon
airtel
Maruti
இவைதான் அந்த பத்துநிமிட இடைவெளி விளம்பரங்கள்.

முன்பு ஹாக்கி ஹிந்தியர்களின் பிடித்தமான
விளையாட்டாக இருந்தது.
ஆனால் அது ஒருநாள் முழுவதும் நடக்காதே அப்புறம்
எப்படி நிறைய விளம்பரம் போட்டு காசுபார்ப்பது?
ஹாக்கி ஒரு ஆரோக்கியமான விளையாட்டு.
உலக championஆக வலம்வந்த காலம் அது.
தன்ராஜ்பிள்ளை போன்ற தமிழர்களும் அதில் விளையாடினார்கள்.

பணக்கார முதலாளிகள் நினைத்தால் எதையும் மக்கள்
மனதிலிருந்து துடைத்துவிட்டு எதையும் அவர்கள்
தலையில் கட்டமுடியும் என்பதற்கு இந்த கிரிக்கெட்
ஒரு எடுத்துக்காட்டு.

ஹாக்கியை அம்னீசியா வந்ததுபோல மக்கள் மறந்தார்கள்.
மனநோய் வந்தது போல கிரிக்கெட் மேல் பைத்தியம்
பிடித்து அலைய ஆரம்பித்தனர்.

கிரிக்கெட்டில் மட்டும்தான் நிகழ்ச்சி ஓடும்போதே
ஓரத்தில் விளம்பரம் போடமுடியும்.
அதை நீங்கள் உற்றுக்கவனிக்காவிட்டாலும் உங்கள்
மூளையில் பதிந்துவிடும்.

இருபது நிமிடம் நீங்கள் match பார்த்தால் அதில்
17நிமிடங்கள் உங்கள் மூளையில் விளம்பரங்கள்
ஏற்றப்படும்.
3,4 நிமிடங்கள்தான் விளையாட்டு நிகழ்வுகள்.

ஒரு நாள் பகல் முழுக்க விடுமுறை போட்டு நீங்கள் வீணடித்து பார்ப்பது விளம்பரங்களைத்தான்.

முதலில் இது ஒரு ஆரோக்கியமான விளையாட்டு(sports) கிடையாது.
இது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு (game).

இதை விளையாடுவதால் எந்த உடல் ஆரோக்கியமும்
கிடையாது.
இடதுகை பந்துவீச்சாளர், அல்லது பேட்ஸ்மேன் அந்த ஒரு
கையையே பயன்படுத்தவேண்டும்.
வெயிலில் நிற்கவேண்டும்.
உடல்வலுவை எங்கும் பயன்படுத்தத்தேவையில்லை.
அதிகம் ஓடவும் வேண்டாம்.

இதை நடத்துவது இந்திய அரசு கிடையாது தனியார்
நிறுவனம்.
ஒரு ரூபாய் போட்டால் நூறுரூபாய் கிடைக்கும் தொழில்.

உலகக் கோப்பை என்பது உலகநாடுகள் அனைத்தும்
பங்குபெறும் விளையாட்டு கிடையாது.
10,15 நாடுகள்தான் விளையாடுகின்றன.

அமெரிக்க, ரஷ்யா, ஜெர்மனி, சீனா போன்ற வல்லரசுகளே
கூட கிரிக்கெட் என்ற இந்த மட்டமான விளையாட்டில் ஆர்வம் காட்டுவதில்லை.
வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள பிச்சைக்காரநாடுகள் மக்களை ஏமாற்ற ஒன்றிரண்டு வல்லரசு நாடுகளின் பணக்காரர்களுடன் சேர்ந்து
நடத்துவதுதான் இந்த கிரிக்கெட்.

ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகள் கிரிக்கெட்டிலும் அதே நேரத்தில் ஒலிம்பிக்கில் மற்ற விளையாட்டுகளிலும் திறமையைக்
காட்டுகின்றன.

அவர்கள் வெறுமனே ஒப்புக்கு சப்பானியான
கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் திருப்தி அடைவதில்லை.

மொத்த உலகநாட்களும் கலந்துகொள்ளும் ஒலிம்பிக்கில்
சீனா, அமெரிக்கா நூற்றுக்கணக்கான பதக்கங்களை குவிக்கும்போது
ஹிந்தியா ஒன்றோ இரண்டோ பதக்கங்களை கையில் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கும்.

ஆனால், ஏதோ இந்தியா உலகத்தையே வென்றதுபோல
ஹிந்திய அடிமுட்டாள் கிரிக்கெட்டைப் பார்த்து கைதட்டி ஆனந்த கண்ணீர் விடுகிறான்.
இந்த உலகக்கோப்பை ஆட்டங்களிலாவது அதிக விளம்பரங்கள் ஒழுங்கீனங்கள் இல்லை.

ஐபிஎல் என்ற ஒரு தொழிலைத் தொடங்கினார்களே அதில்
காசுள்ளவர்கள் ஹிந்தியாவின் ஒரு மாநிலத்தின் பெயரில் ஒரு team அமைத்து அதில் வெளிநாட்டு
வீரர்களை ஏலத்தில் வாங்கி போட்டி நடத்துவார்கள்.

சாராய விளம்பரம், சியர் கேள்ஸ் குலுக்கல் நடனம்,
மேடையில் அமர்ந்திருக்கும் அழகான பெண்களைக் காட்டுவது, சிகரெட் மற்றும் புகையிலை
விளம்பரங்கள் என எல்லாம் வரும்.

அதில் விளையாட்டு வீரர்கள் தலைமுதல் கால் வரை விளம்பரம், திரை மூலைகளில் விளம்பரம், ஒவ்வொரு
நிகழ்விலும் இடைநிறுத்தம் செய்யும்போது விளம்பரம்
அது போக மொத்த நேரத்தில் 60% முழுநேர விளம்பரம்
என்று கல்லா கட்டுகிறார்கள்.

சென்னை டீம் ஜெயித்துவிட்டது என்று அன்றைக்கு அதிகமாகக் குடிக்கிறான் சாராயத்துக்கு பிறந்த
குடிகாரத் தமிழன்.

இதில் அரசியல்வாதிகளும் பங்குவகிக்கிறார்கள்.
நன்றாக விளையாடியவருக்கு லட்சங்களை அள்ளித்தருவது,
முக்கியமான விளையாட்டுகளை தாமே நேரில் வந்து அமர்ந்து பார்ப்பது, பழைய வீரர்களை அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வது என்று.

இதே வருங்காலத்தில் வேறொரு விளையாட்டில் இதைவிட அதிகம் சம்பாதிக்கலாம் என்றால் இதை
மறக்கடித்துவிட்டு அதன் பின்னால் பைத்தியம் பிடித்து அலையச்செய்யவும் இவர்களால் முடியும்.

இது எவ்வளவு கேடான கலாச்சாரம் என்பதை உணர ஒன்றைச் சொல்கிறேன்.

எப்போதெல்லாம் மாணவர்கள் தேர்வுக்கு
தயாராகிறார்களோ
அதாவது சரியாக பரிச்சை நேரத்தில்தான்
கிரிக்கெட் நடக்கும்.
இதை கூர்ந்து கவனித்தால் இதன்பின்னால் உள்ள
சூழ்ச்சி புரியும்.
ஹிந்தியா என்பது ஒரு போலி நாடு.
அந்த நாட்டு உணர்வால் இப்படிப்பட்ட போலியான வெற்றிகளைத்தான் உருவாக்கமுடியும்.