Sunday 19 November 2023

கிரிக்கெட் கார்ப்பரேட்

கிரிக்கெட் கார்ப்பரேட்

 இந்த உலகக் கோப்பை போன்ற பிரபல கிரிக்கெட் போட்டித் தொடர்களை நடத்துவது international cricket council அதாவது ICC.
 அன்று உலக மக்களைச் சுரண்டி பணம் கொழுத்துப் போன ஆங்கிலேயர்கள் அதை எங்கே செலவு செய்வது என்று தெரியாமல் திரிந்தபோது ஒரு வரப் பிரசாதமாக வந்தது கிரிக்கெட்.
 கிரிக்கெட் என்பது வெள்ளைக்காரர்கள் அரை அம்மணமாக கடற்கரையில் சூரியக் குளியல் போடும்போது பொழுதுபோக்குக்காக விளையாடுவது.
 அப்படி கி.பி. 1900 களில் இல் ஆஸ்திரேலிய கடற்கரையில் அம்மணமாக ஆடிக்கொண்டிருந்தான் ஒரு ஆங்கிலேய வெள்ளைக்காரன். 
 இவனது பொழுதுபோக்கு அவ்வப்போது டூர் போய் இங்கிலாந்திலும் தென்னாப்பிரிக்காவிலும் இருந்த இவனது அங்காளி பங்காளி ஆங்கிலேய வெள்ளைக் காரர்களுடன்  கடற்கரையில் குத்தாட்டம் போடுவது.
 அப்போது இவர்களுக்கு ஒரு யோசனை வந்தது. கி.பி.1900 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் இல் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இதில் பிரெஞ்சுப் பேரரசும் ஆங்கிலப் பேரரசும் மோதின. ஒரே ஒரு மேட்ச் தான் நடந்தது. இதெல்லாம் ஒரு விளையாட்டா என்று காறித் துப்பி வெளியே அனுப்பிவிட்டது ஒலிம்பிக் நிர்வாகம். எனவே இவர்கள் ஒலிம்பிக் போல நடத்த ஆசைப் பட்டனர்.
 இந்த யோசனையில் இம்மூன்று நண்பர் குழுவும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று இடங்களில் கிளப்களை ஆரம்பித்தனர்.
  இந்த மூன்று கிரிக்கெட் கிளப்களும் 1907 இல் ஜாலியாக டூர் அடித்து இணைந்து ஆட்டம் போட்டு அப்படி உருவானது தான் இந்த ICC.
 இப்படி ஆங்கிலேயர் ஆண்ட 6 நாடுகளில் பணம் கொழுத்த வெள்ளைக்கார கூட்டம் ஒவ்வொரு கிளப்களைத் தொடங்கி இதில் இணைந்தனர்.
 இரவில் கடற்கரையில் ஆண்களும் பெண்களுமாக கூடி விடியவிடிய உல்லாசலாக இருந்துவிட்டு பகலில் சூரியக் குளியல் எடுக்கும்போது சும்மா பந்தைத் தட்டி விளையாடுவதுதான் கிரிக்கெட்.
வெயில் நன்றாக உடலில் படும் மேல்வலியாமல் இருக்கும். பெரிதாக ரூல்ஸ் கூட கிடையாது.
கி.பி.1721 இல் இந்தியாவில் முதல் கிரிக்கெட் போட்டி குஜராத் கடற்கரை (கம்பாத்) இல் ஆங்கிலேயருக்கு இடையே நடந்தது.
 காலப் போக்கில் ஆங்கிலேய அடிவருடிகளான ஜமீன்தார்களும் வியாபாரிகளும் இதில் இணைந்தனர். பந்து பொறுக்கிப் போட்டு கடைசி பேட்ஸ்மேனாக ஒப்புக்கு சப்பானியாக ஆகி முதல் இந்தியர் (சி.கே.நாயுடு) கேப்டன் பதவிக்கு வரவே 1932 ஆம் ஆண்டு ஆகிவிட்டது. 
 ஆங்கிலப் பேரரசு வீழ்ந்த பிறகும் அது ஆண்ட நாடுகளில் இந்த கிரிக்கெட் கும்மாள கூட்டணி தொடர்ந்தது. ஆனால் இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு உருவாகி ஆரோக்கியமான விளையாட்டான ஹாக்கி வளர்ச்சி பெற்றது.
 இதை முறியடிக்க 1975 இல் இவர்கள் உலகக் கோப்பை எனும் தொடரை ஆரம்பித்தனர்.
 இதுவும் இங்கிலாந்தில் தான் நடந்தது.
 இதில் ஆங்கிலேயர் மற்றும் அவர்கள் அடக்கியாண்ட 8 நாடுகள் (Australia, England, India, New Zealand, Pakistan , the West Indies, Sri Lanka and East Africa ) கலந்துகொண்டன.
 (ஆனால் பாருங்கள் 2019 இல் தான் இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்கிறது! அதுவும் மிகவும் கடினப்பட்டு மயிரிழையில்! இது செட்டிங் இல்லை என்று நம்ப வேண்டுமாம்!)
 இன்றும் கிரிக்கெட் என்பது 3 கிளப் களின் பண விளையாட்டு.
 இங்கிலாந்தின் ECB, ஆஸ்திரேலியாவின் CA, இந்தியாவின் BCCI.
12 நிரந்தர உறுப்பினர்கள் 90 க்கும் மேற்பட்ட தற்காலிக உறுப்பினர்கள் இருந்தாலும் எல்லாரும் ஒப்புக்கு சப்பானிதான். இந்த 3 லும் ஏறத்தாழ முக்கால்வாசி வருமானம் bcci மூலம் வருகிறது. ஆனால் bcci க்கு கால்வாசி நிதிதான் ஒதுக்கப்படுகிறது.
 இது தமிழகத்தை மத்திய அரசு சுரண்டும் அதே மாடல்! 

 2014 இல்  ICC இன் மொத்த வருமானம் 250 கோடி டாலர். இதில் bcci இன் பங்கு 57 கோடி டாலர் அதாவது 22.8%. 
 சில ஆண்டுகளுக்கு முன் பிறருக்கும் அதிக பங்கிட்டு bcci க்கு கிடைப்பதை 11% ஆக குறைத்தனர். ஆனால் bcci விடவில்லை. அது மட்டுமின்றி இந்திய அரசின் முழு ஆதரவுடன் புது பாலிசி கொண்டு வரப்பட்டு இந்த ஆண்டு 40% கிரிக்கெட் வருமானம் bcci வசம் வந்துவிடும்.
  இதன் மூலம் 2024-2027 இல் bcci ஆண்டுக்கு 60 கோடி டாலர் சம்பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது ஆண்டுக்கு ஏறத்தாழ 5000 கோடி ரூபாய்.

முன்பு 23% தற்போது 40% என்பது icc தனது பணத்தில் bcci க்கு கொடுப்பது.
உண்மையில் icc க்கு bcci சம்பாதித்து கொடுப்பது ஏறத்தாழ 70%.
 ஆம்! கிரிக்கெட்டில் இந்தியர்கள் கொட்டும் பணம் இங்கிலாந்துக்கு சென்று அதில் 3 இல் 1 பங்குதான் 2023 வரை திரும்பி வந்துள்ளது.
 இனிதான் அது 2 ல் 1 பங்கு ஆகவுள்ளது.
(மீதி பணம் பிற நாடுகளில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பயன்படுத்தப் படுகிறதாம்).
 அதாவது இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் எந்த பெரிய பங்களிப்பும் செய்யாமல் நல்ல லாபம் பார்க்கின்றனர்.
 கிரிக்கெட் பிரபலமாகாத நாடுகளில் இந்தியர் பணத்தில் அது விளையாடப்படும்.
 ஆக இந்த சூதாட்டத்தில் முழுக்க நஷ்டம் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமே!

 2007 இல் 16, 2011 இல் 14, தற்போது 10 நாடுகளைச் சேர்ந்த அணிகள் மட்டுமே ODI உலக கோப்பை விளையாடி உள்ளன. 
 உலக வல்லரசுகள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக அல்ல பொழுதுபோக்காக கூட மதிப்பதில்லை.
 இதை ஊக்குவிப்பதும் ஒலிம்பிக் அளவு எண்ணுவதும் முட்டாள்த்தனம்.
 
 2028 ஒலிம்பிக் இல் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று கூறுகிறார்கள்.  இது ஒவ்வொரு முறையும் கூறப்படுவதுதான்.
  
தகவல்களுக்கு நன்றி: wikipedia & Dhruv Rathee

 

 

 

No comments:

Post a Comment