Sunday 12 November 2023

தான்சானியா தந்த பாடம்

 தான்சானியா தந்த பாடம்

 zanzibar புரட்சி பற்றி தமக்கு அதிகம் தெரியாது. கி.பி.1698 இல் ஓமன் நாட்டு அரேபியர் தெற்கே கடலில் பயணித்து ஆப்பிரிக்கா கண்டத்தை ஒட்டி சில தீவுகளில் குடியேறி தமது ஆளுமையை நிறுவினர். 
 இவர்களது அரசாட்சி ஆப்பிரிக்க நிலத்திற்கு உள்ளேயும் பரவியது. சில தலைமுறைகள் கழித்து கி.பி. 1856 இல் வாரிசுரிமைப் போரில் ஓமன் தனியரசாகவும் அதன் ஆப்பிரிக்க காலணி தனியரசாகவும் ஆனது. 
 இந்த அரேபிய வந்தேறிகள் ஐரோப்பியர் ஏகாதிபத்திய காலத்தில் அவர்களுக்கு பணிந்து அரசு நடத்தினர். ஐரோப்பிய காலனிய ஆதிக்கம் முடிவுக்கு வந்தபோது தமது விசுவாசிகளான அவர்களிடமே  அந்த தீவுகளின் அரசாட்சியை கொடுத்துச் சென்றனர்.
 இதை மண்ணின் மைந்தர்களான ஆப்பிரிக்கர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
 1963 இல் அரேபியர் மக்களாட்சி அறிவித்து தேர்தல் நடத்தி அதிலும் தாங்களே வெற்றிபெற்றனர்.
 ஆப்பிரிக்கர்கள் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. மொத்தமாகச் சேர்ந்து அரேபியர்களை அடித்து துரத்தினர்.
 இப்படியாக 250 ஆண்டுகள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்திய அரேபியர்களிடம் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர்.
 தீவுகள் தான்சானியாவுடன் இணைந்தன.
 தாய்நிலமான ஓமனுக்கு ஓடியது அரச குடும்பம். 
அங்கே அரசர் தவிர பிறருக்கு அடைக்கலம் கிடைத்தது. அந்த வந்தேறி அரபு அரசர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தார். 

"அடிமை முறையை சட்டமியற்றி முடிவுகட்டிய நல்லவர்கள்" என்றோ "30 தலைமுறைகளாக இங்கேயே வாழ்கிறார்கள் அவர்கள் நம்மவர்" என்றோ "ஜனநாயக முறைப்படி அரசைக்  கைப்பற்றினார்கள்" என்றோ தான்சானியர் நியாயம் பேசிக்கொண்டு இருக்கவில்லை.
 
தகவலுக்கு நன்றி: கார்த்திகேயன் மதுரை

No comments:

Post a Comment