Showing posts with label எம்.பி. Show all posts
Showing posts with label எம்.பி. Show all posts

Wednesday, 13 March 2019

பொள்ளாச்சி ஜெயராமன் - தெலுங்கர் ஆதிக்கத்திற்கு எடுத்துக்காட்டு

பொள்ளாச்சி ஜெயராமன் - தெலுங்கர் ஆதிக்கத்திற்கு எடுத்துக்காட்டு

பொள்ளாச்சி ஜெயராமன் தெலுங்கர்தான்.
இந்த உண்மையை ஏற்கனவே 02.02.2018 அன்று நாம் வெளியிட்ட "234 ல் 39 வந்தேறிகள்" என்கிற பதிவில் குறிப்பிட்டும் இருந்தோம்.

தற்போது மேலும் அறிய முற்படுவோம்.

பொள்ளாச்சியில் பிறந்த ஜெயராமன் அரசியலில் (கவுண்டர் அதிகம் வாழும் பொள்ளாச்சியில்) தொடர்ந்து மண்ணைக் கவ்வியதால்
(கவுண்டருக்கு சமமாக  நாயுடு சாதியினர்  வாழும்) உடுமலை தொகுதியில் நின்று வென்றவர் ஆவார்.

இவரும் தெலுங்கரான கடம்பூர் ராஜு வும் இணைந்து அரும்பாடு பட்டு விவசாய சங்கத் தலைவர் 'நாராயணசாமி நாயுடு' வுக்கு  மணிமண்டபம் அமைத்தனர்.

தமிழக வாழ் கம்மா நாயுடுக்களின் தலைநகரம் போன்ற உடுமலையில் மிகப்பெரிய தொழிலதிபரும்
'தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம்' மற்றும் 'தெலுகு பெடரேஷன்' தலைவராகவும்,
'உடுமலை மக்கள் பேரவை' அமைப்பின் நிறுவனராகவும் இருந்த கெங்குசாமி நாயுடு மறைந்தபோது
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ,
துணை சபாநாயகர் ஜெயராமன்,
கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்,
பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன்,
முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகவேலு,
எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்),
கார்த்திக் (சிங்காநல்லுார்), ஜெயராமகிருஷ்ணன் (மடத்துக்குளம்),
தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் சாமிநாதன்,
கம்ம நாயுடு மகாஜன சங்க மாநில செயல்தலைவர் மோகன்,
என பல முக்கிய தெலுங்கு தலைகள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் இவர் நாயுடு இல்லை.
இவர் தெலுங்கர் இனத்தில் 24 மனை செட்டி சாதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகரும் ஆன இந்த பொள்ளாச்சி ஜெயராமன் தவிர்த்து 24 மனை செட்டி சமூகத்தில் குறிப்பிடத் தகுந்தவர்கள் பட்டியல் வருமாறு,

மூன்று முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற முசிறி புத்தன்,

கரூரின் மிகப் பெரிய தொழிலதிபர் மற்றும் கரூர் எம்.பி யாக இருந்த கே.சி.பழனிச்சாமி ,

கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த,
பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவை தோற்கடித்த இ.ஜி. சுகவனம்.

(திருவெறும்பூர் தொகுதி) முன்னாள் எம்.எல்.ஏ.வான  இரத்னவேலு,

முன்னாள் எம்.எல் ஏ. வான எஸ்.ஜி. விநாயகமூர்த்தி,

முன்னாள் எம்.எல்.ஏ. வான ஈ.எஸ். வெங்கடேசன்,

ஆகியோர் குறிப்பிடத் தகுந்த அரசியல்வாதிகள்

24 மனைச் செட்டிகளில் பெரிய புள்ளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து "24 ஸ்டார்ஸ் க்ளப்" என்ற பெயரில் இயங்கி வருகிறார்கள்.

  இந்த அமைப்பை உருவாக்கியது மதுரை டாக்டர் வி.வி.முத்துசாமி ஆவார்.
இவர் கார்டியாலஜிஸ்ட் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராக இருக்கிறார்.

இதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் இராஜபாளையம் இரா.பெருமாள், 24 மனை தெலுங்குச் செட்டியார் சங்கத்துன் மாநிலத் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

இதுபோக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெ.இராமநாதன் குறிப்பிடத் தக்கவர்.

இத்தனைக்கும் 24 மனை தெலுங்கு செட்டிகள் தமிழக மக்கட்தொகையில் 1% கூட கிடையாது!

Tuesday, 24 April 2018

நொச்சின்

நொச்சின்

ஹிந்தியாவில் நடப்பது ஜனநாயகமே கிடையாது என்பதற்கு சான்று சச்சின் எம்.பி ஆனது.

தேர்தலிலேயே போட்டியிடாமல் அரசியலுக்கு எந்த தகுதியுமே இல்லாமல் மக்களைச் சந்திக்காமல் ஒரு வாக்கு கூட பெறாமல் ஒருவர் உயர் பதவிக்கு போகலாம்.
அந்த பதவியினுடைய பொறுப்புகளைக் கூட செய்யாமல் ஊர்சுற்றலாம் என்ற நிலைதான் இங்கே.

சச்சின் எம்.பி ஆன 2012 லிருந்து அவர் அவைக்கு போனது வெறும் 6 நாட்கள்.
ஒரு மாணவன் 70% வருகைப் பதிவு இல்லாவிட்டால் அவன் தேர்வு எழுதமுடியாது.
ஆனால் ஒரு நாட்டின் மக்களுடைய குரலாக ஒலிக்கவேண்டிய எம்.பி-ஆக சச்சினின் வருகைப் பதிவேடு 5.5% ஆகும். 

வந்த ஆறு நாட்களிலும் அவர் கேள்வி கேட்கவோ பதில் சொல்லவோ ஏன் கொட்டாவிவிடவோ கூட வாய்திறக்கவில்லை.

ஆனால் 40 லட்சம் வரை சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டார்.

மக்களுக்காக பாடுபட்டவனெல்லாம் தெருவில் கிடக்க,
பந்தை மட்டையால் "லொட்" என்று தட்டியவர்களுக்கு மட்டும் கடவுளுக்கு சமமான இடமும் கொடுத்து,
கூடவே விருது, பரிசு, சன்மானம், பதவி, புகழ், பணம் எல்லாமும் கொடுக்கும் முட்டாள்கள் வாழும் நாடுதான் இது.

2003ல் பெராரி காருக்கு வரி கட்ட வலித்துப்போய் அரசிடம் அதை தள்ளுபடி செய்யக்கோரினார் சச்சின்.
அரசாங்கமும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விட்டுக்கொடுத்தது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்துகொண்டு ஒரு கோடியை ஒரு 'நடிகனின்' காருக்கு தூக்கிக்கொடுக்கும் ஒரு இளிச்சவாய் அரசாங்கம் உலகில் உண்டா?!

நடிகன் என்று நான் தவறாகச் சொல்லவில்லை.

2011ல் வெறும் 2 கோடி ரூபாய் வருமானவரியை மிச்சப்படுத்த "நான் ஒரு நடிகன், அதன் மூலம் சம்பாதித்ததே எனது சொத்து. கிரிக்கெட் பொழுதுபோக்கு மட்டும்தான்" என்று கூறி வரிவிலக்கு வாங்கினார் சச்சின்.
(India Today 27.05.2011)

இந்த லட்சணத்தில் 2014 ல் மிக உச்ச விருதான பாரத ரத்னா வேறு.

அறிவாளிகள் வாழும் நாடாக இருந்திருந்தால் "சச்சினாவது நொச்சினாவது" என்று எப்போதோ தூக்கி எறிந்திருப்பார்கள்.