Tuesday 24 April 2018

நொச்சின்

நொச்சின்

ஹிந்தியாவில் நடப்பது ஜனநாயகமே கிடையாது என்பதற்கு சான்று சச்சின் எம்.பி ஆனது.

தேர்தலிலேயே போட்டியிடாமல் அரசியலுக்கு எந்த தகுதியுமே இல்லாமல் மக்களைச் சந்திக்காமல் ஒரு வாக்கு கூட பெறாமல் ஒருவர் உயர் பதவிக்கு போகலாம்.
அந்த பதவியினுடைய பொறுப்புகளைக் கூட செய்யாமல் ஊர்சுற்றலாம் என்ற நிலைதான் இங்கே.

சச்சின் எம்.பி ஆன 2012 லிருந்து அவர் அவைக்கு போனது வெறும் 6 நாட்கள்.
ஒரு மாணவன் 70% வருகைப் பதிவு இல்லாவிட்டால் அவன் தேர்வு எழுதமுடியாது.
ஆனால் ஒரு நாட்டின் மக்களுடைய குரலாக ஒலிக்கவேண்டிய எம்.பி-ஆக சச்சினின் வருகைப் பதிவேடு 5.5% ஆகும். 

வந்த ஆறு நாட்களிலும் அவர் கேள்வி கேட்கவோ பதில் சொல்லவோ ஏன் கொட்டாவிவிடவோ கூட வாய்திறக்கவில்லை.

ஆனால் 40 லட்சம் வரை சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டார்.

மக்களுக்காக பாடுபட்டவனெல்லாம் தெருவில் கிடக்க,
பந்தை மட்டையால் "லொட்" என்று தட்டியவர்களுக்கு மட்டும் கடவுளுக்கு சமமான இடமும் கொடுத்து,
கூடவே விருது, பரிசு, சன்மானம், பதவி, புகழ், பணம் எல்லாமும் கொடுக்கும் முட்டாள்கள் வாழும் நாடுதான் இது.

2003ல் பெராரி காருக்கு வரி கட்ட வலித்துப்போய் அரசிடம் அதை தள்ளுபடி செய்யக்கோரினார் சச்சின்.
அரசாங்கமும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விட்டுக்கொடுத்தது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்துகொண்டு ஒரு கோடியை ஒரு 'நடிகனின்' காருக்கு தூக்கிக்கொடுக்கும் ஒரு இளிச்சவாய் அரசாங்கம் உலகில் உண்டா?!

நடிகன் என்று நான் தவறாகச் சொல்லவில்லை.

2011ல் வெறும் 2 கோடி ரூபாய் வருமானவரியை மிச்சப்படுத்த "நான் ஒரு நடிகன், அதன் மூலம் சம்பாதித்ததே எனது சொத்து. கிரிக்கெட் பொழுதுபோக்கு மட்டும்தான்" என்று கூறி வரிவிலக்கு வாங்கினார் சச்சின்.
(India Today 27.05.2011)

இந்த லட்சணத்தில் 2014 ல் மிக உச்ச விருதான பாரத ரத்னா வேறு.

அறிவாளிகள் வாழும் நாடாக இருந்திருந்தால் "சச்சினாவது நொச்சினாவது" என்று எப்போதோ தூக்கி எறிந்திருப்பார்கள்.


No comments:

Post a Comment