Tuesday 8 January 2019

ராஜீவ் காந்தி மரணம் பற்றி நாஸ்டிரடாமஸ்

ராஜீவ் காந்தி மரணம் பற்றி நாஸ்டிரடாமஸ்

கி.பி. 1555 ஆம் ஆண்டு புகழ்பெற்ற தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் வெளியிட்ட Prophecies என்கிற புத்தகம் உலகில் நடக்கப்போகும் பல விடயங்களைப் பூடகமாகச் சொல்லும் நூலாகும்.

அதில் ஒரு பெண்மணி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 67 வயதில் சதிகாரர்களால் கொல்லப்படுவார் என்று இந்திரா காந்தி பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியவற்றில் தெள்ளத் தெளிவாக உள்ளவை சில மட்டுமே!
அவற்றில் டயானா வுக்கு அடுத்து தெளிவானது ராஜீவ் காந்தி பற்றிய பாடல்.

அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வருமாறு,

The great pilot shall be sent for by royal mandate
(அரச ஆணையின் மீது ஒரு மாலுமி அல்லது விமானி)

to leave the fleet, and be preferred to a higher place,
(படைப்பிரிவை விட்டு விலகி, தலைமைக்கு உயர்வான்)

seven years after he shall be countermanded
(ஏழாம் ஆண்டில் கட்டளை ரத்தாகி)

a barbarian army shall put venice to fear
(காட்டுமிராண்டி படை வெனிஸ் நகரை பயத்தில் ஆழ்த்தும்)

இதில் கூறப்பட்டுள்ளபடி ராஜீவ் விமானியாக இருந்தார்.
இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு அவர் அரசியலுக்கு வந்தார்.

அடுத்த ஏழாவது ஆண்டில் அவர் பதவியை இழந்தார்.

ஈழத்தில் அவர் அனுப்பிய படை செய்த இனப்படுகொலைக்கு பழிவாங்க ஆயுதம் தாங்கிய படை (புலிகள் அல்லது வேறொரு ஈழ ஆயுதக் குழு) அவரைக் கொன்றது.

வெனிஸ் நகரம் என்பது இத்தாலியில்  சோனியா காந்தி பிறந்த (வெனிடோ) மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.

No comments:

Post a Comment