Friday, 31 March 2017

ஹிந்திய கடற்படையும் மீனவரைத் தாக்குகிறது

ஹிந்திய கடற்படை மீனவரைத் தாக்கியதாமே

என்னடாப்பா புதுசா அதிர்ச்சி?

ஏற்கனவே பலமுறை நடந்ததுதானே
-----------------------------------------------
இது 2013 ல் நடந்தது
http://m.oneindia.in/tamil/news/2013/08/02/tamilnadu-indian-navy-attacks-karaikal-fisher-180421.html
---------------------------------------------
இது 30.03.2017 அன்று நடந்தது

நமது மீனவர்களை நமது கடற்படையினரே தாக்கிய கொடூரம் : எங்கு சென்றாலும் அடிப்பதாக மீனவர்கள் புலம்பல் (தினகரன்)
m.dinakaran.com/Detail.asp?Nid=291295
----------------------------------------------
09.10.2017 அன்று மீண்டும் இதேபோல இந்திய கடற்படை நாகப்பட்டிணம் மீனவர்களைத் தாக்கியுள்ளது

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=341742

இந்திய கடற்படையினர் நடத்திய தாக்குதலில் நாகை மீனவர் காயம்

நாகை: இந்திய கடற்படையினர் நடத்திய தாக்குதலில் நாகை மீனவர் காயமடைந்துள்ளார்.
அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் செந்தில்குமாரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
--------------------------------------------
13.11.2017 மாலை 5 மணியளவில் நடந்தது

இந்திய மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு...

துப்பாக்கியால் சுட்டதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சரோன் என்ற மீனவர் படுகாயம்...
செய்தி: தந்தி தொலைக்காட்சி
https://twitter.com/ThanthiTV/status/930023326704996352
- - - -
இலங்கை மீனவர்கள் என நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இந்திய கடலோர காவல் படை கூறியுள்ளது.
செய்தி: மாலைச்சுடர்
http://www.maalaisudar.com/?p=17158
- - - -
இந்தியில் பேசக் கூறி தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக்காவல் படை தாக்குதல்.

நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து ஜெபமாலைபிச்சை என்பவருக்கு சொந்தமான படகில் அந்தோணிபிச்சை, சூசையா, நிஷாந்த், சாண்ட்ரோ, தேவராஜன், ஜான்சன் ஆகிய 6  மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியில் மீன்பிடிக்க வலைகளை பாய்ச்சிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் மீனவர்களின் படகுகளையும் விரட்டியடித்தனர்.

(கவனிக்க மேற்கண்டது இலங்கை கடற்படை செய்தது)

நேற்று பகல் 3 மணி அளவில் இந்திய கடல் பகுதியில் சென்னையில் இருந்து வந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த வீரர்கள் ஜெபமாலைபிச்சையின் படகினை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை எடுப்பதற்காக படகை நிறுதாமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த கடலோர காவல் படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் மீனவர் அந்தோணிபிச்சையின் இடது முழங்கையில் குண்டு பாய்ந்து வெளியேறி சென்றது.
மற்றொரு மீனவரான ஜான்சனின் கைகளிலும் குண்டு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் கப்பலில் இருந்து சிறிய படகில் வந்த கடலோர காவல் படை வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி அதிலிருந்த மீனவர்களை தலை கீழாக நிற்க வைத்து துணிகள் சுற்றிய இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இந்தியில் பேச சொல்லியும், தாக்குதல் பற்றி செய்தியாளர்களிடம் ஏன் சொன்னீர்கள்? என கேட்டும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை என்ற பெயரில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

(இலங்கை இந்தியாவுக்கு தகவல் கொடுத்து அதே படகு மீண்டும் தாக்கப்பட்டுள்ளது)

இதன் பின் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை கரைக்கு திரும்பினர். இதையடுத்து காயம் அடைந்த மீனவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களை பாதுகாக்க வேண்டிய இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர்களே மீனவர்களை சுட்டதுடன் விசாரணை என்ற பெயரில் தமிழில் பேச கூடாது என அடித்து துன்புறுத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/107715-indian-coast-guard-soldiers-attacked-fishermen-to-speak-in-hindi.html

09:59 (14/11/2017) விகடன்
-----------------------------------------------
(தொடர்ந்து பதிவேற்றப்படும்)

Thursday, 30 March 2017

ஓ பழமி

எடக்கல் (பாலக்காடு) கல்வெட்டு தமிழில் "ஓ பழமி" என்றே உள்ளது.
அதை "இ பழம" என்று மலையாளமாக திரிப்பதை எதிர்த்து நடன.காசிநாதன் அளித்த விளக்கம்.

மலையாளத்தில் பழமையான சான்று எதுவும் கிடையாது.

தமிழரின் சேரநாடே இன்றைய கேரளா,
அது முழுக்க முழுக்க தமிழருக்கே சொந்தம்.

Wednesday, 29 March 2017

ஒரே ஆண்டில் 20,500 போராட்டங்கள் நடத்திய தமிழகம்

கடந்த ஆண்டில் சிறிதும் பெரிதுமாக 20,450 போராட்டங்களை நடத்தியுள்ளது தமிழகம்.

தமிழினம் போராடாத இனம் என்போரின் கவனத்திற்கு.

செய்தி: The Hindu

இழிதல், இழிசினர், இழிபிறப்பினர் பற்றி...

இழிதல், இழிசினர், இழிபிறப்பினர் பற்றி...

பழந்தமிழர் வாழ்வியலில் தாழ்ந்தோர் என்று யாருமில்லை

இலக்கியங்களில் சில இடங்களில் இழிசின, இழிபிறப்பு என்று வருகிறது.

உடனே திராவிடம் பொய்ப்பிரச்சாரத்தை ஆரம்பித்தது "பார்த்தீர்களா! சங்ககாலத்திலேயே சாதிக்கொடுமை சாதிக்கொடுமை" என்று.

அவர்கள் முழுப்பாட்டில் ஒரு பகுதியை கத்தரித்து அதை மட்டும்தான் போடுவார்கள்.

இழிசினர் என்பது கீழ்த்தரமான பொருள் கொண்டிருக்கவில்லை.
எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

இழிசினர்:-

துடி எறியும் 'புலைய'
எறிகோல் கொள்ளும் 'இழிசின'
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயற் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம் புனை ஓடை அண்ணல் யானை
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடையாளர்
(புறநானூறு 287 : 1)

இதில் முதல் இரண்டு வரிகளை மட்டும் கத்தரித்து ஒட்டி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதன் பொருள்,
"துடிப் பறை கொட்டும் புலையனே,
குறுந்தடியைக் கையில் கொண்டு பறையை முழக்குபவனே!
கார் காலத்து மழைபோல் அம்புகள் உடலில் வந்து தைத்தாலும் வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போன்ற வேல்கள் வந்து பாயினும், பொன்னால் ஆக்கப்பட்டு முகபடாம் போர்த்தப்பட்ட பெருமைமிக்க யானைத் தன் வெண்மையான கூரிய கொம்புகளைக் கொண்டு குத்தினாலும் அஞ்சிப் புறங்கொடுத்து ஓடாத பெருமை மிக்கவர்கள் நீங்கள்" என்று புகழும்படியே அமைந்துள்ளது.

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே.
(புறநானூறு : 82)

இதிலே 'கட்டில் நிணக்கும் இழிசினன்' என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு கட்டில் செய்வோர் கீழ்சாதி என்று கூறுவதாக திரித்து பொய் பரப்புரை செய்தனர்.

இதன் பொருள்,
தன் மனைவி பிள்ளை பெற இருக்கிறாள் என்ற நிலையில் கட்டில் வாரினைப் பிணைப்பதற்காக வேகவேகமாக வாரூசியைச் செலுத்தும் தொழிலாளியைப் போல மிக விரைவில் பொருநனை வீழ்த்தி வெற்றி கண்டான் மன்னன்.

இப்பாடல் அத்தொழிலாளியை மன்னனுக்கு இணையாக வைத்து ஒப்பிட்டுள்ளது.
( இதேபோல புறநானூறு - 32 ல் சோழமன்னன் நலங்கிள்ளி திறமையான குயவருடன் ஒப்பிடப்பட்டுள்ளான்)

இழிதல்:-

இழிவது என்ற சொல் இறங்குவது என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது.

வலவ நெடுந்தேர் தாங்குமதி என்று இழிந்தனன் (அகநானூறு 66.13)
அதாவது, தேரிலிருந்து இறங்கியதைக் கூறுகிறது.

வெண்மதியம் விசும்பிழுக்கி
நீலமா சுணத்தோடு
நிலத்திழிந்த தொத்தனவே
(சீவகசிந்தாமணி 2238)
அதாவது, நிலவை விழுங்கிய மாசுணம்(பெரும்பாம்பு) நிலத்தில் வீழ்ந்தது போல என்று உவமை சொல்கிறது.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
(குறள் 964)
தலையிலிருந்து விழுந்தால் முடிக்கு மதிப்பில்லை அது போல தன் நிலையிலிருந்து இறங்கினால் மாந்தருக்கு மதிப்பில்லை என்று கூறுகிறது.

அருவி இழிதரும் பெரு வரை
(நற்றிணை 347)
பெரிய மலையில் அருவி(நீர்) கீழே இறங்குவதை (பொழிவதை)க் கூறுகிறது.

இழிபிறப்பினர்:-

இழிபிறப்பினர் என்பது பிறப்பால் இழிவானவர் என்ற பொருளில் கூறப்படவில்லை.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும்
(குறள் 133)
ஒழுக்கம் இல்லாவிட்டால் பிறவி இழிபிறப்பு ஆகிவிடும் என்று கூறுகிறது.

சிறப்பினுள் உயர்பு ஆகலும்
பிறப்பினுள் இழிபு ஆகலும்
(பரிபாடல் 5:19-21)
நல்வினையால் சிறப்புடைய உயர்பிறப்பினர் ஆவது மற்றும் தீவினையால் இழிபிறப்பினர் ஆவது பற்றிக் கூறுகிறது.

அறியாமையின் இன்று இழிபிறப்பு உற்றோர்
(சிலப்பதிகாரம் 10:241)
அறியாமையால் இழிபிறப்பாக ஆகிவிட்டனர் என்று கூறுகிறது.

இழிபிறப்பு என்பது மானிடராகப் பிறந்த பிறவி உயர்வை இறங்கச்செய்வது,
அதாவது பிறந்த பின்னர் நடத்தையால் ஏற்படும் தாழ்வைக் கூறுகிறது.
பிறப்பாலேயே இழிந்தவராக யாரையும் கூறவில்லை.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"

நன்றி: thiru-padaippugal
நன்றி: mytamil-rasikai

Sunday, 26 March 2017

யார் மூவேந்தர் வாரிசு?

யார் மூவேந்தர் வாரிசு?

தமிழர் அனைவருக்கும் (சேரருக்கும் சோழருக்கும் கூட) முன்னோன் பாண்டியன்.

எனக்கு இன்று பாண்டியன் வாரிசு யார் என்றெல்லாம் தெரியாது.
ஆனால் பாண்டியன் கூடப்பிறந்த குடி எது என்று தெரியும்.

"தென்னவன் தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர்" என்று கலித்தொகை கூறுகிறது.

முழுமையாக,

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய நல்லினத்து ஆயர்”
(கலித்தொகை 104)

(மூன்றாம் ஊழியில்) குமரிக்கண்டத்தின் கடைசி பகுதி மூழ்கியபோது வடக்கே முன்னேறிய பாண்டியன் சேரர், சோழரைத் தோற்கடித்து (புலியொடு வில் நீக்கி) தன் ஆட்சியை பரப்பினான்.
அந்த தென்னவனின் (பாண்டியனின்) குடி தோன்றியபோதே ஆயரும் தோன்றிவிட்டார்களாம்.

அப்பன் சொத்தை அடுத்தவன் ஆட்டையைப் போட்டு வளமாக வாழ்கிறான்.

அண்ணன்-தம்பிகள் 'அப்பனின் புகழுக்கு யார் வாரிசு' என்று அடித்துக்கொள்கிறார்கள்.

சித்தப்பன் இதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

எவன் அப்பன் சொத்தை மீட்கிறானோ அவனே உண்மையான மகன்.

எவன் சேர, சோழ, பாண்டியர் ஆண்ட 'தமிழர்நாட்டை' மீட்டு எவன் தனியரசு செலுத்துகிறானோ அவனே மூவேந்தர் வாரிசு.

Saturday, 25 March 2017

தமிழர்நாடு தகவல் திரட்டு - எனது மூன்றாவது வலை

தமிழர்நாடு தகவல் திரட்டு

எனது மூன்றாவது வலை

  தமிழ்தேசியவாதிகள் முகநூலில் போட்ட பதிவுகள், கருத்துகள் மற்றும் நான் தேடி எடுத்த பதிவுகள் என ஒரு 2500 மின்னஞ்சல்கள் தனி முகவரி போட்டு வைத்திருந்தேன்.

இதை வைத்துக்கொண்டு எல்லா விவாதங்களிலும் மற்றவர்களைத் தோற்கடித்து தோற்கடித்து சலிப்பாகிவிட்டது.

பல தமிழ்தேசிய பதிவர்கள் என்னை 'தமிழ்தேசியத்தின்முகநூல் அடியாள்' போல ஆக்கிவிட்டார்கள்.

(நம்மள கோத்துவிட்ட்டு அவன் எஸ்கேப் ஆயிருவான்)

ஆகவே எனது சேமிப்பை இணையத்தில் ஏற்றிவருகிறேன்.

1000 பதிவுகள் போட்டாயிற்று.
மீதியும் இந்த வாரத்தில் ஏற்றப்படும்.

இனி தமிழ்தேசியம் தொடர்பாக எதாவது தேடும்போது fbtamildata.blogspot என்று சேர்த்துப்போட்டு தேடுங்கள்.
இதில் தமிழ்தேசியம் மற்றும் அரசியல் தொடர்பான தகவல்கள், இணைப்புகள், விவாதங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், பிற கருத்தியல் மீதான விமர்சனங்கள் போன்றவை கிடைக்கும்.
(இயற்கை வாழ்வு பற்றிய சில பதிவுகளும் உண்டு)

எனது முகநூல் பதிவுகள் vaettoli.blogspot ல் கிடைக்கும்

முகநூல் பதிவுகளில், தமிழர்கள் இழந்த பகுதிகளை மீட்கும் வகையில் வரைபடங்களுடன் கூடிய மண்மீட்புப் பதிவுகள் vaettoli.wordpress எனும் தனிவலையிலும் ஏற்றுகிறேன்

அப்படியே என்னிடம் இருக்கும் 2000 படங்களையும் ஏற்றிவிட்டால் பணி முழுமையடையும்.

வேறு யாராவது இது போல சேமிப்பு வைத்திருந்தால் கூறுங்கள்.
fbtamildata வலையில் நிர்வாகியாக ஆக்குகிறேன்.

திராவிட, ஹிந்திய, தலித்திய, கம்யூனிச, மதவாத, சாதிவாத அடிமைகளை

நல்லா வச்சு செய்ய இது உதவும்

( ͡° ͜ʖ ͡°)

பூணூல் = வில்லின் நாண்

பூணூல் = வில்லின் நாண்

பூ + நூல் = பூ'நூ'ல் என்றுதானே வரவேண்டும்

ஏன் பூ'ணூ'ல் என்று எழுதுகிறோம்?

யோசித்ததுண்டா?

அது ஏன் இவ்வளவு நீளம் இருக்கிறது?
அந்நூல் பிராமண அடையாளம் மட்டும்தான் என்றால் மார்பில் சிறிதாக இருந்தால் போதுமே!
ஏன் தோளிலிருந்து குறுக்காக இடுப்பையும் தாண்டி  இவ்வளவு நீளம் இருக்கவேண்டும்?

யோசித்ததுண்டா?

நூல் என்றால் ஒரு நூல் போதுமே ஏன் முறுக்குக் கயிறு போல மூன்று (அல்லது ஆறு) நூல்களைப்  பிண்ணிபோடவேண்டும்.

யோசித்ததுண்டா?

ஏனென்றால் அது நீளமான வில்லின் நாண்.
பலமானதாக இருக்க அதை மூன்று நூல்களால் பிண்ணி அணிந்துள்ளனர்.

பூண் என்பது வில்லின் இருமுனையிலும் மாட்டப்படும் உலோகக் கவசத்தையும் குறிக்கும்.
இதில் மாட்டப்பட்டு இழுக்கப்படுவதே பூணூல்.

போர் வீரர்கள் முன்னங்கையிலும் வெட்டவரும் வாளைத் தடுக்க பூண் அணிந்திருப்பர் (உலக்கைப் பூண்).
மார்பு கவசத்தையும் பூண் என்பர்.

பூணூல் இவ்வளவு நீளம்தான் இருக்கவேண்டும் என கட்டுப்பாடு போட்டு அதை நீள அளவை அளக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.

பூணூல் பிராமணர் மட்டும் போடுவதில்லை.
பார்ப்பனர், தச்சர், கொல்லர், (நாஞ்சில்) நாடார்கள், தெலுங்கரில் சில பிராமணரல்லாத சாதிகள் என பலரும் போடுகிறார்கள்.

பறையர்களும் பூணூல் அணிந்ததை 500 ஆண்டுகள் பழமையான நூலான ஞானவெட்டியான் கூறுகிறது.

ஆக பூணூல் பார்ப்பனரின் அடையாளம் இல்லை.

நான் இதற்கு முன்பு பூணூல் பற்றி போட்ட "தொல்காப்பியத்தில் வரும் முப்புரிநூல் பூணூலா?" என்ற பதிவில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்த ஒரு பூணூல் அணிந்த பெண் சிலை படம் போட்டிருந்தேன்.
 
அது பிராமணப் பெண்ணாக இருக்கலாம் என்று சிலர் கூறினார்கள்.

அது சோழ அரசி செம்பியன் மாதேவி சிலையாம்.
(அதாவது ராஜராஜசோழனின் பெரியம்மா)

இச்சிலை Freer Gallery of Art, Washington DC. அமெரிக்காவில் உள்ளதாம்.

திராவிடத்தை எதிர்க்கும் தமிழர்கள் பலரும் அதே திராவிடம் ஊட்டிய பார்ப்பன-வெறுப்பு சாதிவெறிக்கு இரையாகி உள்ளீர்கள்.

  பூணூலை தூக்குக்கயிறாக்கி தமிழர் கழுத்தில் போட்டு
முன்பு திராவிடம் இழுத்தது.
இப்போது தமிழ்தேசியம் இழுக்கிறது.

அதை மீண்டும் நாணேற்றி தமிழ்ப் பகைவர் மீது அம்பெய்வது எப்போது?

மேலும் அறிய,
search பூண்+நூல்= பூணூல் வேட்டொலி
search தொல்காப்பியத்தில் வரும் முப்புரிநூல் பூணூலா?

Friday, 24 March 2017

குருதியில் நனைந்த குமரி - 15

குருதியில் நனைந்த குமரி -15

நாள் 23.08.1954
டெல்லி

ரசாக் மீண்டும் மத்திய உள்துறை அமைச்சரைப் பார்க்கப்போனார்.
மீண்டும் தமிழர்கள் மலையாளிகளால் படும் பாட்டை விவரித்தார்.

கைலாஸ்நாத் கட்ஜூ இடைமறித்து "போதும், இதெல்லாம் ஒரு பிரச்சனையா? நாட்டில் இதைவிட பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன.
நான் நேற்றே நேருவிடம் பேசிவிட்டேன்.
நேரு நிலைமையை முன்பே கணித்து உங்களை போராடாமல் இருக்கச் சொல்லியுள்ளார்.
அதையும் மீறி போராட்டம் நடத்தி கலவரமாக்கிவிட்டு இப்போது வந்து பேசுவதில் எந்த பலனும் இல்லை"

ரசாக் "ஐயா, இது இன்று வெடித்த போராட்டம் இல்லை, 200 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மலையாளிகள் கைக்குப் போனது.
அன்றிலிருந்து எங்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது.
எங்களை போராடவேண்டாம் என்று சொல்ல நேரு யார்?
ஒன்று நேரு தலையிடாமல் இருந்திருக்கவேண்டும்.
அல்லது பிரச்சனையை முடித்துத் தரவேண்டும்.
இது 25 லட்சம் திருவாங்கூர் தமிழர்களின் பிரச்சனை.
நீங்கள் நேருவை நான் சந்திக்க ஏற்பாடு மட்டும் செய்யுங்கள்.
இல்லையென்றால் முழு தமிழினமும் இந்த போராட்டத்தில் குதிக்கும்.
பிறகு நேரு வந்து எங்களைச் சந்திக்கும் நிலை வரும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்"

அப்துல் ரசாக்கின் உறுதியான குரலைக் கேட்ட கட்ஜூ வெலவெலத்துப் போனார்.
பிறகு பொறுமையாகக் கேட்டார் "அப்படி என்னதான் பிரச்சனை இப்போது?"

ரசாக் "நாங்கள் தமிழர்கள், திருவிதாங்கூர் சமஸ்தானமும் அதை ஆட்டுவிக்கும் நம்பூதிரிகளும் 200 ஆண்டுகளாக எங்களை இரண்டாம் தரக் குடிகளாக நடத்தி வருகின்றனர்.
எங்கள் பெண்கள் மேலாடை கூட போடமுடியாதவாறு செய்தனர்.
தமிழர்களின் பாண்டிய அரசின் சிற்றறரசான வேணாடு 1750களில் நம்பூதிரிகளால் வஞ்சகமாகக் கைப்பற்றப்பட்டு அரச குடும்பம் மலையாள மயமாக்கப்பட்டது"

கட்ஜூ "திருவிதாங்கூர் முழுவதுமே தமிழர்களுக்கு சொந்தம் என்கிறீர்களா?"

ரசாக் "ஆம், வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் தெரியும்.
திருவாங்கூர் மன்னர் பெயர்கள் திருவடி என்று முடிந்தால் அவர் தமிழர்.
திருநாள் என்று முடிந்தால் அவர் மலையாளி.
பத்மநாபசாமி கோயிலைக் கட்டிய பால மார்த்தண்ட வர்மன் காலம் வரை அது தமிழ் அரசாகத்தான் இருந்தது.
அப்போது கூட குமரியோ, முல்லைபெரியாறு பகுதியோ வேணாட்டு பகுதியாக இல்லை.
வரை படத்தைப் பாருங்கள்.
நாங்கள் வரலாற்று சான்றுகளை முன்வைத்து முழு திருவிதாங்கூரையும் கேட்க முடியும்.
ஆனால் நாங்கள் முடிந்த அளவு விட்டுக்கொடுத்து தற்போது தமிழ்பேசுவோர் பெரும்பான்மையாக வாழும் பகுதியை தமிழ்மாநிலத்துடன் இணைக்க கோருகிறோம்"

கட்ஜூ "சரி, அப்படி என்றால் நிகழ்கால பிரச்சனைகளைக் கூறுங்கள்"

ரசாக் "நேரு சொல்லியும் நாங்கள் போராடினோம்.
ஏனென்றால் போராடியே ஆகவேண்டிய சூழலில் எல்லா ஏற்பாடுகளும் ஆன பின்னர் கடைசி நேரத்தில் நேருவின் கடிதம் வந்தது.
பெரிய போராட்டமெல்லாம் நடத்தவில்லை.
அமைதியாக ஊர்வலம் நடத்திய எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 30பேர் வரை உயிரிழந்து விட்டனர்"

கட்ஜூ "11 பேர் என்றுதானே செய்திகள் கூறுகின்றன"

ரசாக் "அடையாளம் தெரிந்தோர் 11 பேர். மீதி பிணங்களை மலையாள காவல்துறை அள்ளிக்கொண்டுபோய் எரித்துவிட்டனர்.
மேலும் 100 பேர் வரை படுகாயம் பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எந்த சிகிச்சையும் கிடைக்கமுடியாத படி ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே கிடக்கின்றனர்.
தமிழர்கள் வெளியே தலைகாட்டமுடியாத நிலை  உள்ளது"

கட்ஜூ "கேட்பதற்கு ராணுவ அடக்குமுறை போல உள்ளதே?!
திருவாங்கூர் சமஸ்தானத்திடம் அத்தனை படைபலம் உள்ளதா?"

ரசாக் "ஆம், மலையாள அரசு முன்பே திட்டமிட்டு ஆயுதம் வாங்கி காவல்துறையை பலப்படுத்தி தயாராக இருந்தது.
முன்பு 5 காவலர்கள் நின்ற செக்போஸ்ட்டில் இன்று 60 ஆயுதக்காவலர்கள் உள்ளனர்.
இன்று திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதில் உள்ள ஒவ்வொரு காவல்நிலையத்திலும் 100 பேருக்குக் குறையாமல் போலீஸ் உள்ளது.
அத்தனை பேரும் மலையாளிகள்.
அத்தனை பேருக்கும் ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது.
வட்டாரத்திற்கொரு நிலையான போலீஸ்முகாமும் அதில் 300 ஆயுதக்காவலரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
5,6 ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை.
இதுபோக கலவரத்தை உருவாக்க உள்ளூர் மலையாளிகள் சிலர் அரசின் ஏவல் குண்டர்களாக செயல்படுகின்றனர்"

கட்ஜூ "இது பெரிய பிரச்சனையாக வெடிக்கும் போலிருக்கிறது.
இருக்கின்றன பிரச்சனையில் இன்னொன்று வேண்டாம்.
நீங்கள் நேருவை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்"

ரசாக் "என் மக்கள் அங்கே படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
முடிந்தால் நாளையே சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்"

கட்ஜூ "பார்க்கலாம்"
---------------------------------
24.08.1954
காலை

மெட்ராஸ் காங்கிரஸ் தலைமைச் செயலகம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.எஸ்.கரையாளர் மேசைத் தொலைபேசி அழைத்தது.
எடுத்தார்.

"வணக்கம், நான் நேரு பேசுகிறேன்.
நலம்தானே?"

கரையாளர் "வணக்கம் ஜவஹர் அவர்களே! நலம்தான். நீங்கள் நலம்தானே? என்ன திடீர் அழைப்பு?"

நேரு "இன்று அப்துல் ரசாக் திருவாங்கூர் பிரச்சனை தொடர்பாக என்னை சந்திக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் காங்கிரசில் பலரும் திருவாங்கூருக்கு ஆதரவாக இருப்பதாகவே தோன்றுகிறது.
எனக்கு குழப்பமாக இருக்கிறது.
உங்களிடம் ஆலோசனை கேட்கலாம் என்று தோன்றியது"

கரையாளர் "தமிழக மக்கள் நேசமணிக்கு ஆதரவாக உள்ளனர்.
திருவிதாங்கூரை உடைத்து மலையாளப் பகுதிகளை மலையாள மாநிலத்தோடும் தமிழ்ப் பகுதிகளை மதராஸோடும் இணைப்பதுதான் சரி"

நேரு "இப்படியே போனால் எல்லா சமஸ்தானங்களிலும் பிரச்சனை வரும்.
ஐதராபாத்தில் தெலுங்கானா பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது.
ஒரே மொழிபேசும் தெலுங்கு மக்கள் பிரிந்து தனித்தனி மாநிலம் கேட்கின்றனர்.
இங்கே ஒரே மொழியினர்  ஒரே மாநிலமாக சேர்க்கவேண்டும் என்று போராட்டம்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
நீங்கள் திருவிதாங்கூர் போகவுள்ளீர்கள்தானே?"

கரையாளர் "ஆம், நான் நாளை மறுநாள் திருவிதாங்கூருக்கு காங்கிரஸ் நல்லெண்ணக் குழுவை அழைத்துச் சென்று நேரில் பார்வையிட உள்ளேன்.
நிலவரங்களை அறிந்து உங்களுக்கு கூறுகிறேன்"

நேரு "சரி நாளை மறுநாள் உங்களிடம் பேசிவிட்டு பிறகு ரசாக்கை சந்திக்கிறேன்"
----------------------------
(தொடரும்)