தென் கேரளாவில் தமிழர் பகுதிகள் (வரைபடம்)
ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்ஷல் நேசமணி கேட்டபகுதிகள் சிவப்பாக குறிக்கப்பட்டுள்ளன.
நெடுமங்காடு 60% தமிழர்கள் வாழ்ந்த பகுதி இதை புள்ளிவிபரங்களில் குறிப்பிட்ட நேசமணி பெரும்பான்மையாக இருந்தாலும் அதனை விட்டுக்கொடுத்தார்.
இதில் தற்போதைய கன்னியாகுமரி வட்டங்கள் மற்றும் திருநெல்வேலிக்கு உள்ளேயும் ஒட்டியும் இருந்த பகுதிகள் மட்டுமே கிடைத்தன.
முல்லைப் பெரியாறு அமைந்துள்ள இடுக்கி மாவட்டம்.
திருவனந்தபுரம் அமைந்துள்ள நெய்யாற்றின்கரை ஆகியன கிடைக்கவில்லை.
30 தமிழர்களுக்கும் மேல் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.
1948 முதல் 1956 வரை நேசமணி தலைமையில் நடந்த தீவிரமான அறப்போராட்டங்கள் மற்றும் அவரது தளபதி அப்துல் ரசாக் தமிழகத்து மக்களின் பேராதரவுடன் இராஜாஜி ஜீவானந்தம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் விளைவாக எடுத்த முயற்சிகள் விளைவாக நியாயமாக கிடைக்கவேண்டிய நிலத்தில் பாதி பகுதிகளாவது தமிழகத்திற்கு கிடைத்தது.
மிக நன்று
ReplyDelete