Thursday, 23 March 2017

இந்தியை எதிர்க்கும் 'காலி'களைச் சுட்டுத் தள்ளுங்கள் _ ஈ.வே.ரா

இந்தியை எதிர்க்கும் 'காலி'களைச் சுட்டுத் தள்ளுங்கள் _ ஈ.வே.ரா

ஈ.வே.ரா எழுதுகிறார்.
"ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது.
எதற்காக சட்டம்?
எதற்காக போலீஸ்?
எதற்காக போலீஸ் கையில் தடி? துப்பாக்கி எதற்கு?
முத்தம் கொடுக்கவா வைத்துள்ளாய்?
இது என்ன அரசாங்கம்?
வெங்காய அரசாங்கம்"
(நூல்: கிளர்ச்சிக்குத் தயாராவோம் _ஈ.வே.ரா)

மேற்கண்டது இந்தியெதிர்ப்பு நடந்து முடிந்த பிறகு ஈ.வே.ரா எழுதிய நூல்.

இந்தி எதிர்ப்பு நடந்தபோது ஈ.வே.ரா தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் கொலைகார அரசுக்கு ஆதரவாகவும் எழுதிய கட்டுரைகளின் தலைப்புகள்,

"இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்"
(16.1.1965)

"அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்துமீறிய வன்செயல்"
(28.1.1965)

"திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை"
(10.2.1965)

"போலீசார் அத்து மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே"
(4.3.1965)

"பொள்ளாட்சியில் போராட்டத்தை இராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10பேர் மாண்டனர்."
(13.2.1965)

ஈ.வே.ரா வுக்கு தமிழ் மீது இருந்த வெறுப்பையும் தமிழர் மீது இருந்த கொலைவெறியையும் இதன் மூலம் அறியலாம்.

மூலக்கட்டுரை: 1965ஆம் ஆண்டு மொழிப்போரும் - பெரியாரின் எதிர்ப்பும் _ கதிர் நிலவன்

1 comment:

  1. ராமசாமி நாயக்கரை தோலுரிக்கும் கட்டுரை

    ReplyDelete