Wednesday 8 March 2017

சிங்களனுக்கு பயிற்சி கொடுத்து (அதுவும் தமிழகத்தில்) மீனவனைச் சுடச்சொன்னவன் ஹிந்தியன்

சிங்களனுக்கு பயிற்சி கொடுத்து (அதுவும் தமிழகத்தில்) மீனவனைச் சுடச்சொன்னவன் ஹிந்தியன்

அக்டோபர், 2015 ல் நான்காவது SLINEX 15 (SriLanka INdia EXercise) கூட்டுப்பயிற்சியை இந்திய கடற்படையும், இலங்கை கடற்படையும் மேற்கொண்டது...

இந்த கூட்டுப்பயிற்சியில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் கடலில் துப்பாக்கி சூடு நடத்துவது எப்படி என்பது இதில் ஒரு முக்கிய வகுப்பாக இருந்தது...

இந்த பயிற்சிக்காக கோரா, கிர்பான், சாவித்திரி என்ற மூன்று கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன...

காங்கிரஸ் ஆட்சியின் போது, 2006 ஆம் ஆண்டு வராகா என்ற கப்பலை இலங்கை கடற்படைக்கு அதன் எல்லையை பாதுகாக்க இந்திய அரசு dry lease என்ற பெயரில் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வழங்கியது...
அன்று முதல் அதற்கு சகாரா என்று பெயரிட்டு தனது எல்லையை பாதுகாத்து வந்ததாக சிங்கள அரசு கூறுகிறது...

2009 போர் உச்சத்தில் இருந்த போது இந்தக் கப்பலின் உதவி இன்றியமையாததாக இருந்தது என்று இலங்கை கடற்படையின் ஹைகமாண்டர் கூறியிருந்தார்...

இந்த காலகட்டத்தில் தான் 300 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கப்பற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்...

இப்படி இருக்கையில் மோடி ஆட்சியில், ஆகஸ்ட், 2015 ல், இந்தக் கப்பலை இலங்கை கடற்படைக்கு முழுக்க இலவசமாக வழங்கியது இந்திய அரசு...

அடுத்து நவம்பர், 2015 ல், இலங்கை இராணுவத்துக்கு தொழில்நுட்ப உதவிகளை இந்திய மோடி அரசு வழங்கியது...

அதாவது கப்பல் கொடுக்குறோம்...
ஆயுதம் கொடுக்குறோம்...
தொழில்நுட்ப உதவி கொடுக்குறோம்... அதையெல்லாம் எப்படி பயன்படுத்தனும்னு பயிற்சியும் கொடுக்குறோம்...
இது காங்கிரஸ், பா.ஜ.க என்று வேறுபாடு இல்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது...

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் நோக்கமும் ஒன்றுதான்...

தமிழன் சாகவேண்டும்

பதிவர்: Ramesh Kumar (புலனச் செய்தி)

No comments:

Post a Comment