Sunday 19 March 2017

யார்தான் ஆரியர்? ரொம்ப யோசிக்கவேண்டாம் விடை அருகிலேயே உள்ளது

யார்தான் ஆரியர்?
ரொம்ப யோசிக்கவேண்டாம்

விடை அருகிலேயே உள்ளது.

இன்றும் கைபர்(khyber) போலன் (bolan) கணவாய்களின் அந்தப்பக்கம் வாழும் இனம் எது?

பெர்சிய மொழி பேசும் ஈரானிய இனம்தான்.

ஈரான் மக்கள் தம்மைத்தாமே ஏரியா (Aryia) என்றே இன்றும் அழைத்துக் கொள்கின்றனர்.

ஈரானிய மொழியில் ஏர்யன் என்றால் உயர்ந்த அல்லது மாண்புள்ள என்றவாறு பொருள்படும்

இரான் என்ற சொல்லே ஏர்யன் என்ற சொல்லின் திரிபு என்கிறார்கள்.

  இந்த ஏரியன் என்ற சொல்லைத்தான் ஆர்ய என்ற சொல்லுடன் திரித்து ஆங்கிலேயர் தமது அரசியலுக்காகப் பயன்படுத்தினர்.

(ஆங்கிலேயர் Arya என்பதை ஏரியன் என்றே உச்சரிப்பர்.
இது அரையர் என்ற தமிழ்ச்சொல்லுடனும் ஒத்துப்போகிறது.
தமிழகத்தில் அரிய என்று தொடங்கும் ஊர்களும் உண்டு.
அரியநாடு திருப்பதிக்கு அப்பால் அருவா என்றும்
அதற்கும் வடக்கே ஆரிய என்றும் திரிந்ததாக செந்தமிழ் பேரகராதி யில் பாவாணர் கூறுகிறார்)

ஆங்கிலேயர் கூறியபடி ஆரியர் கைபர் போலன் கணவாய் வழியே வந்தனர்.
இன்றும் ஈரானியப் பேரினமே கைபர் போலனுக்கு அந்தப் பக்கம் வாழ்கிறது.

இன்றும் கைபருக்கு அந்தப்பக்கம் ஈரானிய மூலமொழியான பெர்சிய மொழி.
போலனுக்கு அந்தப்பக்கம் பஷ்த்தோ எனும் ஈரானிய கிளைமொழி.
(பார்க்க: படத்தில் சிவப்புக்குறி)

(வேதகால)சமஸ்கிருதம் உட்பட அனைத்து வடஹிந்திய மொழிகளும் indo-aryan பிரிவின் கீழ் உள்ளன.
இந்த இந்தோ-ஆரியன் பிரிவே indo-iranian என்ற பிரிவின் கீழேதான் வருகிறது.
என்றால், ஆரியம் என்றாலே அது ஈரானுக்கு அடங்கியதுதான்.

(iranian என்று தனிப்பிரிவு உள்ளது.
ஆனால் indian என்ற தனிப்பிரிவு இல்லை.
அதாவது ஹிந்திய கலப்பில்லாத ஈரானிய மொழிகள் உண்டு.
ஈரானியக் கலப்பில்லாமல் வடஹிந்திய மொழியே இல்லை).

அதாவது ஹிந்திய மொழிகள் ஈரானிய மொழியுடன் கலந்து இன்று அந்த கலப்பு மொழிகள்தான் இருக்கின்றன.
அவற்றில் சமஸ்கிருதமும் ஒன்று.

ஆரிய படையெடுப்பு என்பது 2600 ஆண்டுகள் முன்பு பாரசீக மன்னன் சைருஸ் (cyrus) இந்தியா மீது படையெடுத்து சிந்து நதிவரை கைப்பற்றியதைக் குறிக்கலாம்.
அல்லது அவருக்கு முன் ஈரானிய பழங்குடிகள் சிறிய அளவில் படையெடுத்திருக்கலாம்.

ஈரானியர் மட்டுமன்றி கிரேக்கத்திலிருந்து அலெக்சாண்டரும் தனது அரசாட்சியை ஹிந்தியா வரை பரப்புகிறார்.
இவர்களைப் பின்பற்றி பலரும் அடுத்தடுத்து மேற்கு ஹிந்தியாவை படையெடுத்து ஹிந்தியாவிற்குள் முன்னேறுகிறார்கள்.

ஹிந்தியாவின் முதல் ஆரிய அரசு ஆர்யாவர்த்த (Aryavarta) எனப்படும் அரசு இது கைபர் போலன் கணவாய்களுக்கு சற்று தள்ளி இன்றைய ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உருவாகிறது.
(அதாவது சிந்து சமவெளி)

அதாவது ஈரானிய இனம் தன் தாய்நிலத்தைத் தாண்டி சிந்து சமவெளிக்கு வருகிறது.
நாளடைவில் அது தாய்நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டு அருகாமை பூர்வகுடிகளுடன் (தமிழர்களுடன்) கலந்து தனி இனமாக உருவாகிறது.

பிறகு தனக்கென தனி அரசையும் நிறுவிக்கொள்கிறது.
தாய்நிலத்தின் மொழி மற்றும் பழக்கவழக்கங்களைத் தழுவி தனக்கென தனி கலப்பு மொழியையும் தனி சமயத்தையும் அது ஏற்படுத்திக்கொள்கிறது.
(பாவாணர் கூற்றுப்படி சமஸ்கிருதத்தில் 5ல்2 பங்கு தமிழ்)

தம் மொழியில் உயர்ந்த சொல்லான ஏரியரைத் தழுவி ஆரியர் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்கிறது.
ஆரியவர்த்த என்று தனது அரசாட்சிக்கு பெயரிடுகிறது.
பின்னர் நாளடைவில் அரசாட்சி வீழ்ந்து பூர்வகுடிகளுடன் கலந்து கரைந்துவிடுகிறது.

இவர்கள் கலவையாக உருவாக்கியதே இன்றைய அடிப்படை ஹிந்து மதம்.

ஈரானிய மொழிச்சொல்லான ஹிந்த், ஹிந்தூ, ஹிந்துஸ் போன்ற சொற்களே ஹிந்து என்பதன் வேர்ச்சொல்.
இவர்கள் தமிழ்க் கடவுளரை எடுத்துக்கொண்டு புதிய சமயத்தை உருவாக்கி வேதங்களை எழுதியுள்ளனர்.
இது காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்தது.
இதுவே இன்றைய ஹிந்து மதத்தின் அடிப்படை.

இதேபோல தமிழிலிருந்து வேர்ச்சொற்களை எடுத்து இவர்கள் உருவாக்கிய மொழியே சமஸ்கிருதம்.
இது காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்தது.
இதுவே வடயிந்திய மொழிகளுக்கு அடிப்படை.

மேலே சொன்னது ஈரானியர் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமே.

இதே போல கிரேக்கர், சகர்கள் (ஈரானியர்), பார்தியர்(ஈரானியர்), குஷாணர் (சீனர்), ஹூனர் (துருக்கிய மங்கோலியர்), அராபியர், முகலாயர் (துருக்கிய மங்கோலியர்) என வடக்கிலிருந்து பலரும் வரிசையாக மேற்கிலிருந்து படையெடுத்து கைப்பற்றி ஆட்சி செய்து தமது மொழி, மத, கலாச்சார அடையாளங்களைக் கலந்துவிட்டு காணாமல் போயினர்.

(இதில் ஒரு சில மன்னர்கள் தெற்கு வரை முன்னேறினர்.
ஆனால் தமிழகத்தை என்றுமே கைப்பற்றியதில்லை)

நில அமைப்பின் அடிப்படையில் வடக்கே இமயமலை, தெற்கே விந்தியமலை, கிழக்கே தற்போதைய வங்காளம் வரை இக்கலப்பு வடயிந்தியாவில் அதிகம் நடந்து நடந்து வடயிந்திய இனமே கலப்பினமாக மாறிவிடுகிறது.

பிறகு கடல்வழி படையெடுப்பு நடந்தாலும் இனக்கலப்பு தவிர மற்ற தாக்கங்கள் இருந்தன.

ஆக வரலாற்றில் ஆரியர் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக சிறிய அளவிலானது.
ஆரியர் சிந்து சமவெளியை படையெடுத்து கைப்பற்றியதாகத் தோன்றவில்லை.
இயல்பான குடியேற்றம்தான் நடந்திருக்கவேண்டும்.
(சிங்களவர் இலங்கையில் குடியேறியதுபோல)

ஆரியர் என்பார் பழங்கால ஈரானியரே

பிராமணரெல்லாம் ஆரியர் வம்சாவழிகள் என்பது எந்த அடிப்படையும் இல்லாத கருத்து.

அதிலும் தமிழ்ப் பார்ப்பனர்?????

வாய்ப்பேயில்லை.

(பார்ப்பனர்கள் சோழர் காலம் வரை தமிழில் வழிபாடு செய்தனர்.
தாய்லாந்து வரை தமிழிலேயே சைவத்தைப் பரப்பினர்.
சமஸ்கிருதம் அவர்கள் மீது பிறகுதான் திணிக்கப்பட்து.
ஆனாலும் அவர்கள் தமிழை விட்டுக்கொடுத்ததே இல்லை).

ஐரோப்பியர் தமது ஆட்சியை நியாயப்படுத்த "நாங்கள் ஆரியர், ஏற்கனவே நாங்கள் ஆண்டோம், பிராமணர் எங்கள் இனம்" என்று மேக்ஸ்முல்லர் மூலம் கதைகட்டிவிட்டனர்.

இதற்கு ஆதரவு சேர்ந்தது.
உடனே "ஆரியரை எதிர்த்தோர் திராவிடர், அவர்கள் வழிவந்தோரே தென்னிந்தியர்" என்று கால்டுவெல் மூலம் கதைகட்டி பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தினர்.

ஆரிய கருத்தியல் ஹிட்லர் போன்ற மனிதனை உருவாக்கும் என்றோ
திராவிடக் கருத்தியல் கருணாநிதி போன்ற மனிதனை உருவாக்கும் என்றோ அவர்கள் நினைக்கவில்லை.
இதே போலவே சமஸ்கிருத ஹிந்து சமயத்தை உருவாக்கிய ஆரியரும் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று யூகித்திருக்க வாய்ப்பில்லை.

இன்று நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கு என்றோ ஒழிந்துபோன ஆரியரை இழுப்பதும்,
ஆரியருக்கு தொடர்பே இல்லாத பார்ப்பன சமூகத்தின் மீது சாதிய வன்மத்தைக் கொட்டுவதும் எந்த வகையில் தீர்வாகும்?

தென்னிந்தியர் மீதான வெறுப்பின் மீது கட்டமைந்த வடயிந்திய ஆதிக்கமே நடைமுறை ஆரியம் என்று கொள்க.

   தமிழர் மீதான வெறுப்பின் மீது கட்டமைந்த தென்னிந்திய கூட்டு ஆதிக்கமே நடைமுறை திராவிடம் எனக்கொள்க

தமிழர் மீதான வெறுப்பின் மீது கட்டமைந்த தென்னிலங்கை இனவெறியே சிங்களம் என்க.

தமிழியம் என்பது இவ்வனைத்தையும் தனியே எதிர்கொள்ளும் பூர்வகுடிகளின் நடைமுறைக் கொள்கை என்க.

மேலே கூறிய கதை(?) நம்பும்படியாக இல்லையா!

கீழே உள்ள கதையைப் படிக்கவும்.

ஆரியர்கள் கைபர் போலன் வழியே ஆடுமாடு ஓட்டிக்கொண்டு வந்தார்கள்.
பெரிய அரசாங்கம் நடத்திய தமிழர்களை ஏமாற்றி பதவிகளில் அமர்ந்தனர்.
அவர்கள் சிவப்பாக இருந்தார்கள்.
அதனால் தமிழர்கள் மயங்கிவிட்டனராம்.
அவர்கள் சமஸ்கிருதம் பேசினார்கள்.
அதிலே மந்திரம் எழுதி இதுதான் கடவுளுக்குப் புரியும் என்றனர். உடனே எல்லாரும் நம்பிவிட்டனர்.
மனுதர்மம் என்ற நூல் எழுதினார்கள்.
அதில் சாதியை படைத்தனர்.
அதைப் படித்துவிட்டு எல்லாரும் உடனே அடிமையாகிவிட்டனர்.
பிறகு அவர்கள் பூணூலைப் போட்டுக்கொண்டு பூசாரி ஆகி அனைவரையும் சாதியாகப் பிரித்து தொடர்ந்து இன்றுவரை ஆள்கிறார்கள்.

இந்த கதை எப்படி?
நம்பிவிட்டீர்கள்தானே?!

1 comment:

  1. இனக்கலப்பு யுகம் தோறும் இருந்து வந்து இருக்கிறது. சிந்து வெளி மக்கள் -இன்றய பாகிஸ்தான் வட மேற்கு மாகாணம். தமிழர் வசம் இருந்தது. இவர்களும் புலம் பெயர்ந்தனர், நில நடுக்கம் காரணமாய். தரை வழியே இரானியர், அராபியர் வணிகம் செய்யவும், ஆக்ரமிப்பு செய்யவும் பண்டைய காந்தகாருக்குள் நுழைகின்றனர். அதே போல் சமய ஆதிக்கங்களும் திணிப்பு வேலையை செய்கின்றனர். வட மேற்குதித்த சமயங்களில் சமணம் இந்திய சமூகத்தை சார்ந்தது . அது போல் கிழக்குதித்த "பௌத்தம்" இந்திய சமூகத்தை சார்ந்தது.

    ReplyDelete