Wednesday 15 March 2017

யூகலிப்டஸ் இன்னொரு சீமைக் கருவேல மரம்

யூகலிப்டஸ் இன்னொரு சீமைக் கருவேல மரம்

1850 ஆம் காலகட்டங்களில் யூக்கலிப்டஸ் மரம் ஆஸ்திரேலியாவில் இருந்து தருவிக்கப்பட்ட blackwood and silver warde என்ற வகையை சார்ந்தது,
எதற்காக இந்த மரம் இறக்குமதி செய்யப்பட்டதென்றால் தேயிலை தோட்டங்களில் உள்ள அதிக ஈரப்பதம் தேயிலை வளரவிடாமல் தடுத்தது...

இந்த யூக்கலிப்டஸ் மரத்திற்கு Natural Borewell இன்ற மற்றொரு பெயரும் உண்டு,
அதாவது இதன் வேர்கள் 30அடி வரை செல்லும்,
ஒரு நாளைக்கு ஒரு மரம் சுமார் 90 லிட்டர் நிலத்தடி  நீரை உறிஞ்சும்...
ஆகையால் தேயிலை நடவிற்காக வெள்ளைக்காரர்களால் நடப்பட்டது,

1950 களில் இது நீலகிரி மாவட்டத்தில் பரவலாக நடத்துவங்கினர் அங்குள்ள ரேயான் தொழிற்சாலைக்கு எரி விறகுகளாக பயன்படுத்துவதற்கு, தேயிலை தோட்டங்களை தாண்டி சமவெளிகள்,தனியார் நிலங்கள் மற்றும் கிராமங்களில் பரவலாக நடத்துவங்கினர் விக்கிகளுக்காக பயன்படுத்த...

1980 களில் ஒரு மிகப்பெரிய வறட்சி தாக்கியது நீலகிரி மாவட்டத்தை, அன்று அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்த பொழுது இந்த யூகலிப்டஸ் மரங்களே காரணம் என்று அறியப்பட்டு அதை நட மாநில அரசு தடைவிதித்தது,

இதற்காக பெரிதும் போராடி விழிப்புணர்வை ஏற்படுத்தியது வேணுகோபால் அவர்களின் தலைமையில் உருவான நீலகிரியை காப்போம் என்ற அமைப்பினரால்...

இன்று அதே யூகலிப்டஸ் மரத்தை வனத்துறை மற்றும்TNPL நிறுவனமும் இணைந்து தமிழகம் முழுவதும் குத்தகை அடிப்படையில் விவசாய நிலங்களை பெற்றுக்கொண்டு இத்தனை ஆண்டுகளுக்கு வளர்த்து அவர்களுக்கு வாடகை வழங்கி வருகின்றனர்...

ஏற்கனவே மழை பொய்த்து கடும் வறட்சி ஏற்படும் சூழலில் இதை அரசாங்கமும் ஊக்குவிக்கிறது,

இப்பொழுது தான் சீமைக்கருவேல மரத்தின் தீமைகளை வலியுறுத்தி அதை நீக்க ஆணை பெற்றிருக்கும் வேலையில் அடுத்ததாக இன்னொரு தீமை...

இது சீமைக் கருவேல மரத்திற்கு சற்றும் சளைத்தது அல்ல

யூகலிப்டஸ் மரம் வளரும் இடத்தில் அதை சுற்றி எந்தவொரு தாவரத்தையும் வளரவிடாது,
காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறியும் தன்மை வாய்ந்தது,
இதன் இலைகளை கால்நடைகள் உண்ணாது
அதுபோக இதன் இலைகள் எளிதில் மக்காது,
சராசரியாக 5 ஆண்டுகளில் 35 சதவிகத நிலத்தடி நீரை உறியும் சக்தி வாய்ந்தது...

காயோ பழமோ தராது, வெட்டினால் விறகுக்காக மட்டும் ஆகும்.

தமிழ் மண்ணை மலடாக்கியே தீருவோம் என்று அரசாங்கங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன.

# மண் வளம் காப்போம்,
நிலத்தடி நீரை காப்போம்,
இந்த யூகலிப்டஸ் மரத்தை நம் மண்ணை விட்டு அகற்றுவோம்

தகவல்கள்: காந்தி அம்ஸா

No comments:

Post a Comment