ஆரியர் பற்றி இலக்கியங்களில்...
மாணிக்கவாசகர் சிவனை 'பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே' என்று அழைத்துள்ளார்.
இராமனுக்காக அனுமன் செய்தசெயலை கம்பர் அழைத்துள்ளார்.
'ஆரியற்காக வேகி' என்று இராமனை கம்பர் வணங்கப் படத்தக்கவன் என்ற பொருளில் எழுதியுள்ளார்.
பெரும்பதும்பனார் (குறுந்தொகை) 'யாரியர் கயிறொடு பறையில் கால்பொரக் கலங்கி' என்று ஆரியர் பறையடித்து நடனமாடுவோராகக் குறித்துள்ளார்
பரணர் (அகநானூறு) என்று பாணனுடன் மல்யுத்தம் புரிந்த ஆரியப் பொருநன் எனும் வீரனைக் குறிப்பிடுகிறார்.
'பாணன் மல்லடு மார்பின் வலியுறவருந்தி யெதிர்தலைக் கொண்ட வாரியப் பொருநன் நிறைதிரள் முழவுத்தோள்'
அதே பரணர் (அகநானூறு) வேறொரு இடத்தில் ஆரியர் பெண்யானைகளைப் பழக்கி காட்டுக்குள் விட்டு ஆண்யானை மயக்கி கூட்டிவரச் செய்வதைக் கூறுகிறார்.
'ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு'
ஆரிய அரசன் பிரகத்தன் தமிழரின் களவு நெறியைக் குறை கூறினான்.
அவனுக்கு அவ்வொழுக்கம் திருமணத்தில் முடியும் என்று கபிலர் 'குறிஞ்சிப் பாட்டு' பாடினார்.
என்றால், ஆரியன் என்றால் சிவனா? இராமனா? பறைக்கூத்தாடியா? மற்போர் வீரனா? யானைப் பாகனா? அரசனா?
ஆரியர் என்பது பல்வேறு காலங்களில் பல்வேறு பொருளில் பல்வேறு மக்களை குறித்துள்ளது.
அதேபோல பார்ப்பனர் ஆரியர் என்பதற்கு தமிழ் இலக்கியத்தில் எந்த சான்றும் இல்லை.
ஆனால் ஆரியநாடு பற்றி சிற்றிலக்கிய குறிப்பு உள்ளது.
'திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே'
'சந்திர சூடர் தென் ஆரிய நாடே'
'ஈசர் ஆரிய நாடு எங்கள் நாடே'
என்றெல்லாம் குற்றாலக் குறவஞ்சி ஆரியநாடு என்று குற்றால மலையையே கூறுகிறது.
கடைசியாக, தமிழின் முதல் கிறித்துவ காப்பியம் 'ஆரிய வளன்தன் காதை அறம் முதல் விளங்கச் சொல்வாம்' என்று ஏசுவை ஆரியன் என்றுதான் கூறுகிறது.
Wednesday 15 March 2017
ஆரியர் பற்றி தமிழ் இலக்கியங்களில்..
Subscribe to:
Post Comments (Atom)
ஆரியன் என்றால் வந்தேறி என்று பொருள் சரி தானே
ReplyDeleteஅருமையான ஆய்வு. ஆனால் இன்னும் பாதி அறிவு மயங்கிய அறைவேற்காடுகள் - ஆரியன் திராவிடன் என்று இல்லாத இனப் பிரிவினை செய்கின்றன.
ReplyDelete