Wednesday, 1 March 2017

தமிழ்நாடு இன்னொரு சோமாலியா - மீண்டும் வருகிறது மீத்தேன் என்கிற ஹைட்ரோகார்பன் திட்டம்

தமிழ்நாடு இன்னொரு சோமாலியா

மீண்டும் வருகிறது மீத்தேன் என்கிற ஹைட்ரோகார்பன் திட்டம்

(புள்ளிவிபரங்களுடன் சுருக்கமான பதிவு)

* இந்த திட்டம் அமெரிக்கா ஆல்திரேலியா போன்ற பல வெளிநாடுகளில் தடைவிதிக்கப்பட்ட ஒன்று

* இதை எடுக்கப்போவது அரசாங்கம் இல்லை.
மத்திய அரசால் விடப்படும் டென்டர் எடுத்து வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் மீத்தேன் எடுத்து அவர்களே விலைவைத்து விற்றுக்கொள்வர்.
இதனால் 4000 கோடி வரை சம்பாதிப்பார்கள்.
மத்திய அரசுக்கு 1000 கோடி மட்டுமே கிடைக்கும்

* மீத்தேனை எரிபொருளாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளில் மட்டுமே உள்ளன.
ஆக இது வெளிநாட்டு எரிபொருள் கம்பெனிகள் அரசியல்வாதிகள் மூலம் இங்கே கொண்டுவந்த திட்டமே ஆகும்.

* ஒருமுறை மீத்தேன் (எ) ஹைட்ரோகார்பன் எடுத்த நிலத்தில் புல் பூண்டு கூட விளையாது.
குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காது.

* ஆழ்துளை போட்டு நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டு ரசாயனங்களைப் பாய்ச்சுவார்கள்.
கீழே வேதிவினை நடந்து மீத்தேன் (எ) ஹைட்ரோகார்பன் வெளியே வரும்.
அதனுடன் பல விச வாயுக்களும் வெளிவரும்.
கீழே வெற்றிடம் ஏற்படும்.
கடலுக்கு அருகே இருந்தால் கடல் நீர் புகும்.
கடலிலிருந்து தொலைவாக இருந்தால் நிலம் அமிழ்ந்து நிலநடுக்கம் ஏற்படும்

* பல நாடுகளில் பூமிக்கடியில் இருந்து எரிவாயு எடுக்கும் திட்டங்கள் செயல்படுகின்றன.
ஆனால் அவை பாலைவனப் பகுதிகளில் அமைந்துள்ளன.
1960 களில் விவசாய நாடாக இருந்த சோமாலியா மக்கள் இத்தகைய விவசாயத்தை அழிக்கும் திட்டங்களை வேடிக்கை பார்த்ததால் இன்று பஞ்சத்தில் செத்துவருகின்றனர்.

* இங்கே விவசாயத்தை அழிப்பதும் மேலைநாடுகளுக்கே லாபம் தரும்.
உணவுக்கும் குடிநீருக்கும் அவர்களிடமே கையேந்தும் நிலை வரும்.
அவர்களின் மரபணு மாற்ற காய்கறிகளை இயற்கைக்கு புறம்பான உணவுப்பொருட்களை நாம் வாங்கவேண்டி இருக்கும்.
தற்போதே அழிந்துவரும் விவசாயத்தால் உக்ரைன் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய், ரஸ்ய கோதுமை, தைவான் அரிசி என்று இறக்குமதி செய்து வருகிறோம்.

* மீத்தேன் வாயு தமிழகத்தின் நிலக்கரி வளத்தைக் கொள்ளையடிக்க ஒரு தடையாக இருக்கிறது.
நிலக்கரி தோண்டும்போது மீத்தேன் வெளியேறி அதை சுவாசித்து இறந்தோர் பலர்.
மீத்தேன் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் தன்மையுடையது.
அதனால் பல பயங்கர வெடி விபத்துகளும் நடந்துள்ளன.
எனவே 2016-2017 என ஒரு ஆண்டிற்குள் படிப்படியாக கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் என 207 கிணறுகள் தோண்ட 'மத்திய சுற்றுச்சூழல் துறை' அவசர அவசரமாக அனுமதி வழங்கியுள்ளது.
மக்கள் கருத்தினைக் கேட்காமலேயே மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்திவிட்டதாக அத்துறையின் அமைச்சர் மாதவராவ் தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தில் புதுச்சேரிக்கு அருகே  முதல் பாகூர் முதல் திருவாரூர் அருகே ராஜமன்னார்குடி  வரை உள்ள நிலக்கரி வளத்தைத் தோண்டி எடுக்க வசதியாக,
மீத்தேனை வெளியேற்றுவது கொள்ளைக்கார மத்திய அரசுக்கு அவசியம் ஆகிறது.
மீத்தேன் எடுத்த பிறகு விவசாயம் அழிந்து மக்கள் வெளியேறிவிடுவார்கள்.
மக்களை வெளியேற்ற மெனக்கிடவேண்டாம்.
  எனவே இது தென்தமிழ்நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல.

* மீத்தேன் பெரும்பாலும் பாறைக்குக் கீழ்தான் இருக்கும்.
அந்த பாறையை உடைக்க 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்ற செயல்பாடு மூலம் ரசாயனங்களைச் செலுத்தி உயர் அழுத்தத்தை உருவாக்கி வெடிக்க வைப்பர்.
இது நிலநடுக்கத்தையோ எரிமலைக் குழம்பு வெளியேற்றத்திற்கோ வழிவகுக்க வாய்ப்புள்ளது.

* தமிழகத்தை கருவறுப்பதில் மத்திய அரசை விட மும்முரமாக இருக்கிறது கர்நாடகா.
ஏற்கனவே தமிழகத்திற்கு நியாயமாக தரவேண்டிய தண்ணீரைத் தராமல் வீணாக தேக்கிவைத்து நமது நெற்களஞ்சியத்தில் 40% விவசாயத்தை அழித்த கர்நாடகா. தற்போது விதிமுறைகளை மீறி காவிரியில் அணைகட்டுவதைத் துரிதப்படுத்தியுள்ளது.
மத்திய அரசும் தமிழகத்திற்கு தரவேண்டிய பஞ்ச நிவாரண நிதியை பஞ்சமே ஏற்படாத கர்நாடகாவுக்கு கொடுத்துவிட்டது.
தற்போது தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை முன்னின்று செய்வது கர்நாடக அரசியல்வாதி ஜி.மல்லிகார்ஜுனப்பாவின் மகன்களான ஜி.எம்.சித்தேஸ்வரா மற்றும் ஜி.எம்.லிங்கராஜு ஆகியோர் நடத்தும் ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனம்.
இவர்கள் இந்துத்துவ பின்னணி உடைய கன்னட இனவெறியர்கள்.

* மீத்தேன் திட்டத்திலும் சரி ஹைட்ரோகார்பன் திட்டத்திலும் சரி கையெழுத்திட்டு தமிழகத்தின் வாழ்வாதாரத்தைத் தாரைவார்த்தது தெலுங்கு வம்சாவழிகளான கருணாநிதி மற்றும் ஸ்டாலின்.

* இந்த அழிவில் கிடைக்கும் சொற்ப லாபத்தைக் கூட நமக்குத் தரமாட்டார்கள்.
தமிழகத்தின் நிலக்கரி வளத்தைச் சுரண்டி நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரம் 70% அண்டை மாநிலங்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது.
தமிழக அரசு தனியாரிடம் இருமடங்கு பணம்கொடுத்து மின்சாரம் வாங்குகிறது.
இதனால் தமிழகம் இரண்டு மடங்கு கடனாளி ஆகிவிட்டது.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 14000 கடன் உள்ளது.
ஆக எந்த மத்திய அரசின் திட்டமும் நமக்கு அழிவையும் மற்ற மாநிலங்களுக்கு லாபமும் தருவதாகவே அமைகிறது.

* ஒருவேளை நிலநடுக்கமோ விசவாயு கசிவோ பஞ்சமோ ஏற்பட்டால் மத்திய அரசு கடுகளவும் உதவி செய்யாது என்பது வரலாற்றில் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, சென்னையில் வெள்ளம் வந்தபோது மத்திய அரசு எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசு 5,000 கோடி நிவாரணத்தொகை கேட்டது.
ஆனால் மத்திய அரசு போட்ட பிச்சை வெறும் 1,000 கோடி.
அந்த ஆண்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு கட்டியிருந்த வரி எவ்வளவு தெரியுமா?
85,000 கோடி.

* வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படும் தமிழகம், வெடிவைத்து சுரங்கம் தோண்டப்படும் நியூட்ரினோ,
பல்லாயிரம் தலைமுறைகளைப் பாதிக்கும் அணுவுலைகள்,
மீத்தேன் போன்ற நிலத்தடி வளங்களை சுரண்டும் திட்டங்கள்,
சுற்றிவளைத்து விவசாய நிலங்கள் வழியே கொண்டுசெல்லப்படும் கெயில் குழாய்கள் திட்டம் என நாசகார பேரழிவு திட்டங்களின் சோதனைக்கூடமாகவும் ஹிந்தியாவின் குப்பைத்தொட்டியாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

* மீத்தேன் திட்டத்தை மக்கள் ஒன்றிரண்டு திரண்டு பட்டினி கிடந்து பிழைப்பை விட்டுவிட்டு போராடி தடுத்துநிறுத்தினர்.
  மீத்தேனை(CH4), ஹைட்ரோகார்பன் என்று பெயர் மாற்றியதன் மூலம் பட்டபாடையெல்லாம் வீணாக்கிவிட்டனர்.
இப்போது மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
உயிரைக் கொடுத்து போராடவேண்டும்.

* இறுதியாக ஒரு கேள்வி,

சிங்களவராவது இனவழிப்பு செய்கிறார்கள்.
அதாவது தமிழனத்தைக் கொன்றுவிட்டு அந்த நிலத்தை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

ஆனால் ஹிந்தியாவோ மண்ணோடு சேர்த்து இனத்தை அழிக்க வெறிகொண்டு அலைகிறது.
இது மனிதநேயத்திற்கு மட்டுமன்றி இயற்கைக்கே எதிரானதாகும்.

வளர்ச்சியைத் தராவிட்டாலும் பரவாயில்லை.
பாதுகாப்பு தராவிட்டாலும் பரவாயில்லை.
கொள்ளையடித்தாலும் பரவாயில்லை.
ஆனால் கட்சிகள் பாகுபாடின்றி தமிழ் மக்களின் உணவையும் தண்ணீரையும் பிடுங்குவதில் குறியாக இருக்கும் ஹிந்திய, திராவிட ஆட்சிகளை இனியும் நம்பவேண்டுமா?
பணத்திற்காக ஒரு இனத்தையே பூமியின் ஒரு பகுதியையே காவு கேட்கும் இந்த நாசகார இந்தியநாடு நமக்குத் தேவையா?
நமக்கு சம்பந்தமே இல்லாத ஒருவன் ஆண்டால் நம்மேல் அக்கறை இல்லாத திட்டங்கள்தான் திணிக்கப்படும்.

தமிழரே சிந்திப்பீர்!

தமிழர்நாடு சுதந்திரத்திற்காப் போராடுவீர்!

நம் மண்ணில் பிறந்த ஒரு மண்ணின் மைந்தனே எவருக்கும் அடிபணியாத ஆட்சி நடத்தி நம்மை ஆண்டால் இது நடந்திருக்குமா?

No comments:

Post a Comment