பூணூல் = வில்லின் நாண்
பூ + நூல் = பூ'நூ'ல் என்றுதானே வரவேண்டும்
ஏன் பூ'ணூ'ல் என்று எழுதுகிறோம்?
யோசித்ததுண்டா?
அது ஏன் இவ்வளவு நீளம் இருக்கிறது?
அந்நூல் பிராமண அடையாளம் மட்டும்தான் என்றால் மார்பில் சிறிதாக இருந்தால் போதுமே!
ஏன் தோளிலிருந்து குறுக்காக இடுப்பையும் தாண்டி இவ்வளவு நீளம் இருக்கவேண்டும்?
யோசித்ததுண்டா?
நூல் என்றால் ஒரு நூல் போதுமே ஏன் முறுக்குக் கயிறு போல மூன்று (அல்லது ஆறு) நூல்களைப் பிண்ணிபோடவேண்டும்.
யோசித்ததுண்டா?
ஏனென்றால் அது நீளமான வில்லின் நாண்.
பலமானதாக இருக்க அதை மூன்று நூல்களால் பிண்ணி அணிந்துள்ளனர்.
பூண் என்பது வில்லின் இருமுனையிலும் மாட்டப்படும் உலோகக் கவசத்தையும் குறிக்கும்.
இதில் மாட்டப்பட்டு இழுக்கப்படுவதே பூணூல்.
போர் வீரர்கள் முன்னங்கையிலும் வெட்டவரும் வாளைத் தடுக்க பூண் அணிந்திருப்பர் (உலக்கைப் பூண்).
மார்பு கவசத்தையும் பூண் என்பர்.
பூணூல் இவ்வளவு நீளம்தான் இருக்கவேண்டும் என கட்டுப்பாடு போட்டு அதை நீள அளவை அளக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.
பூணூல் பிராமணர் மட்டும் போடுவதில்லை.
பார்ப்பனர், தச்சர், கொல்லர், (நாஞ்சில்) நாடார்கள், தெலுங்கரில் சில பிராமணரல்லாத சாதிகள் என பலரும் போடுகிறார்கள்.
பறையர்களும் பூணூல் அணிந்ததை 500 ஆண்டுகள் பழமையான நூலான ஞானவெட்டியான் கூறுகிறது.
ஆக பூணூல் பார்ப்பனரின் அடையாளம் இல்லை.
நான் இதற்கு முன்பு பூணூல் பற்றி போட்ட "தொல்காப்பியத்தில் வரும் முப்புரிநூல் பூணூலா?" என்ற பதிவில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்த ஒரு பூணூல் அணிந்த பெண் சிலை படம் போட்டிருந்தேன்.
அது பிராமணப் பெண்ணாக இருக்கலாம் என்று சிலர் கூறினார்கள்.
அது சோழ அரசி செம்பியன் மாதேவி சிலையாம்.
(அதாவது ராஜராஜசோழனின் பெரியம்மா)
இச்சிலை Freer Gallery of Art, Washington DC. அமெரிக்காவில் உள்ளதாம்.
திராவிடத்தை எதிர்க்கும் தமிழர்கள் பலரும் அதே திராவிடம் ஊட்டிய பார்ப்பன-வெறுப்பு சாதிவெறிக்கு இரையாகி உள்ளீர்கள்.
பூணூலை தூக்குக்கயிறாக்கி தமிழர் கழுத்தில் போட்டு
முன்பு திராவிடம் இழுத்தது.
இப்போது தமிழ்தேசியம் இழுக்கிறது.
அதை மீண்டும் நாணேற்றி தமிழ்ப் பகைவர் மீது அம்பெய்வது எப்போது?
மேலும் அறிய,
search பூண்+நூல்= பூணூல் வேட்டொலி
search தொல்காப்பியத்தில் வரும் முப்புரிநூல் பூணூலா?
Saturday, 25 March 2017
பூணூல் = வில்லின் நாண்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment