Showing posts with label பூணூல். Show all posts
Showing posts with label பூணூல். Show all posts

Thursday, 5 October 2017

பூணூல் போட்டக் குயவர்

பூணூல் போட்டக் குயவர்
---------------------------------------

வேறு எந்த சாதியையும்
அவன்-இவன்,
அந்த பய -இந்த பய,
அந்த புத்தி - இந்த புத்தி,
அதுக - இதுக
என்று பேசினால் பிற்போக்கு

ஆனால்,

பார்ப்பனர்களை
பாப்பான்,
பாப்பாரப்பய,
பார்ப்பன புத்தி, குடுமி,
பூணூல்,
அவாள்,
என்றெல்லாம் பேசினால் அது மட்டும் முற்போக்கு!

இப்பொது முற்போக்கிற்கு வந்த சோதனையைப் பாருங்கள்!

1837 ல் வரையப்பட்ட இந்த ஓவியம் பூணூல் போட்டபடி ஒரு குயவர் பானை செய்யும் காட்சியை கண்முன் நிறுத்துகிறது.
"Seventy-two Specimens of Castes in India" எனும் புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது.

நம்புங்க மக்களே!
பூணூல்னா பார்ப்பான்!
ஒரு பூணூல் ஒரு கோடி ரூபாய்!
அது போட்டவன் உயர்ர்ர்ர்ர்ர்சாதி!
சமஸ்கிருத ஆரியனின் அடையாளம்!
பூணூல்! பூணூல்! பூணூல்!

Saturday, 25 March 2017

பூணூல் = வில்லின் நாண்

பூணூல் = வில்லின் நாண்

பூ + நூல் = பூ'நூ'ல் என்றுதானே வரவேண்டும்

ஏன் பூ'ணூ'ல் என்று எழுதுகிறோம்?

யோசித்ததுண்டா?

அது ஏன் இவ்வளவு நீளம் இருக்கிறது?
அந்நூல் பிராமண அடையாளம் மட்டும்தான் என்றால் மார்பில் சிறிதாக இருந்தால் போதுமே!
ஏன் தோளிலிருந்து குறுக்காக இடுப்பையும் தாண்டி  இவ்வளவு நீளம் இருக்கவேண்டும்?

யோசித்ததுண்டா?

நூல் என்றால் ஒரு நூல் போதுமே ஏன் முறுக்குக் கயிறு போல மூன்று (அல்லது ஆறு) நூல்களைப்  பிண்ணிபோடவேண்டும்.

யோசித்ததுண்டா?

ஏனென்றால் அது நீளமான வில்லின் நாண்.
பலமானதாக இருக்க அதை மூன்று நூல்களால் பிண்ணி அணிந்துள்ளனர்.

பூண் என்பது வில்லின் இருமுனையிலும் மாட்டப்படும் உலோகக் கவசத்தையும் குறிக்கும்.
இதில் மாட்டப்பட்டு இழுக்கப்படுவதே பூணூல்.

போர் வீரர்கள் முன்னங்கையிலும் வெட்டவரும் வாளைத் தடுக்க பூண் அணிந்திருப்பர் (உலக்கைப் பூண்).
மார்பு கவசத்தையும் பூண் என்பர்.

பூணூல் இவ்வளவு நீளம்தான் இருக்கவேண்டும் என கட்டுப்பாடு போட்டு அதை நீள அளவை அளக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.

பூணூல் பிராமணர் மட்டும் போடுவதில்லை.
பார்ப்பனர், தச்சர், கொல்லர், (நாஞ்சில்) நாடார்கள், தெலுங்கரில் சில பிராமணரல்லாத சாதிகள் என பலரும் போடுகிறார்கள்.

பறையர்களும் பூணூல் அணிந்ததை 500 ஆண்டுகள் பழமையான நூலான ஞானவெட்டியான் கூறுகிறது.

ஆக பூணூல் பார்ப்பனரின் அடையாளம் இல்லை.

நான் இதற்கு முன்பு பூணூல் பற்றி போட்ட "தொல்காப்பியத்தில் வரும் முப்புரிநூல் பூணூலா?" என்ற பதிவில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்த ஒரு பூணூல் அணிந்த பெண் சிலை படம் போட்டிருந்தேன்.
 
அது பிராமணப் பெண்ணாக இருக்கலாம் என்று சிலர் கூறினார்கள்.

அது சோழ அரசி செம்பியன் மாதேவி சிலையாம்.
(அதாவது ராஜராஜசோழனின் பெரியம்மா)

இச்சிலை Freer Gallery of Art, Washington DC. அமெரிக்காவில் உள்ளதாம்.

திராவிடத்தை எதிர்க்கும் தமிழர்கள் பலரும் அதே திராவிடம் ஊட்டிய பார்ப்பன-வெறுப்பு சாதிவெறிக்கு இரையாகி உள்ளீர்கள்.

  பூணூலை தூக்குக்கயிறாக்கி தமிழர் கழுத்தில் போட்டு
முன்பு திராவிடம் இழுத்தது.
இப்போது தமிழ்தேசியம் இழுக்கிறது.

அதை மீண்டும் நாணேற்றி தமிழ்ப் பகைவர் மீது அம்பெய்வது எப்போது?

மேலும் அறிய,
search பூண்+நூல்= பூணூல் வேட்டொலி
search தொல்காப்பியத்தில் வரும் முப்புரிநூல் பூணூலா?

Thursday, 3 March 2016

தொல்காப்பியத்தில் வரும் முப்புரிநூல் பூணூலா?

தொல்காப்பியத்தில் வரும் முப்புரிநூல் பூணூலா?

நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய (தொல்.3: 615)

நூல், கரகம், முக்கோல், மணை ஆகியன அந்தணர்க்கு உரியன அவற்றை கையில் எடுத்துச் சென்றதாகவே என்று கூறுகிறார் தொல்காப்பியர்.

ஆக இதில் வரும் நூல் பூணூல் என்று குதிக்கிறது 'தமிழன் எல்லோரும் சாதிவெறியன்' என்று கூறும் வந்தேறிக் கூட்டம்.

புரிநூல் என்பது சிறிய நூல்களைப் பிண்ணி கிடைக்கும் கயிறு.
அதிக எடையைத் தூக்க அதிக நூல்களைப் பிண்ணவேண்டும்.

முப்புரிநூல் என்பது மூன்று சிறிய நூல்களால் (அந்த காலத்தில் நூல் இத்தனை மெல்லியதாக இல்லை) பிண்ணப்பட்ட சிறிய கயிறு.

இதன் மூலம் கரகம் எனப்படும் சிறிய பானையை (கமண்டலம்?) கட்டி கைகளில் தூக்கிச்சென்றுள்ளனர்.

கல்பொறிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்ற நல்கி வர
(மதுரைக் காஞ்சி. 483-484)

கல்லினால் ஓட்டைபோட்ட அளவு வாயினை உடைய கரண்டையை (கரகத்தை) பலநூல்களால் பிண்ணிய சிமிலி (கயிறு) கொண்டு கட்டி தூக்கிச் சென்றது கூறப்பட்டுள்ளது

முனிவர்களை ‘சிமிலிக் கரண்டையான்’ என்கிறது மணிமேகலை (3: 86)

இந்த சிமிலியினால் விளக்குகளையும் எடுத்துச் சென்றிருக்கலாம். அதுவே சிமிலி விளக்கு என்றாகியிருக்கலாம்.

நன்றி: முனைவர் ஜ.பிரேமலதா.
-------------------------

ஆக பூணூல் என்பது பூண்+நூல்.
பூண் என்றால் கவசம். உள்ளீடற்ற உருளை வடிவில் ஒரு பக்கவாய் பெரிதாக இருக்கும்.

வில்லின் இருமுனையிலும் பூண் மாட்டுவர். மாட்டுவண்டியில் மாட்டின் தோளில் அமரும் மரத்தூணின் இருமுனைகளிலும் (டம்ளர் வடிவ) பூண் மாட்டியிருப்பர்.
துப்பாக்கி பிடியிலும் பூண் மாட்டியிருப்பர்.
போர் வீரர்கள் இரு முன்னங்கைகளிலும் வாளைத் தடுக்க (பெரிய நீளமான வளையல் போன்று) பூண் அணிந்திருப்பர்.

ஆக வில்லின் இருமுனையிலும் (இரு பூண்களிலும்) மாட்டி ஏற்றப்படும் நாண் பூணூல் ஆகும்.
இந்த நீளமான நூலை போர் வீரர்கள் உடலில் குறுக்காக அணிந்திருப்பர்.

படம்: பூணூல் அணிந்த பெண் (பிற்கால சோழர் காலம்)

Sunday, 18 October 2015

பூண்+நூல்=பூணூல்

பூண்+நூல் என்பதே பூணூல்

அதாவது வில்லின் இருமுனைகளிலும் பொருத்தப்படும் உலோகம் (கவசம்) பூண் எனப்படும்.
(துவக்கின் கைப்பிடியையும் கூட பூண் என்பர்)

அக்கால வில்வீரர்கள் சற்று வளைந்த ஒரு தடியை கையில் வைத்திருப்பர்.
பூணூல் மார்பில் தரித்திருப்பர்.

தாக்குதல் நடத்த வேண்டிவந்தால் தடியில் இருபக்கமும் பூணூலை மாட்டி வில்லாக்கிவிடுவர்.

விற்கள் அனைத்தும் ஒரே அளவில் இருந்திருக்கவேண்டும்.
ஆக இந்த நூலின் நீளம் குறிப்பிட்ட அளவாக இருந்திருக்கவேண்டும்.
எனவே இந்நூல் அளவைக்காகவும் பயன்பட்டது.
(மங்கோலியர் வண்டிச் சக்கரங்களை குறித்த அளவினதாக்கி அதை பயன்படுத்தியது போல).

இலக்கியங்களில் பார்ப்போம்.

பசும்பூண்:-
இது மார்பில் அணியும் பச்சைநிறப் பூண்.
இந்தக் கவசப் பூண் போரின்போது இவன் அரசன் என்பதைக் காட்டுவதாய் அமைந்தது.
இதனை இங்கு வரும் சொல்லாட்சிகளால் உணரலாம்.

*பசும்பூண் வேந்தர்
[ நற்றிணை 349 ]
*பசும்பூண் சோழர்
[ நற்றிணை 227 ]
*பசும்பூண் கிள்ளிவளவன்
[ புறம் 69 ]
*பசும்பூண் ஆதன்ஓரி
[ புறம் 153 ]
*பசும்பூண் செழியன்
[ புறம் 76 ]
*பசும்பூண் பாண்டியன்
[குறுந்தொகை 393 ]
*பசும்பூண் பொறையன்
[ அகம் 303 ]

பொலம்பூண்
இது பொன்னால் செய்யப்பட்ட பூண் கவச அணி,
இந்த அணிகலனை அணிந்திருந்தவர் என்று சங்கநூல்களில் குறிப்பிடப்படுவோர் பின்வருமாறு.

*பொலம்பூண் வேந்தர்
[ பதிற்றுப்பத்து 64-2]

*பொலம்பூண் ஐவரும் மற்றும் பல குறுநில மன்னர்களும் கூடியிருந்து தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுச்செழியனை வாழ்த்தினர்.
[ பரிபாடல் 13-10 ]

*பொலம்பூண் எவ்வி -
நீழல் என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட கொடையாளி அரசன்
[ மதுரைக்காஞ்சி 775 ]

*பொலம்பூண் எழினி
-ஆலங்கானப் போரில் நெடுஞ்செழியனைத் தாக்கிய எழுவர் கூட்டணியில் ஒருவன்
[ அகநானூறு 366-12 ]

*பொலம்பூண் கிள்ளி
- காவிரிப்பூம்பட்டினத்து அரசன் கோசர் படையைத் துகளாக்கியவன்.
[ அகநானூறு 36-16 ]

*பொலம்பூண் திரையன்.
- பவத்திரி என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட அரசன்
[ அகநானூறு 205-10 ]

*பொலம்பூண் நன்னன்
-புன்னாட்டைக் கவர்ந்துகொண்டதால் அதனை ஆண்ட அரசன் ஆண்ட அரசன் ஆஅய்-எயினன் நன்னின் படைத்தலைவனான மிஞிலியொடு பொருது மாண்டான்
[ அகநானூறு 340-6 ]

*பொலம்பூண் நன்னன்
-களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலொடு பொருது தன் நாட்டை இழந்தான்
[ அகநானூறு 396-2 ]

*பொலம்பூண் வளவன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
[ அகநானூறு 199-20 ] 

*வாய்வாள் வலம்படு தீவின் பொலம்பூண் வளவன்
[புறம் 397-22 ]