Thursday, 3 March 2016

தொல்காப்பியத்தில் வரும் முப்புரிநூல் பூணூலா?

தொல்காப்பியத்தில் வரும் முப்புரிநூல் பூணூலா?

நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய (தொல்.3: 615)

நூல், கரகம், முக்கோல், மணை ஆகியன அந்தணர்க்கு உரியன அவற்றை கையில் எடுத்துச் சென்றதாகவே என்று கூறுகிறார் தொல்காப்பியர்.

ஆக இதில் வரும் நூல் பூணூல் என்று குதிக்கிறது 'தமிழன் எல்லோரும் சாதிவெறியன்' என்று கூறும் வந்தேறிக் கூட்டம்.

புரிநூல் என்பது சிறிய நூல்களைப் பிண்ணி கிடைக்கும் கயிறு.
அதிக எடையைத் தூக்க அதிக நூல்களைப் பிண்ணவேண்டும்.

முப்புரிநூல் என்பது மூன்று சிறிய நூல்களால் (அந்த காலத்தில் நூல் இத்தனை மெல்லியதாக இல்லை) பிண்ணப்பட்ட சிறிய கயிறு.

இதன் மூலம் கரகம் எனப்படும் சிறிய பானையை (கமண்டலம்?) கட்டி கைகளில் தூக்கிச்சென்றுள்ளனர்.

கல்பொறிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்ற நல்கி வர
(மதுரைக் காஞ்சி. 483-484)

கல்லினால் ஓட்டைபோட்ட அளவு வாயினை உடைய கரண்டையை (கரகத்தை) பலநூல்களால் பிண்ணிய சிமிலி (கயிறு) கொண்டு கட்டி தூக்கிச் சென்றது கூறப்பட்டுள்ளது

முனிவர்களை ‘சிமிலிக் கரண்டையான்’ என்கிறது மணிமேகலை (3: 86)

இந்த சிமிலியினால் விளக்குகளையும் எடுத்துச் சென்றிருக்கலாம். அதுவே சிமிலி விளக்கு என்றாகியிருக்கலாம்.

நன்றி: முனைவர் ஜ.பிரேமலதா.
-------------------------

ஆக பூணூல் என்பது பூண்+நூல்.
பூண் என்றால் கவசம். உள்ளீடற்ற உருளை வடிவில் ஒரு பக்கவாய் பெரிதாக இருக்கும்.

வில்லின் இருமுனையிலும் பூண் மாட்டுவர். மாட்டுவண்டியில் மாட்டின் தோளில் அமரும் மரத்தூணின் இருமுனைகளிலும் (டம்ளர் வடிவ) பூண் மாட்டியிருப்பர்.
துப்பாக்கி பிடியிலும் பூண் மாட்டியிருப்பர்.
போர் வீரர்கள் இரு முன்னங்கைகளிலும் வாளைத் தடுக்க (பெரிய நீளமான வளையல் போன்று) பூண் அணிந்திருப்பர்.

ஆக வில்லின் இருமுனையிலும் (இரு பூண்களிலும்) மாட்டி ஏற்றப்படும் நாண் பூணூல் ஆகும்.
இந்த நீளமான நூலை போர் வீரர்கள் உடலில் குறுக்காக அணிந்திருப்பர்.

படம்: பூணூல் அணிந்த பெண் (பிற்கால சோழர் காலம்)

No comments:

Post a Comment