Tuesday, 29 March 2016

இலங்கையில் தெலுங்கு மரபினர்

இலங்கையில் தெலுங்கு மரபினர்

தமிழகத்தை நாயக்க மன்னர்களும், தொடர்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியினரும் வழித்தெடுத்து நக்கியதால் ஏற்பட்ட பஞ்சத்தையடுத்து மலையகத்திற்குப் பிழைக்கப்போன தமிழர்களைச் சந்தித்திருக்கிறீர்களா?
எங்கள் பகுதியில் நிறைய உன்டு.
பால்யவயதில் மின்சாரமற்ற நிலவொளி வேளைகளில் கையகல உரலிலிட்ட 'மட்டைக்குச்சி' புகையிலைத் துண்டுகளை இடித்துக் கொண்டே தாங்கள் வாழ்ந்த கதை சொல்வார்கள்.
வெற்றிலையின் ரத்தச்சிவப்பாய் வழியும் துன்பம்.

இது உழைக்கப் போனவர்கள் தங்கள் வாழ்க்கையை வீனாக்கி கண்டியில் குடியுரிமை மறுக்கப்பட்டுத் திரும்பிய கதை.

அக்காவைக் கொடுத்து நாட்டைப் பிடித்த வடுக வீரபாகுகள் கதை தெரியுமா?
படியுங்கள்..
1605 முதல் 1635வரை இலங்கையின் 'கண்டி'யை ஆன்ட சிங்கள மன்னன் செனரதன்.
இக்காலத்தில் போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் கொடுத்த இம்சையால் துறைமுகப் போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டிருந்தன.
கண்டி மன்னர்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் யாழ்ப்பாண மன்னன் வழி மட்டுமே கிடைத்து வந்தது.
அவ்வாறு கிடைத்த மற்றுமொரு உதவி மதுரை நாயக்க மன்னர்களின் இரு அரசிளங்குமாரிகள்.
கண்டிமீதான தென்னிந்திய நாயக்கர்களின் படையெடுப்பு இவ்விதம்தான் துவங்கி வைக்கப்பட்டது.
அந்தோ பரிதாபம்.. செனரத்தனுக்கு பின்பு அவனது இளையமகன் இராசிங்கன் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டான்.
இவர்களை மணந்த மன்னனின் முதல் இரு புதல்வர்கள் ஊவா, மாத்தளைப் பிரதேசங்களுக்கான இளவரசர்களாக மட்டுமே நியமிக்கப்பட்டனர்.
இப்படியாக பேக்கரி டீலிங்கின் முதல் அத்தியாயம் பிசுபிசுத்துப் போனது.
செனரதனுக்குப் பின்பு கண்டியின் ஆட்சிக்கு வந்த ராசசிங்கன் தொடர்ச்சியாக 52ஆண்டுகள் (1635-1687) கண்டியை ஆண்டிருக்கிறான்.
இவன் தொடர்ச்சியாக டச்சுக்காரர்களிடம் போர்நடத்திக் கொண்டிருந்ததால் வடுக பேக்கரியின் ஷட்டர் இழுத்து மூடப்பட்டே இருந்தது.
ராசசிங்கன் மண்டையைப் போட்டபின்பு ஆட்சிக்கு வந்தவன் அவனது இரண்டாவது மகன் விமலதர்ம சூரியன் (1687-1706).
இவனது காலத்தில்தான் வடுக வியாபாரம் சூடு பிடித்தது.
முப்பது ஆண்டுகாலம் அமைதிவழியிலும், பின்பு ஒரு முப்பதாண்டுகாலம் ஆயுத வழியிலும் போராடி நாம் வெல்லமுடியாத சிங்களத்தை வீரபாகு பாணி வியாபாரத் தந்திரத்தால் வீழ்தினார்கள்.
டச்சுக்காரர்கள் மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களால் டரியலாகிக் கிடந்த விமலதர்மனிடம் தஞ்சைநாயக்கர்கள் புது வகை வெண்ணை தடவிய ரொட்டியை விற்றனர்.
அதாவது, தஞ்சை நாயக்க இளவரசியை விமலதர்மன் மணந்து கொள்வது.
வரதட்சனையாக ஆயிரக்கணக்கான நாயக்கப் போர்வீரர்களை அளிப்பது.
டீலிங் வெற்றி பெற்று பின்பு போர்வீரர்களுடன் கொசுராக தஞ்சை நகர நாயக்கப் பிரதிநிதிகளும் அனுப்பி வைக்கப் பட்டனர்.
இக்குடியேற்றத்தின் பலனாக கண்டி நகரின் ஒரு பகுதியே நாயக்கப் பிரதேசமானது.
அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குமார ரூப வீதியில் வாழ்ந்தனர்.
இது பிற்காலத்தில் மலபார்வீதி என அழைக்கப்பட்டது.
இப்போதைய யட்டிநுவர வீதி இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒருபகுதி யட்டிநுவரையெனவும் மறுபகுதி தஸ்கராவீதி எனவும் அழைக்கப்பட்டது.
படிப்படியாக சேர்பெணற்செய்சா வீதி, கொடு கொடல்ல, ஹன்ன பெரன என கண்டியின் அனைத்து வீதிகளும் ஒரிஜினல் சிங்களனுக்கே இருட்டுக்கடை அல்வா கொடுத்து ஆக்கிரமிக்கப்பட்டது.
இதுவே பிற்காலத்தில் கண்டிநகரம் முழுவதும் தஞ்சாவூர் நாயக்கர் மயமாக்கப்பட்டதற்கும், தொடர்ச்சியான பேக்கரி டீலிங்க்களுக்கும் இடப்பட்ட வலுவான அடித்தளம்.
விமலதர்மன் 1706ல் இறந்தபின்பு அவனது தஞ்சாவூர் நாயக்க அரசிக்குப் பிறந்த சிறீநரேந்திரசிங்கன் கண்டியின் ஆட்சிக்கு வருகிறான்(1706-1739).
வடுகம் கிட்டத்தட்ட பாதிக்கினறு தாண்டியாகி விட்டது.
இவனது காலத்தில்தான் வடுகர்கள் கண்டியின் தலையெழுத்தை திசைதிருப்பி எழுதினர்.
சுதேசிகளான உள்ளூர் சிங்களவாசிகளுக்கும் கண்டிக்கு வந்தேறிய நாயக்க அரசியல் பிரதிநிதிகளுக்கும் அடிக்கடி முறுகல் ஏற்பட்டது.
அந்தச் சிக்கலையும் நரேந்திரசிங்கனை வைத்தே திடீர்ச் சட்டதிருத்தம் கொண்டுவரச் செய்து சரிக்கட்டினர்.
அதாவது, அரசவாரிசாக தனது நெருங்கிய உறவினரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அரசனுக்கே உரியது.
இந்தச் சட்டமே பின்னாளில் சுதேசிச் சிங்களவர்கள் குழப்பம் விளைவித்த போதும் வடுகர்கள் தற்காத்துக்கொள்ள கேடயமானது.
(இந்தக் காலகட்டத்திலெல்லாம்  வடுகம் வடுகமாகவே இருந்தது. சிங்களமாக உருமாறவில்லை)
தொலைநோக்குப் பார்வையாக நாயக்க பார்வையாக நாயக்க இளவரசியை மணம்முடித்துக் கொடுக்கப்பட்ட போதே அவளின் தம்பியும் கண்டிக்கு அனுப்பப்பட்டு அரண்மனையிலேயே வளர்க்கப்பட்டு வந்தான்.
இவ்வாறு அனைத்து வழியும் செப்பனிடப்பட்ட பின்புதான் வடுக பேக்கரியின் ஷட்டர் திறக்கப்பட்டது.
13-5-1739ல் நரேந்திர சிங்கன் இறந்தபின்பு,
அவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட வைக்கப்பட்ட அவனது தஞ்சாவூர் நாயக்க இளவரசியின் தம்பி பாலவிஜயன் தனது நாயக்க பெயரைத் துறந்து விஜயராஜசிங்கம் எனும் சிங்களப் பெயரோடு அரியனை ஏறுகின்றான்.
(பெயர் மாற்றி வைத்து குரளிவித்தை காட்டுவது வடுகத்தில் இன்று வரை தொடர்கிறது.
தெட்சினாமூர்த்தி -கருணாநிதி,
கோபால்சாமி-வைகோ,
விசயராஜுலு- விஜயக்காந்த்,
கோமளவள்ளி-ஜெயலலிதா,
சிவாஜிராவ் - ரஜினிக்காந்த்)
கண்டியை ஆண்ட வடுகத்தை உள்நோக்கிப் போனால் கடலளவு பேக்கரிடீலிங் தெறித்து நிற்கிறது.
முழுவதும் எழுதுவதென்றால் தலைசுத்தி மயக்கம் வருகிறது.
அதனால் முந்தையப்பதிவுகளின் தொடர்ச்சிக் கச்சேரியைப் பிரிதொருமுறை வைத்துக் கொள்வோம்.
இப்போ ஹைலைட் மேட்டர்.
கண்டியை வடுகம் ஆண்டபோது சுதேசிச் சிங்களர்களால் பிரச்சினை வந்ததல்லவா?
அதனை அவர்கள் எதிர்கொள்ள கையாண்டமுறை மிகவும் எளிது.
தமிழகத்தில் கையாண்ட அதே உருமாற்ற முறை.
மொத்தமாக புத்தமதத்தைத் தழுவுவது.
பெயரும் சிங்களத்தில்.
சிங்களத்தின் கொடி, உடை அனைத்திலும் வடுகக்கலப்பு.
நிலங்களை சிங்களர்களுக்குப் பகிர்ந்தளித்து புத்தவிகாரைகளை  எழுப்பினார்கள்.
சிங்களத்தையும் வடுகத்தையும் எளிதில் கண்டுபிடிக்க இயலா உருமாற்றம்.
கண்டி நாயக்க மரபு 1739 ஆம் ஆண்டில் தொடங்கியது. இம்மரபில் வந்த கண்டியரசர்களில் பட்டியலைக் கீழே காணலாம்.
ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739 - 1747)
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 - 1782)
ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782 -1798)
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798 -1815)
இதில் கடைசி வடுக சிங்கள மன்னன் விக்கிரமராச சிங்கன் மற்றும் அவன் குடும்பத்தினர் மட்டும் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் 18ஆண்டுகள் அடைபட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.
அப்படியென்றால், காலகாலமாக அங்கு குடியேற்றப்பட்ட ஆயிரக் கணக்கான வடுகர்கள்??????
அந்தக் கேள்வியின் பதிலில் தேங்கிநிற்கிறது தமிழர் இனப்போராட்டத்தை திராவிடம் வீழ்த்தத் துடிப்பதன் மர்மம்.
சிங்களத்தின் பெயரில் சமீபம்வரை ஆண்டு தமிழர் குருதியைச் சுவைத்து நிற்கிறது!

நன்றி: இசைப்பிரியா தம்பி

No comments:

Post a Comment