Thursday, 31 March 2016

பறிபோகும் நெய்வேலி மின்சாரம்

பறிபோகும் நெய்வேலி மின்சாரம்
.......................................................

நெய்வேலியை நடுவண் அரசுக்கு தாரைவார்த்து கொடுத்துட்டு அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில்,
30% விழுக்காடே தமிழகம் பிச்சை வாங்குகிறது
அதுவும் யூனிட்டுக்கு 1.82 பைசா கொடுத்தே நடுவண் அரசிடமிருந்து வாங்குகிறது.

மீதி 70% விழுகாட்டை நடுவண் அரசு என்ன செய்கிறது???

பாலாற்றின் உரிமையை தடுக்கும் ஆந்திராவுக்கு 19% விழுக்காடும்,

காவிரியில் இருந்து இனி தண்ணீர் தரமாட்டோம் என்கும் கருநாடகத்திற்கு 14% விழுக்காடும்,

முல்லைப் பெரியாறு அணையில் மல்லுக்கட்டி கடப்பாறை கொண்டு அணையை உடைக்க வந்த கேரளாவுக்கு 10% விழுக்காடும்,

நடுவண் மின் தொகுப்பிற்கு 15%

புதுச்சேரிக்கு 5%,என்.எல்.சிக்கு 7%,

என பங்கீட்டுக் கொள்கிறது, தமிழர்களை சாதீய மோதல்,பார்ப்பனீய எதிர்ப்புனு அதள பாதாளத்தில் தள்ளிவிட்டுட்டு,
தமிழகத்தின் கனிம வளங்களை நடுவண் அரசு திருட தீராவிட அரசுகள் துணைப்போயின, போகின்றன.

நெய்வேலியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை நேரடியாக தமிழகத்திற்கு கொடுக்காமல்,

நடுவண் மின் தொகுப்பிற்குச் சென்று அங்கிருந்து தென்னிந்தியப் பகுதிக்கான மின் தொகுப்பிற்கு வழங்கப்படுகிறது,
அதிலிருந்தே 30% விழுக்காட்டை தமிழகத்திற்கு வழங்குகிறது.
இது எப்படி இருக்குனா நம்ம வீட்டு சோத்தை எடுத்து, அதிலிருந்து நமக்கு ஒரு கவளையை உருட்டி தூக்கிப்போடுவது போல இருக்கு.

சரி வெட்டியெடுக்கும் நிலக்கரிக்கு காப்புரிமை என்ற பெயரில் டன்னுக்கு எவ்வளவு கொடுக்கிறது என்று பார்த்தால் வெறும் 45 ரூபாய் மட்டுமே,

ஒரு டன் நிலக்கரியில் ஒரு மெகாவாட்(1000 யூனிட்) உற்பத்தி செய்கிறது அப்படியானால் 1820 ரூபாய் லாபம் பார்க்கிறது நடுவண் அரசு (1.82×1000=1820).

4 டன் நிலக்கரியை எரிக்கும்போது ஒரு டன் சாம்பல் கிடைக்கிறது அதையும் விற்று காசு பார்க்கிறது என்.எல்.சி நிறுவனம்.

தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வங்கி கடனுதவியுடன் ஹாலோ பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் நிலக்கரி, சாம்பலாலான கற்களைச் செய்து பிழைத்து வந்தனர்.

ஆனால் அதிலும் மண்ணை அள்ளிப்போட்டு அந்த சாம்பலை சிமெண்ட் ஆலைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.

செயல்படாத நிறுவனங்கள் கூட செயல்படுவதாக கூறி போலிச் சான்றிதழ் பெற்று சாம்பலை வாங்கி கூடுதல் லாபம் வைத்து, உள்ளீடற்ற நிலக்கரி சாம்பற் கல் (ஹாலோ பிரிக்ஸ்) நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர்.

அடுப்புக்கரியை விட குறைவாக ஒரு டன் நிலக்கரிக்கு பணத்தை தமிழக அரசுக்கு கொடுத்துவிட்டு,
பல்லாயிரம் கோடிக்கு மின் உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல் சாம்பலையும் பல நூறு கோடி ரூபாய்க்கு விற்று காசு பார்க்கிறது நடுவண் அரசு,
தானே புயல் காரணமாக ரூ 2000கோடி ரூபாய் தமிழக அரசு நடுவண் அரசிடம் கேட்டபோது வாயே திறக்கவில்லை,

ஆனா நம் கனிம வளத்தை கொள்ளையடித்து கொழுத்து திங்குது, தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நடுவண் அரசிடம் கையேந்தி வாங்கி அதை தமிழகத்தில் கடைவிரித்துள்ள,
பன்னாட்டு வடநாட்டு தொழிற் நிறுவனங்களுக்கு மானீயத்துடன் தடையற்ற மின்சாரத்தை வழங்கிவிட்டு,
சிறு,குறு தொழில் செய்யும் நம் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு சிம்னி விளக்கை கொளுத்த விட்டுள்ளனர் தீராவிட ஆட்சியாளர்கள்.

இது யோக்கியதைல பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பாம் தமிழக மின்வாரிய துறைக்கு.

இப்படி தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கண்டவனுக்கும் தாரைவார்த்து கொடுத்துட்டு மின்பற்றாக்குறை மாநிலம்னு பட்டம் வேற.
இதுல கூடங்குளம் அணு உலையை எதிர்த்தால் மின்சார பற்றாக்குறையை எப்படி தீர்ப்பதுனு சப்பைக்கட்டு வேற.

மின்சார பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை நடுவண் அரசிடமிருந்து விலைக்கொடுத்து வாங்கும்,
ஆந்திராவோ கர்நாடகவோ கேரளாவோ அங்கு அணு உலையை நிறுவ முட்டுக்கால் போட்டது ஏனோ???
தமிழகத்தின் மின்பற்றாகுறையை தீர்க்க கல்பாக்கம், கூடங்குளம், அதானி சோலார் ஒப்பந்தம், புதிதாக எந்த அணுமின் நிலையங்களும் வேண்டாம் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் போதுமே???

இதுபோக நெய்வேலி நடுவண் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அங்கு அயலவர் ஆதிக்கத்திற்கு குறைவில்லை.

நெய்வேலியை தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தால் தண்ணீர் தரமாட்டேன் என்கும் ஆந்திர,கர்நாடக, கேரள அரசுகளின் கொட்டம் அடங்கும்.

இது நிறைவேற வேண்டுமெனில் இதுவரை தாங்கள் செய்த தில்லுமுல்லு தகிடுதத்தம் ஊழலிருந்து தப்பிக்க,
மாநில சுயாட்சி கொள்கையை நடுவண் அரசிடம் அடகு வைத்துள்ள தீராவிட அரசுகளை அகற்றியாலே சாத்தியம்.

தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்தால் இந்தியாதான் பிச்சையெடுக்கும்

நன்றி: desiyamunnetrasangam007. blogspot. in/2015/10/ blog-post_74.html?m=1
நன்றி : Velmurugan Ramalingam

No comments:

Post a Comment