Friday, 29 July 2016

நான் கன்னடன் - ஈ.வே.ரா

//நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்//
-ஈ.வே.ரா
(குடியரசு 22.08.1926)

நன்றி: ஆர்த்திக் தமிழன்

வழக்கம்போல மண்டியிட்டது தலித்தியம்

ஈ.வே.ரா படத்தை வைக்காததற்காக கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் திராவிட இயக்கங்களிடம் மன்னிப்பு கேட்டார்.

வழக்கம்போல வந்தேறி ஆண்டைகளிடம் அடிபணிந்தது தலித்தியம்

தமிழனுக்கு ஆளும் தகுதியில்லை - ஈ.வே.ரா

தமிழனுக்கு ஆளும் தகுதியில்லை
- ஈ.வே.ரா

"நீ ஒரு தெலுங்கு கன்னடியன்,
நீ எப்படி தமிழர்களுக்கு தலைவனாக இருக்க முடியும் என்று என்னை கேட்டார்கள்.?

தமிழன் எவனுக்கும் இந்த தகுதி இல்லையப்பா

என்று நான் கூறினேன்!"

-ஈ.வே.ரா 
1.6.1954
விடுதலை

வந்தேறிகளின் ஒற்றுமை

சன்சூ என்ற போர்க்கலை நிபுணர் கூறுகிறார்

எதிரி நாட்டுக்குள்ளே நம் படையினர் முன்னேற முன்னேற அவர்களிடையேயான ஒற்றுமையும் நம்பகத்தன்மையும் அதிகரிக்குமாம்

நம் நாட்டு வந்தேறிகள் ஒற்றுமையுடன் நம்மை விட வேகமாகவும் துடிப்பாகவும் இருக்க இதுதான் காரணம்.

அவர்களுக்கு இது உயிரைக்காக்க ஓடும் ஒரு முயலின் போராட்டம்.

நமக்கு இது உணவுக்காக அதைத் துரத்தும் புலியின் போராட்டம்.

ஆனால் நிலைமை தலைகீழாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

எனவே விழித்துக்கொள்ளுங்கள்.

கபாலி படம் கூறாத மலையாள ஆதிக்கம்

கபாலி படம் கூறாத மலையாள ஆதிக்கம்

சீனர்களுக்கு இணையான ஊதியத்தை ரப்பர்தோட்டங்களில் பணிபுரியும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட சுமார் 10 கோரிக்கைகள் முன்வைத்து போராட்டத்திற்குத் தலைமை தாங்கி,
அதனால் பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஆர்.எச்.நாதன்,
சென்னையில் அளித்த பேட்டியில்

"போராட்டம் ஒடுக்கப்பட்ட பின்னர் பிரிட்டிஷ் அரசு, தங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ஒரு தொழிற்சங்கத்தை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் என்ற ஒன்றை கேரளாவிலிருந்து இறக்குமதி செய்த பி.பி.நாராயணன் என்ற மலையாளியின் தலைமையில் இயக்கினர்.

ஏறக்குறைய சுமார் 50 ஆண்டுகள் இந்த மலையாளிதான் சுமார் 1,50,000 இலட்சம் தமிழ்த் தொழிலாளிகளின் ஊதியத்தை, தொழிற்சங்க உரிமைகளை நிர்ணயித்தான்.

இந்த பி.பி.நாராயணன் இறந்ததும் அத் தொழிற்சங்கத்தில் இன்னொரு நாயர் முகுந்தன் என்பவரை தனது பொறுப்பில் அமர்த்தி விட்டுச் சென்றுள்ளது எல்லாவற்றையும் விடக் கேவலம்.

இன்றும் அச்சங்கத்திற்குச் சொந்தமான வசதிகளை அனுபவித்துக் கொண்டு மலேசிய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் இந்த முகுந்தன்".

என்று கூறியிருப்பதில் இருந்து
நமது முதல் எதிரிகள் யார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

நன்றி: வாலறிவன்

Wednesday, 27 July 2016

ஈழ அரசியல் தலைவர்களைத் தோலுரிக்கிறார் தமிழரசன்

ஈழ அரசியல் தலைவர்களைத் தோலுரிக்கிறார்
தனித்தமிழ்நாடு ஆயுதப் போராளி
தோழர்.தமிழரசன்.

1984ல் தமிழரசனார் நடத்திய தமிழகத்தின் முதல் ஈழ ஆதரவு மாநாடான
பெண்ணாடம் மாநாட்டு அறிக்கையிலிருந்து.

நன்றி: முகிலன் தமிழ்மணி

Monday, 25 July 2016

மாண்டியாவும் தமிழும் மாலியமும்

மாண்டியாவும் தமிழும் மாலியமும்

தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பார்,

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் "மேல்கோட்டை" எனும் ஊரில் உள்ள "செல்லப்பிள்ளை" கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்றுவரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்துகொண்டு பிறகு சிந்திக்கவும்.

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி,
செல்லப்பிள்ளை செலுவநாராயணா ஆகி,
சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.)

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறியபிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்தபெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்தபோது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்.

அவர்கள் இன்றும் தமிழராகத்தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது.

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின.
ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்கவேண்டாம்.
நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்.
அதாவது வைணவ பார்ப்பனர்கள்.
அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்.

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே.

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது.
பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப்போராடியது.

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

Saturday, 23 July 2016

ரத்த சரித்திரம் - தாமிரபரணி படுகொலை

ரத்த சரித்திரம் - தாமிரபரணி படுகொலை

கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது,
கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 போராளிகளை
காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற ஜுலை 23 தாமிரபரணி நினைவு தினம்.

சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.

1930ல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பட்டியலின தேவேந்திர குல மக்களையே சாரும். 1948ம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன.

ஆனால் பிபிடிசி நிறுவனமோ, அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தனது குத்தகை காலத்தைத் 2029 வரை தொடர்ந்தது.

மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக சுமார் 5000க்கும் அதிகமான தோட்டத்தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர். தேயிலை, காஃபி, ஏலம், மிளகு போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.
1968ம் ஆண்டில் தேயிலை பறிக்க டிராலி வண்டி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், 1978ம் ஆண்டில் தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு தினமும் காலையில் கூடுதலாக இரண்டு இட்லி கொடுக்க வேண்டும் என்றும், 1988ம் ஆண்டில், அன்றாடம் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல காலை வேளையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தரவேண்டும் என்றும் மாஞ்சோலையில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

1998ம் ஆண்டில் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர்.
இந்நிலையில் தென்காசி பாரளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமியிடம் மாஞ்சோலைப் பகுதி மக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்தனர்.
ஆண்டாண்டு காலமாக கொத்தடிமை போல நடத்தப்படும், தொழிலாளர்களின் பரிதாப நிலையயை கேட்டறிந்த டாக்டர். கிருஷ்ணசாமி தேர்தல் முடிந்தவுடன் இதற்கொரு முடிவு கட்டுவோம் என்று உறுதியளித்தார்.
தேர்தல் முடிவுற்ற பின்பு மாஞ்சோலை பகுதி தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் புதிய தமிழகம் கட்சியினால் முன்வைக்கப்பட்டது.
அதனை பிபிடிசி நிர்வாகம் 20.08.98க்கு முன்பாக நிறைவேற்றித்தர வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
பிபிடிசி நிர்வாகம், புதிய தமிழகம் கட்சியின், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளியதன் விளைவாக தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 20.08.1998 முதல் வேலைப்புறக்கணிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள்.
தங்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தோள் கொடுக்க மாஞ்சோலை பகுதி மக்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., சி.பி.அய்., சி.பி.அய்(எம்)., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கத்தையும் கலைத்து புதிய தமிழகம் தொழிற்சங்கம் என்ற ஒரே குடையின் கீழ் அணி திரண்டனர்.

03.09.1998ல் எஸ்டேட் நுழைவாயிலை இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஊத்து எஸ்டேட்டில் இருந்து தேயிலைத் தூள் ஏற்றிச் சென்ற தனியார் லாரி மறிக்கப்பட்டது.
மறுநாள் 04.09.1998 எஸ்டேட் நிர்வாகத்தினரோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.
ஆனால் அதன்பிறகு மாஞ்சோலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து தாக்கினர்.
கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து இழுத்துச் சென்றனர். 127தொழிலாளர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சுமார் 6 மாத கால போராட்டத்திற்கு பின்பு ஜனவரி 1999 முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினார்கள்.
ஆனால், எஸ்டேட் நிர்வாகமோ தற்காலிகத் தொழிலாளர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக வேலைநிறுத்ததில் ஈடுபட்ட உங்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது?
என கேள்வியெழுப்பியது.
பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பல்வேறு சங்கடங்களை உண்டாக்கியது.
தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டது.

இதனால் கொதித்தெழுந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 07.06.1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரின் வீட்டை முற்றுகை இட்டனர்.
சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர். 451 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தளராமல் மறுநாளும் 08.06.1999 முற்றுகையிட்ட 198 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 198 பெண்கள் உட்பட 653 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஆளும் தி.மு.க. அரசோ தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 47 நாட்களாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 653 தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி 23.07.1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.
பல்வேறு பகுதி மக்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டதை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கம், லட்சோப லட்சம் மக்கள் தன்னெழுச்சியாக புதிய தமிழகம் என்ற கட்சியின் பின்னால் அணி திரள்வதை சகித்துக் கொள்ள முடியாத அதிகார வர்க்கம் காவல்துறையின் மூலமாக கலவரத்தை கட்டவிழ்த்து விட திட்டமிட்டது.
பேரணியை வழிநடத்திவந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் சென்று மனு கொடுப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது.
ஆளும் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர்.
தலைவர்களின் உயிருக்கும் குறைவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள்.
உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல் துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர்.
(இதற்காகவே தாமிரபரணியின் நீர்மட்டம் அன்று மட்டும் உயர்த்தப்பட்டிருந்தது)
தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை.

இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர்.
நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது.
இப்படுகொலை நடந்த சில் நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா, அப்போதைய டி.ஜி.பி.குமாரசாமி, ஐ.ஜி. விபாகர் ஷர்மா ஆகியோர் இந்தப் படுகொலையை மூடி மறைக்கத் துணை போனார்கள்.

அரச பயங்கரவாதத்தை, படுகொலையை கட்டவிழ்த்து விட்ட கலெக்டர் தனவேல், கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர்.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் என்ற ஒன்றை ஒப்புக்கு அமைத்தது திமுக அரசு.

பதினோரு மாத விசாரணைக்குப் பின்பு 27.06.2000 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நீதிபதி மோகன், ”பேரணிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர். நீரில் மூழ்கியதால் ஏற்ப்பட்ட இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்து தான்” என்று மனசாட்சியின்றி, மனிதாபிமானமின்றி அறிவித்தார்.

அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மோகன் கமிசன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்த போது அந்த அறிக்கையை சட்டசபையிலேயே கிழித்தெறிந்து போர்குரல் எழுப்பினார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி.
தனது கணவர் மாரியப்பன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக கைக்குழந்தையுடன் போராடிய ரத்தினமேரி அவரது பச்சிளம் குழந்தை விக்னேஷ் உடன் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டது இன்னமும் நம் கண்களில் நிழலாடுகின்றது.

நன்றி: வருண் ரங்கநாயகி கணேசன்

இல்லற வாழ்க்கை பாதுகாப்பானதா?

பலரும் மக்கள் பிரச்சனையில் தலையிடாமல் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று இருப்பதை பாதுகாப்பாக நினைக்கிறார்கள்.

நீங்கள் இல்லறத்தில் ஈடுபட்டு பிள்ளைபெற்று அதை சீராட்டி பாராட்டி வளர்த்தாலும்

நாளை அது உங்களை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விடாது என்று எந்த உறுதியும் இல்லை
சொந்த குருதி உறவுகள் கூட உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள் என்று உறுதியாக நம்பமுடியாதபோது மக்களும் அவ்வாறுதானே

Thursday, 21 July 2016

பியூஷ் சேத்தியாவும் தோழர் முகிலனும்

பியூஷ் சேத்தியாவும் தோழர் முகிலனும்

வந்தேறிகள் எப்போதும் மண்ணுக்காகப் போராடுவதில்லை.
அதிசயத்திலும் அதிசயமாக ஒரு மார்வாடி இயற்கைக்காகப் போராடியுள்ளார்.

அதெல்லாம் சரி.

இன்று பியூஷ் கியூஷ் என்று கத்துபவர்களும்
கட்டுரை எழுதுபவர்களும்
கண்ணீர் விடுபவர்களும்,

சரியாக இரண்டு மாதங்கள் முன்பு பியூஷை விட வீரியமான போராளி, தோழர்.முகிலன்,
போடி பேருந்துநிலையத்தில் வைத்து மக்கள் மத்தியில் ஏவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு,
கைது செய்யப்பட்டு,
சிறையிலும் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நலம் சீர்குலைந்து  கவலைக்கிடமாகிக் கிடந்தபோது

எங்கடா போனீங்க?

தமிழ்நாட்டில் ஒரு பியூஸ் மட்டும் இல்லை.
பல நூறு பியூஸ்களும்
பியூஸுக்கு அப்பனுக்கு அப்பனும் இருக்கிறார்கள்.

என்று மறையும் இந்த வேற்றின மோகம்????!!!!!

Wednesday, 20 July 2016

ஐயன் வள்ளுவனை அறிவிலி வடவன் ஏற்றால்தான் வியப்பு

ஐயன் வள்ளுவனை அறிவிலி வடவன் ஏற்றால்தான் வியப்பு

ரஷ்யரான லியோ டால்ஸ்டாய்க்கு தெரிந்திருந்த வள்ளுவரின் புகழ்,

திருவள்ளுவருக்கு வெள்ளைக்கார அரசு சார்பாக தங்கநாணயம் வெளியிட்ட ஆங்கிலேயர் எல்லீசு துரைக்கு புரிந்த வள்ளுவனின் புகழ்,
உலகில் சிறந்த 10 சிந்தனையாளர்களில் இடம்கொடுத்து சிலை நிறுவிய சிங்கப்பூர் அரசுக்குத் தெரிந்திருந்த வள்ளுவனின் புகழ்,

எந்த பேரழிவையும் தாங்கும் அனைத்துலக பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ள
உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட மூன்றாவது நூல் என்ற பெருமை பெறுமளவுக்கு உலகமெல்லாம் படிக்கும் நூலை இயற்றிய வள்ளுவனின் புகழ்,

அறிவிலிகளான வடஹிந்தியர்களுக்குப் புரிந்தால்தான் வியப்பு.

ஹிரித்வார் என்ன? கங்கை என்ன?

அதையும் தாண்டி இமயத்தில் வாழும் 'கவரிமா' உடலில் மயிர் இல்லாவிட்டால் குளிரில் இறந்துவிடும் என்ற செய்தி கூட குறளில் வருகிறது.

இமயம் வரை பரவியிருந்தது வள்ளுவர் வாழ்ந்த தமிழர்நாடு.

ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்?

ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்?

நான் ஹிந்தியனாக பிறந்து ஹிந்தியாவை ஆண்டால்...

*) முதல் வேலையாக ஹிந்தியுடன் தொடர்பில்லாத பகுதிகளுக்கு விடுதலை அளித்துவிட்டு
ஹிந்தி மொழிக் குடும்பத்துடன் தொடர்புடைய பகுதிகளை மீட்பேன்

*) காஷ்மீருக்கு விடுதலை அளித்துவிடுவேன்

*) சீன இனங்களுடன் தொடர்புடைய கிழக்கு மாநிலங்களான சிக்கிம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகியவற்றுக்கு விடுதலை அளித்துவிடுவேன்

*) தமிழ் மொழிக்குடும்ப பகுதியான தென்னிந்தியாவுக்கும் விடுதலை அளித்துவிடுவேன்

*) வங்கதேசத்திலும்  நேபாளத்திலும் உள்ள ஹிந்தி தொடர்பான பகுதிகளை ஹிந்தியாவுக்கு தரச்சொல்வேன்.
மறுத்தால் படை எடுத்து கைப்பற்றுவேன்.

*) பாகிஸ்தானின் மீது படையெடுத்து அதன் நடுவே ஓடும் சிந்து பேராறு வரையான  ஹிந்தி தொடர்புடைய பகுதியை ஹிந்தியாவுடன் இணைப்பேன்.
ஆப்கானியா, பஷ்தூன், பலூச்சிஸ்தான் போன்ற பகுதிகளுக்கு விடுதலை அளிப்பேன்.
இதன்மூலம் பாகிஸ்தான் என்றநாடோ மாநிலமோ இல்லாது ஒழிந்து போகும்.

*) இத்தனை பெரிய நாட்டையும் வளங்களையும் மக்கள் எண்ணிக்கையையும் வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் வறிய நாடாக இருக்காமல் வறுமையை ஒழிக்க வேளாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவேன்.

*) கறுப்பு பணத்தை மீட்க முயற்சி செய்வேன்.
பெருமுதலாளிகளை இயற்கையைக் கொள்ளையடிக்க விடமாட்டேன்.
கையூட்டு, ஊழல் ஆகியவற்றை இல்லாது ஒழிப்பேன்.

*) வேதங்களில் குறைகளைக் களைந்து நடைமுறை வாழ்க்கைக்கேற்ப ஒரு எளிய ஹிந்து மத புனித நூலை உருவாக்குவேன்.
அது எல்லா மொழிகளில் கிடைக்கச் செய்வேன்.
மூடநம்பிக்கைகளையும் போலிச் சாமியார்களையும் ஒழிப்பேன்.

*) ஹிந்து மதத்தை ஹிந்தியாவின் தேசிய மதமாக அறிவிப்பேன்.
ஹிந்துநாடு (Hindutva republic of Hindia) என்று பெயர் மாற்றுவேன்.
எவரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம்.
சிறுபான்மை மதத்தினருக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்குவேன்.

*) மக்கள் தொகையைப் படிப்படியாக பல கட்டங்களில் சரியாகத் திட்டமிட்டு குறைப்பேன்

*) சேனையை பலமானதாக நவீனமானதாக வைத்திருப்பேன்.
நாட்டு மக்களின் உடல் நலத்தைப் பேணுவேன்.

*) பசு மாடு உட்பட அனைத்து விலங்குகளின் நலங்களையும் காப்பேன்.
காட்டு வளத்தைப் பெருக்குவேன்.

*) மக்களிடம் ஒழுக்கத்தைப் புகுத்துவேன்.
விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவேன்.

*) ஹிந்தி மொழியை மற்ற ஹிந்திக் குடும்ப மொழியினர் மீது திணிக்கமாட்டேன்.
இறந்துபோன சமஸ்கிருதத்தைத் தூக்கிவைத்து அழாமல், இருக்கும் மொழிகளுக்கு உரிய உரிமைகளை அளிப்பேன்.

*) ஒவ்வொரு ஹிந்தி குடும்ப இனங்களுக்கும் சரியான மாநில உரிமைகள் அளிப்பேன்.
(இராணுவம், தகவல் தொடர்பு நடுவணரசு கட்டுப்பாட்டில்)

*) திபெத்தியருக்கு ஆயுதம் கொடுத்து சீனாவிடமிருந்து விடுதலை பெற உதவுவேன்.
மங்கோலியாவுக்கும் உதவி செய்து சீனாவிடம் பறிபோன தமது பகுதிகளை மீட்க தூண்டுவேன்.
கேண்ட்டான் (ஹாங்காங்) சீனாவிடமிருந்து விடுதலை பெருவதில் உதவுவேன்.
இதன் மூலம் சீனாவைத் துண்டாடி வலுவிழக்கச் செய்வேன்.

*) இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி பொருளாதாரத்தைப் பெருக்கி
எந்த வல்லரசுக்கும் அடிமையாக ஆகாமல் சொந்தக்காலில் இந்துநாட்டை நிற்கவைப்பேன்.
பிற நாடுகளில் குடியேறிய ஹிந்தியரை திரும்ப அழைத்து வருவேன்.

*) ஹிந்தியா மற்றும் அதனைச் சுற்றி நிலவழித் தொடர்புடைய  நாடுகளை இணைத்து ஒரு ஒன்றியத்தைத் தொடங்குவேன்.
பொதுவான நாணயம் (currency) ஒன்றை உருவாக்குவேன்

*) எந்த நாட்டில் இந்து, இந்தி இன மக்களுக்குக் கொடுமை நடந்தாலும் குரல்கொடுப்பேன்.

Tuesday, 19 July 2016

புலம்பெயர் தமிழர்களின் நாடு எது?

புலம்பெயர் தமிழர்களின் நாடு எது?

உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களே!
தமிழ் வம்சாவழி மக்களே!

நீங்கள் தமிழர்நாடு அமைய முடிந்த அளவு உதவி செய்து
தாய்நாடு தமிழர் சேனையின் கட்டுப்பாட்டிற்கு வந்ததும் தமிழர்நாட்டில் குடியேறிக்கொள்ளவேண்டும்.

ஒருவேளை..ஒருவேளை உங்களால் தாய்நாட்டிற்கு திரும்ப முடியாவிட்டால் பரவாயில்லை.
அதில் பல தடங்கல்கள் உள்ளன.
எனவே வருத்தமில்லை.

ஆனாலும் தமிழர் என்ற உணர்வுடன் நீங்கள் என்றைக்கும் இருக்கவேண்டும்.

நாளையே சூழ்நிலை மாறலாம்.
நீங்கள் வாழும் நாட்டிற்கும் தமிழர் நாட்டிற்கும் போர் வரலாம்.

அப்போது நீங்கள் என்னதான் இனத்தால் தமிழராய் இருந்தாலும்,
என்னதான் தமிழ் உணர்வுடன் இருந்தாலும்,
(அந்த நாடு இனரீதியாகத் தமிழரை ஒடுக்காத நிலையில்) பிறந்து வளர்ந்த நாட்டின் சேனையில்தான் சேரவேண்டும்.
சேர்ந்து தமிழர்நாட்டுக்கு எதிராக போரிடவேண்டும்.
அது இல்லாமல் தமிழர் நாட்டுக்கு ஆதரவாக மாறக்கூடாது.
உப்பிட்ட மண்ணுக்கு இரண்டகம் செய்யக்கூடாது.

இந்த பதிவு இமயம் முதல் மாலைத்தீவுகள் வரை
சிந்து சமவெளி முதல் கங்கைக் கழிமுகம் வரை
வேற்றினத்தவர் ஆக்கிரமித்திருக்கும் தமிழர் பூர்விக மண்ணில் வாழும் தமிழருக்குப் பொருந்தாது.

பகுத்துண்டு பல் உயிர் ஓம்புக

பகுத்துண்டு பல் உயிர் ஓம்புக

♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

நானும் பார்க்கிறேன் சாலைகளில் தவளை, ஓணான், எலி, பாம்பு போன்ற சின்னஞ்சிறு உயிர்கள் நசுங்கி உயிர்விட்ட தடயங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

மழைக்காலங்களில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

இதை பார்க்கும்போது வேதனையாகவும் விருட்டென்று வாகனத்தில் பறக்கும் அவசர மனிதர்கள் மீது அடங்காத ஆத்திரமும் வருகிறது.

நாளை அமையவிருக்கும் நமது தமிழர் நாட்டில் சாலைகள் அமைக்கப்படும்போது சாலைகளின் கீழே சிறு சிறு உயிர்கள் கடந்து செல்ல வழிகள் ஏற்படுத்தியே சாலைகள் போடப்படவேண்டும்.

அவ்வழிகளுக்குள் வெளிச்சமும் மணலும் சின்னஞ்சிறு தாவரங்களும் இருக்கவேண்டும்.
அப்போதுதான் உயிர்கள் அதை இயற்கையான பாதைகள் என்று நினைக்கும்.
அது மட்டுமன்றி சாலையின் கரைகள் உயர்த்திக்கட்டப்படவேண்டும்.

மனிதர்களின் வாகனப் போக்குவரத்து யானைகள் போன்ற பெரிய உயிரினங்களுக்கும் இடைஞ்சலாக உள்ளன.
அத்தகைய பெரிய உயிரினங்கள் சாலையைக் கடக்க ஆங்காங்கே பெரிய பாலங்கள் அமைக்கப்பட்டு அதில் தாவரங்களும் மணலும் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
அந்த பாலங்களை மாந்தர் பயன்படுத்தக்கூடாது.

பூச்சிகள் அடிபடாமலிருக்க சாலை விளக்குகள் நன்கு உயரமாக அமைக்கப்படவேண்டும்.

இவை தவிர சாலையில் குறுக்கே எதாவது ஒரு விலங்கினம் வந்தால் அதை குறிப்பிட்ட தூரம் முன்னரே அறிவிக்கும் தொழில்நுட்பம் பொருத்தப்படவும் வேண்டும்.
( பாதுகாப்பான பாதை இருக்கையில் பாதுகாப்பின்றி சாலையைக் கடக்க விலங்குகள் அத்தனை முட்டாள்கள் கிடையாது என்றாலும்)

மேலும் வாகன இயக்கம் முடிந்தவரை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் இருக்கவேண்டும்.

நமக்கான நாடு அமையும் வரை,

நீங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு எடுக்குமுன் அதன் கீழேயும் சக்கரங்கள் அடியிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பிறகு எடுங்கள்.

மழைக்காலங்களிலும் குளிர்காலங்களிலும் இதனைக் கட்டாயம் செய்யுங்கள்.

சாலையில் எதிரில் மட்டும் பார்க்காமல் சாலையின் தரைத்தளத்தையும் பார்த்தவாறு ஓட்டுங்கள்.

இந்த உலகத்தைத் தமிழரைத் தவிர வேறு யாராலும் சக மனிதரிடமிருந்து காப்பாற்றமுடியாது.