தமிழின விடுதலை விறுவிறுப்பாக இருக்காது
தமிழக மக்கள் உணவும் உறைவிடமும் தருவார்கள்!
இந்திய ஒன்றியத் தமிழர்கள் இனவழி சக்திகளை திரட்டித் தருவார்கள்!
ஈழத்தமிழர்கள் தளபதிகளைத் தருவார்கள்!
மலேசியத் தமிழர்கள் ஆயுதம் தருவார்கள்!
தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் கப்பல்கள் தருவார்கள்!
சிங்கப்பூர் தமிழர்கள் விமானம் தருவார்கள்!
அந்தமான் தமிழர்கள் மறைவிடம் தருவார்கள்!
அமெரிக்கத் தமிழர்கள் தொழில்நுட்பம் தருவார்கள்!
ஐரோப்பியத் தமிழர் உலக அரசியலை நம் பக்கம் திருப்புவார்கள்!
கரீபியன் தமிழர்கள் அமெரிக்க கண்டங்களை நம் பக்கம் திருப்புவார்கள்!
எதுவும் தரமுடியாவிட்டாலும் மலையகத் தமிழர் உயிரையே தருவார்கள்!
நாம் செய்யவேண்டியது எல்லாம் கால்மேல் கால் போட்டபடி உட்கார்ந்த இடத்திலிருந்து
ஒரே அடியில் பெரியபெரிய வல்லாதிக்க சக்திகளையெல்லாம் வீழ்த்திவிட்டு நம் விடுதலையை நாமே எடுத்து, நமக்கு நாமே மகுடம் சூட்டிக்கொள்வதுதான்.
Monday, 27 February 2017
தமிழின விடுதலை விறுவிறுப்பாக இருக்காது
Sunday, 26 February 2017
மத்திய அரசு வேலையில் 0 தமிழர்கள்
மத்திய அரசு வேலையில் 0 தமிழர்கள்
ஒருவாரம் முன்பு தென்னக ரயில்வேயில் 196 SM காலியிடங்கள் நிரப்பப்பட்டன.
வேலைகிடைத்தோர்
2 மலையாளிகள்
194 பீகாரிகள்
0 தமிழர்கள்
(தென்னக ரயில்வே கோட்டம் தமிழகத்தையும் கேரளாவையும் உள்ளடக்கியது.
படம் பார்க்க.)
இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
மத்திய அரசில் என்னதான் தகுதி இருந்தாலும் என்னதான் தேர்வெழுதினாலும் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.
தமிழகத்திற்கு உள்ளேயும் கூட மத்திய அரசுவேலை தமிழர்களுக்கு தரப்படுவதில்லை.
ஒரு அடையாள போராட்டமாவது
தென்னக ரயில்வே தலைமையகம் அல்லது சென்னை சென்ட்ரலில் நடத்துவது அவசியமாகிறது
இதில் கொடுமை என்னவென்றால் பெரும்பாலான பீகாரிகளுக்கு எழுதப்படிக்கவே தெரியாது என்பதுதான்.
பணம் கொடுத்து, தில்லி மூலம் பொய் சான்றிதழ்கள் வாங்கி ஏற்கனவே தென்னக ரயில்வே கோட்டத்தில் 70% நிறைந்து கிடைக்கும் ஹிந்தியர்கள் (குறிப்பாக பீகாரிகள்) இனப்பாசம் மூலம் வந்தவர்கள் இவர்கள்.
(தகவல்: பழனி குமார்)
சமீபத்தில் TNPSC தேர்வில் தமிழுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் பாதியாகக் குறைக்கப்பட்டதை இங்கே கூறவேண்டும்.
Saturday, 25 February 2017
ஈஷா மையம் எடுத்த உயிர்கள்
ஈஷா மையம் எடுத்த உயிர்கள்
ஜக்கி வாசுதேவின் ஈஷா மையம் நடத்திவரும் காடு அழிப்பால் 2006 முதல் 2011 வரையிலான காலத்தில் மட்டும் 50 யானைகள் இறந்திருக்கின்றன.
(யானைகளின் மொத்த எண்ணிக்கை தோராயமாக 350)
2006 முதல் 2012 வரையிலான காலத்தில் யானைகள் வெறிவந்து மிதித்துக் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் 57.
இவர்கள் அனைவரும் பழங்குடிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள்.
ஏனென்றால் ஈஷா மையம் மிக பத்திரமாக மின்சார வேலிக்குள் ஏ.சி, டி.வி, சோபா, மது, மாது என அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக இருக்கிறது.
(தகவல்: சவுக்கு)
ஆ.. ஊ..னா ஆரியன்
ஆ.. ஊ..னா ஆரியன் >.<
தாத்தா காலத்துல குடிவந்த மார்வாடி சேட்டுகளே இங்க கருகருனு ஆயாச்சு
(எ.கா:- பியூஷ் மானுஸ், ஆர்.ஜே.பாலாஜி)
இதுல ஆரியர்கள் 3000 ஆண்டுகளா வெள்ளை நிறமா இருக்காங்களாம்
என்னா அறிவு?
பார்ப்பானரைத் தவிர வேற யாருமே நிறமில்லையா இங்கு?
ஜாதி என்பது தொழிலுடன் தொடர்புடையது.
தொழில் பொருளாதாரத்துடன் தொடர்புடையது.
உடல் நிறத்தின் மாற்றமும் தொழிலுடன் தொடர்புடையதே.
(வாழ்விடத்தின் பொறுத்து வரும் தோல் நிறத்தை இங்கே கூறவில்லை)
ஆரியத்தை அழிப்பது இயலாத ஒன்று.
இருக்கிற ஒன்றைத்தானே அழிக்கமுடியும்?
இல்லாத ஆரியத்தை இல்லாத திராவிடம் கொண்டு எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் எதிர்க்கலாம்.
ஆனால் இருக்கும் தமிழியத்தை இல்லாததை நோக்கி திருப்புவது எப்படி பலனளிக்கும்?
சிவனும் ஆரியத்தை எதிர்த்த தக்காண பீடபூமி தமிழனாம்.
சிவனை மாணிக்கவாசகர் ஆரியனே என்று அழைக்கிறார்.
கலித்தொகை ஈர்ஞ்சடை அந்தணன் என்றழைக்கிறது.
என்றால் எதுதான் இன்று ஆரியம்?
ஆரியம் என்றால் இன்று ஹிந்தியம்.
திராவிடம் என்றால் இன்று வடுகம்.
தமிழியம் என்றால் என்றும் தமிழியம்.
Wednesday, 22 February 2017
ஜக்கி ஒழிக்க ஒரே வழி
இங்கே ஒரு ராபின் ஹுட் பிறக்கவேண்டும்...
மீண்டும் ஒரு வீரப்பனார்...
ஜக்கி வாசுதேவ் பிறர்மகளை மொட்டையடித்து போதை கொடுத்து அடிமையாக்கி
சீராட்டி பாராட்டி வளர்த்த அவனது நவநாகரீக மகளைக் கடத்தி
அவன் பணத்தையெல்லாம் பிடுங்கவேண்டும்
அந்த ஜக்கி வாசுதேவ் காடழித்து கட்டிய ஆசிரமத்தில் நுழைந்து
அவனை ஜட்டியோடு அடித்து
கர்நாடகாவிற்கே திருப்பி விரட்டவேண்டும்.
அவன் ஆசிரமத்தை குண்டு வைத்து தகர்த்து
அவன் தன் முகத்தையே நகலெடுத்து கட்டிய சிவன் சிலையை உடைத்து தூள்தூளாக்கி
அந்த வந்தேறிப்பயல் தனக்காக திருப்பிக்கொண்ட காட்டு ஓடையை பழைய பாதையில் மீண்டும் திருப்பவேண்டும்.
பரிசாக தீவிரவாதப் பட்டமும் தேசதுரோக வழக்கும் அதன் முடிவாக தூக்கோ துப்பாக்கித் தோட்டாவோ கிடைக்கலாம்
ஆனால் பழங்குடிகளும் மண்ணின் மைந்தர் குடும்பங்களும் யானைகளும் அதன் குட்டிகளும் அவனை என்றும் வாழ்த்தும்
Tuesday, 21 February 2017
தமிழ்தேசியம்னா என்ன? அதாவதுப்பா...
அதாவதுப்பா
சாமிக்கு பதிலா இயற்கை
சாதிக்கு பதிலா இனம்
இங்கிலீசுக்கு பதிலா தமிழ்
இந்தியாவுக்கு பதிலா தமிழ்நாடு
இவ்ளதான் தமிழ் தேசியம்
தமிழ் எழுத்து கூட்டெழுத்தே -2
ஆங்கிலத்தின் சிறப்பு அதன் எளிமையான எழுத்துமுறைதான் (ரோமானிய எழுத்துரு).
தமிழின் எழுத்தானது அதைவிடவும் எளிமையானது.
தமிழை எழுத தற்போது நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துருக்கள் கையெழுத்துக்கான கூட்டெழுத்துக்களே.
நாம்தான் அதைப் பயன்படுத்துவதில்லை.
அவற்றை தனித்தனியாக எழுதாமல் சேர்த்து எழுதலாம்.
மிகவும் எளிது.
சிறிய மாற்றம் செய்தால் போதும்.
(பழைய எழுத்துருவை மறக்காமல் இருக்க ஆங்கிலத்தில் பழைய எழுத்துருவை Capital என்று பயன்படுத்துவது போல நாம் பயன்படுத்தலாம்)
3 மார்ச் 2015 அன்று முகநூலிலிட்டது
https://m.facebook.com/aathi1947/albums/551128658324125/?start_index=12
தமிழ் எழுத்து கூட்டெழுத்தே
ஆங்கிலத்தின் சிறப்பு அதன் எளிமையான எழுத்துமுறைதான் (ரோமானிய எழுத்துரு).
தமிழின் எழுத்தானது அதைவிடவும் எளிமையானது.
தமிழை எழுத தற்போது நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துருக்கள் கையெழுத்துக்கான கூட்டெழுத்துக்களே.
நாம்தான் அதைப் பயன்படுத்துவதில்லை.
அவற்றை தனித்தனியாக எழுதாமல் சேர்த்து எழுதலாம்.
மிகவும் எளிது.
சிறிய மாற்றம் செய்தால் போதும்.
(பழைய எழுத்துருவை மறக்காமல் இருக்க ஆங்கிலத்தில் பழைய எழுத்துருவை Capital என்று பயன்படுத்துவது போல நாம் பயன்படுத்தலாம்)
Monday, 20 February 2017
சிலப்பதிகாரம் பேசும் தமிழ்தேசியம்
சிலப்பதிகாரம் பேசும் தமிழ்தேசியம்
குமரியொடு வட இமயத்து
ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன்,
சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்த காலை;
வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர் மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை தன்னில், ஒன்று மொழி நகையினராய்,
'தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்...
(வாழ்த்துக் காதை)
__________
தொடர்புடைய பதிவு
vaettoli.blogspot.com/2015/12/blog-post_20.html
Sunday, 19 February 2017
இந்துத்துவ நியாயங்கள்
இந்துத்துவ நியாயங்கள்
வட இந்திய ஹிந்துக்கள் பக்கம் ஓரளவு நியாயம் உள்ளது.
ஆனால் அந்த நியாயம் தமிழ்மண்ணுக்கு வெளியே மட்டும்தான்.
தமிழ்தேசியமும் இந்துத்துவமும் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
கீழ்கண்டவற்றை நான் ஒரு சராசரித் தமிழனின் பார்வையிலும் சராசரி வடயிந்திய இந்துவின் பார்வையிலும் எழுதுகிறேன்.
(** குறியிட்டவை என் சொந்த கருத்துகள் இல்லை)
* தமிழே மூத்த மொழி, பிற இனங்கள் அதிலிருந்து வந்தவை.
** இந்து மதமே மூத்த மதம், பிற மதத்தார் இந்துவிலிருந்து மாறியவர்கள்
* சாதியாக பிரிந்து அடித்துக்கொள்வது.
** இனங்களாகப் பிரிந்து அடித்துக்கொள்வது.
* வேற்றின (விஜயநகர) படையெடுப்பு மற்றும் கொடுங்கோல் ஆட்சி.
** இசுலாமிய (டெல்லி சுல்தானிய, முகலாய) படையெடுப்பு மற்றும் கொடுங்கோல் ஆட்சி.
* ஆங்கில ஆட்சி நுழைய வழிவிட்ட வேற்றின ஆட்சி மற்றும் ஆங்கிலேயருக்கு அடுத்தநிலை அதிகாரங்கள் வேற்றினத்தார் கையில்
**ஆங்கில ஆட்சி நுழைய இடம் கொடுத்த பிறமத ஆட்சி
மற்றும் ஆங்கிலேயருக்கு அடங்கிய இசுலாமிய நவாபு, நிஜாம் அதிகாரம்
* அண்டை இனங்களிடம் நிலத்தை இழந்தது
** அண்டை நாடுகளிடம் நில இழப்பு
* இமயம் முதல் குமரி வரை சிந்து முதல் கங்கை வரை வாழ்ந்த சங்ககாலத் தமிழர்கள் இன்று ஒரு மூலையில் சுருங்கிவிட்டமை
** ஆப்கானிஸ்தான் முதல் இந்தோனேசியா வரை பரவியிருந்த அகண்டபாரத இந்துக்கள் இன்று சுருங்கிவிட்டமை
* இனப்பிரச்சனையால் பெருமளவு மக்கள் இடப்பெயர்ச்சி (மலையக, ஈழத் தமிழர்)
** பாகிஸ்தான் உருவான போது நடந்த இடப்பெயர்ச்சி
* வேற்றினத்தவர் மத்தியில் வாழும் தமிழர்கள் வன்முறை மற்றும் இனப்படுகொலைக்கு ஆளாதல்
** பிற மதத்தவர் மத்தியில் வாழும் இந்துக்கள் வன்முறை மற்றும் இனப்படுகொலைக்கு முகம் கொடுத்தல்
(பாகிஸ்தான் உருவாகும்போது 20% இந்துக்கள் இருந்தனர்.
தற்போது 2% ஆகிவிட்டனர்)
*தமிழக மீனவர் கடல் எல்லையில் கொல்லப்படுதல்
** இமயமலை எல்லையில் இராணுவ வீரர்கள் கொல்லப்படுதல்
* நடிகர்கள் பெரும்பாலும் வந்தேறிகள்
** நடிகர்கள் பெரும்பாலும் இசுலாமியர்கள்
* மேற்கத்தியபாணி தமிழ்ப் பண்பாடு மீது தாக்குதல்
** இந்திய கலாச்சாரத்தில் மேற்கத்திய கலாச்சார தாக்குதல்
* ஹிந்தியர் தமிழரை மதிக்காதது
** பிற நாடுகள் இந்தியரை மதிக்காதது
* வேற்றின குடியேற்றம் தொடர்ச்சியாக நடத்தல், தமிழர் செறிவு நீர்த்துப்போதல்
** மதமாற்றம், வங்கதேச மக்கள் நுழைவு என மதப் பெரும்பான்மை நீர்த்துப்போதல்
* அண்டை மாநிலங்கள் தமிழரைப் புறக்கணித்தல், ஆனால் தமிழகத்தில் வந்தேறிகள் வாழ்வாங்கு வாழ்தல்
**இசுலாமியநாடுகள் இந்துக்களை புறக்கணித்தல், ஆனால் இந்தியாவில் இசுலாமிய மதத்தாருக்கு சிறுபான்மையை விட அதிக சலுகைகள்
* வேற்றினத்தாரே அரசியலில் கோலோச்சுதல்
** பிறமத வம்சாவழிகளே அரசியலில் கோலோச்சுதல் (நேருவின் தாத்தா காஜிகான் ஆப்கானியர், இந்திரா காந்தி கணவர் இசுலாமியர், சோனியா கிறித்துவ இத்தாலியர் )
* தமிழ் அழிந்து வருதல்
** இந்துமத வேதமொழி சமக்கிருதம் அழிந்துவிட்டமை
* தமிழருக்கு ஒரு நாடு இல்லை
** இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லை (இந்தியா மதசார்பற்ற கொள்கையுடன் இருப்பது, நேபாளம் இந்து நாடாக இல்லாமல் போனது)
*சிங்களவருடன் போரில் தோல்வி
** சீனாவுடன் போரில் தோல்வி
* ஆங்கிலேயர் நிறுவிய திராவிடம் மற்றும் திராவிட கட்சிகள் ஏற்படுத்திய கேடு
** ஆங்கிலேயர் நிறுவிய காங்கிரசு மற்றும் அக்கட்சி ஏற்படுத்திய கேடு
இதுபோல இன்னும் கூறலாம்.
வேறுபாடுகளும் உள்ளன.
இந்தியாவுக்கு அண்டை நாடுகள் ஆறுகளை மறிப்பதில்லை.
அதேபோல தீவிரவாத தாக்குதல்கள் தமிழினத்தின் மீது நடப்பதில்லை.
நான் இங்கே கூறவருவது இந்துத்துவத்தின் பக்கமும் நியாயம் உள்ளது.
அப்படி என்னதான் நியாயமிருந்தாலும் ஹிந்தியா தமிழ்மண்ணை ஆக்கிரமித்து சுரண்டுவதை ஒருக்காலும் ஏற்கமுடியாது.
சில தமிழர்கள் இந்து மதத்தையும் இந்தியாவையும் இன்னமும் நம்புகின்றனர் (சில ஈழத்தமிழரும் கூட).
அதற்குக் காரணம் இந்து மதம் தமிழரின் வாழ்வியலை நகலெடுத்து தமிழக தலைவர்களை கடவுளாக்கி தானாக உருவான ஒரு முறைப்படுத்தப்படாத அவியல் மதம்.
தமிழர் நாகரீக எச்சங்கள் இன்றும் வடக்கே காணப்படுகின்றன.
"இமயம் வரை நமது மண்" என்ற எண்ணம் தமிழர் மனதில் இயற்கையாக இருப்பதே இத்தகைய இந்திய சார்பு மனநிலைக்குக் காரணம்.
ஆனால், இன்று அத்தகைய பரந்த மனநிலை கேடையே தரும்.
ஹிந்தியா வேறு, தமிழகம் வேறு.
ஹிந்திய பிராமணருக்கும் தமிழ்ப் பார்ப்பனருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
ஹிந்திய இசுலாமியருக்கும் தமிழ் இசுலாமியருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
ஹிந்துத்துவம் ஹிந்தியருக்கு.
தமிழியம் தமிழருக்கு.
திராவிடவாதியும் சரி, இந்துவாதியும் சரி,
விவாதத்திற்கு வந்தால்
தமிழ் மண்ணிற்குள் ஆரிய, இசுலாமிய ஆதிக்கத்திற்கான சான்றுகளைக் காட்ட கூறுங்கள்.
நம்மைக் குழப்பமுடியாமல் ஓடியே போய்விடுவான்.
நாம் எப்போது இந்துத்துவத்தை ஆதரிக்கலாம்?
ஹிந்தியா தனக்கு தொடர்பில்லாத இனங்களுக்கு (காஷ்மீரி, தமிழ், பிற தென்னிந்தியர், கிழக்கு மாநில இனங்கள், அந்தமான் நிகோபர் லட்சத்தீவு பழங்குடிகள் என பலர்) விடுதலை அளித்துவிட்டு
இழந்த ஹிந்து மொழிக்குடும்ப பகுதிகளை இணைக்க முயற்சித்தால்
அப்போது நாம் ஆதரிக்கலாம்.
____________
மேலும் அறிய,
ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்?
vaettoli. blogspot. com/2016/07/blog-post_20.html?m=1
வடயிந்தியாவும் தென்னிந்தியாவும்
vaettoli. blogspot. com/2017/01/blog-post_26.html
Saturday, 18 February 2017
தமிழர்நாடு - இறுதிசெய்யப்பட்ட வரைபடம்
தமிழர்நாடு - இறுதிசெய்யப்பட்ட வரைபடம்
பலரும் கேட்டுக்கொண்டதால் சான்றுகள் அடிப்படையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த புத்தளத்தின் ஒரு பகுதியைச் சேர்த்துள்ளேன்.
இது முக்கியமான திருத்தம்.
இதுதான் நாம் கோரிக்கை வைத்து போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலப்பகுதி.
மேலும் விபரங்கள்,
தமிழர்நாடு -வரைபடங்களின் தொகுப்பு வரைபடம் (வேட்டொலி)
vaettoli.blogspot.com/2017/02/blog-post_10.html
Friday, 17 February 2017
நெடுவாசல் மண்ணுக்கு வந்த ஹைட்ரஜன் ஆபத்து
Gem Laboratory Pvt.Ltd., -
இது தான் விவசாய பூமியான நெடுவாசல் கிராமத்தில் மண்ணை அழித்து மலடாக்கி ஹைட்ரஜன் எரிவாயு எடுக்க,
கேடுகெட்ட இந்திய பாசிச அரசால் அனுமதி பெற்றிருக்கும் கன்னட நிறுவனம்!
இது மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும் கர்நாடகாவை சேர்ந்த ஓர் பாஜக காரரின் நிறுவனம்!
அவர் 2004 & 2009 ல் MP யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்!
நமக்கு தண்ணீர் கொடுக்காத ஓர் மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு நமக்கு சம்பந்தமே இல்லாத இந்திய அரசு எவனை கேட்டு நம் விவசாய நிலத்தில் துளை போட அனுமதி கொடுக்கிறது???
Govindaraj Kumar அவர்களின் பதிவிலிருந்து
பார்ப்பனர் = சாணி, இசுலாமியர் = மலம் _ஈ.வே.ரா
"பாப்பானுக்குப் பயந்துகொண்டு நாம் முஸ்லீம்களுக்கு இடம் கொடுத்துவிட்டோம்.
இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்ததுபோல் இருக்கிறது."
6.3.1962 விடுதலை தலையங்கத்தில் ஈ.வே.ரா.
Thursday, 16 February 2017
தனித்தமிழர்நாடு போராளி சுப.முத்துக்குமார் அண்ணனின் சாகச வரலாறு
அண்ணனின் நினைவுகள்
எழுபதுகளின் முற்பகுதியில் மதுரையில் தாயார் பார்வதிக்கும்,
தந்தை சுந்தரத்துக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்.
தந்தையின் தொழில் காரணமாக சிறு வயதிலேயே பழனிக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வளர்கிறார்.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரம் ஒரு காலத்தில் பொதுவுடமை சித்தாந்தம் பொங்கி வழியும் பூமியாக இருந்தது.
அதனால் ஈர்க்கபெற்று, சக மாணவர்கள் திரைப்பட ரசிகர்களாக அடையாளம் எடுத்தபோது அண்ணன் முத்துக்குமார் மணிக்கணக்கில் காரல் மார்க்சையும், சோவியத் யூனியனையும், மாவோவையும், சே'வையும் பற்றி பேசுவார் என்று விவரிக்கிறார்கள் அண்ணனை சிறுவயதில் அறிந்த தோழர்கள்!
பின்னர் சிறிதுசிறிதாக ஜெயவர்தனே மற்றும் அதுலத் முதலி காலங்களில் ஈழத்திலே பற்றி எறிந்த தீ மெதுவாக அண்ணனையும் பற்றிக் கொள்கிறது.
பழனியில் பள்ளிபருவத்திலேயே பல்வேறு அறப்போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார்.
ஈழ விடுதலை தமிழினத்திற்கு எவ்வளவு அவசியமோ, தமிழக விடுதலையும் அத்துனை அவசியம் என்ற புரிதலுக்கு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மீட்ச்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, தோழர் தமிழரசன் வழியில் ஆயுத போராட்டத்திற்கு வித்திடுகிறார்.
குட்டிமணி, தங்கத்துரைகளின் படுகொலைகள், ஈகி திலீபனின் தியாகம் போன்றவை முத்துகுமாரையும் ஈழத்திற்கு நேரிடையாக அழைக்கிறது.
எண்பதுகளின் பிற்பகுதியில் ஆயுத பயிற்சிக்காக தமிழீழம் சென்றார்.
அங்கு தேசியத்தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலோடு சிங்கள படைகளுக்கு எதிராக விடுதலை புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கு பெறுகிறார்.
தொடர்ச்சியாக தேசிய தலைவரின் தனி பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யபெற்று பணியாற்றுகிறார்.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.
தமிழகத்தில் தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ் தேசிய மீட்ச்சிப்படையை தலைமையேற்று வழிநடத்துகிறார்.
அத்துடன் தமிழ் ஈழ விடுதலைக்காக புலிகளுக்கு தேவையான அனைத்தையும் தொடர்ச்சியாக வேதாரணியம் கட்டுமாவடி, மணமேல்குடி பகுதிகளிலிருந்து அனுப்பி வருகிறார்.
தலைவர் பிரபாகரனின் தனிப்பாதுகாப்பு அதிகாரி ரோமியோ மற்றும் நான்கு பெண்போராளிகள் உட்பட பதினாறு போராளிகளை வேலூர் சிறையில் இருந்து தப்ப வைக்கும் அசைன்மென்ட் (பொறுப்பு) அண்ணன் முத்துகுமாரிடம் வழங்கபடுகிறது.
இப்போது அறிவியல் தொழில்நுட்ப வசதிகளுடன் ஹாலிவுட் திரில்லர்களில் வரும் காட்சிகளைப்போல உலகே வியக்கும் வண்ணம் புலிகள் வேலூர் கோட்டையிலிருந்து நீண்ட நெடிய சுரங்கம் தோண்டி தப்புகிறார்கள்.
அவர்கள் உட்பட 43 போராளிகளை மிகக்கடுமையான மத்திய காவல் மற்றும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்புக்கு நடுவே கல்யாண வீட்டார் 'கெட்டப்'போடு (பாவனையில்) தமிழகத்தில் இருந்து தப்ப வைத்து விடுகிறார் முத்துக்குமார்.
அண்ணனின் சாதுர்யமும், சாமார்த்தியமும் பல போராளிகளையும், புலித்தலைமையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
பின் ஒருமுறை மணமேல்குடியில் விடுதலை புலிகளுக்கு அனுப்ப பொருட்களுடன் காத்திருந்த போது கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கபெற்றார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பின் பிணையில் விடுதலை ஆகி தலைமறைவாகிறார்.
போராட்டம் சந்தனக்காட்டில் புதிய பரிமாணம் எடுக்கிறது.
வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் சேர்ந்து தலைமையேற்று தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அள்ளிச்சென்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கோவை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார்.
கன்னட சூப்பர் ஸ்டார் கடத்தல் திட்டத்தை சிறையிலிருந்தே வகுக்கிறார்.
அந்த கடத்தல் வீரப்பனார் ஒப்புதலோடு தோழர்களால் செவ்வனே முடிக்கபெருகிறது.
தமிழர்களின் சீவாதார பிரச்சினைகளான காவிரிநீர், பெங்களூரில் பல ஆண்டுகளாக திறக்கபடாது மூடி கிடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு, மலைவாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம், மற்றும் போராளி முத்துக்குமார் விடுதலை போன்ற கோரிக்கைகள் முன்வைக்கபடுகிறது.
பிறகு சிறையிலிருந்து பிணையில் வருகிறார்.
ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடன் சனநாயக அரசியலில் நெருக்கமாக ஈடுபடுத்திகொள்கிறார்.
பின் மீண்டும் ஒன்றரை ஆண்டு காலம் கழித்து வீரப்பனாருக்கு பொருட்களை கொண்டுசென்றதாக அண்ணன் கொளத்தூர் மணியுடன் கூட்டு அதிரடிப்படையால் கைதாகி கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கன்னட சிறையில் அடைக்கபடுகிறார்.
நான்கரை ஆண்டுகாலம் சிறைவாழ்க்கை, பின் மீண்டும் பிணையில் வருகிறார்.
மெல்ல மெல்ல ஈழத்தில் போர் உச்சத்தை எட்டுகிறது.
தமிழ் தேசிய சனநாயக அரசியலில் தீவிரமாகிறார்.
தொடர்ந்து இயன்ற வழிகளில் எல்லாம் புலிகளுக்கு தேவையானவற்றை அனுப்புகிறார்.
ஈழம் மெல்ல மெல்ல அழிகிறது!
ராமேஸ்வரம் பிரச்சினையில் மதுரையில் பிணை இடுவதற்காக தங்கி இருந்த சீமானை சந்தித்து தனி தீவிர போர்க்குண அரசியல் பாதையை ஊக்குவிக்கிறார்.
தோழர்களுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் அந்த பகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் சிதமபரத்தை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தோற்க்கடிக்கிறார்
(ஆனால் அதன் பின் தேர்தலில் சிதம்பரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது சிதம்பரம் மற்றும் கருணாவின் தனித்திறமை சார்ந்தது).
மதுரையில் முள்வேலி தகர்த்தெறிவோம் மாநாட்டை தோழர்களுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தினார்.
நாம் தமிழர் கட்சி பணிகளை தொடங்கி முழுமூச்சுடன் ஈடுபடும் வேளையில் புதுக்கோட்டை பெ.தி.க மாவட்ட பொறுப்பாளர் கரு. காளிமுத்து அவர்களின் புதல்வி மாதரசியை சாதி மறுப்பு மணம் முடிக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் கொடி அறிமுகம் தஞ்சையில் முடித்து திரும்பும் வழியில் ஈழத்திற்கு மருந்துகள், ரத்த பைகள் அனுப்பியதாக கருணாநிதி அரசால் ஜாபர் சேட்டால் கைது செய்யபடுகிறார்.
ஒன்றரை மாதம் கழித்து வழக்கை உடைத்து வெளிவந்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக பம்பரமாய் சுழன்ற அவர், அந்த பகுதிகளில் பல புலிக்குட்டிகளை வளர்த்தெடுக்கிறார்!
இவருடைய காலம் இதுவரையான நாம் தமிழர் வரலாற்றில் புதுக்கோட்டை, காரைக்குடி, தென் தஞ்சை மாவட்டங்களின் பொற்காலம் எனலாம். இந்த மூன்று மாவட்டங்களிலுமே அப்போதைய கருணாவின் ஆளுங்கட்சிக்கு இணையான செயல்பாடுகளை நாம் தமிழர் கொண்டிருந்தது என்பது ஆளுங்கட்சியினரே ஏற்றுக்கொண்ட வாதம்.
ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களையும் தன் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வளர்த்தெடுத்தார்.
இந்த தமிழினத்தின் அறிவிக்கபடாத தளபதி மர்ம நபர்களால் புதுகை நகரின் மத்தியில், அண்ணா சிலை அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இடத்தில் பிப்ரவரி 16, 2011 அன்று கயவர்களால் வெட்டி வீழ்த்தபட்டார்.
இந்த பாதகத்தை செய்தது தனிப்பட்ட எதிரிகளாக இருக்க வாய்ப்பில்லை,
ஏனெனில் இது எதிரியும் அவனை சார்ந்த உற்றார் உறவினரும் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்பதை எளிதில் அவதானிக்க முடியும்.
ஆகவே, இது அரச பயங்கரவாதமா என்பது சிவகங்கை தொகுதியை உள்ளடக்கிய புதுகை மாவட்டத்தின் 'சிதம்பர ரகசியம்'!
அண்ணனின் இறுதிச்சடங்கில் அப்போது பேசிய அய்யா நெடுமாறன், முத்துகுமாரின் வீர தீரங்களை தாண்டி, எனக்கே சில நேரம் விளங்காத அரசியல் முடிச்சுக்களை அவிழ்ப்பதில் வல்லவன் முத்துகுமார் என்றார்.
சீமான் பேசும்போது, நான் சமகாலத்தில் சந்தித்த மிகச்சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவன் முத்துக்குமார், அவன் எனக்கு அரசியல் ஆசான் என்றார்.
முத்துகுமார் தூக்கிய ஆயுதத்தை விட அவன் சிந்தனை பேராபத்து என்று உணர்ந்தவர்கள் தான் அவனை சிதைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.
சமீபத்தில் உரையாடும்போது தோழர் ஏகலைவன், அண்ணனோடு நெருங்கி பழகியதை வைத்து, போராளிகள் உருவாக்கப்படுவதில்லை, போராளிகளாகவே பிறக்கிறார்கள் என்பது உண்மையானால் இவன் அவ்வாறு பிறந்தவன் என்றார்.
சுருக்கமாக,
10 ஆண்டுகாலம் தமிழ் தேசிய விடுதலைக்காக சிறை வாழ்வு,
5 ஆண்டுகாலம் தலைமறைவு ஆயுத போராட்ட வாழ்வு,
4 ஆண்டுகாலம் மக்கள் சனநாயக அரசியல் வாழ்வு.
சாகத் துணிந்தவன் சரித்திரம் ஆகிறான்!
சாகப் பயந்தவன் தரித்திரம் ஆகிறான்!
நன்றி: Saravanan Thangappa