Sunday 19 February 2017

இந்துத்துவ நியாயங்கள்

இந்துத்துவ நியாயங்கள்

வட இந்திய ஹிந்துக்கள் பக்கம் ஓரளவு நியாயம் உள்ளது.
ஆனால் அந்த நியாயம் தமிழ்மண்ணுக்கு வெளியே மட்டும்தான்.

தமிழ்தேசியமும் இந்துத்துவமும் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

கீழ்கண்டவற்றை நான் ஒரு சராசரித் தமிழனின் பார்வையிலும் சராசரி வடயிந்திய இந்துவின் பார்வையிலும் எழுதுகிறேன்.
(** குறியிட்டவை என் சொந்த கருத்துகள் இல்லை)

* தமிழே மூத்த மொழி, பிற இனங்கள் அதிலிருந்து வந்தவை.
** இந்து மதமே மூத்த மதம், பிற மதத்தார் இந்துவிலிருந்து மாறியவர்கள்

* சாதியாக பிரிந்து அடித்துக்கொள்வது.
** இனங்களாகப் பிரிந்து அடித்துக்கொள்வது.

* வேற்றின (விஜயநகர) படையெடுப்பு மற்றும் கொடுங்கோல் ஆட்சி.
** இசுலாமிய (டெல்லி சுல்தானிய, முகலாய) படையெடுப்பு மற்றும் கொடுங்கோல் ஆட்சி.

* ஆங்கில ஆட்சி நுழைய வழிவிட்ட வேற்றின ஆட்சி மற்றும் ஆங்கிலேயருக்கு அடுத்தநிலை அதிகாரங்கள் வேற்றினத்தார் கையில்
**ஆங்கில ஆட்சி நுழைய இடம் கொடுத்த பிறமத ஆட்சி
மற்றும் ஆங்கிலேயருக்கு அடங்கிய இசுலாமிய நவாபு, நிஜாம் அதிகாரம்

* அண்டை இனங்களிடம் நிலத்தை இழந்தது
** அண்டை நாடுகளிடம் நில இழப்பு

* இமயம் முதல் குமரி வரை சிந்து முதல் கங்கை வரை வாழ்ந்த சங்ககாலத் தமிழர்கள் இன்று ஒரு மூலையில் சுருங்கிவிட்டமை
** ஆப்கானிஸ்தான் முதல் இந்தோனேசியா வரை பரவியிருந்த அகண்டபாரத இந்துக்கள் இன்று சுருங்கிவிட்டமை

* இனப்பிரச்சனையால் பெருமளவு மக்கள் இடப்பெயர்ச்சி (மலையக, ஈழத் தமிழர்)
** பாகிஸ்தான் உருவான போது நடந்த இடப்பெயர்ச்சி

* வேற்றினத்தவர் மத்தியில் வாழும் தமிழர்கள் வன்முறை மற்றும் இனப்படுகொலைக்கு ஆளாதல்
** பிற மதத்தவர் மத்தியில் வாழும் இந்துக்கள் வன்முறை மற்றும் இனப்படுகொலைக்கு முகம் கொடுத்தல்
(பாகிஸ்தான் உருவாகும்போது 20% இந்துக்கள் இருந்தனர்.
தற்போது 2% ஆகிவிட்டனர்)

*தமிழக மீனவர் கடல் எல்லையில் கொல்லப்படுதல்
** இமயமலை எல்லையில் இராணுவ வீரர்கள் கொல்லப்படுதல்

* நடிகர்கள் பெரும்பாலும் வந்தேறிகள்
** நடிகர்கள் பெரும்பாலும் இசுலாமியர்கள்

* மேற்கத்தியபாணி தமிழ்ப் பண்பாடு மீது  தாக்குதல்
** இந்திய கலாச்சாரத்தில் மேற்கத்திய கலாச்சார தாக்குதல்

* ஹிந்தியர் தமிழரை மதிக்காதது
** பிற நாடுகள் இந்தியரை மதிக்காதது

* வேற்றின குடியேற்றம் தொடர்ச்சியாக நடத்தல், தமிழர் செறிவு நீர்த்துப்போதல்
** மதமாற்றம், வங்கதேச மக்கள் நுழைவு என மதப் பெரும்பான்மை நீர்த்துப்போதல்

* அண்டை மாநிலங்கள் தமிழரைப் புறக்கணித்தல், ஆனால் தமிழகத்தில் வந்தேறிகள் வாழ்வாங்கு வாழ்தல்
**இசுலாமியநாடுகள் இந்துக்களை புறக்கணித்தல், ஆனால் இந்தியாவில் இசுலாமிய மதத்தாருக்கு சிறுபான்மையை விட அதிக சலுகைகள்

* வேற்றினத்தாரே அரசியலில் கோலோச்சுதல்
** பிறமத வம்சாவழிகளே அரசியலில் கோலோச்சுதல் (நேருவின் தாத்தா காஜிகான் ஆப்கானியர், இந்திரா காந்தி கணவர் இசுலாமியர், சோனியா கிறித்துவ இத்தாலியர் )

* தமிழ் அழிந்து வருதல்
** இந்துமத வேதமொழி சமக்கிருதம் அழிந்துவிட்டமை

* தமிழருக்கு ஒரு நாடு இல்லை
** இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லை (இந்தியா மதசார்பற்ற கொள்கையுடன் இருப்பது, நேபாளம் இந்து நாடாக இல்லாமல் போனது)

*சிங்களவருடன் போரில் தோல்வி
** சீனாவுடன் போரில் தோல்வி

* ஆங்கிலேயர் நிறுவிய திராவிடம் மற்றும் திராவிட கட்சிகள் ஏற்படுத்திய கேடு
** ஆங்கிலேயர் நிறுவிய காங்கிரசு மற்றும் அக்கட்சி ஏற்படுத்திய கேடு

இதுபோல இன்னும் கூறலாம்.
வேறுபாடுகளும் உள்ளன.
இந்தியாவுக்கு அண்டை நாடுகள் ஆறுகளை மறிப்பதில்லை.
  அதேபோல தீவிரவாத தாக்குதல்கள் தமிழினத்தின் மீது நடப்பதில்லை.

நான் இங்கே கூறவருவது இந்துத்துவத்தின் பக்கமும் நியாயம் உள்ளது.
அப்படி என்னதான் நியாயமிருந்தாலும் ஹிந்தியா தமிழ்மண்ணை ஆக்கிரமித்து சுரண்டுவதை ஒருக்காலும் ஏற்கமுடியாது.

சில தமிழர்கள் இந்து மதத்தையும் இந்தியாவையும் இன்னமும் நம்புகின்றனர் (சில ஈழத்தமிழரும் கூட).
அதற்குக் காரணம் இந்து மதம் தமிழரின் வாழ்வியலை நகலெடுத்து தமிழக தலைவர்களை கடவுளாக்கி தானாக உருவான ஒரு முறைப்படுத்தப்படாத அவியல் மதம்.
தமிழர் நாகரீக எச்சங்கள் இன்றும் வடக்கே காணப்படுகின்றன.
"இமயம் வரை நமது மண்" என்ற எண்ணம் தமிழர் மனதில் இயற்கையாக இருப்பதே இத்தகைய இந்திய சார்பு மனநிலைக்குக் காரணம்.

ஆனால், இன்று அத்தகைய பரந்த மனநிலை கேடையே தரும்.

ஹிந்தியா வேறு, தமிழகம் வேறு.

ஹிந்திய பிராமணருக்கும் தமிழ்ப் பார்ப்பனருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

ஹிந்திய இசுலாமியருக்கும் தமிழ் இசுலாமியருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

ஹிந்துத்துவம் ஹிந்தியருக்கு.

தமிழியம் தமிழருக்கு.

திராவிடவாதியும் சரி, இந்துவாதியும் சரி,
விவாதத்திற்கு வந்தால்
தமிழ் மண்ணிற்குள் ஆரிய, இசுலாமிய ஆதிக்கத்திற்கான சான்றுகளைக் காட்ட கூறுங்கள்.

நம்மைக் குழப்பமுடியாமல் ஓடியே போய்விடுவான்.

நாம் எப்போது இந்துத்துவத்தை ஆதரிக்கலாம்?

ஹிந்தியா தனக்கு தொடர்பில்லாத இனங்களுக்கு (காஷ்மீரி, தமிழ், பிற தென்னிந்தியர், கிழக்கு மாநில இனங்கள், அந்தமான் நிகோபர் லட்சத்தீவு பழங்குடிகள் என பலர்) விடுதலை அளித்துவிட்டு
இழந்த ஹிந்து மொழிக்குடும்ப பகுதிகளை இணைக்க முயற்சித்தால்
அப்போது நாம் ஆதரிக்கலாம்.
____________
மேலும் அறிய,

ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்?
vaettoli. blogspot. com/2016/07/blog-post_20.html?m=1

வடயிந்தியாவும் தென்னிந்தியாவும்
vaettoli. blogspot. com/2017/01/blog-post_26.html

1 comment:

  1. கன்னட இந்துக்களோ மலையாள இந்துக்களோ வடஹிந்திய இந்துக்களோ தமிழ் இந்துக்களை மனிதராகவே நினைப்பதில்லை. கர்நாடகாவில் இப்பொழுது தனியார் துறையிலும் கன்னடர்களுக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் எனச் சட்டமே உருவாக்கி அமலக்கு வந்துவிட்டது. தமிழ்நாட்டில் தான் இன்னமும் அரசாங்கத் துறையிலும் கன்னடர்களுக்கும் மராத்தியர்களுக்கும் சௌத்திரிகளுக்கும் தெலுங்கர்களுக்கும் மலையாளிகளுக்கும் {இடஒதுக்கீடு தொடர்கிறது.தமிழ்நாட்டில் தனியார் துறையில் கேட்கவே வேண்டாம்.

    ReplyDelete