Wednesday, 29 November 2017

பறிபோன செங்கோட்டை காடு

பறிபோன செங்கோட்டை காடு


 மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.

 அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்கவேண்டும்


 ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.

 

 தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.

 

 ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர்.


 அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக்கொண்டனர்.


 இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக்கொண்டது.

(அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க,

தமிழகத்தில் கால்பங்குகூட காடு இல்லை)

 

 பறிகொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள்  பறிபோனது ஆகும்.


 1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதி்.


 அன்றைய மலையாள இனவெறி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் கேட்டதில் பாதி கிடைத்தது.


 இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை அடங்கும்.


 மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும்போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார்.


 இழந்த செங்கோட்டை வனப்பகுதி 1950களிலேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாகும்.


இதை நாம் இழந்தோம்.

(வரைபடம்: அன்றைய செங்கோட்டை தாலுகா மீது இன்றைய எல்லை வரையப்பட்டுள்ளது)

Sunday, 26 November 2017

தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம்! _ வி.சி.க (கர்நாடகா கிளை)

தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம்!
_ வி.சி.க (கர்நாடகா கிளை)

எனக்கு எதுவும் தெரியாது
_ திருமாவளவன்

திருமா: சென்னை நதிநீர் உரிமை மாநாடு நீரியல் வல்லுநர் விவசாய சங்கங்கள் என் தலைமையில் தோழமை கட்சிகளுடன் கூட்டுகிறோம்

நிருபர்: கர்நாடக விசிக காவிரிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக படங்கள்
ஃபேஸ்புக் வாட்சப்பில் பரவுகிறதே
ரத்தத்தைக்கூட தருவோம் தண்ணீர் தரமாட்டோம் என்று

திருமா: கர்நாடகாவில் விடுதலை சிறுத்தைகள் இயங்குகிறார்கள்
அம்மாநில உரிமைகளுக்காக அவர்கள் குரல்கொடுத்திருக்கலாம்
நான் இது பற்றி விசாரித்து சொல்கிறேன்

நிருபர்: உங்களுக்கு தகவல் வரவில்லையா?

திருமா: இல்லை இதுவரை தகவல் இல்லை

VCK Karnataka Wing Protest Against Tamilnadu In Cauvery Issue - Iam Unaware
- Thol.Thirumavalavan

https://m.youtube.com/watch?v=SPtzbQ2_GE8

Red Pix 07.09.2016

காணொளி https://m.facebook.com/story.php?story_fbid=1090768697693449&id=100002809860739

Friday, 24 November 2017

தண்ணீர் தராத ஆந்திரா தருவதையும் உறிஞ்சிக்கொள்ளும் தெலுங்கர் (காணொளி)

லிட்டருக்கு 220 ரூபாய் கொடுத்து நாம் கொண்டுவரும் தண்ணீர்....

நன்றி:
TN Govt fails to get krishna water காற்றில் பறக்க விடப்பட்டது தெலுங்கு கங்கை திட்டம்.
youtube (sun news 10 ஜூலை 2017)

மேலும் விரிவாக அறிய,
search தெலுங்கு கங்கை அல்லது தெலுங்கு அல்வா வேட்டொலி

https://m.facebook.com/story.php?story_fbid=1089816354455350&id=100002809860739

தெலுங்கு கங்கை அல்லது தெலுங்கு அல்வா

தெலுங்கு கங்கை அல்லது தெலுங்கு அல்வா

சென்னை தமிழக மக்கட்தொகையில் 10% வாழும் மாவட்டம் ஆகும்.
இதன் குடிநீர் பிரச்சனை தீராத பிரச்சனையாக இன்றுவரை உள்ளது.
அண்டை மாவட்டக்களில் அடாவடியாக உறிஞ்சி அனுப்பி ஓரளவு சமாளித்தாலும் நிரந்தரத் தீர்வு எட்டப்படாமலே உள்ளது.

இதில் ஆந்திரா எப்படி லாபம் பார்க்கிறது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு 1970களில் உச்சத்தை அடைந்தது.

சென்னைக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 1983-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பொதுப் பணித்துறை பொறியாளர்களிடம் புதிய திட்டம் ஒன்றைத் தருமாறு கோரினார்.
இதையடுத்து அப்போது தலைமைப் பொறியாளராக இருந்த சி.ஏ.சீனிவாசன் தலைமையிலான தமிழகப் பொறியாளர் குழு 'சென்னைக் கால்வாய் திட்டம்' எனும் திட்டத்தை உருவாக்கி அரசிடம் கொடுத்தது.
மிகக்குறைந்த செலவில் அதாவது அன்றைய நிலையில் ரூ. 210 கோடி நிதியில் இத்திட்டம் நிறைவேற்றும் வகையில் இருந்தது.

சென்னையைப் பொருத்தவரை பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழாவரம் ஆகிய 4 ஏரிகளிலிருந்துதான் குடிநீர் எடுக்கப்படுகிறது.
சென்னைக் கால்வாய் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் என்ற இடத்திலிருந்து காவிரியில் நீர் எடுக்கப்பட்டு அங்கிருந்து கால்வாய் மூலம் (வினாடிக்கு 1000 கன அடி) முதலில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் கொண்டு வரப்படும்.
இந்தத் தண்ணீர் தானாகவே இழுவிசை காரணமாக வரும், எந்தவிதமான பம்பிங் தேவையும் கிடையாது என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சம்.

பள்ளிப்பாளையத்தில் காவிரி ஆற்றங்கரையின் இடது கரையில் கால்வாயின் தலைப் பகுதி அமையும்.
ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே மின் உற்பத்திக்காக இவை அமைக்கப்பட்ட 4 சிறு மதகுகள் உள்ளன.
மேலும் 3 மதகுகள் (பவானி 1, 2, 3) ஆகியவை கட்டப்பட இருந்தன.
இந்த மதகுகளில் ஒன்றை பயன்படுத்தியே காவிரியிலிருந்து ஆண்டுதோறும் 15 டி.எம்.சி. நீரை எடுத்து சென்னைக் கால்வாய் திட்டத்திற்குத் திருப்பி விட முடியும். புதிதாக எந்தவிதமான மதகுகளும் கட்டத் தேவையில்லை.
ஒரே ஒரு முதன்மை மதகுமட்டுமே கட்டப்பட வேண்டும்.
சிமெண்ட் கரைகளால் ஏறத்தாழ 400 கி.மீ நீளமுள்ள கால்வாய் கட்டப்பட வேண்டும்.

ஆனால், எம்.ஜி.ஆர் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்.
அரசியல் காரணங்களுக்காக இந்திரா காந்தியின் அழுத்தத்தின் காரணமாக தெலுங்கு கங்கை திட்டத்திற்கு சம்மதித்தார்.

அதன் அரசியல் பின்னணியை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

  1975-ல் அவசர நிலைப் பிரகடனப்படுத்தி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆட்சியை டிஸ்மிஸ் (31-1-1976) செய்தார் இந்திரா காந்தி.

அதன்பிறகு, சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இந்திரா காந்தி அப்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த சென்னை குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக ஆந்திரம் (சென்னாரெட்டி), கர்நாடகம் (தேவராஜ் அர்ஸ்), மகாராஷ்டிரம் (வசந்த்தாதா பட்டீல்) ஆகிய மாநிலங்களின் முதல்வர்களோடு பேசி,
கிருஷ்ணா நீரை சென்னைக்குக் கொண்டு வருவதற்கு சம்மதம் பெற்றிருப்பதாக அறிவித்தார்.

பின்னர், 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் எம்ஜிஆரின் அதிமுக கூட்டணி யில் 14 இடங்களை காங்கிரஸ் பெற்றது.

1977 ஜூனில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு நாடுமுழுவதும் இருந்த பலத்த எதிர்ப்பால் அதனுடனான கூட்டணியை எம்ஜிஆர் தொடரவில்லை.
இது, இந்திராவுக்கு ஆத்திரமூட்டியது.
அதிமுக வென்று எம்ஜிஆர் முதல் முறையாக முதல்வரானார்.

அப்போது பிரதமர் மொரார்ஜி தேசாய் மக்களவை இடைத் தேர்தலில் இந்திரா காந்தி வென்றது முறைகேடானது என அறிவித்து அவரிடம் இருந்த பதவியையும் பறித்தார்.

அப்போது தஞ்சாவூரில் இடைத்தேர்தல் வந்தது.
இந்திரா காந்தி தஞ்சாவூரில் நிற்க விரும்பினார்.
இதையறிந்த மொரார்ஜி தேசாய் எம்.ஜி.ஆரை டெல்லிக்கு அழைந்து இந்திராவிற்கு ஆதரவளிக்கக்கூடாது என்று மிரட்டினார்.
எம்ஜிஆரும் பயந்து இந்திராவை ஆதரிக்கவில்லை.
இதனால் மேலும் ஆத்திரமடைந்தார் இந்திரா.

1980ல் கருணாநிதி எந்த இந்திரா அவரது ஆட்சியைக் கலைத்து திமுகவை இல்லாத கொடுமையெல்லாம் படுத்தினாரோ அதே இந்திராவுடன் வெட்கமில்லாமல் கூட்டணி அமைத்து அதிமுகவை விட அதிக இடங்களில் வென்றார்.
மத்தியில் இந்திரா ஆட்சியைப் பிடித்ததும் எம்ஜிஆர் அரசை (17.02.1980) கலைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார்.

ஆனால் 1980 மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணியைத் தோற்கடித்து அதிரடிராக எம்ஜிஆர் மீண்டும் முதல்வரானார் .

ஆனாலும் இந்திராவின் மீதான பயம் போகவில்லை.
எனவே தென்னகத்தில் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக  இந்திரா காந்தி வகுத்த திட்டத்தை நிறைவேற்றி அவரிடம் நல்லபெயர் வாங்க திட்டமிட்டார் எம்ஜிஆர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த தனது நண்பரும் அப்போதைய ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரிடம் ஆதரவு கேட்டார்.
என்.டி.ஆர் ஒத்துக்கொண்டார் ஆனால் அவர் போட்ட ஒரே நிபந்தனை திட்டத்திற்கு 'தெலுங்கு கங்கை' என்று பெயர்வைக்கவேண்டும் என்பது.

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நான்கு தென் மாநில முதல்வர்களின் முன்னிலையில், தமிழகமும் ஆந்திரமும் தெலுங்கு கங்கைத் திட்டத்திற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
திட்டத்தைத் தொடங்க எம்ஜிஆர் கருணாநிநி போலவே வெட்கமேயில்லாமல் தன் ஆட்சியைக் கலைத்த இந்திராவையே  கூட்டிவந்து அடிக்கல் நாட்டினார்.

சீனிவாசன் தலைமையிலான தமிழகப் பொறியாளர்கள் இதைத் தடுக்க முயன்றனர்.
அப்போதைய தலைமைச் செயலாளர் வி.கார்த்திகேயன் மற்றும் நிதித்துறைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோருடன் சென்று முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எவ்வளவோ எடுத்துக்கூறினர். ஆனால் பலனில்லை.

210 கோடியில் உள்மாநிலத்திலேயே முடிந்திருக்கவேண்டிய பிரச்சனை
எம்ஜிஆரின் கோழைத்தனத்தாலும் சுயநலத்தாலும் ஆந்திராவுக்கு பலனாக முடிந்தது.

இந்த திட்டம் தொடங்கிய 1983 முதல்) இதுவரை ஆந்திர அரசுக்கு தமிழக அரசு இது வரை ரூ.700 கோடி வரை கொடுத்துள்ளது.

(1983-ல் இருந்து 1996 வரை ரூ.512 கோடி கொடுத்துள்ளோம்.
நாம் இதுவரை கொடுத்ததில் குறைந்தபட்சமாக 1985, 1995-ல் தலா ரூ.5 கோடியும்,  அதிகபட்சமாக 2013ல் ரூ.100 கோடியும் தமிழகம் கொடுத்துள்ளது)

2017 ஜனவரி 12 அன்று அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் (வரலாற்றில் இல்லாத செயல்பாடாக) நேரில் பொய் சந்திரபாபு நாயுடுவிடம் 12 டி.எம்.சி இல்லாவிட்டாலும் 4 டிஎம்சியாவது திறந்துவிடக் கெஞ்சினார்.
அவரோ 400 கோடி தந்நால் 2.5 டி.எம்.சி தண்ணீர் தருவதாகக் கூறினார்.
ஓ.பி.எஸ்ஸும் சரி என்றார்.
அதன்பிறகு நடந்த ஆட்சிக்குழப்பங்களால் இப்பிரச்சனை கிடப்பில் போடப்பட்டது.

சென்னையில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருவதால்,தண்ணீர் திறந்து விடக்கோரி ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசு செயலாளருக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது.
இதற்கு ஆந்திர அரசு பதில் கடிதத்தில் (13.07.2017),
"கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தண்ணீர் திறந்து விட முடியாது.
மேலும், பராமரிப்பு கட்டணமாக தாங்கள் தர வேண்டிய ரூ.600 கோடி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும்"
என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கண்டது ஆந்திராவுக்கு கொடுத்தது மட்டுமே
இதுபோக தமிழக அரசு செய்த செலவுகள் தனி.

1983-1996 காலக்கட்டத்தில் ரூ.75 கோடி செலவில் புழல் ஏரியில் 675 மில்லியன் கனஅடி,
செம்பரம்பாக்கம் ஏரியில் 525 மில்லியன் கனஅடி,
பூண்டி ஏரியில் 450 மில்லியன் கனஅடி என கொள்ளளவுகள் அதிகரிக்கப்பட்டன.

(2002 ஆம் ஆண்டு தமிழகம் நிதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது ஆன்மீகத் தலைவரான சத்ய சாய் பாபா ,  கண்டலேறு முதல் பூண்டி வரையிலான கால்வாயின் கரைகளை பலப்படுத்தி மறுசீரமைக்கும் தனியார் பங்களிப்புக்கானத் திட்டம் ஒன்றை அறிவித்தார்.  அவரால் 200 கோடி செலவளிக்கப்பட்டு கால்வாயும், பல நீர்த்தேக்கங்களும் மறுகட்டமைக்கப்பட்டு, அத்திட்டம் 2004 அம் ஆண்டு நிறைவு பெற்றது)

2012-14 ஆம் ஆண்டுகளில் சோழவரம் ஏரியில் ரூ. 50 லட்சம் செலவில் 100 மில்லியன் கனஅடி கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து ரூ.330 கோடி செலவில் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் கட்டப்படுகிறது.
0.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், ஆண்டுக்கு 1 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கனஅடி) கிருஷ்ணா நீரைத் தேக்கிவைப்பார்களாம்.

இதுபோக 2007ல் வெளிநாட்டு உதவியுடன் ரூ. 256 கோடி செலவில் நாட்டிலேயே இரண்டாவது பெரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.
(திறன்= நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு)
 
இதையெல்லாம் செய்து போதுமான அளவு தண்ணீர் பெற்றோமா என்றால் இல்லை.

திட்டம் நடைமுறைக்கு வந்த 1996முதல் இதுவரை ஒருமுறைகூட ஆந்திரா ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 12 டிஎம்சி நீரைத் தந்ததில்லை.
சராசரி பார்த்தால் தமிழகத்திற்கு தரவேண்டியதில் பாதிகூட  தந்ததில்லை.

2012-13 ல் 4.7 டிஎம்சி
2013-14 ல் 5.7 டிஎம்சி
2014-15 ல் 5.6 டிஎம்சி
2015-16 ல் 0 டிஎம்சி
2016 முதல் இதுவரை 2.27 டிஎம்சி
என குறைவான தண்ணீரே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

அதாவது 1996 முதல் 2016 வரை ஆந்திரா 5 டிஎம்சி தண்ணீர் சராசரியாகத் தந்ததாகவே வைத்துக்கொண்டாலும் இதுவரை 100 டிஎம்சி தந்ததாக ஆகும்.
அதற்கு அவர்கள் கேட்கும் தொகை (600 கோடி கடனுடன் சேர்த்து) 1300 கோடி ஆகும்.
இது ஒரு லிட்டருக்கு தோராயமாக ரூ.220 ஆகும்.
(இது குறைந்தபட்ச கணக்குதான்)

கிருஷ்ணா நீரைப் பயன்படுத்தி ஆந்திர அரசு தனது பாசனப் பகுதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போதுகூட 3 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கான பணிகள் நடக்கின்றன.

இதுபோக தமிழகத்திற்கு வரும் தண்ணீரை ஆந்திர விவசாயிகள் வழியிலேயே கால்வாயில் இருந்து மோட்டார் மூலம் உறிஞ்சிக் கொள்கின்றனர்.

இது போதாது என்று இந்தாண்டு கிருஷ்ணா நதியை கோதாவரியுடன் இணைத்து சந்திரபாபு நாயுடு மேலும் மூன்று மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்கிறார்.
இதற்கு தமிழகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை.

கோடிகோடியாகக் கொட்டியழுதும் நமக்கான பங்கோ ஆறு மீதான உரிமைக்கான மரியாதையோ  கிடைக்கவில்லை

பாலாறு நீர் கனவானது போல விரைவில் தெலுங்கு கங்கையும் காணாமல் போகும்.

Wednesday, 22 November 2017

இனி ஜட்டி  வாங்கினாலும் காட்டிக்கொடுக்கும் ஆதார்!

இனி ஜட்டி  வாங்கினாலும் காட்டிக்கொடுக்கும் ஆதார்!
பாதுகாப்பு இருக்கு ஆனா இல்ல!

(மத்திய அரசுக்கு பிடிக்காதோரின் சொத்துகளை பிடுங்க வசதியாக)   சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளதாக மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார் (நேற்றைய பாலிமர் செய்தி).

படம்: தனிநபர் ஆதார் ரகசிய தகவல்கள் 210 அரசு வெப்சைட்டில் வெளியீடு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பெறப்பட்ட தகவல்.
(ஜியோ சிம் அரசு சார்ந்ததா என்று கேட்கக்கூடாது!)

நீதிமன்றம் ஆதார் திட்டம் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று (காலம் கடந்து) அறிவித்ததை இவர்கள் கால்தூசியளவும் மதிக்கவில்லை என்பதையும் பேசக்கூடாது.

"காங்கிரஸ் கொண்டுவந்துள்ள ஆதார் தீவிரவாதிகள் ஊடுருவ வழிவகுக்கும்.
எல்லை மாநிலமான என் குஜராத் முதலில் பாதிக்கப்படும்" என்று மோடி முதலில் எதிர்த்ததையும் மறந்துவிடவேண்டும்.

ஜெய்ஹிந்தி! என்று கூறிக்கொண்டு அடங்கிக்கிடந்தால்
எல்லையில் பத்துநாளுக்கு ஒருவர் வீதம் ராணுவவீரர்கள் சாகிறார்களே அது குறையும்.

Wednesday, 15 November 2017

ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)

ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)


 திராவிடியா மகன்: எங்க பெரியார் மட்டும்தான் நல்ல தமிழில் பெயர்வைத்து பத்திரிக்கை நடத்தினார்


 தமிழன்: நடத்தி...

'தமிழ் காட்டுமிராண்டி மொழி', 'தமிழ்த்தாய் பாலைக் கரந்து சத்து இருக்கிறதா என்று ஆராயவேண்டும்', 'வேலைக்காரியோடு ஆங்கிலம் பேசுங்கள்' அப்டினு தமிழுக்கு எதிராகத்தானே எழுதுனாரு?!

 "தமிழ்பேசும் பார்ப்பனர் பெரிய தலைவலியாக இருக்கின்றனர்.

 இந்து-முஸ்லீம் பிரிவினை வேறு தெற்கே எடுபடவில்லை.

 எனவே பிராமணர்-பிராமணரல்லாதார் என தனியாக பிரித்து பிராமணன் இடத்தில் நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள்" 

அப்டினு வெள்ளைக்காரன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்தானே உங்க திராவிடம்.

 கடைசிவர அவனுக்கு விசுவாசமாத்தானே இருந்தீங்க?!

 உள்ளே ஆங்கில பூர்வீகமே இருக்க, தலைப்பு மட்டும் தமிழில் வைத்துவிட்டால் போதுமா?

Monday, 13 November 2017

உண்மையான கடவுள்

உண்மையான கடவுள்

மனிதரை நடைபிணம் (zombie) ஆக்கும் கிருமியை கண்டுபிடித்து இயற்கையை மாசுபடுத்தாமல் அழிக்காமல் மனித பேரினத்திற்கு நோய் மூலம் முடிவெழுதுபவன்
இந்த உலகத்தின் கோடானுகோடி உயிர்களைக் காப்பாற்றுவன் ஆகிறான்.
அவன்தான் உண்மையான கடவுள்.

இதை ஒரு மனிதன் செய்யாவிட்டால் கடைசிக்கட்டத்தில் இயற்கையே செய்யும்.

ஏனென்றால் புதுப்புது கொள்ளைநோய்களை கொண்டுவந்து அளவுக்கதிகமாக பெருகும் எந்தவொரு உயிரினத்தையும் குறைத்து சமநிலையை பேணும் இயற்கையிடமிருந்து தப்பிக்கும் ஆற்றலை மனிதன் பெற்றுவிட்டான்.

மனித பேரினத்தின் பூமியின் மீதான இந்த சர்வாதிகாரத்திற்கு நாகரீக வளர்ச்சி என்று அடிப்படை அமைத்தது முன்தோன்றிய மூத்தகுடிகளான நாம்தான்.

நாம் மனித பேரினத்தின் மூத்த இனம் என்ற வகையில் மனிதர்களை இயற்கை விதிகளுக்கு உட்பட்டு வழிநடத்தும் பொறுப்பில் இருக்கிறோம்.

அது அவர்களது விருப்பத்திற்கு மாறாக என்றாலும் சரி.

Sunday, 12 November 2017

தமிழர்நாட்டு உளவுத்துறை

தமிழர்நாட்டு உளவுத்துறை

ஒரு நாட்டின் உண்மையான பலம் அதன் ராணுவம் மற்றும் உளவுத்துறை ஆகியன.

இஸ்ரேல் என்ற குட்டிநாடு சுற்றிலும் பெரிய பெரிய அரேபிய நாடுகளை தூக்கிப்போட்டு பந்தாடி கம்பீரமாக நடுவில் வீற்றிருக்க அதன் உளவுத்துறையான மொஸாட் முதல் காரணம்.

தமிழர்நாடு அமையும்போது அதன் அதிபராகவோ முப்படைகளின் தலைவர்களாகவோ தமிழினத்தவர் யார்வேண்டுமானாலும் வரலாம்.

மற்ற அரசியல் பதவிகள் மற்றும் பொறுப்புகளுக்கு தமிழர்நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழர்நாட்டு குடிமக்கள் யார் வேண்டுமானாலும் வரலாம்.

ஆனால் உளவுத்துறை அவ்வாறு இருக்கக்கூடாது.
அதன் தலைமை தமிழினத்தார் கையில் இருப்பதுடன் தமிழர்களிலேயே மிகவும் நம்பகமானோர் மட்டுமே தலைமைப் பதவிகளில் இடம்பெற வேண்டும்.

அதாவது உளவுத்துறையின் தலைவர் மற்றும் அதற்கடுத்த மூன்று அடுக்குகளில் இருப்போர் (தமிழினத்தவர்) கீழ்க்கண்டோராக இருக்கக் கூடாது

* பார்ப்பனர்
* இசுலாமியர்
* கிறித்தவர்
* பிற வெளிநாட்டு மதங்களை தழுவியோர்
* வெளிநாட்டில் பிறந்தோர்
* வேற்றினத்தார் மத்தியில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தோர்
* தமிழரல்லாதோரை திருமணம் செய்தோர்
* தமிழர்நாட்டுக்கு வெளியே தனது குடும்பத்தை வைத்திருப்போர்
(பெற்றோர், மனைவி, பிள்ளைகள்)
* 30 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்யாதோர் மற்றும் 35 வயதாகியும் குழந்தை பெறாதோர்
* தமிழரல்லாத குழந்தையை தத்தெடுத்தோர்

மேற்கண்டவை தமிழர்நாடு அமையும்போது அதாவது தமிழர் தாய்நிலம் தமிழரின் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு யாரெல்லாம் தமிழர் என்று சான்றிதழ் வழங்கியபிறகு அதிகாரப்பூர்வமாக நிறுவப்படும் உளவுத்துறைக்கான விதிகள்.

தமிழர்நாடு அமையும் முன்பு ஒரு உளவுத்துறை நிறுவப்பட்டால் அதன் தலைமை அடுக்கானது
தமிழகம் மற்றும் ஈழத்தில் (எல்லை மாவட்டங்கள் அல்லாத மாவட்டங்களில்) தமிழ்ச்சாதியில் பிறந்து தமிழர்கள் மத்தியில் வளர்ந்த இசுலாமிய கிறித்துவர் அல்லாதோரிடம் இருக்கலாம்.

சுருக்கமாகக் கூறவேண்டுமானால்,
உளவுத்துறையில் முதல் நான்கு அடுக்குகள் முடிந்த அளவு வேற்றினத் தொடர்பு அல்லாமலும் முடிந்த அளவு தமிழ்த் தாய்நிலத்துடன் பிணைப்பு கொண்டும் இருக்கவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு திருமணம் செய்வதை தமிழர்நாட்டில் கட்டாயமாக்கவேண்டும்.
திருமணம் ஆகாத ஒருவருக்கு சமூகத்தைப் பற்றிய புரிதலும் கவலையும் இருக்காது மற்றும்
துணை இல்லாமல் உடலியல் மனவியல் தேவைகள் பூர்த்தியடையாது ஆதலால் அவரால் சரியான நோக்கில் சிந்தித்து செயல்படவும் முடியாது.
 
(இப்பதிவு ஒரு சிந்தனை மட்டுமே!
எனது மற்ற சிந்தனைகள் காலப்போக்கில் மாற்றமடைந்தாலும் உளவுத்துறை பற்றிய எனது சிந்தனை பின்பற்றப்பட நான் அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.

பதவின் படி ஒன்பது ஆண்டுகள் வேற்றினத்தாருடன் வாழ்ந்த நான்கூட உளவுத் தலைமைக்கு தகுதியில்லாதவனே!

நான் பார்ப்பனர் தமிழர் என்று கூறுபவனும் கூட!

உளவுத்துறையானது அரசியல், பொருளாதாரம், உணர்ச்சி அலைகள் என காலமாற்றத்துக்கு ஏற்ப மாறக்கூடாது.
ஒரு நாட்டை எந்த எல்லைக்கும் சென்று பாதுகாக்க வேண்டும்.
மறைமுகமாக மக்களை வழிநடத்தும் பொறுப்பும் உளவுத்துறைக்கு உண்டு.

எனவே சந்தேகம் ஏற்படும் பின்னணி கொண்ட எவரையும் உளவுத்துறையின் தலைமைக்கு வரவிடக் கூடாது.

இந்த இடத்தில் பாரபட்சம் தேவை என்பது எனது கருத்து.)

Thursday, 9 November 2017

இருளர் குலச் செங்கொடி

இருளர் குலச் செங்கொடி

ஆதித் தெலுங்கரான சக்கிலியர் (அருந்ததியர்) திடீரென்று ஐந்தாண்டுகளுக்கு முன் பறையர் குலத் தமிழச்சியும் உலகின் முதல் தற்கொலைப் போராளியுமான குயிலி தங்கள் சாதி என்றனர்.

பிறகு பறையர் குலத் தமிழரும் தமிழ்தேசியவாதியும் ஆன பெருஞ்சித்திரனார் ஒரு சக்கிலியர் என்று கதையளந்தனர்.

தற்போது தங்கை செங்கொடியை சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இது எல்லாமே 2009 க்குப் பிறகு திடீரென்று அவர்கள் கண்டுபிடித்தது ஆகும்.
சான்று கேட்டால் தருவதில்லை.

ஆனால் தங்கையின் வாழ்க்கையை 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்துத் தந்த இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் செங்கொடி (தமிழினப் பழங்குடியினரான) இருளர் என்று கூறுகிறார்.

நன்றி: 22.08.2012 ஆனந்த விகடன் இதழ்

Wednesday, 8 November 2017

சென்னை மாகாணத்தை மொழிவழியாகப் பிரிக்கக்கூடாது - ஈ.வே.ரா

சென்னை மாகாணத்தை மொழிவழியாக பிரிக்கக்கூடாது - ஈ.வே.ரா

"சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டு மென்பது கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழியாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர் தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டுவார்களானால், வலியுறுத்துவார்களானால் அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச்சாரத்துக்கும் திராவிட சமுதாயத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டு விடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன்"
- ஈ.வே.ரா விடுதலை 01.08.1948

ஈ.வே.ராமசாமி ஏதோ 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கி தமிழர் உரிமைக்காகப் போராடினார் என்றும்
தனித்தமிழ்நாடு கேட்டார் என்றும் திராவிடவாதிகள் கூறுகிறார்கள்.

ஆனால் அது பொய்.

(தேடுக: தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம் வேட்டொலி

தேடுக: ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி வேட்டொலி)

தற்போது மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது.

2011 ல் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது.
அது அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே (தேவிகுளம் - பீர்மேடு) தமிழர் பெரும்பான்மை மாவட்டம் ஆகும்.
தேனி தமிழரும் இடுக்கி தமிழரும் லட்சக்கணக்கில் திரண்டு இடுக்கி தமிழகத்துடன் இணைய பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

அப்போது தமிழ்தேசியப் பேரியக்கம் தலைவர் திரு.மணியரசன் பல்வேறு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார்.

அப்பொது அவர் வெளியிட்ட அறிக்கையில் திராவிடம் பேசுவோர் அன்று முதல் இன்றுவரை தமிழர் இனவுணர்வை திசைமாற்றி எப்படியெல்லாம் இரண்டகம் செய்தனர் என்று விரிவாக கூறியுள்ளார்.

(அவற்றில் மேற்கண்ட சான்று மட்டும் இதுவரை எனக்கு காணக்கிடைக்காத ஒன்று.
அதனால் இங்கே பதிகிறேன்.

இது ' ஈ.வே ரா மண்மீட்பில் உதவினாரா? ' என்ற பதிவுடனும் சேர்க்கப்படும்)

Saturday, 4 November 2017

ஹிட்லர் ஏன் தோற்றார்?

ஹிட்லர் ஏன் தோற்றார்?

ஜெர்மானிய மக்கள் பல அரசுகளாக சிற்றரசுகளாக சிதறிக் கிடந்தனர்.
இதை ஜனநாயக வழியில் ஒரே நாடாக உருவாக்க வியன்னாவில் கூடிய ஜெர்மன் தேசியவாதிகள் மக்கட்புரட்சி மூலம் இதை செய்ய முடிவெடுத்தனர்.

1848 ல் இந்த முயற்சி ஆளும் வர்க்கம் அதிலும் குறிப்பாக சிற்றரசுகள் தனது அதிகாரம் போய்விடுமே என்று பயந்தன.
ராணுவ வலிமையால் இந்த எழுச்சி அடக்கப்பட்டது.

இதற்கு அடுத்து அன்றைய ஜெர்மனிய அரசுகளிலேயே பெரிய அரசான பிரஷ்யாவின் பிரதமராக வருகிறார் பிஸ்மார்க்.

1862 ல் இவர் நிகழ்த்திய உரை மிகவும் புகழ்பெற்றது.
அந்த பேச்சில் அவர் விவரித்த கொள்கையை 'இரத்தமும் இரும்பும்' (iron and blood) என்று சுருக்கமாகக் கூறுவர்.

அந்த உரையை சுருக்கமாகக் கூறினால்,
"ஜெர்மனிய அரசுகள் ஒன்றாக இணையவேண்டும்.
ஜெர்மானியர் வாழும் பகுதி ஒரே நாடாக இருக்கவேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பு ஜனநாயக வழியில் அல்லாது பிரஷ்யாவின் பலத்தால் (குருதியும் இரும்பும் செலவளித்து) நிறைவேற்றப்படும்"

இதன்பிறகு டென்மார்க் மீது படையெடுத்து அதனிடம் இருந்த ஜெர்மானிய பகுதியை மீட்டது பிரஷ்யா.
அடுத்து வடக்கு ஜெர்மனியில் இருந்த பல்வேறு சிற்றரசுகளை பேசியும் மிரட்டியும் பிரஷ்யாவில் இணைத்தனர்.

ஆனால் தெற்கே ஜெர்மானிய அரசான ஆஸ்திரியா அப்போது ஹங்கேரி உடன் இணைந்து ஆஸ்திரிய-ஹங்கேரி என்று பெரிய அரசாக இருந்தது.

ஆஸ்திரியா ஜெர்மனியுடன் இணைய மறுத்துவிட்டது.
காரணம் ஜெர்மனி கிறித்துவத்தில் புரோட்டஸ்டன்ட் பிரிவையும் ஆஸ்திரியா கத்தோலிக்க பிரிவையும் பின்பற்றுவது.
பிஸ்மார்க் ஆஸ்திரியா மீதும் படையெடுத்து அதைத் தோற்கடித்தார்.

"ஒற்றுமையே இல்லாத ஜெர்மானியர் இணைந்து ஜெருமானியப் பேரரசு அமைக்கப் போகிறார்களாம்" என்று பிரான்ஸ் இதை பரிகசித்தது.

பிஸ்மார்க் பிரான்சை ஆண்ட மூன்றாம் நெப்போலியனுக்கு துணிச்சல் இருந்தால் ஜெர்மனி மீது படையெடுக்குமாறு கடிதம் எழுதினார்.

போர் மூண்டது. பிரான்சை மிக எளிதில் படுதோல்வி அடையச்செய்தார் பிஸ்மார்க்.
இதைத் தொடர்ந்து வடக்கு முழுவதும் மத்திவரைக்கும் இருந்த ஜெர்மனிய அரசுகள் பிரஷ்யாவுடன் இணைந்தன.
ஆஸ்திரியா பெரிய ஜெர்மானிய பகுதியை இழந்தது.
1871ல் பிரஷ்யா ஜெர்மானிய பேரரசு ஆனது.
இது 80% ஜெர்மானிய பகுதியை உள்ளடக்கியது.

இதன்பிறகு முதலாம் உலகப்போர் மூண்டபோது ஜெர்மனிய பேரரசும் ஆஸ்திரிய-ஹங்கேரியும் இணைந்தே போர்புரிந்தன.

ஆனால் போரில் தோற்றபிறகு ஜெர்மனியின் எல்லைப் பகுதிகளைப் பறித்துக்கொண்டு சுருக்கி (முதல் படம்) பெரிய தொகை நட்ட ஈடாக தரவேண்டும் என்று ஒப்பந்தம் வென்றநாடுகள் போட்டன.

ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர் ஜெர்மனிக்கு ஓவியனாகும் ஆசையில் வந்தார்.
அவருக்கு அதில் பெரிய திறமையில்லை என்று நிராகரிக்கப்பட்டார்.

பிறகு முதல் உலகப்போர் நடந்தபோது ராணுவத்தில் செய்தி கொண்டுசெல்லும் பணியில் சேர்ந்து திறமையாக செயல்பட்டு சிப்பாயாக ஆனார்.
போரில் காயமடைந்தார்.
அவர் மருத்துவமனையில் இருந்தபோது ஜெர்மனி தோல்வியடைந்தது.

எல்லைகளை இழந்து ராணுவமும் களைக்கப்பட்டு போர்ச் செலவாலும் கடனாலும் நாடே பஞ்சத்தில் சிக்கித்தவித்த அந்த வேளையில் இட்லர் கூலிவேலை செய்து பிழைத்து வந்தார்.

ஒருநாள் அவருக்கு அரசியல் எவ்வாறு நடக்கிறது என்று பார்க்க ஆர்வம் வந்தது.

சட்டமன்றத்திற்கு போன அவர் அங்கே யூதர்களே நிறைந்திருப்பதும் அவர்கள் மக்கள் பிரச்சனைப் பற்றி பேசாமல் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டு அவர்களை அவர்களே பெரிதாகப் புகழ்ந்துகொண்டு இருந்ததைக் கண்டு யூதர்களே எல்லாவற்றுக்கும் காரணம் என்று முடிவுசெய்தார்.

"ஒவ்வொரு அரசு அதிகாரியும் யூதனாக இருந்தான்.
ஒவ்வொரு யூதனும் அரசதிகாரியாக இருந்தான்.
இவர்கள் போர்க்களத்தில் குறைவாகவும் நாற்காலிகள் அதிகமாகவும் காணக்கிடைத்தனர்"
என்று யூதர்களைப் பற்றி அவர் எழுதுகிறார்.

ஏற்கனவே பிஸ்மார்க் பற்றி அறிந்திருந்திருந்த இட்லர் இனப்பற்றும் மிக்கவராக இருந்தார்.
பிஸ்மார்க் வழியில் தானும் பயணித்து ஜெர்மனியை ஒருங்கிணைப்பது என்று சூளுரைத்தார்.

அன்று ஏழுபேர் மட்டுமே இருந்த ஒரு கட்சியில் சேர்ந்தார்.
அவர்கள் மொட்டைமாடிகளில் கூட்டம் நடத்தினர்.
ஹிட்லர் தம்மால் முடிந்த அளவு உழைத்து கூட்டம் திரட்டி நன்கொடை பெற்று எழுச்சிப்பூர்வமாக உரை நிகழ்த்தி அந்தக் கட்சியை மிகப்பெரிய அளவில் உயர்த்தினார்.
பிறர் கழன்றுகொண்டபோதும் இட்லர் உறுதியாக கட்சியை நடத்தினார்.

இவ்வாறாக படிப்படியாக வளர்ந்த கட்சி ஜெர்மானிய தேசியத்தை மீண்டும் மக்கள் மனத்தில் துளிர்விடச் செய்தார்.

பிஸ்மார்க் போல தற்போது ஜெர்மனி பேசும் பகுதிகள் அனைத்தையும் இணைத்து ஒரே ஆட்சியில் கொண்டுவருவேன் என்று பரப்புரை செய்தார் (பிற மூன்று படங்கள்).
16 ஆண்டுகளில் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தார்.

ஆட்சிக்கு வந்ததும் இட்லர் ஜனநாயக முறைப்படி இரண்டு இழந்த பகுதிகளை மீட்டார்.

இராணுவத்தைக் கட்டமைத்து பல சீர்திருத்தங்கள் செய்து ஜெர்மனியை குறுகிய காலத்தில் தன்னிறைவு பெறச்செய்து வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றார்.

1938ல் ஆஸ்திரியாவை மிரட்டி பேச்சுவார்த்தை மூலமே ஜெர்மனியுடன் இணைத்து பிஸ்மார்க் சாதிக்கமுடியாததை தாம் சாதித்துக் காட்டினார்.

இழந்த பகுதிகளை மீட்க போலந்தின் மீது படையெடுத்து பாதியைப் பிடித்தார்.
பிரான்ஸ் மீது படையெடுத்து தோற்கடித்து அவர்கள் எந்த ரயில்பெட்டியில் தோற்றுப்போன ஜெர்மானியரை ஒப்பந்தம்போட வரச்சொல்லி நிற்கவைத்து அவமானப்படுத்தி கையெழுத்து வாங்கினார்களோ
அதே ரயில்பெட்டிக்கு பிரெஞ்சு பிரதிநிதிகளை வரச்சொன்னார்.
அவர்கள் வந்ததும் ஒப்பந்தத்தை கொடுத்துவிட்டு வெளியேறினார்.

செக்கோஸ்லோவாகியா நாட்டின் எல்லை மூன்று புறமும் இட்லர் கட்டுப்பாட்டில் இருந்தது.
எல்லையை ஒட்டி ஜெர்மானியர் வாழ்ந்த பகுதியை தந்துவிட்டால் போர்தொடுக்கமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்து தாம் வாக்களித்தபடி ஜெர்மன் பேசிய பகுதிகள் அனைத்தையும் ஒரு ஆட்சியின் கீழ் இணைத்தார்.

ஹிட்லர் இதோடு நின்றிருந்தால் இன்று ஜெர்மனிதான் உலக வல்லரசு.

ஆனால் இட்லர் ஜெர்மானிய இனவெழுச்சியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தத் தொடங்கினார்.

வாக்குறுதி மீறி செக்கோஸ்லோவாகியா மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார்.
இது ஜெர்மன் பேசாத பகுதி ஆகும்.

அதன் பிறகு இத்தாலியுடன் கூட்டுவைத்து முதலாம் உலகப்போர் தோல்விக்கு பழிவாங்கவும் நாடுபிடிக்கும் எண்ணத்திலும் இட்லர் எல்லைமீறி போனார்.

ஆனாலும் ஜெர்மானிய இனம் அவருக்கு முடிந்த அளவு ஈடுகொடுத்து வெற்றிமேல் வெற்றி குவித்தது.

யூதர்களை தனியாக அடையாளமிட்டு தனிமைப்படுத்தி பிறகு சொத்துக்களை பறிமுதல் செய்து முகாம்களில் அடைத்து கடைசியில் கொத்துக் கொத்தாக கொலை செய்யச் சொன்னார்.

வெற்றியைக் குவித்தாலும்  தொடர்ச்சியான போர்களால் சோர்ந்துவிட்ட ஜெர்மன் படை மிகப்பெரிய இனமான ரஷ்ய இனத்திடம் தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்றது.
அங்கு நிலவிய காலநிலையும் இதற்கு முக்கிய காரணம்.

இறுதியில் ஜெர்மனி தோல்வியைத் தழுவியது.
போலந்திடம் பெரிய அளவு நிலத்தை இழந்தது.
அங்கிருந்த ஜெர்மானியர் விரட்டப்பட்டு போலந்து மக்கள் குடியேறிக்கொண்டனர்.
அதில் ஒரு சிறு பகுதியை ரஷ்யா எடுத்துக்கொண்டது.

எல்லைப் பகுதிகளை இழந்து ஆஸ்திரியா தனிநாடாகியது.
ஜெர்மனியும் கிழக்கு மேற்காக இரண்டாக பிரிக்கப்பட்டு வென்றநாடுகள் அடக்கி ஆண்டன.

45 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்த இரு பகுதிகள் மக்கள் எழுச்சியால் பிரிவினை சுவர் இடிக்கப்பட்டு ஜெர்மனி ஒருங்கிணைந்தது.

ஜெர்மானிய தாய்நிலத்தில் பாதியை இழந்தாலும் ஜெர்மனி இன்றும் ஒரு வல்லரசு.

ஆஸ்திரியா ஹங்கேரி போன்றன இன்று சிறிய நாடுகள்.
ஆனாலும் ஆஸ்திரியா நல்லநிலையில் உள்ளது.

இட்லரின் பேராசையும் பழிவாங்கும் உணர்வும் வரம்பு மீறி போனதால் இன்று ஜெர்மனியர் தமது இயல்பான இனப்பற்றைக் கூட வெளிப்படையாகக் காட்டமுடியாத நிலையில் உள்ளனர்.

இட்லர் அரசியலில் காலடி எடுத்துவைத்த அன்றைய ஜெர்மனி அப்படியே இன்றைய தமிழகத்தை ஒத்திருக்கிறது.
எல்லைப் பகுதிகள் இழந்த நிலையில் தமிழகம், ஆஸ்திரியா இடத்தில் ஈழம், துண்டானபகுதி இடத்தில் மலையகம்  ஆகியன பொருந்தி உள்ளன.

கிழக்கு மேற்கு என்று ஜெர்மனியை எதிரிகள் பிரித்தது போல வடதமிழ்நாடு தென்தமிழ்நாடு என்று இன்று தமிழகத்தை பிரிக்க சதி நடக்கிறது.

ஐரோப்பாவில் மூத்த இனமான ஜெர்மனியின் வரலாறு இந்திய துணைக்கண்டத்தில் மூத்த இனமான நமது வரலாறுடன் ஒத்துப்போகிறது.

நாம் எங்கே தொடங்கவேண்டும் எங்கே முடிக்கவேண்டும் என்பதற்கான பாடம் ஜெர்மனியின் வரலாற்றில் இருக்கிறது.