இறந்தபிறகும் ஆளும் தலைவன்
நாள்: 05-06-2216
உலகம் எதற்கு அஞ்சியதோ அது நடந்தேறிவிட்டது.
இதுவரை தன்னாட்சியுடன் இயங்கிவந்த xyz தீவுகள் ஆயுதவலிமையால் ttt நாட்டினரால் வலுக்கட்டாயமாக விழுங்கப்பட்டுவிட்டது.
நாளை ஒரு பொம்மை முதலமைச்சர் அங்கே பதவியேற்பார்.
எண்ணி இரண்டாண்டுகளில் தன் நாடு வளர்ச்சியின் உச்சத்தை அடைந்ததாக அறிக்கைவிடுவார்.
ஆக ஒரு நாட்டிற்குள் தீவிரவாதிகள் அடைக்கலமாகி பதுங்கிய காலம் போய்,
இன்று ஒரே நாடே தீவிரவாதிகளின் அடைக்கலத்திற்குள் சென்றுவிட்ட காலம் வந்துவிட்டது.
அவர்கள் தீவிரவாதிகள் இல்லையென்றால் அனைத்துலக சபை தாமே அழைத்து ஒரு நாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்குவதாகக் கூறியபோதும் மக்களாட்சிமுறைக்கு ஏன் திரும்பவில்லை?
அப்படி திரும்பினால் ஆயுதங்களை கீழே போடவேண்டும்.
அடக்கியாளும் தம் நாட்டு மக்களிடம் வாக்கு கேட்டு கையேந்த வேண்டும்.
அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க முடியாது.
இனவிடுதலை வழங்குவதாகக் கூறி தாம் உருவாக்கிய உலகளாவிய சந்தையில் தாம் தயாரித்த ஆயுதங்களை வணிகம் செய்யமுடியாது.
உலகின் மூலைமுடுக்கெல்லாம் நாடுகளைத் துண்டாடி தமது நிழலில் குட்டிகுட்டி தீவிரவாத நாடுகளை உருவாக்கிட முடியாது.
உலகம் முழுவதும் கடலில் வழிப்பறி, கடத்தல், கொலை, கொள்ளைகளில் ஈடுபட முடியாது.
அணு ஆயுத ஆய்வுகள் நடத்தமுடியாது.
அவர்கள் தீவிரவாதிகள் என்றால் ttt நாட்டு மக்கள் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருக்கிறார்களே!
எந்த ஊடகமும் அங்கு சென்று சுற்றிபார்த்து செய்தி வெளியிடத் தடையில்லையே!
இராணுவ ஆட்சி மக்களாட்சியை விட சிறப்பாக அனைத்து துறைகளிலும் செயல்படுகிறதே!
ஆமாம். இதுதான் இந்த நூற்றாண்டின் நகைமுரண்.
ஆயுதத்தால் நடக்கும் ஆட்சிதான்.
ஆனால் கொடுங்கோலாட்சி இல்லை.
மக்களின் அடிப்படைத் தேவைகள் முதல் ஆடம்பரத் தேவைகள் வரை நிறைவேற்றுகிறார்கள்.
ஆனால் அவர்களுக்குக் கிடைக்காதது சுதந்திரம் மட்டும்.
அங்கே தேர்தல் கூட நடக்கும்.
ஆனால் இரண்டு கட்சிகள்தான் நிற்கும்.
ஒன்று தீவிரவாதிகளின் கட்சி.
இதுதான் வெற்றி பெற்று அரசாளும்.
மற்றொன்று தீவிரத் தீவிரவாதிகளின் கட்சி.
இதுதான் எப்போதும் எதிர்கட்சி.
ஊடகம் முழுவதும் இவர்கள் கையில்தான்.
பிறகெப்படி மூன்றாவது ஒருவர் ஆட்சிக்கு வரமுடியும்.
அந்நாட்டு மக்களுக்கு எதுவுமே சொந்தமில்லை.
அரசுக்குதான் எல்லாமே சொந்தம்.
அரசு சொல்லும் வேலைக்குதான் போகவேண்டும்.
அரசு தரும் கல்வியைத் தான் பெறவேண்டும்.
தகவல்தொடர்பும் அரசின் கையிலேதான்.
ttt நாடு ஒரு திறந்தவெளிச் சிறை.
சிறையில் கைதிகளுக்கு இடமும் உணவும் கொடுத்து அதற்கான செலவுக்காக அவர்களை சிறைக்குள்ளேயே வேலை செய்யவைத்து வரும் வருமானத்தை அவர் விடுதலை அடையும்போது அவருக்கு கொடுக்கிற நடைமுறை.
இந்த திறந்தவெளிச் சிறையும் அதே போன்றதுதான்.
என்ன ஒரு வேறுபாடு, இங்கே கைதிகளுக்கு விடுதலை கிடையாது.
எனவே வருமானம் அவர்கள் கைக்கு வரவேவராது
ஆனாலும் பல்வேறு நாட்டின் தலைவர்கள் அங்கு செல்கின்றனரே!
ஒப்பந்தம் போடுகின்றரே! பேச்சுவார்த்தை நடத்துகின்றனரே!
ஒரு நாடு போல அவர்களை நடத்துகின்றனரே!
ஆம். அதற்குக் காரணம் தீவிரவாதிகள் ஆளும் அந்த ttt நாட்டில் இவர்களை விட மோசமான பலம்வாய்ந்த தீவிரத் தீவிரவாதிகள் இருப்பதுதான் காரணம்.
தற்போது நடக்கும் ஆட்சியை வேறுவழியின்றி அனைவரும் ஆதரிக்கின்றனர்.
இல்லையென்றால் தீவிரத் தீவிரவாதிகள் ஆட்சிக்கு வருவார்கள்.
அவர்கள் வந்தால் உலகையே வாரிச் சுருட்டி தன் உள்ளங்கைக்குள் அடக்கிவிடுவார்கள்.
உண்மையா?
15 கோடி மக்களை அடக்கியாளும் t-இராணுவத்தை விடவா பலம் வாய்ந்தவர்கள் அந்த tt- தீவிரவாதிகள்.
ஆம். உண்மையில் ஆளும் t- ராணுவத்தின் முதுகில் கத்தியை வைத்தபடி அவர்களை வழித்துவோர் இந்த tt படையினர்.
அதற்காக இவர்கள் பெரிய குழு என்று நினைக்கவேண்டாம்.
இவர்கள் சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்கள்தான்.
ஆனால் இவர்கள் பரவாத இடமே இல்லை.
ttt நாட்டு உளவுத்துறை இவர்கள்தான்.
இராணுவத்தில் கீழிருந்து மேல் வரை சரி பாதி இவர்களின் ஆட்கள்தான்.
இவர்களை மீறி ttt நாட்டினராலோ அல்லது அந்நாட்டின் t-இன மக்களாலோ எதுவுமே செய்யமுடியாது.
இவர்களுக்கு தனி கட்டுப்பாட்டுப் பகுதி உண்டு.
இவர்கள் எல்லைப் பகுதியையும் கடற்கரையையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இங்கே t- இனமல்லாதோர் நுழையமுடியாது.
இனத்தூய்மையை கடைபிடிக்கும் மிக தீவிரமான இனவாதிகள்.
இவர்களிடம் தனி ராணுவம் உண்டு.
இவர்கள் இனவெறியை அறிய ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன்.
இவர்கள் தனி விமானத்தை எடுத்துக்கொண்டு தாய்லாந்து விபச்சார விடுதிகளுக்குச் செல்வார்கள்
அங்கேயும் மரபணு பரிசோதனை செய்து t-இனத்தவருடன்தான் உறவு வைத்துக்கொள்வார்கள்.
இவர்களின் வேலை t-இனத்தவரைப் பாதுகாப்பது.
அதாவது உலகின் ஒவ்வொரு t-யும் இவர்களுடன் தொடர்பில் உள்ளனர்.
அவர்களது வீடு சொத்துக்கள் உடைமைகள் அனைத்தையும் நிர்வகிப்போர் இவர்களே.
இவர்களுக்கு உலகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் சொத்துக்களும் தொழிலும் உண்டு.
உலகின் ஏதோவொரு மூலையில் ஒரு கடையை வாங்குவார்கள்.
அங்கே ஒரு t-ஐ அனுப்பி அதை நடத்தச் சொல்வார்கள்.
அந்த t- மிகக் குறுகிய காலத்தில் அந்த வட்டாரத்திலேயே பெரிய ஆளாகிவிடுவார்.
அவருக்கு போட்டியாக இருக்கும் அனைவரும் ஒழிக்கப்படுவர்.
தடையாக இருக்கும் அனைவரும் கொல்லப்படுவர்.
பிறிகு அவரது நிழலில் உள்நாட்டு ஆட்கள் இனவாத அரசியல் கட்சி ஒன்று தொடங்குவார்கள்.
பிறகு சில tt- குழுவினர் வந்து இறங்குவார்கள்.
அவ்வளவுதான் மிக மிக குறுகிய காலத்தில் அவர்கள் தனி இராணுவமாகவும் எதிர்கட்சியாகவும் வளர்ந்து அந்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்து இறுதியில் அந்நாட்டின் ஒரு பகுதியை தமது ஆளுமையில் கொண்டுவந்து நாட்டையே இரண்டாகப் பிரிப்பார்கள்.
சிறிதுகாலத்தில் மக்களைக் கசக்கிப் பிழிந்து பொருளாதாரத்தை விண்ணுக்கு உயர்த்துவார்கள்.
இறுதியாக அவர்கள் ttt நாட்டின் தலைமையில் மூன்றாம் உலகநாட்டு கூட்டமைப்பில் இணைந்து தாங்களும் ஒரு குட்டி ttt-நாடாக மாறுவார்கள்.
இப்போது தீவிரத் தீவிரவாதிகள் என்னசொன்னாலும் அவர்கள் கேட்பதில் வந்து முடியும்.
உலகமே இன்று t -இனத்தவரைப் பார்த்து நடுங்குகிறதென்றால் அது காரணமில்லாமல் இல்லை.
இதற்கு காரணம் tt குழு உலகின் 50% ஆயுத சந்தையைத் தன் கைகளில் வைத்துள்ளது.
ttt அரசு தன் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளின் ஒட்டுமொத்த வளத்தையும் தமது கைகளில் வைத்துள்ளது.
tt குழுவிற்கும் ttt நாட்டு அரசுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
இவர்களின் பிறப்பிடமும் ஒன்றுதான்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றியிருந்த இனங்களால் நாலாபுறமும் மிக மோசமான ஒடுக்குமுறைக்கும் இனப்படுகொலைக்கும் ஆளானது t- இனம்.
இந்த நேரத்தில் தோன்றியவர்தான் இன்றும் இவ்வினத்தின் தலைவராக மதிக்கப்படும் abcd.
இவர் வரலாறு மிக மிக விறுவிறுப்பான ஒன்று.
இவர் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது இளவயதில் இவருக்குமுன் t-தாய்நிலத்தின் ஒரு பகுதியில் t-மக்களை திரட்டி ஆயுதம் தாங்கி pqrs என்பவர் போராடிய போராட்டம் தோல்வியில் முடிந்து இனப்படுகொலை நடந்தேறியது.
இதைக் கண்டு மனம் கொதித்த t இளைஞர்களில் abcd யும் ஒருவர்.
பிறகு இவர் ஒரு இளைஞர் குழு ஆயுதம் தாங்கி போராட வேண்டி உதவிகள் செய்தார்.
அதற்கு பணம் திரட்ட சட்டத்திற்கு புறம்பான பல செயல்களைச் செய்தார்.
இதன்மூலம் இவரைச் சுற்றி ஒரு கூட்டம் உருவானது.
இவர் உதவி வந்த குழுவும் இறுதியில் இவரையே தலைமையாக ஏற்றது.
இந்த குழுதான் ஆயுதவழியில் விடுதலைப் போராட்டத்தில் இறங்கி t-தாய்நிலத்தை ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
இதுதான் இன்று t-நாட்டு அரசாங்கம் மற்றும் ராணுவம்.
எந்த கொள்கையும் இல்லாத abcdன் கொள்ளைக்கூட்டமும் ஆயுதத் தாக்குதலில் இறங்கி குறிப்பிட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
இதுதான் இன்றைய tt ஆயுதக்குழு, எதிர்கட்சி மற்றும் t-உளவுத்துறை.
இவ்விருவரும் ஒருவருக்கொருவர் நேரடியாக மோதாவிட்டாலும் t-இனத்தவர் மீதான ஆதிக்கத்திற்கான போட்டியில் எதிரெதிர் அணியில் உள்ளனர்.
காலப்போக்கில் t ராணுவம் உள்நாட்டு ஆதிக்கத்தையும்
tt குழு வெளிநாட்டு ஆதிக்கத்தையும் கைப்பற்றின.
ஆனாலும் ஒரு அரசால் வெள்ளப்படையாகத் தீர்க்கமுடியாத பிரச்சனைகளை உளவுத்துறை தீர்ப்பது போல tt குழுதான் t-இனத்தையே உலகம் முழுவதும் காப்பாற்றிவருகிறது.
அதற்காக t-படையும் சளைத்ததென்று கூறமுடியாது.
விடுதலைப் போராட்டத்தில் தன் தாய்நிலம் தாண்டி அண்டை இனத்து நிலத்தை ஆக்கிரமித்தது.
தன் கட்டுப்பாட்டுப் பகுதியின் வேற்றினத்தவரை வெளியேற்றியது.
வலிமை குன்றிய அண்டை இனங்களை ஆக்கிரமித்து, தமது மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பு மூலமும்,
குடியேற்றம் மூலமும்,
தமக்கான தனி மதத்தை நிறுவி அதற்கு மதம் மாற்றியது மூலமும்,
அவர்களது அடையாளத்தை அழித்து தமது இனமாக மாற்றியது.
தமது நாட்டை ஒட்டிய தீவுகளை ஆக்கிரமித்தது.
தமது அண்டை நாட்டு இனங்களை போருக்கு தூண்டுவது.
tt குழு மூலம் ஆயுதம் அனுப்புவது.
நாடுகளைத் துண்டாடுவது.
தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது என இனவெறி கருத்தியலின் அத்தனை அம்சங்களையும் திறம்பட செய்கிறது t-அரசு.
பலரும் இவ்விரு குழுக்களும் வெவ்வேறு சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தோர் இணைந்து உருவானதைப் பெருமையாகக் கூறுவர்.
உண்மையில் பலரும் அறியாத ஒன்று இவ்விரு குழுக்களுமே ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது.
t ராணுவமும் சரி tt குழுவும் சரி 95% தலைவர் abcd பிறந்த பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
t அரசின் அரசியல்பதவிகளில், ராணுவப் பொறுப்புகளில், உளவுத் துறையில், காவல்துறையில் என 90% க்கு மேல் இருப்பவர்கள் அந்த குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
t-மொழியில் மேற்கண்ட வட்டார வழக்கு பெருமையாகக் கருதப்பட்டு இன்று t-நாடு முழுவதும் அந்த வட்டார வழக்கில்தான் t-மொழியே பேசப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அதாவது இன்று t-நாடு போகும் வழியை வகுத்தவர் abcd.
t- இனத்தின் தலைமை இரண்டாக பிரிந்து செயல்படுவதும் அவரது யோசனைதான்.
விடுதலைப் போராட்டம் நடந்த போது t-ராணுவத்திற்கு ஒரு பொம்மைத் தலைவரை நியமித்துவிட்டு அவரேதான் இரண்டு குழு மூலமும் போரிட்டார்.
இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.
t-நாடு இன்று செய்யும் அத்தனை நடவடிக்கைகளும் 200 ஆண்டுகளுக்கு முன்பே abcd மூலம் தீர்மானிக்கப்பட்டுவிட்டன.
அவரது எழுத்துகளைப் படித்து இதன்பிறகு t-இனம் எதை நோக்கி நகரும் என்று எளிதாகக் கூறிவிடலாம்.
கூறவா?
அவர்கள் தமது கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து செயற்கைக்கோள் ஏவவுள்ளனர்.
இது உலகத் தலைவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
தெரிந்தும் அவர்களால் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை.
abcd இறந்த பிறகும் t-நாட்டை தொடர்ந்து ஆள்கிறார்.
விரைவில் அவர் உலகையே ஆளலாம்.
Wednesday, 29 June 2016
இறந்தபிறகும் ஆளும் தலைவன்
Saturday, 25 June 2016
ஈ.வே.ரா மண்மீட்பில் உதவினாரா?
மாநில மண்மீட்பில் உதவினாரா ஈ.வே.ரா?
"மொழி வழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம்.
மீண்டும் கூறுகிறோம்.
மொழி வாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம்."
(விடுதலை 21.1.47)
----------------
“தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும்,
தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப்படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும்,
குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும்.” (ஈ.வெ.ரா.,
விடுதலை 11.01.1947)
-------------------
"சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டுமென்பது
கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழியாக வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர்
தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டுவார்களானால், வலியுறுத்துவார்களானால்
அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச்சாரத்துக்கும் திராவிட சமுதாயத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டுவிடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன்" (ஈ.வே.ரா, விடுதலை 01.08.1948)
------------------------
“ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது.
அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன.
இன்றைக்கு 30வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன.
இந்த 30 வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை.
யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர மாற்றவேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை.
தமிழர்களில்தான் ஆகட்டும் இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்?
இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத் தவிர,
“குமரி முதல் வேங்கடம் வரை” என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன்?”
(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்,
தொகுதி-2, பக்கம் 723, 724)
--------------------------
தினத்தந்தி (11.10.55)
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, சித்தூர் ஆகிய தாலுகாக்கள் மலையாளத்துடன் சேர்ந்து விட்டதே!
இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஈ.வெ.ரா. : இது பற்றி எனக்குக் கவலை இல்லை.
மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள்.அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே?
ஈ.வெ.ரா. : ஆமாம், சமீபத்தில் சென்னைக்கு வந்தார் பணிக்கர்.
(மொழிவாரி மாகாண அமைப்புக் கமிட்டி மெம்பர்) அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் மலையாளத்தைச் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார்.
நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்."
அதே பேட்டியில் வேறொரு இடத்தில்
நிருபர்: கொள்ளேகாலம் கன்னட ராஜ்ஜியத்துடன் சேர்ந்துவிடுமே..!
இது பற்றி உங்கள் கருத்து என்ன..?
ஈ.வே.ரா: கொள்ளேகாலம் பறிபோனது பற்றி எனக்கு கவலை இல்லை. அப்பகுதி நமக்கு சம்மந்தமில்லாதது. நம்மிடமுள்ள ஒரு பளு நீங்கியது என்று சொல்லலாம்.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது அண்டைமாநிலங்கள் தமிழருக்கு சொந்தமான பல பகூதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக்கொமொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது அண்டைமாநிலங்கள் தமிழருக்கு சொந்தமான பல பகூதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக்கொண்டனர்.
அன்று தமிழர் மண்ணை மீட்க போராடியோர் ம.பொ.சி யும் மார்சல் நேசமணியும்தான்.
ம.பொ.சி சென்னையை ஆந்திரரிடமிருந்து காத்ததோடு நெல்லூர் வரை மீட்கப் போராடி திருத்தணி வரை மீட்டுத் தந்தார்.
மார்சல் நேசமணி திருவனந்தபுரம் வரை மீட்கப்போராடி கன்னியாகுமரியையாவது மீட்டுத் தந்தார்.
தற்போது திராவிடவாதிகள் இவ்விரு தலைவர்களையும் கிண்டல் செய்து பதிபோட்டுவிட்டு,
ஏதோ ஈ.வே.ரா மண்மீட்புக்காக குரல் கொடுத்ததாகவும்
தனி தமிழ்நாடு கேட்டதாகவும்
மலையாளிகளைக் கண்டித்ததாகவும்
ஆதரமில்லாத கருத்துகளைப் பரப்பிவருகின் ஆதரமில்லாத கருத்துகளைப் பரப்பிவருகின்றனர்.
ஆனால் ஈ.வே.ரா வோ அண்ணாதுரையோ வேறு எந்த திராவிட தலைவரோ மண்மீட்பின் போது ஒரு மண்ணும் செய்யவில்லை.
Tuesday, 21 June 2016
முல்லை பெரியாறு - சுருக்கமான வரலாறு
முல்லை பெரியாறு - சுருக்கமானவரலாறு
தேனி நண்பர் செந்தில் ஒரு பத்திரிகையின்விமர்சனத்தில் எழுதியதை இங்கெ தருகிறேன்
கேரளா புதிய அணை கட்டி இதே அளவு தண்ணீர் தருவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்தியஅளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்டகாலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும்இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கட்டுப்பாட்டில் இருந்ததாககருதப்பட்டது
(உண்மை அது அல்ல.
தமிழ் நாட்டின்வரையரைக்குள் தான் இருந்தது.
இதனை கண்ணன் தேவன் காபி கம்பெனி போட்ட மற்றொரு ஒப்பந்தத்தை வைத்து நிறுவியுள்ளார் மார்சல் நேசமணி)
எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர்மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும்அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000ஏக்கர் நிலத்தை 999ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய்40,000/- குத்தகைப் பணம் )
இந்த அணையை 1887ல்கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டிமுடித்தனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ்நாட்டில் தான்.
அணையும் தமிழ்நாட்டிற்கு சொந்தமானது.
அதை நிர்வகிப்பதும்தமிழ்நாடுதான்.
ஆனால் இடம் மட்டும்கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம்செலுத்துவதும் அவர்களே !
இந்த அணையின் உயரம்- கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும்நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4மாவட்டங்களைச்சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும்,
60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்தஅணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்தஅணை பறிக்கப்பட்டால் இத்தனை இடங்களும்பாலைவனங்கள் ஆகும்.
இத்தனை ஜனங்களும்பிழைப்பு பறிபோய் பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.
பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ?
கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,
இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்மின்நிலையமும் கட்டியது.
பின்னர் தான்ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.
பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.
அதிலும் சுமார் 10டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும்.
(104அடி வரை டெட் ஸ்டோரேஜ்) ஆனால் இடுக்கி இதைப்போல் 7 மடங்கு பெரியது.
கொள்ளளவு 70டிஎம்சி.
பெரிய அணையைக்கட்டிவிட்டார்களே தவிர அது நிரம்பும்வழியாகக் காணோம்.
3 வருடங்கள் பொறுத்துப்பார்த்தார்கள்.
பெரியாறு வருடாவருடம்நிரம்பிக் கொண்டு இருந்தது.
ஆனால்இடுக்கி நிரம்பவே இல்லை.
அப்போது போடப்பட்டசதித்திட்டம் தான் -பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள்செத்துப் போவார்கள்.
எனவே உடனடியாக புதியஅணை கட்டுவதே தீர்வு !
புதிய அணையினால்அவர்களுக்கு என்ன லாபம் ?
மேலே இருக்கும்பழைய அணையை இடிப்பதால்,நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும்நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.
அவர்கள் அதை வழியவிட்டு மின்சாரம் தயாரிக்கலாம்.
அதான்தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன்என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள்கேட்கிறார்க்ள்.
அங்கே தான் இருக்கிறது அவர்கள்சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல்மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம்வரை. இதிலிருந்து மலையைக்குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ்நாட்டை நோக்கி கொண்டுவரப்படுகிறது.
புதியஅணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.
இந்தஅணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விடமுடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர்எடுத்து வரும் பாதை புதிய அணை அமையவுள்ள இடத்தை விட உயரத்தில்ஆரம்பித்து,
ஒரு கிலோ மீட்டர்பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ளமலையைக் குடைந்த குகை வழியாகதிசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில்கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு, இவர்கள்உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்பமுடியாது.
மேலும் புதியஅணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம்உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கப்போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாகநிரம்பி இருக்காது.
தமிழ் நாட்டிற்கு தண்ணீர்நிச்சயமாக கிடைக்காது.
புதிய அணையினால்தமிழ்நாட்டிற்கு பயன் இல்லை.
60 லட்சம் மக்களின் உணவும் தண்ணீரும் பிடுங்கப்பட்ட கேரளாவுக்கு மின்சாரமாக போகவுள்ளது.
ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35லட்சம் மக்கள் செத்துவிடுவார்கள்என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?
அயோக்கியத்தனம்.
வடிகட்டிய
அயோக்கியத்தனம்.
முதலாவதாக -பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப்பள்ளத்தாக்குகள் வழியாகப்பாய்ந்து - நேராககீழே உள்ள (7மடங்கு பெரிய) இடுக்கி அணையைத் தான் வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடையஇடுக்கி அணையைத் தான் வந்தடையபோகிறது.
இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
35 லட்சம் மக்கள் சாவார்கள் என்பதும் பொய்.
வாதத்திற்காகஇடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் வெளியேறும் நீர்பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாகஇடுக்கியிலிருந்து தேவையானநீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.
இரண்டாவதாக 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979ல்பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல்எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர்குழுவை அமைத்தது.
நிபுணர் குழுவின்ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும்பலப்படுத்தப்பட்டது.
கேரளா சொல்வது போல்இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன்சிமெண்ட் கலவை சுவரில்துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது.
மீண்டும்1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட்தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள்ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்கலவை செலுத்தப்பட்டது.
வெளிப்புறமாக ஒரு கவசம் போல்,
கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதியகான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.
கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப்புரியும்.
இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்தஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு - 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்என்று அனுமதியே கொடுத்தது.
விட்டார்களா நமது மலையாளிகள்?
மீண்டும்சதி.
ஒரு மாதத்திற்குள்ளாக, கேரளசட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம்கோர்ட் உத்திரவையே செல்லாது என்று அறிவித்துவிட்டார்கள்.
வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.
மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது,இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில்இருக்கும்போதே தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாகஇருக்குமோ என்கிற தவிப்பில் மீண்டும் நாடகம்ஆடுகிறார்கள்.
அணைக்கு ஆபத்து புதியஅணை கட்ட வேண்டும் என்று.
பாராளுமன்றத்தில்குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப்பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள்குரல் தான் பலமாகக் கேட்கிறது.
வெளிமக்கள்அவர்கள் பக்கம் நியாயம்இருக்கிறது என்று நினைக்கத்தொடங்கி விட்டார்கள். தமிழ்நாடு ஏமாந்தது போதும்.
உடனடித் தேவை பலமானபதில் தாக்குதல்.
தமிழகம் முழுவதும்சேர்ந்து
பதிலடி கொடுக்க வேண்டும்.
(18 ஆகஸ்ட் 2012)