Showing posts with label பணிக்கர். Show all posts
Showing posts with label பணிக்கர். Show all posts

Saturday, 25 June 2016

ஈ.வே.ரா மண்மீட்பில் உதவினாரா?

மாநில மண்மீட்பில் உதவினாரா ஈ.வே.ரா?

"மொழி வழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம்.
மீண்டும் கூறுகிறோம்.
மொழி வாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம்."
(விடுதலை 21.1.47)
----------------
“தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும்,
தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப்படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும்,
குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும்.” (ஈ.வெ.ரா.,
விடுதலை 11.01.1947)
-------------------
"சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டுமென்பது
கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழியாக வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர்
தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டுவார்களானால், வலியுறுத்துவார்களானால்
அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச்சாரத்துக்கும் திராவிட சமுதாயத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டுவிடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன்" (ஈ.வே.ரா, விடுதலை 01.08.1948)
------------------------

“ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது.
அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன.
இன்றைக்கு 30வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன.
இந்த 30 வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை.
யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர மாற்றவேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை.
தமிழர்களில்தான் ஆகட்டும் இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்?
இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத் தவிர,
“குமரி முதல் வேங்கடம் வரை” என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன்?”

(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்,
தொகுதி-2, பக்கம் 723, 724)
--------------------------

தினத்தந்தி (11.10.55)
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, சித்தூர் ஆகிய தாலுகாக்கள் மலையாளத்துடன் சேர்ந்து விட்டதே!
இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஈ.வெ.ரா. : இது பற்றி எனக்குக் கவலை இல்லை.
மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள்.அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே?
ஈ.வெ.ரா. : ஆமாம், சமீபத்தில் சென்னைக்கு வந்தார் பணிக்கர்.
(மொழிவாரி மாகாண அமைப்புக் கமிட்டி மெம்பர்) அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் மலையாளத்தைச் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார்.
நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்."

அதே பேட்டியில் வேறொரு இடத்தில்
நிருபர்: கொள்ளேகாலம் கன்னட ராஜ்ஜியத்துடன் சேர்ந்துவிடுமே..!
இது பற்றி உங்கள் கருத்து என்ன..?
ஈ.வே.ரா: கொள்ளேகாலம் பறிபோனது பற்றி எனக்கு கவலை இல்லை. அப்பகுதி நமக்கு சம்மந்தமில்லாதது. நம்மிடமுள்ள ஒரு பளு நீங்கியது என்று சொல்லலாம்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது அண்டைமாநிலங்கள் தமிழருக்கு சொந்தமான பல பகூதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக்கொமொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது அண்டைமாநிலங்கள் தமிழருக்கு சொந்தமான பல பகூதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக்கொண்டனர்.

அன்று தமிழர் மண்ணை மீட்க போராடியோர் ம.பொ.சி யும் மார்சல் நேசமணியும்தான்.

ம.பொ.சி சென்னையை ஆந்திரரிடமிருந்து காத்ததோடு நெல்லூர் வரை மீட்கப் போராடி திருத்தணி வரை மீட்டுத் தந்தார்.

மார்சல் நேசமணி திருவனந்தபுரம் வரை மீட்கப்போராடி கன்னியாகுமரியையாவது மீட்டுத் தந்தார்.

தற்போது திராவிடவாதிகள் இவ்விரு தலைவர்களையும் கிண்டல் செய்து பதிபோட்டுவிட்டு,
ஏதோ ஈ.வே.ரா மண்மீட்புக்காக குரல் கொடுத்ததாகவும்
தனி தமிழ்நாடு கேட்டதாகவும்
மலையாளிகளைக் கண்டித்ததாகவும்
ஆதரமில்லாத கருத்துகளைப் பரப்பிவருகின் ஆதரமில்லாத கருத்துகளைப் பரப்பிவருகின்றனர்.

ஆனால் ஈ.வே.ரா வோ அண்ணாதுரையோ வேறு எந்த திராவிட தலைவரோ மண்மீட்பின் போது ஒரு மண்ணும் செய்யவில்லை.

Thursday, 10 July 2014

வந்தவழியே திரும்பிப்போ



ஈழத்தில் அடக்குமுறை தாங்கமுடியாமல்,
22.2.1972 அன்று ஈழத்து தந்தை செல்வா அவர்கள் சென்னை வந்து ஈவேரா-வைச் சந்தித்து உதவி கேட்டார்.

''ஒரு அடிமை இன்னொரு அடிமைக்காகப் போராட
முடியாது. நீங்கள் அங்கு சென்று போராடுங்கள்''
என்று ஈவேரா சொல்லி திருப்பியனுப்பினார்.
(அங்கு சென்று போராடுங்கள் என்றால் என்ன பொருள், 'நீ இங்கே எதற்கு வந்தாய்?' என்று பொருள்; ஒரு அடிமை போராடமுடியாது என்றால் பார்ப்பனர் குடுமியை அறுத்தது போராட்டமன்றி வன்முறை என்பது தெளிவாகிறதுதானே- இது எனக்குத் தோன்றுவது)

"அங்கே போய் போராடத்தான் சொன்னார்; பணிந்து போய்விடுங்கள் என்று சொல்லவில்லை".
(பெரியார் அப்படிச் சொன்னதால்தான் செல்வா அங்கே சென்று போராடி, ஈழப்பிரச்சனைக்கு தனிநாடு கோரி, தமிழர்கள் ஆயுதம் ஏந்தி படையமைத்து, நமக்கு தேசியத் தலைவர் கிடைத்து, நிழலுக ஈழம் அமைந்து, உலகநாடுகளையெல்லாம் எதிர்த்துநின்றி போராடி வீழ்ந்து, இன்று அது உலகம் முழுவதும் அதிர்வுண்டாக்கி, உலகத்தமிழர் எழுச்சிகொள்ள காரணமாகியுள்ளது; ஆக இதிலிருந்து பெரியார் தந்த பகுத்தறிவுக்கு எட்டுவது என்ன?
இன்று நம் எழுச்சிக்குக் காரணம் அன்று வந்த ஈழத்தலைவரை பெரியார் 'இங்கே ஏன் வந்தாய் அங்கேயே போய் போராடிக்கொள்' என்று கூறியதை அவர் வேதவாக்காக கொண்டு செயல்பட்டதுதான். அன்று பெரியார் மட்டும் 'நீங்கள் பணிந்துபோய்விடுங்கள்' என்று கூறியிருந்தால் அவர்கள் பணிந்துபோயிருப்பார்கள் அல்லவா?; அடடா பெரியாரின் சிந்தனையே தொலைநோக்கு சிந்தனை-- இது எனக்கு தோன்றுவது இல்லை, தமிழருக்குள் ஊடுருவியிருக்கும் தமிழின எதிரிகளுக்குத் தோன்றுவது)

1954ல் 'திருவாங்கூர் தமிழர் காங்கிரசு' கட்சியினர் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.மார்சல் நேசமணி தலைமையில் திருச்சியிலுள்ள 'பெரியார் மாளிகை'க்கு வந்து ஈவேராவைச் சந்தித்தனர்; பட்டதாணுப்பிள்ளை என்ற மலையாளியின் ஆட்சியில் 'திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில்'(கேரள மாநிலம் உருவாகும் முன் இருந்த மலையாள மாநிலம்) தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லி 9தமிழ் வட்டங்களை(தாலுகா) தமிழகத்துடன் இணைக்கும் தமது போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோருகின்றனர்;
"நீங்கள் வருவதற்கு சற்றுமுன்தான் கே.எம்.பணிக்கர் வந்தார்; அவர் தோட்டவேலை செய்யும் கூலிகள்தான் தமிழர்கள், தோட்ட முதலாளிகள் அனைவரும் மலையாளிகள்; எனக்கே அங்கு மூன்று ஏக்கருக்கு மேல் தோட்டம் உள்ளது, தமிழர் அந்த வட்டங்களைக் கோருவது அநியாயம் என்று கூறினார்; எனக்கு அவர் சொல்வதுதான் சரியாகப் படுகிறது".
என்று சொல்லி திருப்பியனுப்பினார்.
(பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து தமிழர் பெரும்பான்மை பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கக் கோருவதை விட, ஒரே ஒரு மலையாளி மூன்று ஏக்கர் தோட்டம் பற்றிக் கூறியது நியாயமாகப் படுகிறதா?; அன்று ஆதரவு கொடுத்திருந்தால் இன்று திருவனந்தபுரம் தமிழகத்தில் இருந்திருக்குமே; முல்லைப் பெரியாறு அணை உள்ள மாவட்டமே தமிழகத்தில் இருந்திருக்குமே; சிறுவாணி ஆறு, முல்லைப்பெரியாறு, ஆகிய ஆறுகள் வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தமிழக வயல்களுக்கு பயன்பட்டிருக்குமே; 2,000 தமிழர்கள் உயிரைக் கொடுத்து போராடி 9வட்டங்களில் வெறும் 4 அதுவும் நீர்வளம், காடுகள் போன்ற முக்கிய வளங்கள் இல்லாத நான்குவட்டங்களை (தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம்) அதிலும் முக்கிய நகரமான திருவனந்தபுரத்தையும் எடுத்துக்கொண்டு பிச்சை போட்டார்களே அந்தக் கேவலம் நடந்திருக்காதே; 1955லேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் தந்த வனப்பகுதி இன்று தமிழ்நாட்டில் இருந்திருக்குமே; கண்ணகிக் கோவில் சிதைந்த நிலையில் கேட்பாரற்று கேரள எல்லைக்குள் இருந்திருக்காதே --இது எனக்குத் தோன்றுவது)

"அந்தப் பகுதிகள் இல்லையென்றால் கேரளம் கஷ்டப்படும், என்று பெரியார் கூறியுள்ளார்; கேரளாவே சிறியது அதிலும் பாதி தமிழர் பகுதி என்றால் எப்படி; காமராசர் கூட அப்பகுதிகளை இணைப்பதற்கு ஆதரவு தரவில்லை அவரிடம் போய்க் கேட்கவேண்டியதுதானே; பெரியாரை மட்டும் குற்றம் சாட்டுகிறீர்கள் பார்ப்பனக் கூலிகளே".
(பெரியார் அன்று அப்படி செய்ததால்தான் இன்று முல்லைப் பெரியாறை முழுதாக அடைக்காமல் கொஞ்சமாவது தண்ணீர் தருகின்றனர்; ஈழப் படுகொலையில் மலையாளிகள் பெரும்பங்கு ஆற்றியதோடு நிறுத்திக்கொண்டனர், இல்லையென்றால் முழுப்பங்கு ஆற்றியிருப்பர்; அன்று அப்படி செய்ததால்தான் ஈழத்திற்கு உதவிசெய்த ம.கோ.ரா(எம்ஜிஆர்) என்ற மலையாளி நமக்கு கிடைத்தார்; நம்மீது மலையாளிகள் கருணை கொண்டு எல்லைப்பகுதி தமிழக சிற்றூர்களில் கொஞ்சமாக வேதி(ரசாயன)க் கழிவுகளைக் கொட்டுகின்றனர்; தற்போதைய தமிழகத்திலும் எட்டில் ஒரு பகுதி நிலம் மட்டும் மலையாள முதலாளிகளிடம் உள்ளது, இல்லையென்றால் முழு தமிழகத்தையும் வாங்கியிருப்பார்கள்; அவர்கள் நம்மீது பாசமாக இருப்பதால்தான் நம் ஆற்றுமணலை அள்ளிக்கொண்டுபோய் வீடுகட்டுகின்றனர்; திருவனந்தபுரம் அவர்களுக்குக் கொடுத்ததால்தான் அவர்கள் நன்றியுடன் அதை தலைநகராக்கி உணவகங்கள் கட்டி அதில் படித்த தமிழ்இளைஞர் மேசை துடைக்கும் வேலைக்குப்போய் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது- இது எனக்குத் தோன்றவில்லை, தமிழருக்குள் ஊடுருவியிருக்கும் தமிழின எதிரிகளுக்குத் தோன்றுவது)

என்னங்க அநியாயம், நீங்கள் போட்டுள்ள படத்தில் செல்வா பயபக்தியுடன் அமர்ந்துள்ளார், அமிர்தலிங்கமும் மங்கையர்க்கரசியும் மகிழ்ச்சியாக உள்ளனர்; நீங்கள் சொல்வது பொய் என்பது படத்திலேயே தெரிகிறது; மலேசியாவில் பிறந்த கிறித்தவ தமிழரையெல்லாம் தந்தை செல்வா என்கிறீர்கள், இந்த மண்ணில் பிறந்த திராவிடரை தந்தை பெரியார் என்று ஏன் ஒருமுறை கூட உங்கள் வாயில் வரவில்லை- த.ஊ.த.எ க்கு தோன்றுவது.

அதிலே ஈவேரா மேலே விரலால் சுட்டிக்காட்டுகிறார்; எல்லாம் அவன் செயல் என்கிறாரோ; 'ஈழத்திராவிடர்' என்று ஒருமுறைகூட உங்கள் வாயில் வரவில்லையே அதனால்தான் ஈவேரா வழிநின்று பார்வதியம்மாளை திருப்பியனுப்பிவிட்டீர்களோ --எனக்குத் தோன்றுவது.