இறந்தபிறகும் ஆளும் தலைவன்
நாள்: 05-06-2216
உலகம் எதற்கு அஞ்சியதோ அது நடந்தேறிவிட்டது.
இதுவரை தன்னாட்சியுடன் இயங்கிவந்த xyz தீவுகள் ஆயுதவலிமையால் ttt நாட்டினரால் வலுக்கட்டாயமாக விழுங்கப்பட்டுவிட்டது.
நாளை ஒரு பொம்மை முதலமைச்சர் அங்கே பதவியேற்பார்.
எண்ணி இரண்டாண்டுகளில் தன் நாடு வளர்ச்சியின் உச்சத்தை அடைந்ததாக அறிக்கைவிடுவார்.
ஆக ஒரு நாட்டிற்குள் தீவிரவாதிகள் அடைக்கலமாகி பதுங்கிய காலம் போய்,
இன்று ஒரே நாடே தீவிரவாதிகளின் அடைக்கலத்திற்குள் சென்றுவிட்ட காலம் வந்துவிட்டது.
அவர்கள் தீவிரவாதிகள் இல்லையென்றால் அனைத்துலக சபை தாமே அழைத்து ஒரு நாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்குவதாகக் கூறியபோதும் மக்களாட்சிமுறைக்கு ஏன் திரும்பவில்லை?
அப்படி திரும்பினால் ஆயுதங்களை கீழே போடவேண்டும்.
அடக்கியாளும் தம் நாட்டு மக்களிடம் வாக்கு கேட்டு கையேந்த வேண்டும்.
அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க முடியாது.
இனவிடுதலை வழங்குவதாகக் கூறி தாம் உருவாக்கிய உலகளாவிய சந்தையில் தாம் தயாரித்த ஆயுதங்களை வணிகம் செய்யமுடியாது.
உலகின் மூலைமுடுக்கெல்லாம் நாடுகளைத் துண்டாடி தமது நிழலில் குட்டிகுட்டி தீவிரவாத நாடுகளை உருவாக்கிட முடியாது.
உலகம் முழுவதும் கடலில் வழிப்பறி, கடத்தல், கொலை, கொள்ளைகளில் ஈடுபட முடியாது.
அணு ஆயுத ஆய்வுகள் நடத்தமுடியாது.
அவர்கள் தீவிரவாதிகள் என்றால் ttt நாட்டு மக்கள் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருக்கிறார்களே!
எந்த ஊடகமும் அங்கு சென்று சுற்றிபார்த்து செய்தி வெளியிடத் தடையில்லையே!
இராணுவ ஆட்சி மக்களாட்சியை விட சிறப்பாக அனைத்து துறைகளிலும் செயல்படுகிறதே!
ஆமாம். இதுதான் இந்த நூற்றாண்டின் நகைமுரண்.
ஆயுதத்தால் நடக்கும் ஆட்சிதான்.
ஆனால் கொடுங்கோலாட்சி இல்லை.
மக்களின் அடிப்படைத் தேவைகள் முதல் ஆடம்பரத் தேவைகள் வரை நிறைவேற்றுகிறார்கள்.
ஆனால் அவர்களுக்குக் கிடைக்காதது சுதந்திரம் மட்டும்.
அங்கே தேர்தல் கூட நடக்கும்.
ஆனால் இரண்டு கட்சிகள்தான் நிற்கும்.
ஒன்று தீவிரவாதிகளின் கட்சி.
இதுதான் வெற்றி பெற்று அரசாளும்.
மற்றொன்று தீவிரத் தீவிரவாதிகளின் கட்சி.
இதுதான் எப்போதும் எதிர்கட்சி.
ஊடகம் முழுவதும் இவர்கள் கையில்தான்.
பிறகெப்படி மூன்றாவது ஒருவர் ஆட்சிக்கு வரமுடியும்.
அந்நாட்டு மக்களுக்கு எதுவுமே சொந்தமில்லை.
அரசுக்குதான் எல்லாமே சொந்தம்.
அரசு சொல்லும் வேலைக்குதான் போகவேண்டும்.
அரசு தரும் கல்வியைத் தான் பெறவேண்டும்.
தகவல்தொடர்பும் அரசின் கையிலேதான்.
ttt நாடு ஒரு திறந்தவெளிச் சிறை.
சிறையில் கைதிகளுக்கு இடமும் உணவும் கொடுத்து அதற்கான செலவுக்காக அவர்களை சிறைக்குள்ளேயே வேலை செய்யவைத்து வரும் வருமானத்தை அவர் விடுதலை அடையும்போது அவருக்கு கொடுக்கிற நடைமுறை.
இந்த திறந்தவெளிச் சிறையும் அதே போன்றதுதான்.
என்ன ஒரு வேறுபாடு, இங்கே கைதிகளுக்கு விடுதலை கிடையாது.
எனவே வருமானம் அவர்கள் கைக்கு வரவேவராது
ஆனாலும் பல்வேறு நாட்டின் தலைவர்கள் அங்கு செல்கின்றனரே!
ஒப்பந்தம் போடுகின்றரே! பேச்சுவார்த்தை நடத்துகின்றனரே!
ஒரு நாடு போல அவர்களை நடத்துகின்றனரே!
ஆம். அதற்குக் காரணம் தீவிரவாதிகள் ஆளும் அந்த ttt நாட்டில் இவர்களை விட மோசமான பலம்வாய்ந்த தீவிரத் தீவிரவாதிகள் இருப்பதுதான் காரணம்.
தற்போது நடக்கும் ஆட்சியை வேறுவழியின்றி அனைவரும் ஆதரிக்கின்றனர்.
இல்லையென்றால் தீவிரத் தீவிரவாதிகள் ஆட்சிக்கு வருவார்கள்.
அவர்கள் வந்தால் உலகையே வாரிச் சுருட்டி தன் உள்ளங்கைக்குள் அடக்கிவிடுவார்கள்.
உண்மையா?
15 கோடி மக்களை அடக்கியாளும் t-இராணுவத்தை விடவா பலம் வாய்ந்தவர்கள் அந்த tt- தீவிரவாதிகள்.
ஆம். உண்மையில் ஆளும் t- ராணுவத்தின் முதுகில் கத்தியை வைத்தபடி அவர்களை வழித்துவோர் இந்த tt படையினர்.
அதற்காக இவர்கள் பெரிய குழு என்று நினைக்கவேண்டாம்.
இவர்கள் சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்கள்தான்.
ஆனால் இவர்கள் பரவாத இடமே இல்லை.
ttt நாட்டு உளவுத்துறை இவர்கள்தான்.
இராணுவத்தில் கீழிருந்து மேல் வரை சரி பாதி இவர்களின் ஆட்கள்தான்.
இவர்களை மீறி ttt நாட்டினராலோ அல்லது அந்நாட்டின் t-இன மக்களாலோ எதுவுமே செய்யமுடியாது.
இவர்களுக்கு தனி கட்டுப்பாட்டுப் பகுதி உண்டு.
இவர்கள் எல்லைப் பகுதியையும் கடற்கரையையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இங்கே t- இனமல்லாதோர் நுழையமுடியாது.
இனத்தூய்மையை கடைபிடிக்கும் மிக தீவிரமான இனவாதிகள்.
இவர்களிடம் தனி ராணுவம் உண்டு.
இவர்கள் இனவெறியை அறிய ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன்.
இவர்கள் தனி விமானத்தை எடுத்துக்கொண்டு தாய்லாந்து விபச்சார விடுதிகளுக்குச் செல்வார்கள்
அங்கேயும் மரபணு பரிசோதனை செய்து t-இனத்தவருடன்தான் உறவு வைத்துக்கொள்வார்கள்.
இவர்களின் வேலை t-இனத்தவரைப் பாதுகாப்பது.
அதாவது உலகின் ஒவ்வொரு t-யும் இவர்களுடன் தொடர்பில் உள்ளனர்.
அவர்களது வீடு சொத்துக்கள் உடைமைகள் அனைத்தையும் நிர்வகிப்போர் இவர்களே.
இவர்களுக்கு உலகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் சொத்துக்களும் தொழிலும் உண்டு.
உலகின் ஏதோவொரு மூலையில் ஒரு கடையை வாங்குவார்கள்.
அங்கே ஒரு t-ஐ அனுப்பி அதை நடத்தச் சொல்வார்கள்.
அந்த t- மிகக் குறுகிய காலத்தில் அந்த வட்டாரத்திலேயே பெரிய ஆளாகிவிடுவார்.
அவருக்கு போட்டியாக இருக்கும் அனைவரும் ஒழிக்கப்படுவர்.
தடையாக இருக்கும் அனைவரும் கொல்லப்படுவர்.
பிறிகு அவரது நிழலில் உள்நாட்டு ஆட்கள் இனவாத அரசியல் கட்சி ஒன்று தொடங்குவார்கள்.
பிறகு சில tt- குழுவினர் வந்து இறங்குவார்கள்.
அவ்வளவுதான் மிக மிக குறுகிய காலத்தில் அவர்கள் தனி இராணுவமாகவும் எதிர்கட்சியாகவும் வளர்ந்து அந்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்து இறுதியில் அந்நாட்டின் ஒரு பகுதியை தமது ஆளுமையில் கொண்டுவந்து நாட்டையே இரண்டாகப் பிரிப்பார்கள்.
சிறிதுகாலத்தில் மக்களைக் கசக்கிப் பிழிந்து பொருளாதாரத்தை விண்ணுக்கு உயர்த்துவார்கள்.
இறுதியாக அவர்கள் ttt நாட்டின் தலைமையில் மூன்றாம் உலகநாட்டு கூட்டமைப்பில் இணைந்து தாங்களும் ஒரு குட்டி ttt-நாடாக மாறுவார்கள்.
இப்போது தீவிரத் தீவிரவாதிகள் என்னசொன்னாலும் அவர்கள் கேட்பதில் வந்து முடியும்.
உலகமே இன்று t -இனத்தவரைப் பார்த்து நடுங்குகிறதென்றால் அது காரணமில்லாமல் இல்லை.
இதற்கு காரணம் tt குழு உலகின் 50% ஆயுத சந்தையைத் தன் கைகளில் வைத்துள்ளது.
ttt அரசு தன் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளின் ஒட்டுமொத்த வளத்தையும் தமது கைகளில் வைத்துள்ளது.
tt குழுவிற்கும் ttt நாட்டு அரசுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
இவர்களின் பிறப்பிடமும் ஒன்றுதான்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றியிருந்த இனங்களால் நாலாபுறமும் மிக மோசமான ஒடுக்குமுறைக்கும் இனப்படுகொலைக்கும் ஆளானது t- இனம்.
இந்த நேரத்தில் தோன்றியவர்தான் இன்றும் இவ்வினத்தின் தலைவராக மதிக்கப்படும் abcd.
இவர் வரலாறு மிக மிக விறுவிறுப்பான ஒன்று.
இவர் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது இளவயதில் இவருக்குமுன் t-தாய்நிலத்தின் ஒரு பகுதியில் t-மக்களை திரட்டி ஆயுதம் தாங்கி pqrs என்பவர் போராடிய போராட்டம் தோல்வியில் முடிந்து இனப்படுகொலை நடந்தேறியது.
இதைக் கண்டு மனம் கொதித்த t இளைஞர்களில் abcd யும் ஒருவர்.
பிறகு இவர் ஒரு இளைஞர் குழு ஆயுதம் தாங்கி போராட வேண்டி உதவிகள் செய்தார்.
அதற்கு பணம் திரட்ட சட்டத்திற்கு புறம்பான பல செயல்களைச் செய்தார்.
இதன்மூலம் இவரைச் சுற்றி ஒரு கூட்டம் உருவானது.
இவர் உதவி வந்த குழுவும் இறுதியில் இவரையே தலைமையாக ஏற்றது.
இந்த குழுதான் ஆயுதவழியில் விடுதலைப் போராட்டத்தில் இறங்கி t-தாய்நிலத்தை ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
இதுதான் இன்று t-நாட்டு அரசாங்கம் மற்றும் ராணுவம்.
எந்த கொள்கையும் இல்லாத abcdன் கொள்ளைக்கூட்டமும் ஆயுதத் தாக்குதலில் இறங்கி குறிப்பிட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
இதுதான் இன்றைய tt ஆயுதக்குழு, எதிர்கட்சி மற்றும் t-உளவுத்துறை.
இவ்விருவரும் ஒருவருக்கொருவர் நேரடியாக மோதாவிட்டாலும் t-இனத்தவர் மீதான ஆதிக்கத்திற்கான போட்டியில் எதிரெதிர் அணியில் உள்ளனர்.
காலப்போக்கில் t ராணுவம் உள்நாட்டு ஆதிக்கத்தையும்
tt குழு வெளிநாட்டு ஆதிக்கத்தையும் கைப்பற்றின.
ஆனாலும் ஒரு அரசால் வெள்ளப்படையாகத் தீர்க்கமுடியாத பிரச்சனைகளை உளவுத்துறை தீர்ப்பது போல tt குழுதான் t-இனத்தையே உலகம் முழுவதும் காப்பாற்றிவருகிறது.
அதற்காக t-படையும் சளைத்ததென்று கூறமுடியாது.
விடுதலைப் போராட்டத்தில் தன் தாய்நிலம் தாண்டி அண்டை இனத்து நிலத்தை ஆக்கிரமித்தது.
தன் கட்டுப்பாட்டுப் பகுதியின் வேற்றினத்தவரை வெளியேற்றியது.
வலிமை குன்றிய அண்டை இனங்களை ஆக்கிரமித்து, தமது மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பு மூலமும்,
குடியேற்றம் மூலமும்,
தமக்கான தனி மதத்தை நிறுவி அதற்கு மதம் மாற்றியது மூலமும்,
அவர்களது அடையாளத்தை அழித்து தமது இனமாக மாற்றியது.
தமது நாட்டை ஒட்டிய தீவுகளை ஆக்கிரமித்தது.
தமது அண்டை நாட்டு இனங்களை போருக்கு தூண்டுவது.
tt குழு மூலம் ஆயுதம் அனுப்புவது.
நாடுகளைத் துண்டாடுவது.
தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது என இனவெறி கருத்தியலின் அத்தனை அம்சங்களையும் திறம்பட செய்கிறது t-அரசு.
பலரும் இவ்விரு குழுக்களும் வெவ்வேறு சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தோர் இணைந்து உருவானதைப் பெருமையாகக் கூறுவர்.
உண்மையில் பலரும் அறியாத ஒன்று இவ்விரு குழுக்களுமே ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது.
t ராணுவமும் சரி tt குழுவும் சரி 95% தலைவர் abcd பிறந்த பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
t அரசின் அரசியல்பதவிகளில், ராணுவப் பொறுப்புகளில், உளவுத் துறையில், காவல்துறையில் என 90% க்கு மேல் இருப்பவர்கள் அந்த குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
t-மொழியில் மேற்கண்ட வட்டார வழக்கு பெருமையாகக் கருதப்பட்டு இன்று t-நாடு முழுவதும் அந்த வட்டார வழக்கில்தான் t-மொழியே பேசப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அதாவது இன்று t-நாடு போகும் வழியை வகுத்தவர் abcd.
t- இனத்தின் தலைமை இரண்டாக பிரிந்து செயல்படுவதும் அவரது யோசனைதான்.
விடுதலைப் போராட்டம் நடந்த போது t-ராணுவத்திற்கு ஒரு பொம்மைத் தலைவரை நியமித்துவிட்டு அவரேதான் இரண்டு குழு மூலமும் போரிட்டார்.
இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.
t-நாடு இன்று செய்யும் அத்தனை நடவடிக்கைகளும் 200 ஆண்டுகளுக்கு முன்பே abcd மூலம் தீர்மானிக்கப்பட்டுவிட்டன.
அவரது எழுத்துகளைப் படித்து இதன்பிறகு t-இனம் எதை நோக்கி நகரும் என்று எளிதாகக் கூறிவிடலாம்.
கூறவா?
அவர்கள் தமது கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து செயற்கைக்கோள் ஏவவுள்ளனர்.
இது உலகத் தலைவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
தெரிந்தும் அவர்களால் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை.
abcd இறந்த பிறகும் t-நாட்டை தொடர்ந்து ஆள்கிறார்.
விரைவில் அவர் உலகையே ஆளலாம்.
Wednesday, 29 June 2016
இறந்தபிறகும் ஆளும் தலைவன்
Sunday, 26 October 2014
பணக்காரத் தீவிரவாதி (2/2)
'பெரும்பாலும் மக்களுக்கு வரும் பிரச்சனைகள் சிலரால்தான் வரும். பிரச்சனை வரும்போதுதான் அவர்களை தீர்த்துக்கட்டி தேவையானதைப் பறித்துக்கொள்ள நல்லவாய்ப்பு அமைகிறது. மக்களுக்கும் நல்லது நடக்கிறது. மற்றபடி நாங்கள் மக்களுக்கு எந்த உதவியும் செய்வதே கிடையாது. மக்கள் எங்களுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை'.
'இதுவரை கைதாகியிருக்கிறீர்களா?'
'இல்லை, என் கூட்டாளிகளில் ஒருவரைக் கைது செய்து விலங்கிட்டு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.ஒன்று பணம் கொடுத்து அவர் குற்றமற்றவர் என்றாக்க வேண்டும் அல்லது தாக்குதல் நடத்தி காவலை உடைத்து மீட்கவேண்டும் என்ற நிலை. பணம்கொடுத்து சட்டநடவடிக்கை மூலம் அவரை மூன்று மணிநேரத்தில் வெளியேகொண்டுவர ஆணை பிறப்பிக்கவைத்தேன். ஆனால், அவர்கள் விடுதலை செய்யுமுன் அதிரடி நடவடிக்கை மூலம் அவரை மீட்டிருந்தேன். அதன்பிறகு பெரிய படையை அனுப்பினார்கள். எங்களுடன் மோதியதில் அதில் ஒருவர்கூட மிஞ்சவில்லை. அதன்பிறகு பட்டாளத்தை அனுப்பினார்கள் கடுமையான சண்டைக்குப் பிறகு பேச்சுவார்தை நடத்தி போர்நிறுத்தம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்'.
'எப்படி?'
'நேர்மையான ஒருங்கிணைக்கப்பட்ட படையாகவும் எங்களால் இயங்கமுடியும், நேர்மை இல்லாமல் குறுக்குவழியில் தீவிரவாதிகளாகவும் இயங்கமுடியும். உயிரைப்பற்றி கவலையும் இல்லை, ஈவிரக்கம் காட்டுவதும் இல்லை. எங்களுக்கு ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலைகளே உள்ளன.
உலகில் நவீனமாக சந்தைக்கு வரும் தொழில்நுட்பத்தை கள்ளசந்தையில் உடனடியாக வாங்கிவிடுவோம். இந்த வீட்டுக்கு மேலே கூட இரண்டு தாக்குதல் வானூர்திகள் உள்ளன'
'எப்படி இதையெல்லாம் செய்தீர்கள்?'
'நேர்வழியில் இது முடியாது, குறுக்குவழியில் வந்ததுதான். அதுவும் பத்தே ஆண்டுகளில்'.
'நீங்கள் இயங்கும் பகுதிகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?'
'என்மொழி பேசும் மக்கள் வாழும் இடம் அத்தனையும் சில பகுதிகள் நேரடியாகவும் சில பகுதிகள் மறைமுகமாகவும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இங்கே நான் என்ன நினைக்கிறேனோ அது நடக்கும். எந்தவொரு தலைவனுக்கும் அவன் மொழி, வட்டாரம், சாதி, மத மக்களின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கவே செய்யும்'.
'அரசியலில் உங்கள் பங்கு என்ன?'.
'ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு ஆதரவு வழங்குகிறேன். அவர்கள் நேரடியாக அரசியல்கட்சியாக இல்லாமல் அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறார்கள். அவர்கள்தான் எங்கள் கொள்கைகளைப் பரப்புகிறார்கள். மற்றபடி நான் தீர்மானிக்கும் கட்சிதான் ஆட்சிக்கு வரும்'.
'உங்களுக்கு அஞ்சாதவர்களும் உண்டா?'
"உயிர் இருக்கும் எவனும் எனக்கு அஞ்சிதான் ஆகவேண்டும்".
'உங்கள் முன்மாதிரி யார்?'
'உலகில் பட்டாளத்தையே முறியடித்த நிழலுகப் பெருந்தலைகள் இருந்திருக்கிறார்கள். எல்-சாப்போ, வீரப்பன் போன்றவர்கள் என் முன்மாதிரிகள்'.
'போதைப்பொருட்களை கடத்துவதாகச் சொல்கிறார்களே?'.
'ஆம், ஆயுதம் வாங்கும் கள்ளச்சந்தையில் சிலசமயம் போதைப்பொருட்களையும் கைமாற்றவேண்டிவரும். மற்றபடி போதைப்பொருட்களை நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் சொத்துக்களில் சரிபாதி போதைப்பொருள் விற்றவர்களிடம் பறித்ததுதான்.
எங்கள் குழுவினர் எந்த தீயபழக்கமும் இல்லாதவர்கள். அவர்களுக்கு போதை அவர்கள் வாழும் வாழ்க்கைதான்'.
'யாரும் வழிதவறியதே இல்லையா?'.
'இல்லை, குழுவில் சேருமுன் போதைக்கு அடிமையாக இருந்தவர்களை பயிற்சி மூலம் விடுவிப்போம். சிலர் வழிதவறியதால் விண்ணுலகம் அனுப்பிவிட்டோம்'.
'கொலைதான் எல்லாவற்றுக்கும் தீர்வு என்று நினைக்கிறீர்களா?'.
'வேறு தீர்வே இல்லாத சிலருக்கு, தெரிந்தே வரம்பு மீறும் சிலருக்கு, உயிர்வாழத் தகுதியில்லாத சிலருக்கு ஒரே எளிதான தீர்வு ஒரு தோட்டா உடனடி மரணம்'.
'உங்களுக்கு எதிரிகள் உண்டா?'
'எதிரியாக வரலாம் என்று யாரையெல்லாம் சந்தேகிக்கிறேனோ அவர்களை தீர்த்துவிடுவேன்.ஆனாலும், பல எதிரிகள் இருக்கிறார்கள். சரிக்கு சரியான எதிரிகள் சிலர்தான். அவர்களையும் விரைவில் ஒழித்துவிடுவேன்'.
'இது எத்தனை நாளைக்கு?'
'தெரியவில்லை, தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நடைமுறை மாறும்வரை'.
'நீங்கள் அதிகம் பகட்டாக இருப்பதாகத் தோன்றுகிறதே? கொஞ்சம் மக்களுக்கும் கொடுக்கக்கூடாதா?'.
'ஏழை போலவும் எளிமையாக இருப்பதாகவும் பிரபலங்கள் நடிக்கிறார்கள். ஏனென்றால், இங்கே ஏழைகள் அதிகம். ஏழைகளே இல்லாத நாட்டில் ஏழையாக நடிப்பது பலனளிக்காது அல்லவா? யாரும் விரும்பி ஏழையாக இருப்பதில்லை. மக்கள் எப்போதும் உதவிகளை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் வாழ்க்கையில் இடையூறு செய்யாமல் இருந்தால் அவர்கள் வாழ்ந்துகொள்வார்கள். என்னுடைய நோக்கம் தவறான வழியில் சேர்த்துவைப்பவன் இருக்கக்கூடாது. இருந்தால் விட்டுவைக்கமாட்டேன். நாங்கள் பறிப்பதை நாங்களே வைத்துக்கொள்கிறோம். மக்களிடம் பறிப்பது எளிது. ஆனால் பணமுதலைகளிடம் பறிப்பது உயிரைப் பொருட்படுத்தாமல் துணிந்தால்தான் நடக்கும். உயிரைப் பணயம் வைத்து செயல்படுகிறோம். பெரிதாக எதாவது கிடைத்தால்தான் நாங்கள் பெரிதாக செயல்படமுடியும்'.
'உங்களுடைய இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'.
'நான் ஏன் இந்த வாழ்க்கையை வாழ்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, என்னைப் போன்று எங்கள் குழுவினரைப்போன்று வாழாத வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையே அல்ல.ஏதோ செய்கிறேன். ஆனால் செய்வது சரி என்றுமட்டும் சொல்வேன்'.
பணக்காரத் தீவிரவாதி (1/2)
பணக்காரத் தீவிரவாதி
terrorist,rebellion, smugler,businessman, don,leader, murderer,revolutionist, billioner,gangster, racist, humantarian, god father, politician and
ANY PERSONALITY THAT IS EXTREME
அந்த பரவலான தலைவரை பேட்டிகாண பெருமுயற்சி செய்து இசைவு கிடைத்தது,
தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவரைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.
மறைவிடத்தில் இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவரது வீடு ஒரு நகரத்தின் நடுவில் இருந்தது முதல் வியப்பு.
அந்த வீடைப் பார்க்கவேண்டுமே மிகப்பெரிய வீடு, சுற்றி தோட்டம், ஆயுதம் ஏந்திய காவல், பகட்டின் உச்சம் அதையும் மிஞ்சும் கலைநயம். இந்தவீடு அவர் அவ்வப்போது வந்து போவதாம். இதைவிடப் பத்துமடங்கு பெரிய வீடுகள் பல்வேறு நகரங்களில் இருக்கிறதாம்.
ஒரு அறையில் காத்திருக்கச்.சொன்னார்கள். அங்கே அவரது படங்கள் இருந்தன.
அவரைப் பற்றி பலரும் எச்சரித்தார்கள். அதிலும் நான் ஒரு பெண். இருந்தாலும் துணிந்து சென்றேன். அவர் வரைந்த ஓவியங்களும் இருந்தன. அதெப்படி சாதனை நாயகர்கள் அனைவரிடமும் வரையும் பழக்கம் இருக்கிறது?!
'அவர் வந்துவிட்டார்' என்று உடனிருந்தவர் கூற வாசலைப்பார்த்தேன்.
அவர் ஒரு இருசக்கரவண்டியில் கறுப்புகண்ணாடியைக் கழட்டியவாறு வந்திறங்கினார்.
நான் எழுந்து நிற்க, அவர் என்னைக் கடந்துசெல்லும்போது முறைப்பது போல் கூர்மையாகப் பார்த்துவிட்டு ஒரு அறைக்குள் சென்றார். 'மரியாதைக்காக எழுந்துநிற்பது அவருக்குப் பிடிக்காது' என்றார் உடனிருந்தவர். 'அப்படியா? ஏன்?' 'அது அப்படித்தான். எழுத்து நிற்பது, சல்யூட் அடிப்பது, காலில் விழுவது இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. வணக்கம்கூட லேசாக தலையை அசைத்தால் போதும்'.
அவர் உடைகளை மாற்றிக்கொண்டு வந்தார்.
இருக்கையில் அமர்ந்தார்.
உயர்தரமான ஆடைகள் ஆனால் நகைகள் எதுவும் அவர் அணிந்திருக்கவில்லை.
ஆனால் அத்தனை மிடுக்கு.
பால் கலக்காத தேநீரை அவரே தயாரித்து எடுத்துவந்திருந்தார்.
'நாங்கள் பால் பயன்படுத்துவது கிடையாது, அது கன்றுக்காக தாய்ப்பசு சுரப்பது, தவிர பாலில் உள்ள லாக்டோஸ் செறிக்கவும் முடியாமல் கழிவாக வெளியேறவும் முடியாமல் உடலிலேயே தங்குகிறது. இது உடல்நலத்துக்குக் கேடு. இன்று பெண்கள் சீக்கிரமே வயதுக்கு வருவதும் மற்ற விலங்குகளை விட மனிதர்களே அதிகம் பாலியல் வல்லுறவு செய்வதற்கும் பாலருந்துவது ஒரு காரணம். ஏனென்றால் கன்றுதான் விரைவில் பருவமடையும்' என்று கூறினார்.
எனக்கு நான் பார்க்கவந்த ஆள் இவர்தானா? என்று ஐயமேற்பட்டது.
'எந்த மொழியில் பேட்டியை வைத்துக்கொள்ளலாம்?' என்று கேட்டார். 'எனக்கு உங்கள் மொழி நன்றாகத் தெரியும், அதிலேயே வைத்துக்கொள்ளலாம்' என்றேன். 'இல்லை எங்கள் தாய்மொழியை வேற்றுஆட்களுடன் நாங்கள் பேசுவதில்லை, தொடர்புமொழியில் வைத்துக்கொள்ளலாம்' என்றார்.
அதன்பிறகு ஆங்கிலத்தில் பேட்டி தொடர்ந்தது.
'உங்கள் செயல்பாடுகள் என்னென்ன?'
"என் செயல்பாடு உயிரை எடுப்பது, அவன் யாரோ அவன் நோக்கம் என்னவோ இருந்துவிட்டுப்
போகட்டும், என்னைப்போன்ற ஒரு மாந்தனை நான்
கொல்கிறேன், இதுதான் நான் செய்வது, பல
உயிர்களை வாழ வழிசெய்ய சில உயிர்களை நான் கொல்கிறேன்,
இதுதான் என் செயல்பாடு".
'உங்களுக்கு அரசாங்கத்தைப் பற்றி கவலையில்லையா?'.
'இல்லை, அரசாங்கத்தை விட நவீனமான ஆயுதங்கள் என்னிடம் இருக்கும்வரை, சொல்லப்போனால் அரசாங்கமே நான் நடத்துவதுதான்'.
'இருசக்கரவண்டியில் சுற்றுகிறீர்களே, பாதுகாப்பு தேவையில்லையா?'.
'இல்லை, நான் போகும் முன்பே என் உளவு ஆட்களும் பாதுகாவலர்களும் அங்கே பாதுகாப்பை உறுதி செய்திருப்பார்கள்'.
'இதுவரை எத்தனைபேரைக் கொன்றிருப்பீர்கள்?'.
'தெரியவில்லை, ஆயிரக்கணக்கில் இருக்கும்'.
'ஏன்?'.
'என் வழியில் குறுக்கே வருபவர்களை, எதிர்ப்பவர்களை, அவர்கள் தலைதூக்கும் முன்பே நான் தீர்த்திருப்பேன்'.
'வெளிப்படையாகக் கூறுகிறீர்களே பயமில்லையா?'.
'இல்லை'.
'பேட்டி வெளியானபிறகு அரசாங்கம் படையெடுத்து வரலாம்'.
'தோற்றுப்போவார்கள்'.
'எப்படி?'.
'நான் உருவாக்கியுள்ள கூட்டம் அப்படி, அவர் தங்கள் பெருமையை, திமிரைக் காப்பாற்றவேணும் உயிரை பணயம் வைத்து போராடுவார்கள்'.
'எப்படி இதை உருவாக்கினீர்கள்?'.
'அடுத்தவனுக்காக உழைக்காமல், எவனுக்கும் அடிபணியாமல் ஆயுதம் ஏந்தி கொள்ளைக்காரர்களிடம் கொள்ளையடிக்கிறோம். அந்தப் பணத்தைக்கொண்டு நன்றாக வாழ்கிறோம். இப்படி ஒரு வாழ்க்கைக்கு உயிரையே கொடுக்கலாம் என்று எண்ணுபவர்கள் என் படையினர்'.
'எத்தனைபேர் இருப்பார்கள்?'.
'துல்லியமாகத் தெரியவில்லை, ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்'.
'எங்கிருந்து இது தொடங்கியது?'.
'நான் உலகத்தின் புரட்சியாளர்களைப் படித்து புரட்சிகரமாக எதையாவது செய்யவேண்டும் என்று செயல்பட்டு குற்றவாளியானேன். ஆனால், பெரிய அளவில் குற்றம்புரிபவர்கள் வாழ்வாங்கு வாழ்வதைப் பார்த்தேன். பணக்கார முதலாளிகள்தான் போரையும், வெற்றி தோல்வியையும், பேச்சுவாழ்த்தையையும், தீர்ப்புகளையும்,ஒப்பந்தங்களையும், புரட்சிகளையும், ஆட்சிகளையும், வாழ்வையும், சாவையும் தீர்மானிக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக மாற நினைத்தேன். வழி அவர்கள் வழிதான். உயிரைப் பற்றி கவலைப்படாமல், எதற்கும் துணிந்த கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு, ஆயுதங்களை பயன்படுத்தி பணத்தை பறிப்பது, அவர்களுக்கே எதிராக அதைப் பயன்படுத்துகிறேன். அவர்கள் சராசரி மக்களைக் கொள்ளையடித்து சேர்த்துவைந்திருப்பதை நான் பிடுங்கிக்கொள்கிறேன். இன்று உலகத் தீவிரவாத அமைப்புகளில் பணக்காரக் குழு நாங்கள்தான்'.
'இதற்கு தலைவனாக எப்படி ஆனீர்கள்?'
'முதலில் நான்தான் சில நண்பர்களுடன் தொடங்கினேன். தப்பான வழியில் பணம் சேர்ப்பவர்களை கொள்ளையடித்து, கடத்தி, மிரட்டி, கொன்று பணத்தை எடுத்துக்கொள்வோம். இது பெரும்பாலான இளைஞர்களை ஈர்க்கவே குழு பெரிதானது.எங்கள் குழுவிலேயே சிலர் மக்களைத் துன்புறுத்தத் தொடங்க அவர்களை நான் தீர்த்துக்கட்டிவிட்டேன். பிறகு சிலர் தனியே பிரிந்து குழு தொடங்கினர். அவர்களையும் ஒழித்துக்கட்டியபிறகு வேறுவழியில்லாமல் என்னையே தலைவனாக்கிவிட்டனர்'.
'நீங்கள் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் தட்டிக்கேட்கிறீர்களா?.