அறவழி விடுதலை அடைய உதவுமா?
சமீப காலமாக பலரும் தமிழர்கள் ஹிந்திய அரசுக்கெதிராக ஒத்துழையாமை போராட்டம் நடத்தவேண்டும் என்று கூறிவருகின்றனர்.
காந்தியின் ஒத்துழையாமை போராட்டம் தோல்வியில்தான் முடிந்தது.
அதாவது ஒத்துழையாமை பேரணி நடத்திய மக்கள் மீது சௌரி சௌரா என்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக காவல்துறை எச்சரிக்கிறது.
உடனே மக்களில் இருந்து சிலர் (அதாவது ஊடுறுவியவர்கள்) காவல்துறை மீது கற்களை எரிந்தனர்.
உடனே துப்பாக்கியால் சுட்டு மூன்றுபேரைக் கொன்றது ஆங்கில அரசின் காவல்துறை.
அறவழிப் போராட்டம் வன்முறைப் போராட்டமாக மாற்றப்பட்டது.
ஆத்திரமடைந்த சௌரிசௌரா மக்கள் காவல்நிலையத்தை பூட்டி கொளுத்தியதில் 22 காவலர்கள் இறந்தனர்.
உடனே காந்தி ஒத்துழையாமைப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார்.
(இதே திட்டம்தான் மாணவர் கேட்ட நிரந்தர தீர்வைத் தராமல் இருக்க இங்கேயும் செயல்படுத்தப்பட்டது)
காந்தி ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் வாங்கித் தரவில்லை.
ஆங்கிலேயர் உலகப்போரால் சந்தித்த பொருளாதார வீழ்ச்சியினால் ஆட்சி நடத்த முடியாமல் தாமே விட்டுவிட்டனர்.
காந்தியை ஏன் அவர்கள் விட்டுவைத்தார்கள் என்றால் அப்போதுதான் மக்கள் அடிவாங்குவதே தீர்வு என்று நினைப்பார்கள்.
மக்களை ஆள்வது எளிது.
உண்மையில் அஹிம்சை போராட்டம் ஆயுத போராட்டத்திற்கு சளைத்தது அல்ல.
ஆனால் அஹிம்சை போராட்டம் சம உரிமைக்காக நடத்தப்படுவது.
ஒரு நாட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட மக்கள் தம்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தமது குரலை அரசாங்கத்திடம் பதிவு செய்வது.
மார்ட்டின் லூதர் கிங் நடத்திய அறவழிப் போராட்டம் அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதில் மாபெரும் வெற்றி அடைந்தது.
ஆனால் விடுதலை என்பது அஹிம்சையால் ஒருபோதும் கிடைக்காது.
விடுதலை என்பது ஒரு நாட்டு மக்கள் தமக்கு சிறிதும் தொடர்பற்ற வேற்றின கூட்டத்தால் தாம் ஆளப்படாது,
தமது மக்களுக்குள்ளேயே ஒருவர் ஆள்வதை வலியுறுத்துவது.
அதாவது மக்களை ஆளும் உச்சதலைமை அவர்களுக்கு அருகிலேயே இருக்கவேண்டும்.
அருகிலேயே என்றால் தொலைவும் குறைவாக, மொழியும் ஒன்றாக இருக்கவேண்டும்.
ஜல்லிக்கட்டு போராட்டமே பாருங்கள்.
இந்த மண்ணுக்கு சிறிதும் தொடர்பில்லாத ஒருவரை,
தொலைதூர டில்லியில் போய் காத்திருந்து பார்த்து,
அவருக்கு சிறிதும் தெரிந்திராத ஜல்லிக்கட்டு பற்றி ஓரிரு மணித்துளிகளில் முடிந்த அளவு விளக்கி (அதுவும் பழக்கமில்லாத மொழியில்) பிறகு கெஞ்சி முடிவு எடுக்கவேண்டிய சூழல்.
மத்திய அரசின் கடைக்கண் பார்வை படவே இங்கே லட்சக்கணக்கில் திரண்டு ஒரு வாரம் போராடவேண்டி இருக்கிறது.
இதை விட சிறு சிறு பிரச்சனைகளை எப்படி அவர்கள் கவனத்துக்குக் கொண்டுபோவது?
நாம் விடுதலை அடைந்திருந்தால்,
நம்மை ஆள்பவன்நமக்கு அருகிலேயே இருந்திருப்பான்,
நம் மொழிபேசுபவனாக இருந்திருப்பான்,
நம் பிரச்சனை அவனுக்குத் தெரிந்திருக்கும்.
சிறிய போராட்டமே கூட போதுமானதாக இருந்திருக்கும்.
ஆக நாம் விடுதலை அடைவதே நியாயம்.
அதற்கு ஆயுதப்போராட்டமே ஒரே வழி.
உடனே வன்முறையா? தீவிரவாதமா? என்று அலறுகிறார்கள்.
ஏன்
பகத்சிங் ஆயுதம் ஏந்தவில்லையா?
நேதாஜி ஆயுதம் ஏந்தவில்லையா?
நெல்சன் மண்டேலா ஆயுதம் ஏந்த வில்லையா?
ஹோசிமின் ஆயுதம் ஏந்தவில்லையா?
பிடல் காஸ்ட்ரோ ஆயுதம் ஏந்தவில்லையா?
ஆயுதம் ஏந்தியும் நாம் பொதுமக்களுக்குத் தீங்கின்றி நேர்மையாக போராடலாம்.
தலைவர் பிரபாகரனைப் போல.
என்றால் ஈழப்போராட்டம் தோல்வியில் முடிந்ததே?!
ஆம், ஏனென்றால் ஈழம் முழுமையான நாடு கிடையாது.
தமிழர்நாட்டின் ஒரு பகுதிதான் ஈழம்.
முழு தமிழரையும் ஒன்றுதிரட்டி தமிழர்நாடு அடைய போராடியிருந்தால் கட்டாயம் வென்றிருப்போம்.
வெறும் 25 லட்சம் தமிழர்கள் ஒரு மாநில ஆதரவுடன் ஓரணியிலும்
எதிரில் ஒன்றரை கோடி சிங்களவர் இந்தியா, சீனா உள்ளிட்ட வல்லரசுகளின் ஆதரவுடன் எதிரணியிலும் இருந்தனர்.
ஆகவே தோற்றனர்.
சரி உலகத் தமிழரே 8கோடிதான்.
அனைவரும் ஓரணியில் நின்றாலும் அவ்வல்லரசுகளை வென்றிருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
முடியும்.
உலகம் முழுவதும் இனவாதிகள் உள்ளனர்.
அத்தனை பேரும் நம்மை ஆதரிப்பர்.
தேசியவாதிகள் பிரிவினைவாதிகள் அத்தனை பெரியநாடுகளிலும் உள்ளனர்.
இதுவே புலிகளும் தமிழக விடுதலைக் குழுக்களும் வீரப்பனாரும் கைகோர்த்து பெரிய படை ஒன்றை உருவாக்கியிருந்தால் தமிழகம் முழுவதும் அந்த படையின் கட்டுப்பாட்டில் நிழலுக ஆட்சியில் இருந்திருக்கும்.
இதைப் பார்த்து பொறாமையில் இந்தியா முழுவதும் பல இனங்கள் ஆயுதம் தூக்கி விடுதலைக்காகப் போராடியிருக்கும்.
இதுபோல எல்லா நாட்டிலும் நடந்திருக்கும்.
என்றால் ஆளாளுக்கு விடுதலை கேட்பார்களே?!
கேட்கட்டுமே?
உலகில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நாடு உருவாகட்டுமே?!
யார் குடி மூழ்கிவிடப்போகிறது?!
பெரிய நாடுகள் சிறுசிறு இனங்களின் தாய்நிலங்களை ஆக்கிரமித்து வீங்கி கிடப்பது யாருக்கு நன்மை?
பெரிய நாடுகள் எதுவும் விடுதலையை ஆதரிக்கமாட்டர்.
காரணம் அவற்றை இயக்குவோர் பணக்காரர்கள்.
ஒரு பணக்காரன் ஒரு நாட்டில் வியாபாரம் செய்ய அது ஓரே ஆட்சியில்கீழ் இருக்கவேண்டும்.
அதிலும் அந்த மக்களுக்கு தொடர்பே இல்லாத ஒருவன் ஆண்டால் இன்னமும் வசதி.
பெரிய பெரிய வல்லரசு நாடுகளை நாம் நினைத்தால் அலறவிட முடியும்.
அமெரிக்கா நம்மை எதிர்த்தால் நாம் டெக்சாஸ் பிரிவினையை தூண்டலாம்.
சீனா நம்மை எதிர்த்தால் நாம் ஹாங்காங் பிரிவினையைத் தூண்டலாம்.
கனடா எதிர்த்தால் கியூபெக் பிரிவினையைத் தூண்டலாம்.
ரஷ்யா எதிர்த்தால் செசன்யா பிரிவினையைத் தூண்டலாம்.
பாகிஸ்தான் எதிர்த்தால் பலூச்சிஸ்தான் பிரிவினையைத் தூண்டலாம்.
மேற்கண்ட இனவழி தேசியவாத பிரிவினைவாதிகளை ஒன்றிணைத்து பரஸ்பர ஆயுத உதவி மற்றும் அரசியல் ஆதரவு என முழு உலகையும் ஆட்டிப்படைக்கலாம்.
அதற்கு நாம் முதலில் சிறிதேனும் பலமாக இருக்கவேண்டும்.
பலம் என்பது இங்கே மக்கட்தொகையையும் ஆயுதவலிமையையும் குறிக்கிறது.
உலகில் நம்போல சிறுபான்மை இனங்கள் பல நசுக்கப்பட்டு அழிந்து வருகின்றன.
சீனா என்ற நாடு பெரும்பான்மை இனமான ஹான் இனம் பிற சிறிய இனங்களை அடக்கி ஆளும் நாடு.
இந்தியா பெரும்பான்மை இனமான ஹிந்தி இனம் பிற சிறிய இனங்களை அடக்கி ஆளும் நாடு.
ரஷ்யா பெரும்பான்மை இனமான ரஷ்யர் பிற இனங்களை அடக்கி ஆளும் நாடு.
அமெரிக்கா பெரும்பான்மை கலப்பின வெள்ளையர் பிறரை அடக்கி ஆளும் நாடு.
பிரிட்டன் பெரும்பான்மை இங்கிலீஷ் மக்கள் பிற இனங்களை அடக்கி ஆளும் நாடு.
ஆகவே அவர்கள் நம்மை எதிர்க்கவே செய்வர்.
ஆனால் அந்நாட்டு சிறுபான்மை இனங்கள் நம்மை ஆதரிப்பர்.
ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான் போன்ற இனவழி வல்லரசு நாடுகளும் நம்மை ஆதரிக்கும்.
ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை.
உலக ஆதரவு பற்றி கவலைப்படாமல் முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே திரட்டி போராடியிருந்தாலும் நாம் வெற்றி பெறுவது உறுதி.
நாம் எண்ணிக்கையிலும் நிலப்பரப்பிலும் அறிவிலும் திறமையிலும் எந்த இனத்திற்கும் சளைத்தவர்கள் அல்ல.
ஆனால் நாம் அத்தனையையும் கால்காசு பேறாத இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறோம்.
ஹிந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் நாட்டு எல்லையில் பனியில் காவல்காக்கிறோம்.
இங்கே நம் கடல் எல்லையில் சிங்களவன் தாக்கினால் பாதுகாக்க யாருமில்லை.
நாம் ஹிந்தியாவுடன் சேர்ந்திருப்பது அவர்களுக்கு மட்டுமே லாபம்.
நமக்கு முழுக்க முழுக்க நஷ்டம் மட்டுமே.
ஆகவே ஆயுதவழியை தேர்ந்தெடுப்போம்,
விடுதலை பெறுவோம்,
அதோடு நில்லாது,
உலக இனங்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் வல்லரசாக உருவெடுப்போம்.