Monday, 30 November 2015

இங்கே காவிரி ஆற்று மண் விற்கப்படும்

"இங்கே காவிரி ஆற்று மண் விற்கப்படும்"

பாலக்காட்டில் பலகையில் எழுதிப்போட்டே விற்கிறார்கள்.

தமிழகத்தில் காவிரியில் ஒரு யூனிட் மண் அள்ள ரூ.350,
இதை அருகிலிருக்கும் கேரளாவிற்கு கொண்டுசென்றால் போதும் 350க்கு ரூ.11,000 கிடைக்கும்!

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் ரூ.12,000முதல் ரூ18,000 வரை கிடைக்கும்.

இதையே கடல்தாண்டி கொண்டுசென்றால்?

இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றுவிட்ட மணல் கொள்ளையர்கள் கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார்கள்.

மாலைத்தீவுக்கு
2008-2009 இல் 4.5 லட்சம் டன் மணலும்,
2009-2010 இல் 10.15 லட்சம் டன் மணலும்,
2011-2012 இல் 12 லட்சம் டனா மணலும்
கப்பலில் மூலம் அனுப்பி விற்கப்பட்டுள்ளது.

கேரளாவிலும் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் அந்தந்த மண்ணின் மைந்தர்கள் 'மணல் அள்ளத் தடை' போட்டு தமது மண்ணைப் பாதுகாத்துவிட்டனர்.

அம்மாநிலத்தார்கள் அநியாய விலை கொடுத்தேனும் தமிழகத்தின் மணலை வாங்கி வீடுகட்டுகிறார்கள்.

என்றால் இலங்கைத் தீவுக்கு சற்று அப்பால் இருக்கும் மாலைத்தீவுக்கு மணல் எங்கேயிருந்து போகும்?

வேறு எங்கேயிருந்து?
திறந்துகிடக்கும் வேட்டைக்காடான தமிழகத்திலிருந்துதான்.

மற்ற பொருட்களை ஏற்றுமதி செய்யுமளவு மணலை கப்பலேற்றி அனுப்புவதற்கு பெரிய கெடுபிடி எதுவுமில்லை.

தமிழகத்தின் மணல் தேவைக்கும் அள்ளப்படும் மணலுக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு சிறு எடுத்துக்காட்டு மூலம் கூறவா?

தாமிரபரணியின் தோழப்பண்ணை என்ற இடத்தில் ஒரு மாதத்திற்கு அள்ளிக்கொள்ள அனுமதிக்கப்பட்ட மணல் ஒரு மாதத்திற்கு 9000 யூனிட்.
ஆனால், ஒரு மாதத்தில் அங்கே அள்ளப்பட்டது 58,000 யூனிட்.

அதாவது ஆறரை மடங்கு!
தமிழகத்தின் மணலில் இருந்துதான் மற்ற ஐந்து இடங்களுக்கு மண் செல்கிறது.

(திரு.ஆர்.நல்லகண்ணு அவர்கள் தாமிரபரணியைக் காக்கத் தொடுத்த பொதுநலவழக்கின் தரவுகளில் இருந்து)

இது மணல்,
காட்டுவளமோ நீர்வளமோ இல்லை திருப்பி உருவாக்க.

நாம் தீவிரவாதிகளாக மாறி தென்னிந்தியாவையும் மாலைத்தீவையும் ஆக்கிரமித்து,
அங்கேயிருந்து மணல் அள்ளி கொண்டுவந்து நம் ஆற்றுப்படுகைகளில் நிரப்பினால்தான் உண்டு.

(இனவெறிக்கு இரையான பாலாறு
vaettoli.blogspot.in/2015/07/blog-post_45.html?m=1 )

Sunday, 29 November 2015

நாமம் ஏன் ஏமாற்றத்தின் சின்னம்?

நாமம் ஏன் ஏமாற்றத்தின் சின்னம்?

))))))))))))))))))))))))))))))))))))))))))))

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத(ஐய)ர் தன்வரலாறு (சுயசரிதை)நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ‘திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ என்னும் தமிழ் ஆசிரியரிடம் பாடம் கற்கச் சேர்ந்தபோது,
அவர் பெயரை ஆசிரியர் வினவ
"உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சாமிநாதன்"
என்று பதிலளித்தாராம்.

உடனே அந்த ஆசிரியர் "பார்த்தாயா உன் பெயரே வேங்கடத்தில் சுப்பிரமணியன் இருப்பதற்குச் சான்று” என்றாராம்.

‘வேங்கடம் அதாவது திருப்பதியில் இருப்பது முருகனே' என்ற கருத்து பலகாலமாக தமிழர்கள் மனதில் வேரூன்றி நின்றது புலனாகிறது அல்லவா?

முருகன் முகத்தை மறைக்குமாறு நாமத்தைப் போட்டு 'ஏழுகுண்டலவாடு' என்று ஆக்கி ஏமாற்றியதுதான்
இன்றும் ஏமாற்றுவதை "நாமம் போட்டுவிட்டான்" என்று சொல்லுவதற்கு காரணமாக உள்ளது.

அதாவது ஏமாற்றப்பட்டதின் உச்சகட்டம் தமிழரைப் பொறுத்தவரை அதுதான்.

Saturday, 28 November 2015

குமரிக்கண்டத்து மன்னனின் சாதனைகள்

குமரிக்கண்டத்து மன்னனின் சாதனைகள்

தமிழ் மன்னர்களிலேயே மிகவும் பழமையான மன்னன் 'நெடியோன்' என்பவனாவான்.
இவனே "நிலந்தரு திருவிற்பாண்டியன்' என்றும் அழைக்கப்படுகிறான்.

இவன் வியப்பில் ஆழ்த்தும் பெரிய பெரிய சாதனைகள் செய்துள்ளான்.

இவன் இன்று கடலடியில்  உறங்கிங்கொண்டிருக்கும் நமது 'குமரிக்கண்டத்தில்' ஓடிய 'பஃறுளி' ஆற்றின் கரையில் அமைந்த பழைய 'மதுரை'யை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளான்.

“செந்நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கீர்த்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப்பக்றுளி மணல்” (புறம் 9)

பஃறுளி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இவன் 'முந்நீர் விழவு' எனப்படும் பெரிய விழா ஒன்றை நடத்தியுள்ளான்.
இந்த விழா இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் நீர் தொடர்பான போட்டி என்று கூறமுடியும்.
கடலில் விடும் நவாய் (அல்லது கப்பல்) போட்டியாக இருக்கலாம்.

இவன் காலத்திலேயே குமரிக்கண்டத்தைக் கடல் கொண்டது,

“பக்றுளியாற்றுடன் பனிமலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசையாண்ட தென்னவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுவது இவனைத்தான்.

பல மலைகளையும் பஃறுளியாற்றையும் கொண்ட குமரிக்கோடு கடலால் விழுங்கப்பட்டது.
அதை இணைசெய்ய இமயத்தையும் கங்கையும் இவன் தனதாக்கிக் கொண்டது தெரிகிறது.

அதாவது குமரிக்கண்ட பேரழிவிலிருந்து தப்பித்து தன் மக்களையும் காத்துள்ளான் இந்த பேரரசன்.

ஏற்கனவே குமரிக்கண்ட மக்களுக்கு கப்பல்கள் பற்றிய அறிவு இருந்ததுள்ளது.
குமரிக்கண்டத்தைக் கடல் திடீரென்று ஒரேடியாக விழுங்கவில்லை என்று கூறலாம்.
அதனாலேயே அவர்கள் தப்பிக்கமுடிந்தது.

இவன் தப்பித்துவந்த மக்களைக் குடியமர்த்த இரண்டு பெரிய அரசர்களையும் பல வேளிர்களையும் போரிட்டு வென்று இமயம் வரைக் கைப்பற்றியுள்ளான்.
வளமான நிலப்பரப்பை மக்களுக்குக் கிடைக்கச் செய்தனாலேயே இவன் 'நிலந்தரு' பாண்டியன் எனப்பட்டான்.

இரு பெரு வேந்தரொடு வேளிர் சாயப் பொருது,
அவரைச் செரு வென்றும்,
இலங்கு அருவிய வரை நீந்தி,
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்,
உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின்,
நிலம் தந்த பேர் உதவி,
பொலந் தார் மார்பின்,
நெடியோன் உம்பல்
(மதுரைக்காஞ்சி 55)

எனில் தமிழர்கள் வந்தேறிகளா?

இல்லை. இமயம் வரைக்கும் அந்நாளில் ஒரே மொழி (தமிழ்) பேசப்பட்டது.
“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லைத் தோன்று மொழிந்து தொழில் கேட்ப”
என்று அதே மதுரைக்காஞ்சி கூறுகிறது.

இம்மன்னன் பழைய நூல்கள் அழிந்துவிட்டதால், இலக்கியத்தை மீட்டுருவாக்க இடைக் கழகம் (இரண்டாம் தமிழ்ச் சங்கம்) நிறுவி 'தொல்காப்பியம்' எழுதச் செய்துள்ளான்.
இவனது அவையில் புலவராக இருந்த அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர் இலக்கணநூலான தொல்காப்பியத்தை அரங்கேற்றினார்.
இவ்விலக்கணத்தின் படி நூல்கள் இயற்றப்பட வரையறை செய்யப்பட்டது.

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து
(பனம்பாரனார் சிறப்புப் பாயிரம்)

இதோடு நில்லாமல் குடியமர்ந்தோருக்கு உணவுத்தேவையைப் பூர்த்தி செய்ய கடல் கடந்து சென்று சாவகநாட்டின் (தற்போதைய இந்தோனேசியா) நெல்வளமிக்க ஒரு ஊரைக் (சாலியூர்) கைப்பற்றியுள்ளான்.

புதிதாக வயல்வெளிகள் ஏற்படுத்தி அதற்கான விதைநெல் கொண்டுவர இவ்வாறு செய்திருக்கலாம்.
நெல் இறக்குமதி செய்ய தன் புதிய நாட்டிடம் பொருளாதாரம் இல்லாமையால் படையெடுத்து சென்று அந்த பகுதியை பிடித்திருக்கலாம்.

நெடுங்கொடிமிசை இதை எடுத்து, இன்னிசைய முரசம் முழங்க,
பொன் மலிந்த விழுப்பண்டம்,
நாடு ஆர நன்கு இழிதரும்,
ஆடு இயல் பெருநாவாய்,
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங்கு இருக்கை,
தெண்கடல் குண்டகழிச்,
சீர்சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ
(மதுரைக்காஞ்சி 79-89)

என்று 'தலையாலக்காலத்துச் செருவென்ற பாண்டியனை' புகழும் மதுரைக்காஞ்சியில் பாண்டியரின் சிறப்புகளான கூறுவனவற்றில் பாண்டியர் கடல் வலிமையும் நெல் செழித்த ஊரையும் பற்றிக் கூறுகிறது.

ஆக பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை இடம், கல்வி, உணவு ஆகியன கொடுத்து அப்பேரழிவினால் ஏற்பட்ட இழப்பை முடிந்த அளவு ஈடுகட்டியுள்ளான் இத்தமிழ் மன்னன்.

விரிவாக
amuthamvaralaru.blogspot.com/2014/07/4.html?m=1

Friday, 27 November 2015

வணங்காமண் விட்ட கண்ணீர்

தொண்டைகிழிய அழுதுசெத்த குழந்தைகளும்
வணங்கா மண் என்ற உணவுக் கப்பலின் கண்ணீரும்

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இந்த உலகில் மனிதநேயம் இருப்பதாக இன்னும் நம்பிவரும் அப்பாவி முட்டாள்களுக்கு இந்தப்பதிவு

32 உலகநாடுகள் இலங்கைக்கு படையுதவி செய்து தமது செயற்கைகோள் வழியாக தமிழ்மக்கள் எப்படி எப்படியெல்லாம் கொல்லப்படுகிறார்கள் என்று இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

போரில் இனி புலிகள் வெல்வது கடினம் என்று உலகத் தமிழர்களுக்கு முன்பே புரிந்துவிட்டது.

பதறியபடி அவர்கள் உலகம் முழுவதும் போராட்டங்களை நடத்திக்கொண்டே தமிழ்மக்களுக்கு உதவயாருமில்லை என்பது புரிந்தவர்களாக "கருணைத் தூதுவன்" என்றொரு குழுவை அமைத்து  போர்வளையத்தில் உள்ள தமது சொந்தங்களுக்கு உதவ நிதி திரட்டி சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 884டன் (1டன்=1000கிலோ) உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சிரியாவுக்கு சொந்தமான 'கேப்டன் அலி' என்ற கப்பலை (மேலே படத்தில்)  ஏற்பாடு செய்து அதற்கு 'வணங்காமண்' என்று பெயரிடுட்டு 07-5-2009 அன்று இலங்கையை நோக்கி அனுப்பிவைத்தனர்.

அது இலங்கைக்கு அருகில் வந்ததும்  இலங்கை கடற்படையினரால் முற்றுகையிட்டு 111மணிநேரம் சோதனையிட்டப்படுகிறது.
கப்பலில் நிவாரணப் பொருட்கள் மட்டுமே இருப்பதாகவும் ஆனால் இது விதிமுறைகளை மீறிவிட்டதாகவும் கூறி அதைத் திரும்பிச் செல்லுமாறு கூறிவிட்டனர்.

ஆனால் இந்தக்கப்பலைக் கொண்டு சென்ற பிரித்தானியத் தமிழர் அதை திருப்பி எடுத்து செல்ல மறுத்துவிட்டார்.
சர்வதேச கடல் எல்லையில் இருந்தபடி எப்படியாவது தமிழ்மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டுசேர்ப்பது என்ற உறுதியுடன் தமிழகத்தைத் தொடர்பு கொண்டார்.

சென்னையில் 'மனிதம்' என்ற தொண்டு அமைப்பு சென்னைத் துறைமுகத்தில் அந்தக் கப்பலின் பொருட்களை இறக்கி தமிழருக்கு அனுப்ப அனுமதி கேட்டது.

தமிழர்களைக் கொல்வதில் மும்முரமாக இருந்த இந்தியா அதற்கு அனுமதி மறுத்துவிட்டது.
"கொன்றது போதுமா இல்லை இன்னும் கொஞ்சம்பேரைக் கொல்லலாமா"
என்று ஆலோசனை நடத்த இலங்கை உயர்மட்டக்குழு இந்தியா வந்தது.

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் வணங்காமண் பொருட்களை ஏற்றுக்கொள்ளும்படி இந்தியாவை ஒருவர் மாற்றி ஒருவர் கெஞ்சிக்கொண்டிருந்தனர்.
அவர்களால் முடிந்தது அதுதான்.

இலங்கை உயர்மட்டக்குழு இந்தியாவிடம் 'வணங்காமண் பொருட்களை நீங்களே எடுத்து அனுப்பிவையுங்கள் நேரமிருந்தால் யோசிக்கிறோம்'
என்று கட்டளை போட்டுவிட்டு வந்தனர்.

பிறகு சென்னைக்கு வணங்காமண் கொண்டுவரப்பட்டு "கேப் கலோராடா" என்ற கப்பலுக்கு பொருட்கள் மாற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு சென்று கொழும்பில் இறக்கப்பட்டன.

அங்கே அந்த நிவாரணப்பொருட்கள் பல மாதங்கள் கேட்பாரின்றி கிடந்தன.

இந்நிலையில் போர் முடிந்து பெரும்பாலான மக்கள் செத்துபோய்விட்டனர்.

செயற்கைக்கோள் வழியாகப் பார்த்து ரசித்தவர்கள்
'இந்தத் தாக்குதலில் ஒரு ஆயிரம்பேர்
இந்த தாக்குதலில் ஒரு இரண்டாயிரம்பேர்'
என்று குத்துமதிப்பாக எண்ணிக்கொண்டிருந்தனர்.

போர் முடிந்ததும் நாற்பதாயிரம் பேர் இறந்திருக்கலாம் என்று கூறினார்கள்.
அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை.

தடைசெய்யப்பட்ட குண்டுகள் மூலமும் பலமுனை ஆயுதங்கள் மூலமும் நேரடியாகச் செத்தது நாற்பதாயிரம் அல்லது அறுபதாயிரம் பேர்தான்.

ஆனால், உணவு கிடைக்காமல் காயத்துக்கு மருந்து கிடைக்காமல் கதறிக்கதறி அணுஅணுவாகச் செத்தவர்கள் ஒரு இலட்சத்துக்கும் மேல்.

இதை வெளிக்கொண்டு வந்ததும் ஒரு தமிழரான மன்னார் பாதிரியார்தான்.

இந்த சமையத்தில் தமிழகத்திலிருந்து வந்தேறிக்குழு ஒன்று அதன் அடிபொடிகளுடன் இலங்கைக்குச் சென்று இராசபக்சவுடன் விருந்துண்டு இளைப்பாறி கைகுலுக்கி வாழ்த்திவிட்டு வந்தனர்.

தெலுங்கன் கருணாநிதியிடம் வணங்காமண் பொருட்கள் பற்றி கேட்கப்பட்டபோது அவை தமிழருக்குப் போய்சேர்ந்துவிட்டதாக நாகூசாமல் புழுகினான்.

ஐந்து மாதங்கள் திறந்தவெளியில் அழுகிக்கொண்டிருந்தன அந்த நிவாரணப்பொருட்கள்.

அதன் பிறகு இலங்கை அந்த பொருட்களுக்கு விதித்திருந்த இருபது இலட்சம் வரியை செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளை கட்டி (வழக்கமாக நிவாரணப்பொருட்களுக்கு பரம ஏழைநாடுகள் கூட வரிவிதிப்பதில்லை. அதையும் செய்தது இலங்கை) கெட்டுப்போன பொருட்களை நீக்கிவிட்டு 614டன் உணவு,மருந்து பொருட்களை தமிழர்களுக்கு விநியோகிக்க 23-10-2009 அன்று எடுத்துச்சென்றது.

மறுநாளே அந்தப் பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அதை விநியோகிக்கும் பொறுப்பிலிருந்து தாம் விலகிக்கொள்வவதாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்தது.

வேறென்ன நடந்திருக்கும் உலகத்தமிழர் உழைத்து ஒன்றுதிரட்டிய பணத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் காயம்பட்ட சிங்கள இராணுத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அந்தக் கப்பலுக்கு உயிர் இருந்திருந்தால் கைக்கெட்டும் தூரத்தில் தாய்ப்பால் தீர்ந்துபோன அன்னை மார்பில் முட்டி பசிக்கு அழுது அழுது தொண்டை புண்ணாகி அந்த வலியும் பொறுக்காது மீண்டும் அழுது அழுது கோரமரணத்தைத் தழுவியக் குழந்தைகளுக்கு தான் சுமந்துவந்த உணவைத் தரமுடியவில்லையே என்று கண்ணீர் சிந்தி உயிரை விட்டிருக்கும்.

மறக்கக்கூடாது தமிழரே
மறக்கக்கூடாது.

http://nerudal.com/nerudal.11306.html
http://www.tamilolli.com/?p=9173
http://tamilwin.easyms.com/search.php?key=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&page=3

நியூட்டனின் மூன்றாம் விதியும் தமிழரின் தலை விதியும்

நியூட்டனின் 3ம் விதியும்
தமிழரின் தலை விதியும்

பபபபபபபபபபபபபபபபபபபபபபபப

தமிழன் போராடவேமாட்டான்
தமிழனுக்கு இனப்பற்றே கிடையாது
தமிழனுக்கு உணர்ச்சியே கிடையாது
தமிழனுக்காகப் போராடினால் நல்லசாவுகூடக் கிடைக்காது

என்றெல்லாம் வசைபாடுபவர்கள் கவனத்திற்கு!

எந்த ஒரு விடயத்திற்கும் ஒரு சரியான காரணம் உண்டு.
எளிதாகப் புரிய இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறுகிறேன்.
நியூட்டனின் மூன்றாம் விதி தெரியும்தானே,
"எந்த ஒரு விசைக்கும் சமமான நேர்எதிர்விசை ஒன்று இருக்கும்"
இதை விளங்க ஒரு கைத்துப்பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள்.
(என்றாவது ஒருநாள் நீங்கள் உண்மையில் எடுக்கப்போவதுதான்).

நாம் விசையை அழுத்தியதும் தோட்டாவிற்குள் இருக்கும் வெடிமருந்து தீப்பிடித்து வெடித்து தோட்டா முன்னே பாய்கிறது.
இதற்கு சமமான எதிர்விசை துப்பாக்கியையும் உங்கள் கையையும் பின்னோக்கித் தள்ளுகிறது.

இந்தவிதி எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.
சரி; தமிழரைக் குறைகூறும் பலர் தமிழர் மற்ற எந்த இனத்தையும்விட வரலாற்றில் வலுவாகத் தடம்பதித்ததையும் தமிழரின் பெருமையையும் திறமையையும் ஒப்புக்கொள்கின்றனர்.

மற்ற மக்களிடம் இல்லாத ஒரு சிறப்பு தமிழரிடம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

என்றால் அதற்கு சமமான எதிர்விளைவு அவர்களிடம் இருக்கும்தானே?
அதுதான் தமிழரின் மந்தப்போக்கு.

மற்ற இனங்கள் சிறிய சீண்டலுக்கே எகிறி அடிக்கிறார்களே!
தமிழர்கள் ஏன் எல்லாவற்றையும் பிடுங்கியபிறகும் அசமந்தமாக இருக்கிறார்கள்?
என்று நன்கு யோசித்ததில் இந்தப்பதில் கிடைத்தது.

மற்றவர்கள் கைத்துப்பாக்கிக்கோ அல்லது தோள்துப்பாக்கிக்கோ ஒப்பானவர்கள் அவர்களை வெடிக்கவைப்பது எளிது. ஆற்றலும் குறைவு.

ஆனால், தமிழர்கள் பீரங்கிக்கு சமமானவர்கள்.
வெடிக்கவைப்பது கடினம் ஆனால் வெடித்தால் கோட்டைகளே தகர்ந்துபோகும்!!!

ஈழத்தில் புலிகள் வெறும் முப்பதாயிரம்பேர்.
அவர்கள் கட்டுப்பாட்டில் நேரடியாக உதவியவர்கள் வெறும் ஐநூறாயிரம்(5லட்சம்) தமிழர்,
தூரத்திலிருந்து ஆதரவளித்தவர்கள் வெறும் இருநூறாயிரம் தமிழர் மட்டுமே.

ஆனால்,இவர்களை அழிக்க ஐம்பதாயிரம் சிங்களப்படையினர், மூன்று வல்லரசு நாடுகள் நேரடி உதவி, இருபத்தியைந்து நாடுகள் தூரத்திலிருந்து உதவி.

வெறும் இருபத்தி ஐநூறாயிரம்(25லட்சம்) தமிழருக்கே இவ்வளவு பேரா?!!!!

என்றால் நாம் இந்த உலகில் பத்துகோடித் தமிழர் இருக்கிறோமே!?

நாம் ஒன்றிணைந்தால்………

நினைக்கவே நடுங்கிறது இல்லையா?…………

தமிழியத்தின் வகைகள்

தமிழியத்தின் வகைகள்:

தமிழியம் மூன்று வகைப்படுகிறது.
அவையாவன,

அ) தமிழ்நாட்டாண்மை அல்லது தமிழ்த் தேசியம்.
ஆ) தனித் தமிழியம்
இ) தீவிரத் தமிழியம்.

முதலில் தமிழ்நாட்டாண்மை என்பது,
 
தமிழரின் தாயக நிலத்தில் பல்வேறு இனங்களை இணைத்து தலைமையை தமிழரிடம் வைத்து ஆட்சி செய்யும் ஒரு நாட்டை அமைப்பது ஆகும்.
இது இருவகைப்படும்.
அ) அறவழித் தமிழ்நாட்டாண்மை
ஆ) ஆயுதவழித் தமிழ்நாட்டாண்மை

இரண்டாவது தனித்தமிழியம்,
 
தமிழரின் தாயக நிலத்தில் தமிழரல்லாதோரை அவரவர் தாய்நிலத்திற்கு அனுப்பிவிட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த தமிழ்க்குடிகளை தமிழ்த் தாயக நிலத்திற்கு மீள்குடியேற்றி தமிழரே தமிழரை 100% ஆளும், ஆளப்படும் நாட்டை நிறுவுவது.

மூன்றாவது தீவிரத் தமிழியம்,
 
நாடு என்கிற வரையறையில்லாத உலகில் உள்ள அத்தனை மக்களும் தமிழரின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவந்து உலகைத் தமிழர் ஆள்வதை வலியுறுத்துவது.

இதில் எது சரி எது தவறு என்பதை காலம் முடிவு செய்யும்.

தனித்தமிழியம் மற்றும் தீவிரத் தமிழியத்திற்கு அறவழி என்பது கிடையாது.

மக்கள் எந்தவொரு கொள்கையிலும் மென்மையில் இருந்து தீவிரத்திற்கு நகர்வார்கள்.

நாம் அறவழித் தமிழ்நாட்டாண்மையிலும் ஆயுதவழித் தமிழ்நாட்டண்மையிலும் தோற்றுவிட்டோம்.

இப்போது அடுத்த கட்டமான தனித்தமிழியத்திற்கு காலம் நம்மை நகர்த்துகிறது.

இதிலும் தோற்றால் தீவிரத்தமிழியத்தைத் தமிழர்கள் கையிலெடுக்கும் நிலை வரலாம்.

அப்போது,
ஒன்று உலகம் என்றுமில்லாத நன்மையை அடையும்
அல்லது என்றுமில்லாத நாசத்தை அடையும்.
.

ஈழம் - தமிழகம் தொடர்பிணைப் பேணும் திருவாதிரைக் கடன்

ஈழம்-தமிழகம் தொடர்பு:-
கட்டிக்காக்க நம்முன்னோரால் ஏற்படுத்தப்பட்ட திருவாதிரைக் கடன்.

காலாதிகாலமாக ஈழத் தமிழர்கள், சிதம்பரத்திற்கு வருவதற்காகப் பருத்தித்துறை, காங்கேயன்துறை, மாதகல் ஆகிய ஈழத்தின் வடக்குத் துறைகளில் படகேறுவார்கள்.
தமிழகத்தின் கிழக்குத் துறைகளான திருமறைக்காடு, வேதாரணியம், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய துறைகளில் வந்திறங்குவார்கள்.
சிதம்பரம் செல்வார்கள்.
வழிபாட்டுக் கடமைகளை முடிப்பார்கள்.
எந்தத் துறைகளில் இறங்கினார்களோ, அந்தத் துறைகளில் படகில் ஏறி, எந்தத் துறைகளில் ஏறினார்களோ, அந்தத் துறைகளில் படகில் இருந்து இறங்கி எளிதாகத் தம் இடங்களுக்குச் செல்வார்கள்.

1948க்கு முன்பு இருந்த நிலை இதுதான்.

1948க்குப் பின்னர் தலைமன்னார் வழியாகத் தனுஷ்கோடி வந்து,
போட்மெயில் தொடர் வண்டி ஏறி,
நேரே சிதம்பரம் வந்து,
வழிபட்டு, மீண்டும் அதே வழியாகத் திரும்புவார்கள்.
1948க்குப் பின்னர் ஈழத்தின் வட பகுதியில் இருந்து தமிழகத்தின் கிழக்குக் கரைகளுக்குச் சட்டத்துக்கு அமைய வரமுடியாது.
1992க்குப் பின்னர் தலைமன்னார், தனுஷ்கோடி, இராமேஸ்வரம் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

முசுலிம் மக்களுக்கு மெக்கா.
கிறித்தவர்களுக்கு ஜெருசலம்.
கத்தோலிக்கருக்கு வத்திக்கான்.
புத்தர்களுக்கு புத்தகயா. இந்துக்களுக்குத் திருக்கயிலாயம்.

இவை போன்று ஈழத்துச் சைவர்களுக்குச் சிதம்பரமே ஆண்டுதோறும் வந்து வழிபட்டுச் செல்லக் கூடிய நம்பிக்கைக்கு உரிய கோயில்.

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=a6a09b2c-92fa-46c6-882c-eaa2e6418f16&CATEGORYNAME=Sachi

தமிழருக்கு (மட்டுமே) உரித்தான மதம்

தமிழருக்கு (மட்டுமே) உரித்தான மதம்:

நாளை நாம் நமது வன்மையால் நிறுவும் நமது தமிழ்க்குடியரசில் சமத்துவம் உடனே பிறந்துவிடாமா என்றால் பிறந்துவிடாது;

அதைவைத்து எதிரிகள் நம்மைப் பிளவுபடுத்த முயற்சிப்பார்கள்;

அதிலும் சாதி, மதம், பணம், பால், நிறம், இடம் என்று பல்வேறு காரணங்களால் விளைந்த ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

இதை எதிர்கொள்வது என் அறிவுக்கு எட்டியவரை கருத்துக்களை முன்வைக்கிறேன்.

மற்றவர்களும் முன்வையுங்கள்.

முதலில் நாம் 'மதத்தை' எடுத்துக்கொள்வோம்.

தமிழர் எந்த மதத்தை பின்பற்றலாம் என்ற எனது தற்காலிகக் கோட்பாடுகளை முன்வைக்கிறேன்.

*தமிழரின் மதம் இதுவரை உலகில் பின்பற்றப்படாத மதமாக புத்தம் புதிய மதமாக இருக்கவேண்டும்

*தமிழரின் மதம் தமிழருக்காக மட்டுமே இருக்கவேண்டும்;
ஏனென்றால் தமது மதத்தின் பெயரால் வேறொரு இனமக்களிடம் புதியபிரிவினை ஏற்படுவதை தமிழியம் விரும்பவில்லை.

*தமிழர் மதம் என்பது தீவிர இறைமறுப்பையும் இயற்கையைக் காப்பதையும் வலியுறுத்த வேண்டும்.

* தமிழர் மதம் பிறமதத்தைப் பின்பற்றும் தமிழரை தம்முடன் இணையுமாறு வற்புறுத்தக்கூடாது.

*தமிழர் மதம் உணவுக்காகக் கொல்வதை பாவமாகக் கருதக்கூடாது.

*தமிழர்மதம் தமிழ்த்தாயை சிலைவடித்து,
தமிழ்க் கட்டிடக்கலையின்படி கட்டப்பட்ட,
எந்தவொரு மதத்தழுவலும் இல்லாத,
கோயில்கள் கட்டி
அதில் தமிழ்மொழியை வளர்க்கும் விதமான திருத்தலங்கள் நிறுவப்படுவதை வலியுறுத்துகிறது
.

*தமிழ்கோவில்களில் தமிழரின் இசை, ஆடல், தற்காப்புக் கலைகள் மட்டுமே நடக்கும்.

கட்டிடக் கலையை ரசிக்க, இயற்கையை ரசிக்க,
கலைகளை ரசிக்க மட்டுமே அந்தக் கோவில்கள் இருக்கும்.

*தமிழர் மதம் உடலில் மானத்தை மறைக்கும் துணியைத் தவிர யாதொரு ஆடம்பர குறியீடுகளையோ நகைகளோ மதஅடையாளங்களோ அறவே வெறுக்கிறது.

*தமிழர் மதம் மற்ற மதங்களில் உள்ள ஆக்கமான கூறுகளை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து தம்முடன் இணைத்துக்கொள்தல் வேண்டும்.

*திருமணம் பண்டைய தமிழ்முறைப்படி நடத்தப்படும்.
திருமணம் செய்வோர் பெற்றோரின் இசைவு பெற அவசியமில்லை.
ஒருத்திக்கு ஒருவன் என்ற நடைமுறை பின்பற்றப்படும்.
துணையிழந்தோர் மறுமணம், மணமுறிவு மற்றும் அதற்குப் பின்னர் மறுமணம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும்.

*தமிழ் இலக்கிய காப்பியங்கள் ஆராயப்பட்டு குறைகள் நீக்கப்பட்டு தற்காலக் கண்ணோட்டத்துடன் சுருக்கமான ஒரு வேதநூல் தயாரிக்கப்படும்;
அதைக் கற்பதும் கட்டாயமில்லை.

*பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் ஒரே மாதிரியான மரியாதையுடன் பேசுவதை வலியுறுத்தும்.

*மக்கள் ஒருமைப்பாட்டைக் காக்க ஒரு மூலையிலிருந்து மற்ற மூலைக்கு மக்கள் பயணம் செய்யும் வகையில் கோயில்கள் நிறுவப்பட்டு,
விருப்பமுள்ளவர்கள் புனிதப்பயணம் செய்யலாம்.

*மதத்திற்கு  என்று தனியாக பணச்செலவோ கால ஒதுக்கீடோ வழங்கவேண்டி வரக்கூடாது.

*மற்ற இனத்தினர் தமிழர்மதம் போலவே தம் மக்களுக்கென்றே தமது தாய்மொழியை தமது பாரம்பரியப்படி  வணங்குவதை தமிழ்மதம் வரவேற்கிறது.

*இயற்கையை அதாவது தாவரங்கள், நீர், காற்று, நிலம், காடு, விலங்குகள் ஆகியவற்றைக் காப்பதே பக்தி என்று எண்ணல் வேண்டும்.

*பொங்கல் பண்டிகை எம்மதத்தின் சார்வும் இல்லாமல் பழங்காலத் தமிழ்முறைப்படிக் கொண்டாடப்படல் வேண்டும்.

*மதத்திற்கு என்று எந்தவொரு சடங்கும் கூடாது.
பிறப்பு, இறப்பு, பூப்பெய்தல், பரிசம், திருமணம் போன்றவை சொந்தங்கள் ஒன்று கூடுதல் என்பதற்காக மட்டுமே.
பெரிதாகக் கொண்டாடுவதோ பரபரப்பு ஏற்படுத்தவோ கூடாது.

*அன்றாட வாழக்கையில் மதத்தின் தலையீடு கூடாது.
வருடத்திற்கு நான்குநாட்கள் எளிய கட்டாயமில்லாத மதரீதியான நிகழ்வுகளுக்கு சுற்றுலாவுக்கு பண்டிகைகளுக்கு ஒதுக்கலாம்.

*பிறமதத்தை விமர்சிக்கவோ தமது மதத்தை பரப்பவோ முயற்சிக்கக் கூடாது.

*மதயோகிகள், மதகுருக்கள், மதப் பிரசங்கிகள் என்று யாரும் இருக்கக்கூடாது.

*எந்த மதத்திலும் திருமணம் செய்யலாம். திருமணத்தின் பின்னும் விருப்பமான மதத்தை பின்பற்றலாம்.

*கண்மூடித்தனமான கதைகள், நம்பிக்கைகள், சடங்குகள், முறைகள் என்று எதுவும் கூடாது.

*தமிழர் மதத்தைத் தழுவுவோர் தமது பழைய மதவழக்கங்களை அறவே கைவிடவேண்டும்.
ஆனால், அனைத்து மதவுணர்வுகளையும் மனிதரையும் உயிர்களையும் சமமாக மதிக்கவேண்டும்.

*மதத்தில் செய்யப்படும் திருத்தங்கள் தமிழ்மதத்தவர் அத்தனைபேரிடமும் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை கிடைத்தபிறகே செய்யப்படல் வேண்டும்.

*பொதுஇடங்களிலோ, தொழிற்கூடங்களிலோ, பெயருடன் சேர்த்தோ, கடிதங்கள் அழைப்பிதழ் சுவரொட்டி என எந்த இடத்திலும் மதத்தைக் குறிப்பிடக்கூடாது.
நாலுபேர் பார்க்கும்படி இருக்கக்கூடாது.
பொதுஇடங்களில் தமிழன்னைக்குச் சிலைவைப்பது மதவழிபாட்டிற்கென்று ஆகாது.

*மது அருந்துதல், புகைப்பிடித்தல், பலதாரமணம், வரதட்சனை, பெண்கருக்கொலை, மூளைவெறியேற்றும் பழக்கங்கள் அறவே கூடாது.

*தமிழ்மொழியை முடிந்த அளவு பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது.

*தமிழ்மதம் தழுவியவர்கள் விருப்பமில்லாத நிலையில் கைவிடலாம். தமிழ்மதம் தழுவுவதும் கைவிடுவதும் எழுத்துப்பூர்வமாகப் பதியப்படவேண்டும்.